14.06.2021 - திங்கட்கிழமை - மாலை முக்கியச் செய்திகள்

Trending

Breaking News
Loading...
14.06.2021 - திங்கட்கிழமை -  மாலை  முக்கியச் செய்திகள்

 

*1️
🔷🔶ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் பிகார் மற்றும் மேற்கு வங்கம் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் பெரும்பாலான பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை இன்று தீவிரம் அடையும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.*
 
 
 
   *2️🔷🔶கோவி்ட்-19 பாதிப்பு காரணமாக, பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய சுகாதாரத் துறை அமைச்சர் திரு. தவுஃபிக் அல் ரபியா கூறியுள்ளார்.*
 
 
     *3️🔷🔶18 முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர்கள் கோவி்ட்-19 தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் எனவும் அந்நாட்டு அரசு கூறியுள்ளது.*
 
 
 
   *4️🔷🔶கோவிட்-19 பாதிப்புச் சூழல் காரணமாக இந்த ஆண்டு உள்நாட்டில் வசிக்கும் 60 ஆயிரம் பேர் மட்டுமே ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் - சவுதி அரேபிய அரசு*
 
 
 
   *5️🔷🔶நாட்டில் ஒன்றரை லட்சம் சுகாதார மையங்கள் அடுத்த ஆண்டுக்குள் ஆயுஷ்மான் பாரத் நல மையங்களாக மாற்றப்பட்டு, மக்களுக்கு விரிவான மருத்துவ சேவைகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.*
 
 
   *6️🔷🔶இதன்மூலம் அனைத்து புவியியல் சார்ந்த தகவல்களைப் பெற முடியும் என நித்தி ஆயோக் உறுப்பினர் திரு. வி.கே பால் வலியுறுத்தியுள்ளார்.*
 
 
 
   *7️🔷🔶கோவி்ட்-19 பரவலை மதிப்பிடுவதற்காக  செரோ சர்வே எனப்படும் ஆய்வு நடத்தப்படவுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.*
 
 
   *8️🔷🔶கோவிட்-19 பரவல் மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் தொடர்பாக நாடு முழுவதும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம், செரோ சர்வே எனப்படும் ஆய்வை நடத்த உள்ளதாக, நான்காவது முறையாக மத்திய அரசு கூறியுள்ளது.*
 
 
 
   *9️🔷🔶மக்களின் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கில், மேலும் சில தளர்வுகளை முதலமைச்சர் திரு மு க மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.*
 
 
 
   *1️0️🔷🔶கடலூர்: சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.*
 
 
   *1️1️🔷🔶நாமக்கல்: தினந்தோறும்  10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக நடைபெறும் 72 முகாம்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு செல்கின்றனர்.*
 
 
   *1️2️🔷🔶திருவள்ளூர்: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 80 படுக்கைகளை கொண்ட சிறப்பு மருத்துவ சிகிச்சை மையத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் திரு.பா.பொன்னையா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.*
 
 
 
   *1️3️🔷🔶நிலம் பாலைவனமாதல் மற்றும் வறட்சியைத் தடுத்தல் குறித்த ஐநா மாநாடு*:
 
 
*1️4️🔷🔶இங்கிலாந்து பிரதமர் திரு. போரிஸ் ஜான்சன் அழைப்பின் பேரில் பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றுகிறார்.*
 
   *1️5️🔷🔶சென்னையை தலைமையகமாக கொண்ட இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில், என்சிசி-கடற்படைப்பிரிவு மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வில் சலுகை மதிப்பெண்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது*
 
 
   *1️6️🔷🔶ஐநா பாதுகாப்பு சபைக்கு புதிதாக தேர்வாகியுள்ள ஐந்து நாடுகளுக்கும், ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திரு டி எஸ் திருமூர்த்தி*
*@ambtstirumurti*
 *வாழ்த்து தெரிவித்துள்ளார்.*
 
 
 
*1️7️🔷🔶2022-23-ஆண்டுக்கான பாதுகாப்பு சபை உறுப்பினராக தேர்வாகியுள்ள அல்பேனியா வெளியுறவு அமைச்சர்*
*@xhacka_olta*
*-வுக்கு ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திரு டி எஸ் திருமூர்த்தி*
*@ambtstirumurti*
 *வாழ்த்து தெரிவித்தார்.*
 
 
   *1️8️🔷🔶உலகளாவிய பெருந்தொற்று மீண்டும் ஏற்படாமல் தடுக்க,  சர்வதேச கூட்டு நடவடிக்கைகள் அவசியம் என்று, பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜி-7 உச்சி மாநாட்டின்  அமர்வில் தெரிவித்துள்ளார்.*
 
 
   *1️9️🔷🔶தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகளை திறக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், நிரந்தரமாக மதுக்கடைகளை மூட மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு கேட்டுக் கொண்டுள்ளார்*
 
 
 
   *2️0️🔷🔶தமிழகத்தில் நீலகிரி, கோயம்பத்தூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்குட்பட்ட சில பகுதிகளில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்*
 
 
   *2️1️🔷🔶தமிழகத்தில் கோவிட்-19 பாதிப்பு குறைந்துள்ளதால், கடுமையான கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.*
 
 
 
       *2️2️🔷🔶சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் கல்வித் துறையில் பல்வேறு தொடர்  செயல்பாடுகளுக்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 7 ஆயிரத்து 622 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது - மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்*
 
 
   *2️3️🔷🔶தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் பால் கொள்முதல் மற்றும் விற்பனை அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாநில பால்வளத்துறை அமைச்சர் திரு நாசர் தெரிவித்துள்ளார்*
 
 
      *2️4️🔷🔶பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத்தொகை விரைவில் வழங்கப்படும் - மாநில பால்வளத்துறை அமைச்சர் திரு நாசர்*
 
 
   *2️5️🔷🔶ப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில் செர்பியாவின் நோவோக் ஜோக்கோவிச்சும், கிரீசின் சிட்சிபாஸ்-ம் மோதுகின்றனர்.*
 
 
*🔷🔶அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க பரிசீலிக்கப்படும் - அறிவிப்புக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வரவேற்பு*
 
*கோயிலின் ஆகம விதிகளை தெரிந்தவர்களையே அங்கு அர்ச்சகராக தமிழ்நாடு அரசு நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.*
 
 
   *1️🔷🔶மக்களுக்கு விரிவான மருத்துவ சேவைகளை வழங்க நாட்டில் ஒன்றரை லட்சம் சுகாதார மையங்கள் அடுத்த ஆண்டுக்குள் ஆயுஷ்மான் பாரத் நல மையங்களாக மாற்றப்படும் - மத்திய அரசு*
 
 
   *2️🔷🔶சேலம் விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விமான நிலைய சுற்றுச்சுவரை சுற்றி 5 கிலோமீட்டர் தூரத்திற்கு சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய இயக்குநர் வி.கே.ரவீந்திர சர்மா தெரிவித்துள்ளார்.*
 
   *3️🔷🔶டெல்டா மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஏல அறிவிக்கினை நிறுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.*
 
   *4️🔷🔶திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன்  செறிவூட்டி நிலையத்தினை மாநில அமைச்சர்கள் திரு மு பெ சாமிநாதன் மற்றும் திருமதி கயல்விழி செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.*
 
   *5️🔷🔶பாதுகாப்புத் துறையில் புதுமை கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவு அளிக்கும் திட்டத்திற்காக 498 கோடி ரூபாய் நிதி வழங்குவதற்கு அத்துறைக்கான அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.*
 
 
   *6️🔷🔶மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் போதுமான அளவில் கையிருப்பு உள்ளது - வேளாண்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.*
 
 
 
   *7️🔷🔶கோவிட்19 பரவல் வெகுவாக குறைந்து வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.*
 
     *சமூக வலைதளத்தில் இக்கருத்தை பதிவு செய்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். ஹர்ஷ்வர்தன், இந்த நோய்த் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 4.25 சதவீதமாக குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.*
 
 
   *8️🔷🔶ஒடிசா, ஜார்கண்ட்,பிகார், மேற்கு வங்கம் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் பெரும்பாலான பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை இன்று தீவிரம் அடையும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.*
 
   *9️🔷🔶நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒருசில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் கனமழை பெய்ய வாய்ப்பு -வானிலை ஆய்வுமையம்*
 
 
   *1️0️🔷🔶மீனவர்கள் நாளை மறுநாள் வரை வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.*
 
      *1️1️🔷🔶தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள், உரிய ஆய்வுக்குப்பின் மேம்படுத்தப்படும் - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி*
 
 
 
 *1️2️🔷🔶தொற்றுக்கான தடுப்பு மருந்து ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.*
 
 
 
    *1️3️🔷🔶நாடு முழுவதும் இதுவரை 30-ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன், ரயில்கள் மூலம் மாநிலங்கள் முழுவதும் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.*
 
*தமிழகத்திற்கு மட்டும் இதுவரை 4-ஆயிரத்து 941 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.*
 
   *1️4️🔷🔶நீலகிரி மாவட்டத்தில் வனக் குற்றங்களைக் கண்டறிய, 'சிப்பிப்பாறை' இனத்தைச் சேர்ந்த இரு மோப்ப நாய்களுக்கு வனத்துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு, பணியமர்த்தப்பட்டுள்ளன*
 
 
   *1️5️🔷🔶புதுச்சேரியில் முதல் முறையாக பாஜக எம்எல்ஏ செல்வம் போட்டியின்றி சபாநாயகர் ஆகிறார். வரும் 16-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது. அப்போது பதவியேற்கிறார்*
 
 
*1️6️🔷🔶புதுச்சேரி ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டும், 3 மாதங்களாக ஊதியம், ஓய்வூதியத்தை அதிகாரிகள் தராததால், அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் கரோனா காலத்திலும் தவித்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்*
 
 
 
   *1️7️🔷🔶சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்தார். இதனால் விஜயகாந்த் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர்*
 
*🔷🔶சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த்  வீட்டிற்கு  வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.*
 
*காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்மநபர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியுள்ளார்.*
 
*இதன் அடிப்படையில் போலீசார் நடத்திய சோதனையில் அது புரளி என்பது தெரியவந்தது*
 
 
*🔷🔶 பா.ம.க.வால் தங்களுக்கு என்னத்த வித பயனும் இல்லை - அதிமுக செய்தித்தொடர்பாளர் புகழேந்தி*
 
*ஓ.பன்னீர்செல்வம் குறித்து அன்புமணி ராமதாஸ் தேவையற்ற கருத்துக்களை கூறி வருகிறார்.*
 
*நல்லெண்ண அடிப்படையில் தான் வன்னியர்களுக்கு 10.5  சதவிகித உள் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது - புகழேந்தி*
 
 
   *1️🔷🔶நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஒரு கோடியே 53 லட்சத்திற்கும் மேற்பட்ட கோவிட் தடுப்பு மருந்துகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது*
 
 
 
   *2️🔷🔶புதுதில்லியில் புதிய ஊரடங்கு தளர்வுகளை அம்மாநில முதலமைச்சர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்துள்ளார்.*
 
   *3️🔷🔶புதுதில்லியில் கோவிட்19 தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக பெருமளவு குறைந்துள்ளது - அம்மாநில முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால்.*
 
 
   *4️🔷🔶ஜம்முவில் உள்ள மஜீன் என்ற இடத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஸ்வாமி கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை  இன்று நடைபெற்றது.*
 
   *5️🔷🔶நாட்டிற்கு பெருமளவில் நேரடி அன்னிய முதலீடு கிடைத்துள்ளதாகவும், இதன்மூலம் சிறந்த உற்பத்தியாளர்களை ஈர்ப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் நித்தி ஆயோக் தலைமைச்செயல் அதிகாரி திரு அமிதாப்கந்த் கூறியுள்ளார்.*
 
 
 
   *6️🔷🔶நாட்டில் கோவிட் தொற்றின் மூன்றாவது அலை ஏற்பட்டால், அதனை எதிர்கொள்வதற்கான அனைத்து உத்திகளும் தயார் நிலையில் உள்ளதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.*
 
 
   *7️🔷🔶மும்பையில் உள்ள பழமைவாய்ந்த மரங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.*
 
*இதற்காக மரம் வளர்ப்பு ஆர்வலர் திரு வைபவ்ராஜே தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது.*
 
 
   *8️🔷🔶உத்தரகண்ட் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான திருமதி இந்திரா ஹரிடையேஷ் உடல்நலக் குறைவு காரணமாக புதுதில்லியில் இன்று காலமானார்.*
 
 
   *9️🔷🔶செங்கல்பட்டு மாவட்டம்  திருப்போரூர் அரசு மருத்துவமனையில்  புதிதாக அமைக்கப்பட்ட 10 ஆக்சிஜன் செறியூட்டிகள் கொண்ட  கொரோனா சிகிச்சை மையத்தை மாநில ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் இன்று திறந்து வைத்தார்.*
 
