கரோனா ஊரடங்கு காரணமாக ஊதியமின்றி தவிக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு தலா ரூ.5 ஆயிரம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 22,000 தனியார் பள்ளிகள் செயல்படுகின் றன. இவற்றில் ஆசியர்கள் 3 லட்சம் பேரும், ஓட்டுநர்கள், உதவியாளர்கள் உள்ளிட்டோர் 2 லட்சம் பேரும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கரோனா பரவல் அச்சம் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த 14 மாதங்களாக பள்ளிகள் செயல்பட வில்லை. இதனால், இவர்க ளுக்கு முறையான ஊதியம் வழங்குவதில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, தனியார் பள்ளி ஆசிரி யர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தமிழக அரசு தலா ரூ.5 ஆயிரம் கரோனா நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
0 Response to "தனியார் பள்ளி ஆசிரியர்களுக்குரூ.5,000 நிவாரணம் வழங்க கோரிக்கை"
Post a Comment