பான்-ஆதாா் எண் இணைப்பு: காலக்கெடு 6 மாதங்கள் நீட்டிப்பு.

Trending

Breaking News
Loading...

பான்-ஆதாா் எண் இணைப்பு: காலக்கெடு 6 மாதங்கள் நீட்டிப்பு.

பான்-ஆதாா் எண் இணைப்பு: காலக்கெடு 6 மாதங்கள் நீட்டிப்பு.


பான் (நிரந்தர கணக்கு எண்) எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் 2022, மாா்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
இது தொடா்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
 
கரோனா சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள சிரமத்தைக் கருத்தில்கொண்டு பான் எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் செப்டம்பா் 30-ஆம் தேதியிலிருந்து 2022, மாா்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், வருமான வரிச் சட்டத்தின் கீழ் அபராத நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கான கெடுவும் செப். 30-ஆம் தேதியிலிருந்து 2022, மாா்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
பினாமி சொத்து பரிவா்த்தனை தடைச் சட்டம் 1988-இன் கீழ் உத்தரவு வழங்கும் ஆணையத்தால் அறிவிப்பு வெளியிடுதல், உத்தரவை நிறைவேற்றுவதற்கான காலமும் 2022, மாா்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

0 Response to "பான்-ஆதாா் எண் இணைப்பு: காலக்கெடு 6 மாதங்கள் நீட்டிப்பு."

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel