கனமழை எதிரொலி: பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கனமழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலுள்ள பில்லூர் அணை நிரம்பி, உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், பவானியாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான கேரளா மற்றும் நீலகிரி பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் 100அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 97அடியை கடந்தது. தற்போது அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், அணையிலிருந்து 10 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால், பவானியாற்றின் கரையோர பகுதிகளான மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதி மக்களுக்கு வெள்ள ஆபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், ஆற்றில் இறங்கி குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, பரிசல்கள் மூலம் ஆற்றை கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
*சசிக்கலாவுக்கு எதிராக தீர்மானம் போட்ட எடப்பாடியார்! – எடப்பாடிக்கே போன் போட்ட சசிக்கலா!*
அதிமுகவுக்கு எதிராக சசிக்கலா செயல்படுவதாக சசிக்கலாவுக்கு எதிராக இன்று அதிமுக மாவட்ட அளவில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், எடப்பாடி அதிமுக தொண்டருக்கு சசிக்கலா போன் பேசியுள்ளார்.
கடந்த சில நாட்களாக அதிமுக தொண்டர்களுடன் சசிக்கலா போனில் பேசுவதாக வெளியாகி வரும் தகவல்கள் அதிமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அதிமுகவில் இருந்து கொண்டு சசிக்கலாவுடன் பேசியதாக அதிமுக பிரமுகர்கள் பலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று மாவட்ட அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் சசிக்கலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. எடப்பாடி தொகுதியில் எதிர்கட்சி தலைவர் பழனிசாமி, சசிக்கலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார்.
இந்நிலையில் எடப்பாடி தொகுதியில் உள்ள தொண்டர் ஒருவருக்கு போன் செய்து பேசியுள்ள சசிக்கலா ”குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள் தலைவராக இருக்க முடியாது. அப்படியானவரை தொண்டர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” என பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
*கிஷோா் கே.சாமி மீது நடிகை ரோஹினி புகார்*
சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதாக கிஷோர் கே.சாமி மீது நடிகை ரோஹினி ஆன்லைனில் புகார் தெரிவித்துள்ளார்.
கடந்த 13ஆம் தேதிமுன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோா் குறித்து அவதூறாக பல பதிவுகளை முகநூலில் பதிவிட்டதாக கிஷோர் கெ.சாமி மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கில்,கிஷோா் சாமியை ஜூன் 28 -ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி அனுபிரியா உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இணையதளம் மூலம் சென்னை காவல்துறையிடம் கிஷோர் கே.சாமி மீது நடிகை ரோஹினி அவதூறு பரப்புவதாக இன்று புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரில், தன்னைப் பற்றியும், தனது கணவர் ரகுவரன் பற்றியும் முகநூலில் அவதூறு பரப்பியதாக தெரிவித்துள்ளார்.
*விரைவுச் செய்திகள்: டெல்டா விவசாயிகளுக்கு முதல்வர் திட்டம் | CBSE +2 மதிப்பெண் கணக்கீடு*
டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக ரூ.61.09 கோடி ரூபாயில் குறுவை நெல் சாகுபடித் தொகுப்புத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2,870 மெட்ரிக் டன் நெல் விதைகள், 1,90,000 ஏக்கர் பரப்புக்கு ரசாயன உரங்கள் மானிய விலையில் விநியோகிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
தமிழ்நாடு இல்லத்தில் முதல்வருக்கு மரியாதை: டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தமிழ்நாடு இல்லத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. மாலையில் பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்தின் கோரிக்கைகளை வலியுறுத்துகிறார் ஸ்டாலின்.
அரசு நிலம் அபகரிப்பு; 5 பேர் மீது சிபிஐ வழக்கு: ஸ்ரீபெரும்புதூரில் போலி ஆவணங்கள் மூலம் 43 ஏக்கர் அரசு நிலம் அபகரிக்கப்பட்ட விவகாரத்தை புதிய தலைமுறை அம்பலப்படுத்தியது. இந்த மோசடி தொடர்பாக 5 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
சசிகலாவுக்கு எதிராக ஈபிஎஸ் கூட்டத்தில் தீர்மானம்: சேலம் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக சசிகலாவுக்கு எதிராக விழுப்புரம் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கண்டனம் தெரிவித்தனர்.
