பான் கார்டை ஆதாருடன் இணைப்பது ஈசி... ஜூன் 30ஆம் தேதிக்குள் பான் கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டும்.
அதை எப்படி இணைப்பது என்று இங்கே பார்க்கலாம். பணப் பரிவர்த்தனைகள் மற்றும் வரி தொடர்பான விஷயங்களில்
தனிநபரின் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு விவரங்கள் கண்காணிக்கப்படுகின்றன. வரி
ஏய்ப்பைத் தடுக்கவும், கடன் மோசடிகளைக் குறைக்கவும் பான் கார்டுகளுடன் ஆதாரை இணைக்க
வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பான் கார்டை ஆதார் அட்டையுடன்
இணைப்பதற்கான கால அவகாசம் 2021 ஜூன் 30ஆம் தேதி வரையில் மட்டுமே உள்ளது. காலக்கெடு முடிய
இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஆதாரை பான் கார்டுடன்
எவ்வாறு இணைப்பது என்று இங்கே பார்க்கலாம். 567638 அல்லது 56161 ஆகிய எண்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் ஆதார்
கார்டை பான் கார்டுடன் இணைக்கலாம். வாடிக்கையாளர் ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட தனது
மொபைல் எண்ணிலிருந்து UIDPAN என டைப் செய்து ஒரு இடைவெளி (space) விட்டு 12 இலக்க ஆதார் எண்
மற்றும் 12 இலக்க பான்
எண்ணை டைப் செய்து மேற்கூறிய நம்பருக்கு அனுப்ப வேண்டும். உதாரணம்: UIDPAN 112233445566
AABBC1111D பான் மற்றும் ஆதார் கார்டில் உள்ள விவரங்கள்
ஒன்றியிருந்தால் பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்பட்டுவிடும். https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar
என்ற
முகவரியில் சென்று ஆன்லைன் மூலமாகவும் பான் கார்டை ஆதாருடன் இணைக்க முடியும்.
இதில் பான் எண்,
ஆதார்
எண், மொபைல்
நம்பர், பெயர்
ஆகியவற்றைப் பதிவிட்டாலே போதும். ஆதார் கார்டும் பான் கார்டும் இணைக்கப்பட்டுள்ளதா என்று
பார்ப்பதற்கு https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/link-aadhaar-status
என்ற
முகவரியில் சென்று பார்க்கலாம்.
Share this post
0 Response to "ஆதார்-பான்கார்டு இணைப்பு இம்மாதம் (ஜூன்) 30ந் தேதி கடைசி நாள்"
0 Response to "ஆதார்-பான்கார்டு இணைப்பு இம்மாதம் (ஜூன்) 30ந் தேதி கடைசி நாள்"
Post a Comment