 
   *1️0️🔷🔶செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பாக  மானியத்துடன் கூடிய வேளாண் இடுபொருட்களை மாநில ஊரக தொழில் துறை அமைச்சர் திரு.தா.மோ. அன்பரசன் வழங்கினார்.*
 
       *1️1️🔷🔶அந்தமான் நிகோபாரிலுள்ள நங்கௌரி தீவில் பாதுகாப்பு நடவடிக்கைகளை, கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் கர்தீப்-லிருந்தபடி, தீவுகளின் ஒருங்கிணைந்த பாதுகாப்பு கமாண்ட் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் அஜய் சிங் ஆய்வு செய்தார்.*
 
 
    *1️2️🔷🔶யோகா தினத்தை முன்னிட்டு, டிடி இந்தியா தொலைக்காட்சியில் 21-ம் தேதி வரை இரவு ஏழு மணிக்கு  யோகா குறித்த  தொடர் நிகழ்ச்சி ஒளிபரப்பு  செய்யப்படுவதாகத் மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.*
 
 
   *1️3️🔷🔶ஏழாவது சர்வதேச யோகா தினம் வரும் 21-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது*.
 
  *இதன் முன்னோட்டமாக காணொலி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் திரு. பிரகாஷ் ஜவடேகர், திரு. கிரண் ரிஜிஜு மற்றும் பிரபல யோகக் கலை நிபுணர்கள் மற்றும் ஆன்மிகத் தலைவர்கள் பங்கேற்றனர்.*
 
 
   *1️4️🔷🔶யோகாவை அனைத்துத் தரப்பு மக்களிடமும் கொண்டு செல்ல மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.*
 
 
   *1️5️🔷🔶மும்பையில் இன்று கனமழை தொடரும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம்,  அந்த நகருக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.*
 
 
   *1️6️🔷🔶மேற்கு வங்கம், சிக்கிம், பிகார், ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்*
 
 
 
*🔷🔶 46 சிறப்பு ரயில் சேவைகளின் புறப்படும் மற்றும் சேரும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.*
 
*மன்னார்குடி-சென்னை எழும்பூர் ரயில் ஜூன் 17 முதல் நீடாமங்கலத்தில் இரவு 10.52-க்கு வந்து சேர்ந்து 10.55-க்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது*
 
*காரைக்கால்- எர்ணாகுளம், சிறப்பு ரயில் ஜூன் 17 முதல் மாலை 4.30-க்கு புறப்பட்டு, திருவாரூருக்கு மாலை 5.32-க்கு வந்துசேரும் என கூறப்பட்டுள்ளது.*
 
 
 
*"குடித்து பழகியவர்களுக்கும், விற்று பழகியவர்களுக்குமே மது அத்தியாவசியம்".. கமல் ஹாசன் காட்டம்*
 
சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் கொரோனா பரவல் குறைவாக உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குடித்துப் பழகியவர்களுக்கும், விற்றுப் பழகியவர்களுக்குமே மது அத்தியாவசியம் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் விமர்சித்துள்ளார்.
 
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டது. இதன் காரணமாக மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
 
ஊரடங்கு காலத்தில் கடந்த மே 10 தேதி முதல் மாநிலத்திலுள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில் கொரோனா குறைந்ததைத் தொடர்ந்து இன்று முதல் ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
அதன்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களைத் தவிர்த்து சென்னை உள்பட 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் எனக் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
 
தற்போது மாநிலத்தில் 5200 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் 11 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள கடைகளில் இன்று முதல் மது விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக புதிய 18 கட்டுப்பாடுகளையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் காலை 10 முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இருப்பினும், மாநில அரசின் இந்த முடிவை அதிமுக, பாஜக, நாம் தமிழர் என பல்வேறு கட்சியினரும் விமர்சித்து வருகின்றனர். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலும் தமிழ்நாடு அரசின் இந்த முடிவை விமர்சித்துள்ளார். டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிராக பாஜக சார்பில் நேற்று போராட்டமும் நடைபெற்றது.
 
இது குறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், "குடித்துப் பழகியவர்களுக்கும், விற்றுப் பழகியவர்களுக்குமே மது அத்தியாவசியம். ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை எனும் அவச்சொல் எழாமல் புதிய முதல்வர் பார்த்துக் கொள்ளவேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
 
 
 
*கங்கை நதியில் இருந்து 3 உடல்கள் மீட்பு - உத்தரபிரதேசத்தில் மீண்டும் சம்பவம்*
 
கன்னாஜ்:
 
உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை கங்கையில் வீசும் சம்பவங்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் அரங்கேறின.
 
இந்த மாநிலங்களில் ஏராளமான உடல்கள் கங்கையில் இருந்து மீட்கப்பட்ட சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் நேற்று முன்தினமும் 3 உடல்கள் கங்கை நதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டு உள்ளன. அங்குள்ள கன்னாஜ்-கர்தோய் மாவட்ட எல்லைப்பகுதியான பத்னாபூர் காட்டில் இந்த உடல்கள் மிதந்தது கண்டறியப்பட்டு மீட்கப்பட்டன.
 
ஒரு பெண் மற்றும் 2 ஆண்களின் உடல்கள் என மீட்கப்பட்ட அந்த 3 உடல்களும் கர்தோய் மாவட்டத்தை சேர்ந்தவை என கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த மாவட்ட போலீசாரிடம் அவை ஒப்படைக்கப்பட்டன. இந்த 3 உடல்களும் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
 
 
 
*பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் அதிருப்தி*
 
சண்டிகர்: பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. ஆளும் கட்சியான காங்கிரசில், முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும், முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சித்துவிற்கும் கோஷ்டி பூசல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.
 
சித்துவுக்கு, பிரியங்காவின் ஆதரவு உள்ளது. தற்போதுள்ள நிலையில், காங்கிரஸ் ஒற்றுமைஆக இருந்தால் மீண்டும் ஆட்சி அமைக்கலாம். ஆனால், சித்துவின் பிரச்னையால் காங்கிரசுக்குள் உள்குத்து நிச்சயம் நடக்கும் என சொல்லப்படுகிறது.
 
அமரீந்தர் சிங்கோ, கட்சி தலைமையை சந்திக்கவே மறுக்கிறார். இவருக்கும், ராகுலுக்கும் ஆகாது. இதையடுத்து, 'அடுத்த தேர்தலில் தனிக்கட்சி துவங்கி களம் காண்போம்' என, அமரீந்தரை உசுப்பேற்றி வருகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.
 