மதனின் வங்கிக் கணக்குகள் குறித்து ஆய்வு: யூடியூப்பில் ஆபாசமாக பேசிவந்த 'பப்ஜி' மதனின் வங்கிக் கணக்குகள், முதலீடுகள் குறித்து போலீஸ் ஆய்வு செய்துவருகின்றனர். யூடியூப் மூலம் சம்பாதித்த பணத்தை பங்குச்சந்தை, கிரிப்டோகரன்ஸியில் முதலீடு செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
முன்ஜாமீன் கேட்ட மதன் - நீதிமன்றம் கண்டிப்பு: யூடியூபர் மதனின் பேச்சை காது கொடுத்து கேட்க முடியவில்லை என முன்ஜாமீன் மனுவை விசாரித்தபோது சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சிவசங்கர் பாபாவுக்கு மருத்துவ பரிசோதனை: சென்னை கொண்டுவரப்பட்ட சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவுக்கு மருத்துவப் பரிசோதனை செய்தபிறகு காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறை திட்டமிட்டுள்ளது.
மதுபாட்டில்கள் விற்றதாக இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: பறிமுதல் செய்த மதுபாட்டில்களை விற்றதாக புகார் வந்ததன்பேரில், திருச்சியில் பெண் ஆய்வாளர் உட்பட காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
+2 மதிப்பெண் கணக்கீடு - சிபிஎஸ்இ விளக்கம்: +2 மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு குறித்து உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ விளக்கமளித்திருக்கிறது. 10, 11ஆம் வகுப்பு மதிப்பெண்களில் தலா 30%, 12ஆம் வகுப்பில் நடந்த தேர்விலிருந்து 40% வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
காவி உடை அணிந்த திருவள்ளுவர் படம் மாற்றம்: கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்ட காவி உடை அணிந்த திருவள்ளுவர் படம் அகற்றப்பட்டது. 2017ஆம் ஆண்டு வைக்கப்பட்ட அந்தப் படத்திற்கு கடும் எதிர்ப்பு எழும்பியதை அடுத்து மாற்றப்பட்டுள்ளது.
பார் கவுன்சிலுக்கு நீதிமன்றம் கேள்வி: தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது தானாக முன்வந்து பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க முடியுமா? என காவலர்களுடன் வழக்கறிஞர் தனுஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
பவானி ஆற்றில் வெள்ள எச்சரிக்கை: பில்லூர் அணையிலிருந்து 10ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிலைகள், நகைகளை மீட்க உத்தரவு: காணாமல்போன கோயில் சிலைகள், நகைகளை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நடிகர் ஷமன் மித்ரு உயிரிழப்பு: தொரட்டி திரைப்பட நடிகர் ஷமன் மித்ரு கொரோனாவால் உயிரிழந்தார். சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர்பிரிந்தது.
குறைந்து வரும் கொரோனாவின் தாக்கம்: இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் மீண்டனர். சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 8.2 லட்சமாக குறைந்தது.
இத்தாலி, வேல்ஸ், ரஷ்ய அணிகள் வெற்றி: யூரோ கோப்பை கால்பந்து தொடரில் சுவிட்சர்லாந்தை இத்தாலி அணி எளிதாக வென்றது. அதேபோல் வேல்ஸ், ரஷ்ய அணிகளும் வெற்றிபெற்றது. இதில் அடுத்த சுற்று வாய்ப்பை துருக்கி அணி இழந்தது.
