தனியார் பள்ளிகள் 75% கல்வி கட்டணம்-கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு
தமிழக பள்ளிக்கல்வித் தறை அமைச்சர் அன்பில் மகேஷ்
பொய்யாமொழி இன்று கருரில் நூலகத்தை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த
போது தெரிவித்ததாவது:
தமிழகத்தில் தனியார் பள்ளிகள் 75 சதவீதம் மட்டுமே கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இந்த கல்வியாண்டில் நீதிமன்ற வழிகாட்டுதல்படியே தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அதன்படி 75 சதவீத கட்டணம் 2 தவணைகளாக வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும், கொரோனா நோய்தொற்று முழுவதும் குறைந்த பிறகு தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பார் என்று கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
0 Response to "தனியார் பள்ளிகள் 75% கல்வி கட்டணம்-கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு "
Post a Comment