 
 
 
*கரோனா தடுப்பூசிக்கு காப்புரிமை விலக்கு: ஜி7 மாநாட்டில் பிரதமா் மோடி கோரிக்கை*
 
கரோனா தடுப்பூசி மீதான காப்புரிமையை நீக்குமாறு உலக வா்த்தக அமைப்பிடம் விடுத்துள்ள கோரிக்கைக்கு ஆதரவு அளிக்குமாறு ஜி7 நாடுகளிடம் பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டாா்.
 
பிரிட்டன், அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, ஜப்பான் இடம்பெற்றுள்ள ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு, பிரிட்டனில் உள்ள காா்ன்வால் நகரில் ஜூன் 11-ஆம் தேதி தொடங்கியது. இதில், சிறப்பு அழைப்பாளா்களாக, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென்கொரியா ஆகிய நாடுகளின் தலைவா்கள் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
 
மாநாட்டின் இரண்டாவது நாளான சனிக்கிழமையும், நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமையும் பிரதமா் நரேந்திர மோடி காணொலி முறையில் பங்கேற்று உரையாற்றினாா்.
 
நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை, சுகாதாரம், பருவநிலை மாற்றம், சுதந்திரமான சமூகம் ஆகிய 3 தலைப்புகளில் நடைபெற்ற அமா்வுகளில் அவா் உரையாற்றினாா். அவா் பேசியதாவது:
 
சுதந்திரமான சமூகத்தைப் பொருத்தவரை ஜனநாயகம், கருத்து சுதந்திரம் ஆகியவற்றைக் காப்பதில் இந்தியா பற்றுறுதியுடன் உள்ளது. மேலும், இந்தியாவில் ஆதாா் அட்டை வழங்குவது, நேரடி மானிய உதவித் திட்டங்கள், பிரதமரின் ஜன்தன் வங்கிக் கணக்கு திட்டம், வங்கிக் கணக்கில் ஆதாா் எண், தொலைபேசி எண் இணைப்பு என சமூக அங்கீகாரமளித்தலில் புரட்சிகரமான தாக்கத்தை மின்னணு தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ளது. சுதந்திரமான சமூகம் குறித்து பேசுகையில், எளிதில் தாக்குதலுக்குள்ளாகும் அபாயமும் உள்ளது. எனவே, தொழில்நுட்ப நிறுவனங்களும், சமூக ஊடக நிறுவனங்களும் தங்கள் பயனா்களுக்கு இணையவழியில் பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய வேண்டும்.
 
பருவநிலை மாற்றம்: பருவநிலை மாற்றம் தொடா்பாக உலக நாடுகள் கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் இந்தியா உறுதியான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 2030-ஆம் ஆண்டுக்குள், மாசு இல்லா போக்குவரத்தை ஏற்படுத்த இந்திய ரயில்வே உறுதி மேற்கொண்டுள்ளது. பாரீஸ் ஒப்பந்த உறுதிகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் ஒரே ஜி-20 நாடு இந்தியா. இந்தியா மேற்கொண்ட பேரிடா் மீட்பு கட்டமைப்பு கூட்டணி மற்றும் சா்வதேச சூரிய மின்சக்தி கூட்டணி என்ற இரண்டு முக்கிய உலகளாவிய முயற்சிகளின் பயன்கள் அதிகரித்து வருகின்றன. பருவநிலை மாற்றத்துக்கான நிதி, வளரும் நாடுகளுக்கு சிறந்த முறையில் கிடைக்க வேண்டும்.
 
தடுப்பூசி காப்புரிமை விலக்கு: அனைவருக்கும் கரோனா தடுப்பூசி எளிதில் கிடைக்க வேண்டும் என்பதற்காக, கரோனா தடுப்பூசி மீதான காப்புரிமையை தற்காலிகமாக நீக்குமாறு உலக வா்த்தக அமைப்பில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்தக் கோரிக்கைக்கு ஜி7 நாடுகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
 
சா்வாதிகாரம், பயங்கரவாதம், தீவிரவாதம், பொருளாதார நெருக்கடி என பல்வேறு வழிகளில் வரும் அச்சுறுத்தல்களில் இருந்து ஜி7 நாடுகளைக் காப்பதில் இந்தியா இயற்கையில் அமைந்த கூட்டாளியாகத் திகழ்கிறது என்றாா் பிரதமா் மோடி.
 
பெரும்பாலான நாடுகள் ஆதரவு: பிரதமரின் கோரிக்கைகளுக்கு பெரும்பாலான நாடுகளின் தலைவா்கள் ஆதரவு தெரிவித்ததாக, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் பி.ஹரீஷ் கூறினாா். அவா் மேலும் கூறியதாவது:
 
ஜி7 உச்சி மாநாட்டில் இந்தியா பங்கேற்றது, இந்தியாவின் ஒத்துழைப்பின்றியும், ஆதரவின்றியும் கரோனா எனும் சா்வதேச அளவிலான நெருக்கடிக்கு தீா்வு சாத்தியமில்லை என்பதை பிரதிபலிப்பதாக அமைந்தது.
 
சுகாதாரம், கரோனா தடுப்பூசியைப் பெறுதல், பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கான செயல்பாடுகள் இவை அனைத்திலும் ஜி7 நாடுகளுடனும், அதன் சிறப்பு அழைப்பாளா்களுடனும் இந்தியா இன்னும் ஆழமான நட்புறவைத் தொடரும்.
 
கரோனா தடுப்பூசி மீதான வா்த்தகம் சாா்ந்த அறிவுசாா் சொத்துரிமையை நீக்க வேண்டும் என்று உலக வா்த்தக அமைப்பிடம் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் கோரிக்கை விடுத்துள்ளன. இந்தக் கோரிக்கையை எழுப்பி பிரதமா் மோடி பேசியபோது, இதுதொடா்பாக எழுத்துபூா்வமான ஒப்பந்தம் நடைபெறுவதற்கு ஜி7 நாடுகள் ஆதரவு அளித்துள்ளன. சுதந்திரமான, விதிகளின் அடிப்படையிலான இந்தோ பசிபிக் மீதான தமது உறுதிப்பாட்டையும், பிராந்தியத்தில் கூட்டாளா்களுடன் ஒத்துழைப்பு அளிப்பதையும் ஜி7 நாடுகளின் தலைவா்கள் உறுதிப்படுத்தினா் என்றாா் அவா்.
 
 
 
 
*நரேந்தர மோதியின் ‘ஆத்ம நிர்பார் முழக்கம் என்ன ஆனது? தற்சார்பு நடவடிக்கைகளின் இன்றைய நிலை என்ன?*
 
இந்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி ராஜ்பத்தில் நடைபெற்ற குடியரசுதின அணிவகுப்பின் போது, ​​பயோடெக்னாலஜி துறை தனது அலங்கார ஊர்தியில் 'தற்சார்பு இந்தியா' இயக்கத்தின் கீழ் கோவிட் -19 தடுப்பூசியின் மேம்பாட்டு செயல்முறையைக் காட்டியது.
 
"முழுமையான தற்சார்பு இந்தியா இயக்கத்தின் குறிப்பிடத்தக்க வெற்றிகளில் ஒன்று, இந்தியாவில் பெரிய அளவில் தடுப்பூசி உற்பத்தி செய்யப்படுவதாகும்," என செய்தித்தாள்கள் மறுநாள் எழுதி இருந்தன.
 
இப்போது நாம் ஜூன் மாதத்தில் இருக்கிறோம். தடுப்பூசியில் தன்னிறைவு பெற்றதாகக் கூறப்பட்டாலும், நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது. தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
 
தடுப்பூசிகளை தயாரிப்பதில் இந்தியா தன்னிறைவு பெற்றிருந்தாலும்கூட, அது இப்போது நடந்ததல்ல. பல ஆண்டுகளாகவே இந்தியா தடுப்பூசிகளை தயாரிப்பதற்கான உலகளாவிய தொழிற்சாலையாக கருதப்படுகிறது. இன்று காணப்படும் தடுப்பூசி பற்றாக்குறைக்கு மோதி அரசாங்கத்தின் மோசமான நிர்வாகமே காரணம் என விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
 
கடந்த ஆண்டு மே 12 ஆம் தேதி 'தற்சார்பு இந்தியா' என்ற முழக்கத்தை எழுப்பினார். அந்த நாளின் உரையில், அவர் 'தற்சார்பு' என்ற சொல்லை ஏழு முறையும், 'தற்சார்பு இந்தியா' என்ற வார்த்தையை 26 முறையும் பயன்படுத்தினார். 20 லட்சம் கோடி பொருளாதாரநிதி தொகுப்பிற்கு 'தற்சார்பு பேக்கேஜ்' என பெயரிடப்பட்டது.
 
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக பிரசுரம், தற்சார்பு என்ற வார்த்தையை , 2020 ஆம் ஆண்டின் 'சொல்' என அறிவிக்கும் அளவுக்கு, அது மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டது.
 
பிரதமரின் இந்த முழக்கம் ஒரு சமூக ஊடக பிரசாரமாக மாறியது. அமைச்சர்கள், மாநில அரசுகள், அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவருமே தற்சார்பு பற்றி அதிகம் பேசினர்.
 
கடந்த ஆண்டு ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடனான மோதல்களுக்குப் பிறகு, தற்சார்பு என்கிற வார்த்தை வலுப்பெற்றதோடு கூடவே தேசபக்தி உணர்வும் சேர்ந்து கொண்டது.
 
இந்திய அரசு பல சீன செயலிகள் தடைசெய்யப்பட்டன.கூடவே சீன இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்க, தற்சார்பு முழக்கத்தை மேலும் தீவிரப்படுத்தியது.
 
இதெல்லாம் நடந்து ஓராண்டு கடந்துவிட்ட நிலையில் நாடு எவ்வளவு தற்சாற்பு நிலையை அடைந்துள்ளது?
 
தற்சார்பு என்பது இந்தியாவுக்கு ஒன்றும் புதிய விஷயமல்ல என பிரதமரின் பொருளாதார ஆலோசகர்களில் ஒருவரான நிலேஷ் ஷா கூறுகிறார். இவர் கோட்டக் மஹிந்திரா சொத்து மேலாண்மை நிறுவனத்தின் (asset management) முதன்மைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
"தற்சார்பு என்பது ஒரு புதிய சொல் அல்ல. சுதந்திரத்திற்குப் பிறகு நாம் பல ஆண்டுகளாக பால் இறக்குமதி செய்தோம். பின்னர் 'அமுல்' தற்சார்பு இந்தியாவின் ஒரு பகுதியாக மாறியது. இன்று நாம் உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக இருக்கிறோம். ஆகவே, அமுல் மூலமாக பாலில் தன்னிறைவு அடைந்ததைப் போல, பசுமைப் புரட்சி மூலம் உணவு தானியங்களிலும், தனியார் துறை மூலம் மருந்துகளில் தற்சார்பு நிலையை அடைய வேண்டும்.
 
நாம் உற்பத்தி மற்றும் பாதுகாப்புத் துறையில் தற்சார்பு நிலையை அடைய வேண்டும். இது ஒரு இலக்கல், ஒரு பயணம். இந்த ஆண்டு நாம் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக இருக்கிறோம் என்றால், அடுத்த ஆண்டும் அதைத்தொடர வேண்டும்," என பிபிசியுடனான ஒரு பிரத்யேக உரையாடலில் அவர் குறிப்பிட்டார்.
 
"அடுத்தடுத்த ஐந்தாண்டு திட்டங்கள் தற்சார்பு பற்றி பேசியுள்ளன. பாதுகாப்பு, விவசாயம் மற்றும் பால் ஆகியவற்றில் தற்சார்பு அடைய வேண்டும் என்பது குறித்து பேசப்பட்டது. ஆனால் பெருந்தொற்றின் போது ஏற்பட்ட பொதுமுடக்கம் காரணமாக விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட இடையூறுகளே தற்சார்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வைத்தன. எதிர்கால நெருக்கடிகளை சமாளிக்க நாட்டின் உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும் என்ற யோசனை கொரோனா பொதுமுடக்கத்தின் போது வலுப்பெற்றது," என டெல்லியில் உள்ள ஃபோர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்டில், சீன விவகாரங்களின் நிபுணராக இருக்கும் முனைவர் ஃபைசல் அகமது கூறுகிறார்.
 
தற்சார்பு நிலை என்பது கொரோனா பிரச்சனையால் தூண்டப்பட்ட உலகளாவிய போக்கு என சில வல்லுநர்கள் நம்புகின்றனர். பெருந்தொற்றுநோய் காரணமாக தற்சார்பு கொள்கைக்கு பல நாடுகள் முழக்கமிட்டன என்று சிங்கப்பூரில் வசிக்கும் சீன எழுத்தாளர் சுன் ஷி, பிபிசியிடம் கூறினார்.
 
"இந்த நெருக்கடிக்கு முன்பு உலகமயமாக்கல் ஒரு பொதுவான போக்காக பார்க்கப்பட்டது. இது ஒரே உலகம் என்றும். நாம் வர்த்தக ஒப்பந்தங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் அனவரும் கருதினர்.ஆனால் கோவிட் நெருக்கடி ஏற்பட்டபோது தற்சார்பும் அவசியம் என பெரும்பாலான நாடுகள் உணர்ந்திருக்கின்றன. பிரதமர் மோதியின் இந்தக் கொள்கையில் வலு இருக்கிறது, "என அவர் குறிப்பிட்டார்.
 
ஆனால் இந்தியா தற்சார்புக்கு இன்னும் தயாராகவில்லை எனவும் அவர் கருதுகிறார். "சீனா தனக்குத் தேவையான பெரும்பாலான பொருட்களை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. ஆனால் இந்தியாவின் உள்நாட்டு தேவை மிக அதிகமாக இருப்பதால், இந்தியா தனக்குத் தேவையான பொருட்களின் பெரும் பகுதியை தானே உற்பத்தி செய்ய முடியவில்லை.சீனா இந்த இடத்திற்கு வர பல தசாப்த காலம் தேவைப்பட்டது. இந்தியா ஓரிரவில் அத்தனை வேகமாக தற்சார்பு நிலையை அடைய முடியாது," என்கிறார் சுன் ஷி.
 
இதில் சுவாரசியமான விஷயம் என்னவெனில், சீனா கிட்டத்தட்ட எல்லா பொருளையும் தானே உற்பத்தி செய்து கொண்டு உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக இருந்த போதிலும், அது உலக போக்கின் ஒரு பகுதியாக இருந்தது.
 
முன்பு ஏற்றுமதியை ஊக்குவிப்பது தான் சீனாவின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டிலிருந்து இந்நோக்கத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று சீன விவகார நிபுணரான முனைவர் ஃபைசல் அகமது தெரிவிக்கிறார்.
 
"அதிபர் ஷி ஜின்பிங் கடந்த ஆண்டு மே மாதம் 'இரட்டை சுழற்சி' என்கிற கொள்கையை வெளியிட்டார். இனி நாம் வெளிப்புற சுழற்சிக்கு (ஏற்றுமதி) மட்டுமின்றி, உள் சுழற்சி (உள்நாட்டு சந்தை) குறித்தும் கவனம் செலுத்துவோம் என கூறினார். இந்த உள் சுழற்சி என்பது ஒரு வகையில் சீனாவின் தற்சார்பு கொள்கை," என அவர் குறிப்பிட்டார்.
 
கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல்களுக்குப் பிறகு தேசியவாத உணர்வு வேகம் பெற்றது. சீனாவுக்கு எதிரான அறிக்கைகள் தினமும் ஊடகங்களில் வரத் தொடங்கின. சீனப் பொருட்களுக்கு மக்கள் தீ வைத்ததாகவும், அதைப் புறக்கணிக்க கோஷங்களை எழுப்பியதாகவும் பல இடங்களிலிருந்து செய்திகள் வந்தன.
 
சீன முதலீட்டுக்கு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் 200 க்கும் மேற்பட்ட சீன செயலிகள் தடை செய்யப்பட்டன. இந்தியாவின் தற்சார்பு பிரச்சாரம் சீன இறக்குமதிக்கு எதிரானது என்றே தோன்றியது.
 
ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில் சீனாவைச் சார்ந்திருப்பது எவ்வளவு குறைந்துள்ளது என்பது இப்போதைய கேள்வி. உண்மை என்னவென்றால், எல்லா நாடுகளிலிருந்தும் இறக்குமதி கணிசமாகக் குறைந்துவிட்டது, ஆனால் சீனாவிலிருந்து செய்யப்படும் இறக்குமதி குறையவில்லை.
 
2019-20ஆம் ஆண்டில், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவின் மொத்த இறக்குமதி 474.7 பில்லியன் டாலராக இருந்தது, இது 2020-21 ஆம் ஆண்டில் சுமார் 345 பில்லியன் டாலராகக் குறைந்தது.
 
2019-20ஆம் ஆண்டில், சீனாவிலிருந்து 65.26 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. இது ஒட்டு மொத்த இறக்குமதியில் 13.7%. 2020-21 (ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையான தரவு) 58.36 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டது. இது ஒட்டு மொத்த இறக்குமதியில் 16.9%. மொத்த இறக்குமதியில் சீன இறக்குமதியின் பங்கு 13.7 சதவீதத்திலிருந்து 16.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.
 
2019-20ல் ஏற்றுமதி 313.36 பில்லியன் டாலராக இருந்தது. இது 2020-21ல், 256.34 பில்லியன் டாலராக குறைந்துவிட்டது. சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 2019-20ல், 16.61 பில்லியன் டாலராக இருந்தது 2020-21ல் 18.53 பில்லியன் டாலராக சற்று அதிகரித்திருக்கிறது. இந்தியாவுக்கு பிரச்சனையாக இருந்த சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறை, இப்போது சற்றே குறைந்துள்ளது.
 
சீனாவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்வது அதிக செலவுபிடிப்பதாகியிருந்தாலும், இறக்குமதி குறைவதாகத் தெரியவில்லை. டெல்லியின் கரோல் பாக் பகுதியில் வாழும் ராஜீவ் சட்டா பல ஆண்டுகளாக சீனாவிலிருந்து மோட்டார் பாகங்களை இறக்குமதி செய்து வருகிறார்.
 
"சீன ஏற்றுமதியாளர்கள் பொருட்களின் விலையை 20 முதல் 40 சதவீதம் வரை உயர்த்தியுள்ளனர். இந்தியாவுக்கு அனுப்பப்படும் பொருட்களுக்கு சீன அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சென்ற ஆண்டிலிருந்து இந்திய துறைமுகங்களில் சீன பொருட்களை விடுவிக்க எடுத்துக் கொள்ளும் காலம் அதிகரித்திருக்கிறது. இதனால் நாங்கள் நிறைய சிக்கல்களை எதிர்கொள்கிறோம்," என அவர் கூறினார்.
 
சீனாவில் உள்ள சிச்சுவான் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸின் இணை முதல்வர் பேராசிரியர் ஹுவாங் யுன்சோங், இந்தியா மற்றும் சீனாவிற்கிடையிலான இருவழி வர்த்தகத்திற்கும், இந்தியாவில் சீன அதிக முதலீட்டை மேற்கொள்வதையும் ஆதரிக்கிறார். ஆனால் அவர் எச்சரிக்கை தேவை என்றும் அறிவுறுத்துகிறார்.
 