*சட்டமன்ற கூட்டத்தொடருக்கு வரும் எம்.எல்.ஏ.க்கள், பணியாளர்கள், பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா, நெகட்டிவ் சான்று கட்டாயம் என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். நாளை முதல் கலைவாணர் அரங்கம், எம்.எல்.ஏ.க்கள் குடியிருப்பு, தலைமைச் செயலகத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நததப்படுவதாக அப்பாவு தெரிவித்தார்.*
*திரிணமூல் காங்கிரஸில் இணைந்த பாஜகவின் தேசிய துணைத் தலைவர் முகுல் ராயின்‘இசட்’பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றது.*
*🌎🇮🇳 கல்விச் செய்திகள்🇮🇳🌎*
1️⃣✒️🔹🔸*மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் 20.06.2021 வரை அலுவலகம் வருவதிலிருந்து முழுமையாக விலக்களி்த்து *அரசாணை வெளியீடு.*
2️⃣✒️🔹🔸பணிநீக்கம் செய்யப்பட்ட / நீக்கப்பட்ட / கட்டாயமாக ஓய்வு பெற்ற GPF சந்தாதாரர்களின் அனுமதியை தடைசெய்தல் - பொது வருங்கால வைப்பு நிதி T.N. விதிகளின் விதி 28 (1) திருத்தம் செய்து *அரசாணை வெளியீடு.*
3️⃣✒️🔹🔸அரசுப்பள்ளி மாணவர்களின் நலன் கருதி பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக குழு அமைத்து *தமிழ்நாடு முதல்வர் உத்தரவு.*
4️⃣✒️🔹🔸கொரோனா பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள், ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்களின் விவரம் அனுப்ப உத்தரவு. -ஒருங்கிணைந்த கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் *செயல்முறைகள் வெளியீடு.*
5️⃣✒️🔹🔸2020-21-ம் ஆண்டுக்கான அரசு ஊழியர்களின் சேம நல நிதி கணக்கு அறிக்கை இணையதளத்தில் பதிவேற்றம் - *முதுநிலை துணை கணக்காயர் தகவல்.*
6️⃣✒️🔹🔸பள்ளிக் கல்வி - 2021 - 2022 ஆம் கல்வியாண்டிற்கு 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை - ஒன்பதாம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் பள்ளி அளவிலான மதிப்பெண் பட்டியல் தயாரித்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி *பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு.*
7️⃣✒️🔹🔸CPS வல்லுநர் குழுவின் பரிந்துரைகள் அரசின் ஆய்வில் உள்ளது - அரசின் இறுதி முடிவுக்கு ஏற்றவாறு செயல்பட முடிவு என நிதித்துறை சிறப்புச் செயலாளர் திருமதி. பூஜா குல்கர்னி IAS, *அரசுத் தகவல் மைய ஆணையருக்கு கடிதம்.*
8️⃣✒️🔹🔸மாணவர் சேர்க்கை - இட ஒதுக்கீடு கட்டாயம் - *பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு.*
9️⃣✒️🔹🔸பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஏற்படும் கஷ்டங்களைப் போக்க தொலைபேசி மூலம் *வழி காட்டும் மையம் துவக்கம்.*
1️⃣0️⃣✒️🔹🔸தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பட்டியலை *கலெக்டர்கள் தயார் செய்து வருகின்றனர்.*
1️⃣1️⃣✒️🔹🔸அரசுப் பள்ளிக்கு மாறுபவர்களுக்காக ஆங்கில வழிக் கல்வியை அதிகப்படுத்த நடவடிக்கை
*அமைச்சர் அன்பில் மகேஸ்.*
1️⃣2️⃣✒️🔹🔸எந்த நிபந்தனைகளின் அடிப்படையிலும் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை நிறுத்தக்கூடாது என்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாணவர் சேர்க்கையின்போது எந்த படிவத்திற்கும் *கட்டண வசூலிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.*
1️⃣3️⃣✒️🔹🔸ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பிளஸ் 1 வகுப்பு தவிர மற்ற 1, 6, 9ம் வகுப்புகளுக்கும் சேர்க்கை நடந்துவருகிறது. ஒருவாரத்தில் அது முடிந்த பிறகு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என *பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்*
1️⃣4️⃣✒️🔹🔸தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை அளவை ஆய்ந்து பரிந்துரை செய்ய ஓய்வுபெற்ற டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு.தா.முருகேசன் அவர்கள் தலைமையில் ஆணையம் அமைத்திட *முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார்*
1️⃣5️⃣✒️🔹🔸RMSA இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு (G.O.No.277, Date:30.10.2012) தொடர் நீட்டிப்பு வழங்கிடும் பொருட்டு கூடுதல் விபரங்கள் கோரி *பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு*
