தமிழகத்தில் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - மாற்றப்பட்ட அதிகாரிகள், அவர்கள் முன்பு வகித்த பதவி விவரம்

Trending

Breaking News
Loading...
தமிழகத்தில் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - மாற்றப்பட்ட அதிகாரிகள், அவர்கள் முன்பு வகித்த பதவி விவரம்

  

*
✍🏻தமிழகத்தில் 39 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவைத் தலைமைச் செயலர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.*
 
*மாற்றப்பட்ட அதிகாரிகள், அவர்கள் முன்பு வகித்த பதவி விவரம்:*

 
*1. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராகப் பதவி வகித்து மாற்றப்பட்ட ஜான் லூயிஸ், உள்துறை, மது மற்றும் கலால் பிரிவு இணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.*
 
*2. நாமக்கல் மாவட்ட ஆட்சியராகப் பதவி வகித்து மாற்றப்பட்ட மேகராஜ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.*
 
*3. பத்திரப் பதிவுத்துறை ஐஜி ஷங்கர் இடமாற்றம் செய்யப்பட்டு, தமிழ்நாடு காதி மற்றும் கிராம தொழில் வாரியத் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்*.
 
*4. திருப்பூர் மாவட்ட ஆட்சியராகப் பதவி வகித்து மாற்றப்பட்ட விஜய கார்த்திகேயன், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.*
 
*5. திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை சிறப்புச் செயலர் கருணாகரன் மாற்றப்பட்டு, மீன்வளத்துறை ஆணையர் மற்றும் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.*
 
*6. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைக் கழக மேலாண் இயக்குநர் ஜெயந்தி மாற்றப்பட்டு, நில சீர்திருத்தத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.*
 
*7. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை துணைச் செயலர் கற்பகம் மாற்றம் செய்யப்பட்டு, வணிக வரித்துறை நிர்வாகப் பிரிவு இணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.*
 
*8. இ-சேவை துறை ஆணையர் சந்தோஷ் கே.மிஸ்ரா மாற்றப்பட்டு போக்குவரத்துத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.*
 
*9. கரூர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம்.வடநேரே மாற்றப்பட்டு, நிதித்துறை கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.*
 
*10. தொழிற்சாலைத் துறை கூடுதல் செயலர் சுந்தரவல்லி மாற்றப்பட்டு, மாநிலத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.*
 
*11. கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் க்ரேஸ் லால்ரிண்டிகி பச்சுவா மாற்றப்பட்டு, தொழில் மற்றும் வணிகத்துறை கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.*
 
*12. நில நிர்வாகத் துறை ஆணையர் விபு நாயர் மாற்றப்பட்டு, தொழில் முனைவோர் வளர்ச்சி மற்றும் ஊக்கம் பயிற்சி மைய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.*
 
*13. தமிழ்நாடு ஃபைபர் நெட் கழக மேலாண் இயக்குநர் ரவிச்சந்திரன் மாற்றப்பட்டு, மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.*
 
*14. தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண் இயக்குநர் பவன்குமார் ஷெராவத் மாற்றப்பட்டு, துணை தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.*
 
*15. அரசு கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இணைச் செயலர் அம்ரித ஜோதி மாற்றப்பட்டு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை இணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.*
 
*16. மாநில மனித உரிமை ஆணையச் செயலர் மகேஸ்வரி மாற்றப்பட்டு, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக் கழக சிறப்புச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.*
 
*17. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆணையராகப் பதவி வகிக்கும் பழனிசாமி மாற்றப்பட்டு, நில நிர்வாகத்துறை (c&i) பதவி கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.*
 
*18. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா மாற்றப்பட்டு, நில நிர்வாகத்துறை கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.*
 
*19. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி மாற்றப்பட்டு கால்நடை, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.*
 
*20. சமூக நல ஆணையர் ஆபிரகாம் மாற்றப்பட்டு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சிறப்புச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.*
 
*21. கரூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் மலர்விழி விடுப்பில் இருந்து திரும்பி வந்த நிலையில் அறிவியல் நகரத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.*
 
*22. சுற்றுச்சூழல் காலநிலை மற்றும் வனத் துறை இணைச் செயலாளர் அருண் சுந்தர் தயாளன் மாற்றப்பட்டு நிதித் துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்*.
 
*23. தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில் வாரியத் தலைமை நிர்வாக அலுவலர் சாந்தி இடமாற்றம் செய்யப்பட்டு சேலம் பட்டு வளர்ப்புத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.*
 
*24. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் எஸ்.ஏ.ராமன் இடமாற்றம் செய்யப்பட்டு அருங்காட்சியகங்கள் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.*
 
*25. நகரப் பஞ்சாயத்து இயக்குநர் பழனிசாமி இடமாற்றம் செய்யப்பட்டு ஆதி திராவிடர் மற்றும் மலைவாழ் மக்கள் நலத்துறை இணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.*
 
*26. சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய மேலாண்மை இயக்குநர் ஹரிஹரன் மாற்றப்பட்டு, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.*
 
*27. ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் இடமாற்றம் செய்யப்பட்டு, தமிழ்நாடு கனிம வளத்துறை (சேலம்) மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.*
 
*28. தொழில்நுட்பக் கல்வித்துறை இயக்குநர் விவேகானந்தன் இடமாற்றம் செய்யப்பட்டு, ஆதிதிராவிடர் வீட்டு வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.*
 
*29. மாநில வளர்ச்சிக் கொள்கை ஆலோசனை உறுப்பினர் செயலர் அனில் மேஷ்ராம் இடமாற்றம் செய்யப்பட்டு, சிமெண்ட் கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.*
 
*30. சுற்றுலா மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் இடமாற்றம் செய்யப்பட்டு, கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.*
 
*31. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சரண்யா ஹரி மாற்றப்பட்டு, சென்னை மாநகராட்சி (மத்திய) வட்டாரத் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.*
 
*32. தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் மகேஸ்வரன் மாற்றப்பட்டு, வெளிநாடுவாழ் மனிதவள மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.*
 
*33. தொழில் முனைவோர் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குநராகப் பதவி வகிக்கும் ராஜாமணி மாற்றப்பட்டு, உப்பு கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.*
 
*34. நகராட்சி நிர்வாக ஆணையராகப் பதவி வகித்து மாற்றப்பட்ட பாஸ்கரன், தமிழ்நாடு கடல்வாரிய துணைத் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.*
 
*35. தமிழ்நாடு பால் உற்பத்தி மற்றும் பால் வளர்ச்சி ஆணையர் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மேலாண் இயக்குநர் நந்தகோபால், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.*
 
*36. தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு திட்ட இயக்குநர்/உறுப்பினர் செயலர் தீபக் ஜேக்கப் மாற்றப்பட்டு தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.*
 
*37. வணிகவரி (அதிக அளவு வரி செலுத்துவோர் பிரிவு) இணை ஆணையர் சாருஸ்ரீ மாற்றப்பட்டு, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.*
 
*38. சென்னை பெருநகர் குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரிய மேலாண் இயக்குநர் ஹரிஹரன் மாற்றப்பட்டு, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு திட்ட இயக்குநர்/உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.*
 
*39. அரசுப் பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தம் (பயிற்சி) துறை முதன்மைச் செயலர் ஹர்சஹாய் மீனா, காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.*
 
*இவ்வாறு தலைமைச் செயலர் இறையன்பு பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.*

0 Response to "தமிழகத்தில் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - மாற்றப்பட்ட அதிகாரிகள், அவர்கள் முன்பு வகித்த பதவி விவரம்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel