
செப்டம்பர் 25ம் தேதியான இன்று அமெரிக்காவின் நியூயார்க்
நகரில் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.
ஐ.நா. பொதுச்சபை கூட்டம்:
ஐக்கிய நாடுகள், அல்லது ஐநா என்பது, பல நாடுகளைக்
கொண்ட ஒரு பன்னாட்டு அமைப்பு. கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் இதில்
உறுப்பினராக இருக்கின்றது.இச்சபையின் கொள்கைகளுக்கு ஒத்துக் கொண்ட நாடுகள்
உறுப்பினராக தேர்வு செய்யப்படும். பன்னாட்டுச் சட்டங்களின்படி நாடுகளுக்கிடையே
ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து உலக அமைதியை ஏற்படுத்துதல். மனிதனின் உரிமைகளையும்
அடிப்படை சுதந்திரங்களையும் காத்து, இன மொழி அல்லது சமய வேறுபாடுகளை நீக்கிப்
பன்னாடுகளின் சமுதாய பொருளாதார, பண்பாட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல்
போன்ற நோக்கங்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.
செப்டம்பர் 25ம்
தேதியான இன்று இந்திய பிரதமர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா.
பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றுவதற்காக முன்னதாக தேர்வு செய்யப்பட்டார். இதற்காக
கடந்த 22ம் தேதி அமெரிக்க
பயணம் மேற்கொண்டார். இன்று, ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பல முக்கிய
விஷயங்களையும் குறித்து உரையாற்றியுள்ளார். உரையின் போது இந்திய நாட்டின் ஜனநாயக
தன்மை பற்றியும்,
வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியதாகவும், அது
அனைவரையும் அடையும் விதமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், உலகில் தீவிரவாதம்
அதிகரித்து வருவதாகவும், இந்த சூழ்நிலையில், முழு உலகமும்
அறிவியல் அடிப்படையிலான, பகுத்தறிவு, முற்போக்கு சிந்தனையை கொண்டு செல்ல
வேண்டும். மேலும், ஆப்கானிஸ்தான் தீவிரவாதம் அல்லது பயங்கரவாதத்
தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்தியா
வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஒரு பரவலான, உலகளாவிய, அனைவரையும்
வளர்க்கும் ஒரு வளர்ச்சி செயல்முறையை நாங்கள் நம்புகிறோம். இந்தியா வளரும் போது
உலகம் வளரும். இந்தியா சீர்திருத்தம் அடையும்போது உலகமும் மாறும் என்று
கூறியுள்ளார்.
முக்கியமாக
கோவிட் -19 க்கான
உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியை இந்தியா உருவாக்கியுள்ளது. தீவிரவாதத்தை அரசியல்
கருவியாகப் பயன்படுத்தும் நாடுகள், மற்றவர்கள் மீது தாக்கும் அதே கருவியால்
தாங்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி
தனது உரையில் தெரிவித்துள்ளார்.
0 Response to "இந்தியா வளர்ந்தால் உலகமும் வளரும் – ஐ.நா கூட்டத்தில் பிரதமர் உரை!"
Post a Comment