1️⃣6️⃣✒️🔹🔸சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, 10 மற்றும் 11-ம் வகுப்பு தேர்வு மற்றும் 12-ம் வகுப்பு உள்ளீட்டு தேர்வு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க திட்டம். 3 மதிப்பெண்களையும் சேர்த்து *வெயிட்டேஜ் முறை அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க பரிசீலனை*
1️⃣7️⃣✒️🔹🔸தமிழ்நாட்டில் 11 உயர்கல்வி நிறுவனங்களில் ஆன்லைன் படிப்புகளுக்கு *UGC அனுமதி*
1️⃣8️⃣✒️🔹🔸கல்வி, வேலைவாய்ப்பில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தங்களது கடமையை செய்ய வேண்டுமென *முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.*
1️⃣9️⃣✒️🔹🔸அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் 69% இட ஒதுக்கீட்டை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. எக்காரணத்தைக் கொண்டும் *ஜாதி ரீதியாக பாகுபாடு காட்டக்கூடாது என அறிவிப்பு.*
2️⃣0️⃣✒️🔹🔸பள்ளி கல்வி இயக்குனரகத்தில் மாற்றுப் பணியில் இருந்த ஆசிரியர்கள், அவரவர் பள்ளிகளுக்கு *அதிரடியாக இடம் மாற்றப்பட்டு உள்ளனர்.*
2️⃣1️⃣✒️🔹🔸பத்தாம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், டி.சி., என்ற மாற்று சான்றிதழ் கட்டாயம் வழங்க வேண்டும் என பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அதே பள்ளியில், மாணவர்கள் பிளஸ் 1 படிப்பதாக இருந்தாலும், அவர்களுக்கும் *மாற்று சான்றிதழ் வழங்குவது அவசியம்.*
2️⃣2️⃣✒️🔹🔸மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு, கல்விக் கட்டணச் சுமை போன்ற காரணங்களால் லட்சக்கணக்கான மாணவா்கள் அரசுப் பள்ளிகளை நோக்கி வரத் தொடங்கியுள்ளனா். அவா்களை நிரந்தரமாகத் தக்க வைக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என கல்வியாளா்கள், *பள்ளிக் கல்வி முன்னாள் அதிகாரிகள் வலியுறுத்துகின்றனா்*
2️⃣3️⃣✒️🔹🔸மதிப்பெண் சான்றிதழ், மாணவர் சேர்க்கை, பள்ளி கட்டமைப்பு உள்ளிட்ட பல விவகாரங்கள் பற்றி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் காணொளி வாயிலாக *நேற்று 16.06.2021 ஆலோசனை நடந்தது.*
*பாலியல் குற்றங்களை தடுக்கும் சட்டத்தின் குறைபாடுகளை ஆராய நிபுணர்குழு அமைக்க கோரி ஐகோர்ட்டில் மனு*
சென்னை: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் சட்டத்தின் குறைபாடுகளை ஆராய நிபுணர்குழு அமைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தற்போதைய சூழலில் இது முக்கியமான வழக்கு என்பதால் மனுதாரர் கூடுதல் தகவல்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 32 மாவட்டங்களில் உள்ளூர் புகார் குழு அமைக்கப்பட்டுள்ள அவை முறையாக செயல்படாமல் உள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய புகாரில் ஹெச்.ராஜா மீது திருமயம் நீதிமன்றத்தில் அரசு குற்றப்பத்திரிகை தாக்கல்*
திருமயம்: உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய புகாரில் ஹெச்.ராஜா மீது திருமயம் நீதிமன்றத்தில் அரசு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. குற்றப்பத்திரிக்கையின் நகலை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 29-க்கு ஒத்திவைத்தனர். 2018-ல் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது ஐகோர்ட் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக ஹெச்.ராஜா மீது வழக்கு தொடரப்பட்டுளள்து.
*செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர்*
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.
சென்னை சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் பாலியல்குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதனடிப்படையில்குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தபுகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிவசங்கர் பாபாவை விசாரிக்க சென்னை சிபிசிஐடி தனிப்படையினர்விரைந்த நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து தப்பி தில்லி வந்து காசியாபாத் பகுதியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபாவை கைது செய்த காவல்துறையினர் நேற்று இரவு சென்னை அழைத்து வந்தனர்.
சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி காவல்துறையினர், மருத்துவ பரிசோதனைக்கு பிறகுதற்போது செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
*🔵 திருப்பூரில் தடுப்பூசி போட வடமாநில தொழிலாளர்கள் திரண்டதால் உள்ளூர் மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.*
_திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று தங்களது ஊழியர்களை பெரியாண்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தடுப்பூசி போடுவதற்காக அழைத்து வந்துள்ளது. அவர்களில் பெரும்பகுதியினர் வட மாநில தொழிலாளர்களாகும்._
_அழைத்துவரப்பட்ட ஊழியர்கள் அதிகாலை 2.30 மணி முதல் வரிசையில் நின்றுள்ளனர். ஆனால், காலையில் அப்பகுதி மக்கள் தடுப்பூசி போடுவதற்கு சென்றபோது, ஏற்கனவே நூற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் முன்னால் நிற்பதை பார்த்த ஊர் மக்கள் தங்களுக்கு தடுப்பூசி கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் அங்கிருந்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்._
*திருச்சி: திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, மயிலாடுதுறையில் 8 பாலியல் புகார்கள் வந்துள்ளதாக மத்திய மண்டல ஐ.ஜி. கூறியுள்ளார். மயிலாடுதுறையில் மட்டும் பள்ளி ஆசிரியர்கள் இரண்டு பேர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாலியல் தொல்லை தொடர்பாக புகார் அளிக்க எண்கள் அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்தில் 8 புகார்கள் வந்துள்ளதாக ஐ.ஜி.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.*
*விளைநிலங்களுக்கே சென்று நெல் கொள்முதல் செய்யும் வகையில் நடமாடும் கொள்முதல் நிலையங்களை அமைக்க திட்டமிட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.*
*பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கைதான சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி முன்னாள் மாணவிகள் அளித்த பாலியல் புகாரில் சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி கைது செய்தது.*
*பாட்காஸ்ட் எனப்படும் இணைய வலையொலி தளத்தில் கால்பதிக்கும் முயற்சியில் முகநூல் நிறுவனம் இறங்கியுள்ளது.*
*நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளோம் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும். செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பிரதமரிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.*
*காங்கயம் அருகே, சென்னிமலை முருகன் கோயிலுக்குச் சொந்தமான 70 ஏக்கர் நிலங்களை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை அதிரடியாக மீட்டனர்.*
*🔷🔶தமிழ்நாட்டில் 10,000க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!*
*✍️மாவட்ட வாரியாக இன்றைய பாதிப்பு நிலவரம்...*
*பராமரிப்பு பணிகளுக்காக பாம்பன் ரயில் பாலத்தில் போக்குவரத்து தடை காரணமாக சிறப்பு ரயில்கள் ரத்து !*
ராமேஸ்வரம்: பராமரிப்பு பணிகளுக்காக பாம்பன் ரயில் பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருப்பதால், ராமேஸ்வரத்திலிருந்து இன்று மாலை 04.30 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - திருப்பதி சிறப்பு ரயில் ராமேஸ்வரம் - மண்டபம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு மாலை 5 மணிக்கு மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது. அதே போல ராமேஸ்வரத்திலிருந்து இன்று இரவு 08.25 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ராமேஸ்வரம் - மண்டபம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு இரவு 08.55 மணிக்கு மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும். மேலும் 24 மணி நேரம் தாமதமாக இன்று இரவு 11.55 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்ட ராமேஸ்வரம் - மாண்டுயாடிஹ் சிறப்பு ரயில் நாளை அதிகாலை 12.30 மணிக்கு மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.*
*அஸ்வின், ஜடேஜா உள்ளே: டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணி அறிவிப்பு*
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இறுதி ஆட்டம் சௌதாம்ப்டனில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதில் விளையாடவுள்ள 11 வீரர்கள் அடங்கிய பட்டியலை பிசிசிஐ சுட்டுரையில் வெளியிட்டுள்ளது.
சுழற்பந்துவீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் அணியில் இடம்பெற்றுள்ளனர். வேகப்பந்துவீச்சாளர்களாக இஷாந்த் சர்மா, ஜாஸ்பிரீத் பூம்ரா, முகமது ஷமி ஆகியோர் விளையாடுகின்றனர்.
இந்திய அணி:
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், சேத்தேஷ்வர் புஜாரா, அஜின்க்யா ரஹானே (துணை கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜாஸ்பிரீத் பூம்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி.
*திருச்சியில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள நவீன ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கினார் பாரிவேந்தர் எம்.பி.*
திருச்சி: திருச்சியில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள நவீன ஆம்புலன்ஸ் வாகனத்தை பாரிவேந்தர் எம்.பி. வழங்கினார். மேலும், ரூ.3.20 லட்சம் மதிப்புள்ள 4 ஆக்சிஜன் செறிவூட்டிகளை சொந்த நிதியில் திருச்சியில் ஆட்சியரிடம் ஒப்படைத்தார்.
*அம்பானி வீட்டருகே வெடிபொருள் கார் வழக்கு: மாஜி ஐ.பி.எஸ்., அதிகாரி பிரதீப் ஷர்மா கைது*
மும்பை: தொழிலதிபர் அம்பானி வீட்டருகே வெடிபொருள் நிரப்பட்ட கார் விவகாரத்தில் முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியும், பிரபல என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டான பிரதீப் ஷர்மா உள்ளிட்ட இருவர் இன்று கைது செய்யப்பட்டனர்.
மஹாராஷ்டிராவின் தெற்கு மும்பையில், ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே, கடந்த பிப்ரவரி மாதம் வெடிபொருள் நிரப்பிய கார் நிறுத்தப்பட்டு இருந்தது. அடுத்த சில நாட்களில், கார் உரிமையாளர் மன்சுக் ஹிரன் கொல்லப்பட்டார். இது தொடர்பாக எஸ்.ஐ., சச்சின் வாஸே என்பவருக்கு கார் நிறுத்தப்பட்ட வகாரத்தில் நேரடி தொடர்பிருந்ததாக தெரியவந்ததையடுத்து கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவினர் விசாரித்து வருகி்ன்றனர். கடந்த மே மாதம் எஸ்.ஐ., சச்சின் வாஸே, பணியில் இருந்து , 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டார்.
தொடர் விசாரணயைில், இந்த வழக்கில் இன்று முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி பிரதீப் ஷர்மாவை தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசார் கைது செய்தனர். மும்பை அந்தேரியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு இன்று அதிரடியாக ரெய்டு நடத்திய போலீசார் , பிரதீப் ஷர்மா மற்றொரு போலீஸ் அதிகாரி என இருவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை ஜூன் 28 வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
யார் இந்த பிரதீப் ஷர்மா
கைதான பிரதீப் ஷர்மா 59, 1983 ஐ.பி.எஸ்., கேடர் ஆவார். 100-க்கும் மேற்பட்ட கிரிமினல்களை என்கவுன்டர் மூலம் போட்டு தள்ளியதால் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என மும்பை போலீஸ்வட்டாரத்தில் அழைக்கப்பட்டார். மும்பை நிழல் உலகதாதாக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால், பணிநீக்கம், சஸ்பெண்ட் போன்ற பல்வேறு வழக்குகளை சந்தித்து வந்த நிலையில், 2019-ம் ஆண்டு ஒய்வு பெற்றார். சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே முன்னியில் அக்கட்சியில் இணைந்தார் . 2019-ம் சட்டசபை தேர்தலில் போட்டியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
ஜெலட்டின் வெடிபொருளுடன் காரை நிறுத்திய விவகாரத்தில் பிரதீப் ஷர்மாவுக்கும் எஸ்.ஐ., சச்சின்வாஸேக்கும் தொடர்பிருப்பதாகவும் இதில் பிரதீப்ஷர்மா மூளையாக செயல்பட்டதாக விசாரணையில் தெரியவந்ததையடுத்து தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசார் பிரதீப் ஷர்மாவை கைது செய்தனர். இதையடுத்து அம்பானி விவகாரத்தில் மர்மம் இன்னும் நீண்டு கொண்டே போவதாக கூறப்படுகிறது.
*ஒரே நாளில் பிரபலமான பாட்டி*
ஒரே நாளில் தமிழக ஊடகங்களில் விறுவிறுப்பாக பரவியது இந்தப் பாட்டியின் புகைப்படம்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பால் பெற்ற கொரோனா நிவாரணத் தொகையான நான்கு 500 ரூபாய் தாள்களை ஒரு கையிலும் மளிகைப் பொருள்களை மற்றொரு கையிலும் அணைத்தவாறு வெள்ளந்தியான அவருடைய சிரிப்புதான் சிறப்பு.
