புத்தகங்கள் கணப்பது காகிதங்களால் அல்ல, சொற்களால்..!..எஸ். ரா....

Trending

Breaking News
Loading...

புத்தகங்கள் கணப்பது காகிதங்களால் அல்ல, சொற்களால்..!..எஸ். ரா....

 புத்தகங்கள் கணப்பது காகிதங்களால் அல்ல, சொற்களால்..!..எஸ்.  ரா....
"சொற்களுக்கு வாசனை இல்லாமல் இருக்கலாம்; எடை இல்லாமல் இருக்கலாம். ஆனால், அதற்கு கத்தியை விடவும் கூரான உடல் இருக்கிறது. அது அன்பை விட ஆழமாகத் துளைக்கக் கூடியது".

       - எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.



*"நல்ல எழுத்து எல்லா நேரங்களிலும்
தாமதமாகவே உலகின் கண்களில்
அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறது.

-எஸ்.ராமகிருஷ்ணன்.

*சாலைகளுக்கு முடிவே இல்லை. அது உலகை நோக்கி பயணிக்கிறது
#எஸ்.ரா

*மெளனம் நிறைய விஷயங்களை எளிதாகச் சொல்லிவிடுகிறது
-எஸ்.ரா

*சினிமா தியேட்டரில் பாப்கார்ன் விற்பது எதனால்?
  படம் நல்லா இல்லை என்பதை மறக்கடிக்க!
-எஸ்.ரா

*பொய்யின் விதைகளாக இருப்பவை சொற்களே
-எஸ்.ரா

*கடந்த காலத்திற்குள் நம்மை அழைத்துப் போவதற்கு கால இயந்திரம் தேவையில்லை.ஒரு கருப்பு-வெள்ளை புகைப்படம் போதும்
-எஸ்.ரா

*வயதாகிப்போவதன் முதல் அடையாளம் அவமானங்களை சகித்துக் கொள்வதுதான்
-எஸ்.ரா

*கஷ்டத்தைவிடவும் அதை மூடி மறைப்பதுதான் பெருந்துயரம்
-எஸ்.ரா

*ஒரு நாளின் தொடக்கம் என்பது பிரச்சனைகளின் ஆரம்பமாகவே இங்கே பலருக்கும் இருக்கிறது
-எஸ்.ரா

*சென்ற நூற்றாண்டில் ஒரு மனிதன் நடந்த தூரத்தில் 10%கூட இன்று நாம் நடப்பதில்லை.நடை சுருங்கிவிட்டது. கால்களின் ஓய்வுதான் மனச்சோர்வின் முதல்படி.நீண்டதூரம் நடத்தலைக் கால்களால் சிந்திப்பது என்கிறார்கள்...

-எஸ்.ரா

*அவசரம்,வைரஸ் கிருமிகளை விட மோசமானது.அது உடலுக்குள் புகுந்த மறு நிமிடம் கை கால்கள் உதற துவங்கிவிடுகின்றன
-எஸ்.ரா

*குடும்ப பிரச்சனை என்பது வெளியே தெரியாமல் தொந்தரவு தரக்கூடிய பல்வலி போன்றதே
-எஸ்.ரா

*ஒவ்வொரு வயதும் ஒரு ரகசியத்தைப் பாதுகாக்க நினைக்கிறது.ஒளித்து வைக்கிறது.ஆனால்,இன்னொரு வயது அந்த ரகசியத்தை அர்த்தமற்றதாக்கிவிடுகிறது

-எஸ்.ரா

*உண்மையில் சந்தோசத்தை கொண்டாட நமக்குத் தெரியல,சேர்ந்து குடிப்பதை தவிர
-எஸ்.ரா

* புத்தகங்கள் கணப்பது காகிதங்களால் அல்ல, சொற்களால்..!
#எஸ்.ரா”

*காகிதம் இரண்டு இடங்களில் புகழடைகிறது. ஒன்று பணமாகும்போது,மற்றொன்று புத்தகமாகும்போது
-எஸ்.ரா"

*உலகில் வேகமாக வளர்வது மூங்கில் அல்ல, மனிதனின்  கவலைகள்
#எஸ்.ரா

*நோயுற்ற நேரங்களின் போது தான் மனது அடுத்தவர்களின் மீதான உறவை மறுபரிசீலனை செய்கிறது .

-எஸ்.ரா

*வீடு வெறும் இடம் இல்லை. நான் தோத்துப் போகலை. நல்லாதான் வாழறேன்னு காட்ற சாட்சி அது.

  - எஸ்.ரா

*வீடு மாறிப் போவது என்பது
வெளிக்காட்டிக் கொள்ள முடியாத ஊமை வலி

-எஸ்.ராமகிருஷ்ணன்

*ஆசைப்பட்டவற்றை நிஜத்தில் அடைவது எளிதானதல்ல.
பலரும் அவற்றை கற்பனையிலே அடைந்து கொள்கிறார்கள்.
அதுவே போதும் என்றுகூட நினைக்கிறார்கள்.கற்பனைக்கும் நிஜத்துக்குமான இடைவெளியைக் கடந்து வருவது எளிதில்லை

-எஸ்.ரா


0 Response to " புத்தகங்கள் கணப்பது காகிதங்களால் அல்ல, சொற்களால்..!..எஸ். ரா...."

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel