தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் மீண்டும் தொற்றின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. இதனால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டது. முன்னதாக கல்வி ஆண்டில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் குறைவாகவே நடைபெற்றதால் மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வுக்குரிய பாடத்திட்டத்தில் இருந்து 30% குறைக்கப்பட்டு தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டது. தொடர்ந்து கொரோனா தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்துவது பாதுகாப்பானதாக இருக்காது என்று கருதி முதலில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வும், சமீபத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
0 Response to "தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்திற்கு தடை? நீதிமன்றம் மறுப்பு!"
Post a Comment