இந்தப் பாட்டியின் படத்துடன் மேலும் சிலருடைய படங்களையும் சேர்த்து, “ஏழைத் தாய்மார்களின் சிரிப்பே நமது அரசின் சிறப்பு” என்று பெருமிதத்துடன் முதல்வர் ஸ்டாலின் தமது ஃபேஸ்புக், டுவிட்டர் பக்கங்களில் பதிவிட்டார்.
ஒரு நாளில் பிரபலமான, அனைவராலும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு பலரது மனதிலும் இடம்பிடித்த பொக்கை வாய் சிரிப்புக்குச் சொந்தமான இந்தப் பாட்டியின் பெயர் வேலம்மாள்.
குமரி மாவட்டம், நாகர்கோவில் அருகேயுள்ள கீழகலுங்கடி பகுதியைச் சேர்ந்தவர் வேலம்மாள், 90. இவருடைய கணவர் தர்மலிங்கம் 20 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.
இந்தப் பாட்டிக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். மகன் பால்மணி உள்ளூரில் சரக்கு ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிகிறார். மகள் அருள்மணி, திருப்பூரில் உள்ள தமது மகள் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
கீழகலுங்கடியில் மகள் இருந்தபோது அவருடன் வேலம்மாள் வசித்து வந்தார். பின்னர், சிறிது காலம் மகனுடனும் இருந்தார். பின்னர் மகனுடன் ஒத்துப்போகாததால் தற்போது அதே ஊரில் உள்ள தமது தங்கையின் வீட்டுத் திண்ணையில் தங்கிக் கொள்கிறார். வெயிலாக இருந்தாலும் மழையாக இருந்தாலும் இந்தத் திண்ணைதான் பாட்டிக்கு வசிப்பிடம்.
குடும்ப அட்டைதாரர்களுக்கான கொரோனா நிவாரண உதவியாக இரண்டாவது தவணை ரூ.2,000, மளிகைப் பொருள்கள் ஆகியவற்றை பெற்றுக்கொண்ட வேலம்மாளுக்கு அளவற்ற ஆனந்தம். ரூபாய் நோட்டுகளுடனும் மளிகைப் பொருள்களுடனும் அவர் சிரித்த படம்தான் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
“எனக்குச் சொந்த ஊர் கலுங்கடிதான். இங்குதான் பிறந்து வளர்ந்ததெல்லாம்.”
“எனக்கு இங்கு தேவாலயத்தில் உள்ள பாதிரியார் தினமும் உணவு கொண்டு வந்து தருவார். எங்கள் ஊரில் உள்ளவர்கள் காசு தருவார்கள். அதைக் கொண்டு நான் சாப்பிட்டுக் கொள்கிறேன். மகன் உள்ளூரில் இருந்தாலும் ஒத்துப்போகாததால் எனது தங்கை வீட்டுத் திண்ணையில் தங்கிக்கொள்கிறேன்.
“எனக்கு கண் சரியாகத் தெரியாது. நான் இங்கு தனியாகத்தான் இருக்கிறேன். தெருவில் படுத்திருக்கிறேன். எனவே, தமிழக முதல்வர் எனக்கு தங்குவதற்கு ஒரு வீடு தந்தால் நன்றாக இருக்கும். எனது ஆயுள் காலம் வரை நன்றியுள்ளவளாக இருப்பேன்.
“தமிழக அரசு அளித்துள்ள இந்தப் பணம் எனக்கு பம்பர் பரிசு கிடைத்ததுபோல் உள்ளது. இந்தத் தொகையை தேநீருக்காகவும் சாப்பாட்டிற்காகவும் செலவு செய்கிறேன். மேலும், இந்தப் பணத்தைக் கொண்டு நல்ல சேலை ஒன்றை எடுத்துக்கொள்வேன்,” என்றார் வேலம்மாள்.
______________________
*✅திண்டுக்கல் மாவட்டம்* கொடைக்கானல் கீழ்மலை பண்ணைக்காடு - தாண்டிக்குடி சாலையில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல வனத்துறை அறிவுறுத்தியுள்ளனர்.
______________________
*✅சென்னை:* மருத்துவ பரிசோதனைக்காக சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு சிவசங்கர் பாபா அழைத்து செல்லப்பட்டார்.
______________________
*✅திருப்பூர்* காங்கேயம் பகுதியில் கோவிலுக்குச் சொந்தமான ரூ.50 கோடி மதிப்புள்ள 70 ஏக்கர் பரப்பளவு நிலம் மீட்கப்பட்டது. அறநிலையத்துறை ஆணையர் நடராஜ் தலைமையில் அதிகாரிகள் குழு சிவிலியார்பாளையம் பரமசிவன் கோலுக்குச் சொந்தமான 70 ஏக்கர் நிலம் அறநிலையத்துறை மீட்டது.
______________________
*✅மதுரை மாவட்டம்* உசிலம்பட்டி அருகே கூரியர் வாகனத்தில் 85 மூட்டை ரேஷன் அரிசி கடத்திய ஓட்டுநர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொங்கம்பட்டியில் ரேஷன் அரிசி கடத்திய கூரியர் வாகனம் தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. போலீசார் வந்து விபத்துக்குள்ளான வாகனத்தை சோதனையிட்டபோது 85 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது
______________________
*✅கரூர்* அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கவச உடை அணிந்து கோவிட்-19 வார்டில் மாவட்ட ஆட்சியர் திரு பிரபு சங்கர் ஆய்வு செய்தார்
______________________
*✅விருதுநகர் மாவட்ட* ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜெ.மேகநாத ரெட்டி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார்.
______________________
*✅தருமபுரி:* ஏரியூர் ஒன்றியத்தில் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் மேற்கொள்ளவேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து கூடுதல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் இரா.வைத்திநாதன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
______________________
*✅நாமக்கல் மாவட்ட* புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி ஸ்ரேயா பி சிங் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
______________________
*✅திண்டுக்கல் மாவட்ட*
ஆட்சியராக திரு விசாகன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
______________________
*✅ராமநாதபுரம் மாவட்ட* ஆட்சியராக திருமதி சந்திரகலா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
______________________
*✅திருப்பூர்:* மின்மயான தொழிலாளர்களுக்கு கோவிட்19 தடுப்பூசி செலுத்தப்படுவதை மாநகராட்சி ஆணையர் திரு.கிராந்தி குமார் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
______________________
*✅நெல்லை மாவட்ட* ஆட்சியர் அலுவலகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த கூட்டுறவு துறை அதிகாரிகளுடன் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.ஐ பெரியசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
______________________
*✅திண்டுக்கல்:* கோவிட் வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு ச.விசாகன் தலைமையில் நடைபெற்றது.
______________________
*✅சென்னை* விருகம்பாக்கம் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் திரு ககன்தீப் சிங் பேடி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
______________________
*✅தருமபுரி மாவட்டம்* பென்னாகரத்தில், மதுக்கடைகளை மூடக்கோரி பாமக மாநில தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜி. கே. மணி கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்..
______________________
*✅தேனி* மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரும்பூஞ்சை நோய்க்கான சிறப்பு வார்டு மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை வார்டு துவங்கப்பட்டுள்ளது.
______________________
*✅திருப்பூர்* மாநகராட்சிக்குட்பட்ட 42-வது வார்டில் பணியாற்றும், முன்கள பணியாளர்கள் 120 பேருக்கு திருப்பூர் தெற்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. செல்வ ராஜ் கோவிட் நிவாரண பொருட்களை வழங்கினார்.
_____________________
*✅காஞ்சிபுரம்:* குன்றத்தூர் அருள்மிகு தெய்வ சேக்கிழார் மணிமண்டபத்தில், தமிழக கோயில்களில் மாத சம்பளம் இன்றி பணியாற்றும் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு ரூபாய் 4,000 உதவித் தொகை மற்றும் 10 கிலோ அரிசி உட்பட15 வகை மளிகைப் பொருள்களை மாநில அமைச்சர் திரு.அன்பரசன் இன்று வழங்கினார்.
______________________
*✅நாமக்கல் மாவட்டம்* பாப்பம்பாளையம் ஊராட்சியில் பணி புரியும் கோவிட் முன்கள பணியாளர்களுக்கு, குமாரபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு பி தங்கமணி, கோவிட் நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.
______________________
0 Response to "18.06.2021 இன்றைய செய்திகள் "
Post a Comment