பிபிசியுடன் பேசிய அவர், "இருதரப்பு உறவுகளை மீண்டும் தொடங்க இதை ஒரு நல்ல அறிகுறியாக நான் பார்க்கிறேன், ஆனால் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்" என கூறுகிறார்.
 
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், மருத்துவ உபகரணங்கள் போன்ற துறையில் இந்தியா ஒரே ஆண்டில் குறிப்பிடத்தக்க தற்சார்பை அடைந்துள்ளது. எடுத்துக்காட்டாக, பிபிஇ கிட்டை (பாதுகாப்பு உடை) எடுத்துக் கொண்டால், கடந்த ஆண்டு மார்ச் மாதம் பொதுமுடக்கம் அமலானபோது, ​​இந்தியாவில் பிபிஇ கிட் உற்பத்தி ஏறக்குறைய இல்லை என்றே சொல்லலாம். ஆனால் இன்று ஒவ்வொரு நாளும் நாலரை லட்சத்துக்கும் மேற்பட்ட பிபிஇ கிட்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.
 
இந்தியா இப்போது பிபிஇ கிட்களின் முக்கிய ஏற்றுமதியாளராக மாறியுள்ளது. முககவசத்திலும் ஏறக்குறைய இதே நிலைதான். இந்தியாவில் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் முன்பு மிகக் குறைவு. ஆனால் இப்போது அதன் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
 
சுதந்திரம் பெற்றது முதல் தொற்றுநோய் காலகட்டம் வரை, நாட்டில் 16,000 வென்டிலேட்டர்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால் அரசு தரவுகளின்படி, பெருந்தொற்று ஏற்பட்ட ஒராண்டு காலத்துக்குப் பிறகு நாட்டில் 58,000 க்கும் மேற்பட்ட வென்டிலேட்டர்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.ஆனால் குறைபாடுகள் குறித்த புகார்கள் பல மருத்துவமனைகளிலிருந்தும் எழுந்துள்ளன என்பது வேறு விஷயம்.
 
இது தவிர, பல வகையான மருந்துகளை தயாரிக்க 62 சதவீத மூலப்பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. இப்போது இந்த சார்பு குறைந்துள்ளது. இந்தியாவில் கிடைக்கும் இந்த மூலப்பொருட்களின் விலை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதை விட அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
பாதுகாப்புத் துறையில் இந்தியாவை தற்சார்படையச் செய்ய அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு பட்ஜெட்ட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதை வலியுறுத்தினார். இருப்பினும் இந்த விவகாரத்தில் இதுவரை குறிப்பிடத்தக்க வெற்றி காணப்படவில்லை.
 
"பாதுகாப்புத் துறையில் தொழில்நுட்பம் மிக வேகமாக மாறுகிறது. அந்த தொழில்நுட்பம் எப்போது கிடைக்கும் என குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. பாதுகாப்பு, இதுவரை அரசுத்துறையாகவே இருந்துள்ளது. இப்போது மெல்ல தனியார் துறையும் வருகிறது. ஒவ்வொரு துறையிலும் உடனடி வெற்றி கிடைக்கும் என சொல்லமுடியாது. முதலில் அடித்தளம் அமைக்க வேண்டும், அதை பலப்படுத்த வேண்டும், பின்னர் கட்டிடம் கட்டவேண்டும்," என நிலேஷ் ஷா கூறுகிறார்.
 
உற்பத்தியில் இந்தியாவை தற்சார்பு பெறச்செய்யவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் மோதி அரசு 2020 ஏப்ரலில் 'உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட சலுகைத் திட்டம்' அதாவது பி.எல்.ஐ திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதன் கீழ், மின்னணு சாதனங்கள், மொபைல் போன்கள், குளிர் சாதனம் போன்ற 13 துறைகளில் உள்ள நிறுவனங்களுக்கு அரசு, வரி மற்றும் கலால் வரியில் கணிசமான விலக்கை அளிக்கிறது.
 
அதன் நன்மைகள் அடுத்த சில ஆண்டுகளில் தெரியத்தொடங்கும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும்.
 
உலகின் பெரிய ஏற்றுமதி நாடுகள், பெரிய இறக்குமதியாளர்களாகவும் உள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் இதற்கு எடுத்துக்காட்டுகள். பிரதமர் மோதியின் தற்சார்பு இயக்கத்தின் நோக்கங்களில் இறக்குமதியை பெருமளவில் குறைப்பதும் ஒன்று. அதற்காக ஒன்றியஅரசு, பல பொருட்களின் இறக்குமதி மீதான கட்டணங்களை அதிகரித்துள்ளது.
 
பொருளாதார விவகாரங்களுக்கான பிரதமரின் ஆலோசகர் நிலேஷ் ஷா இதை நியாயப்படுத்துகிறார். "வழக்கமாக நீங்கள் மூலப்பொருட்களை மலிவான விலையில் இறக்குமதி செய்து அவற்றின் மதிப்பை அதிகரித்து அதிக விலைக்கு ஏற்றுமதி செய்கிறீர்கள். ஆனால் இந்தியாவில் முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மலிவான விலையிலும், மூலப் பொருட்கள் அதிக விலையிலும் இறக்குமதி செய்யப்படுவதை பார்க்க முடிகிறது. இதை சரிசெய்ய வேண்டியது அவசியம். இதற்காக அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தென்கிழக்காசிய நாடுகள் தங்கள் உற்பத்தியாளர்களுக்கு பல்வேறு வகையான சலுகைகள் அளிப்பதை நாங்கள் கண்டோம்,"என அவர் கூறுகிறார்.
 
"நீங்கள் ஒரு செடியை நடவு செய்யும்போது அது வளரும் வகையில் முன்னும் பின்னுமாக வேலி அமைக்கிறீர்கள். அது ஒரு மரமாக மாறும்போது அதற்கு வேலி தேவையில்லை. எனவே சிலகாலம் செடியை நீங்கள் கவனித்துக்கொள்வது போலவே தொழிற்சாலையையும் சிறிது காலம் கவனித்துக்கொள்வது முக்கியம்,"என அவர் விளக்குகிறார்,
 
ஆனால் இறக்குமதி ஒரு மோசமான விஷயம் அல்ல என சீன எழுத்தாளர் சுன் ஷி கருதுகிறார்.
 
"உற்பத்தி செய்யும் திறனற்ற ஒன்றை நீங்கள் உருவாக்க முயற்சிக்கக்கூடாது. உங்களை விட மலிவான மற்றும் சிறந்த தரத்தில் அதை உருவாக்கக்கூடிய ஒரு நாட்டிலிருந்து அந்தப் பொருட்களை நீங்கள் வாங்கவேண்டும். இதற்காகத்தான் நாடுகளுக்கு இடையிலான இறக்குமதி - ஏற்றுமதி வர்த்தக ஒப்பந்தங்கள் உள்ளன," என்கிறார் அவர்.
 
ஆனால், வர்த்தக பற்றாக்குறையை சமநிலைப்படுத்துவதை சுன் ஷி நிச்சயமாக ஆதரிக்கிறார். சீனாவிற்கான இந்திய ஏற்றுமதி, இறக்குமதியை ஒப்பிடும்போது சுமார் 40 பில்லியன் டாலர் குறைவு என்பதால், அது தற்போது சீனாவின் பக்கம் அதிகமாக சாய்ந்திருக்கிறது.
 
இத்தகைய சூழ்நிலையில் செலவின் முக்கியத்துவம் நிறைய அதிகரிக்கிறது என் ஃபைசல் கூறுகிறார். நாம் சீனாவிலிருந்து சில மூலப்பொருட்களை இறக்குமதி செய்து, அதன் மதிப்புக் கூட்டலுக்குப் பிறகு அதன் விலையை குறைவாக வைத்திருக்க முடிந்தால், ஏற்றுமதி லாபகரமாக இருக்கும். இந்த வழியில் பெரிய ஏற்றுமதியாளராக ஆவதற்கு, பெரிய இறக்குமதியாளராக மாற வேண்டும்.
 
இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்புத் துறையில் இந்தியா தற்சார்பு அடைய வேண்டுமானால், அப்பகுதியில் தனது சக்தியை அதிகரிக்க வேண்டும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
 
" இந்தியப் பெருங்கடலில் நாம் அமெரிக்காவை நம்பியிருக்கிறோம். 'சாகர்' என்ற பெயரில் ஒரு முன்முயற்சி உள்ளது. எனவே அதன் திறனை அதிகரித்து அதை வலுப்படுத்தி , அமெரிக்காவின் மீதான சார்பை குறைந்தபட்சமாக வைத்துக்கொண்டால், இந்தியப் பெருங்கடல் நாடுகளுக்கு நாம் பாதுகாப்பை வழங்க முடியும்,"என ஃபைசல் அகமது கூறுகிறார்.
 
தற்போது​​ இந்த பிராந்தியத்தில் உள்ள 20 நாடுகளில் பலவற்றின் மீது சீனா ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால் இந்த பிராந்தியத்தின் பாதுகாப்பில் இந்தியாவின் பங்கு அதிகரிக்க வேண்டும் என பல நாடுகளும் விரும்புகின்றன.
 
இந்திய அரசின் தற்சார்புக் கொள்கையுடன் சீன எழுத்தாளர் சுன் ஷி உடன்படுகிறார். ஆனால் அந்த இலக்கை அடைய சீனாவுக்கு பல ஆண்டுகள் பிடித்தது போலவே, இந்தியாவும் தற்சார்படைய பல ஆண்டுகள் ஆகக்கூடும் என்கிறார்.
 
இந்த செயல்முறையை சற்று வேகப்படுத்த முடியும். ஆனால் கண் சிமிட்டும் நேரத்திற்குள் நாட்டை தற்சார்பு நிலைக்குச் கொண்டு செல்ல எந்த மந்திரக்கோலும் நம்மிடம் இல்லை.
 
 
*🔵 இஸ்ரேலில் ஆட்சி மாற்றம்! நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவு.!*
 
      _இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமராக நாஃப்டாலி பென்னட் (49) பதவியேற்றுள்ளார். பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது._
 
 
*🔵 அதிர்ச்சி! ஜிம் பயிற்சியாளர் மீது பாலியல் புகார்!!*
 
      _சென்னையில் இளம்பெண்ணிடம் ஜிம் பயிற்சியாளர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பரங்கிமலை காவல் துணை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது._
 
 
*🌴நடப்பு செய்திகள்🌴*.  
 
பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை*
 
 
*✍🏻கோவை மாவட்டத்தில்* நேற்று போல் இன்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்தியேக தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
 
 
*✍🏻சென்னை*
நடைபயிற்சி செல்ல அனுமதி அளித்திருந்தாலும் மெரீனா கடற்கரை சர்வீஸ் சாலையில் மக்கள் கூட்டம் குறைவு.
 
*✍🏻தென்காசி மாவட்டம்* குற்றாலத்தில் ஐந்தருவி, மெயினருவி ஆகியவற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு.
 
*✍🏻மதுரையில்* பல்வேறு இடங்களில் தடுப்பூசி  போடப்பட்டு வருகிறது.
 
*✍🏻தேனி மாவட்டம்*
 பெரியகுளத்தில் மது வாங்க காலை முதலே கூட்டம். மது வாங்கிய குடிமகன்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
 
 
*✍🏻விழுப்புரம்* திருக்கோவிலூர் அருகே மின்வேலியில் சிக்கி காசிநாதன் என்பவர் உயிரிழப்பு
 
 
*✍🏻கோவையில்* உலக இரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் உயர் அதிகாரிகள் இரத்ததானம்.
கோவை ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மாநகர காவல் ஆணையர்,மேற்கு மண்டல காவல் துறை தலைவர்,கோவை சரக டி.ஜ.ஜி ,மாவட்ட  எஸ்.பி ஆகியோர் இரத்த தானம் செய்தனர்.
 
 
*✍🏻கோவை* அரசூர் ஊராட்சியில் முகக் கவசம் அணியாமல்  சென்றவர்களுக்கு, வினோத முறையில் எச்சரிக்கை, மயானத்திற்கு அழைத்து சென்று கரோனா ஆபத்து குறித்து எடுத்துரைத்தனர்.
 
 
*✍🏻சென்னை* அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் இருந்து வெளியேறும் மாணவர்கள்.
பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் எழுந்த நிலையில் மாணவ, மாணவியர் அதிருப்தி. இதுவரை 50 சதவீத மாணவ, மாணவியர் பள்ளி மாற்று சான்றிதழை பெற்றதாக தகவல்
 
 *✍🏻நெல்லை* அரசு ஆஸ்பத்திரிக்கு டேங்கர் லாரியில் 5 டன் ஆக்சிஜன் வருகை
 
 
 *✍🏻தூத்துக்குடி மாவட்டத்தில்* *ஜமாபந்தி மனுக்களை இ-சேவை மையம் மூலம் பொதுமக்கள் அனுப்ப வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தி உள்ளார்.*
 

0 Response to "14.06.2021 - திங்கட்கிழமை - மாலை முக்கியச் செய்திகள்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel