தமிழகத்தில் கொரோனா தொற்று குறையாத மாவட்டங்களுக்கு தளர்வுகளை அளிக்க வேண்டாம் எனவும், மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கை நீட்டிக்கலாம் என இன்று ஸ்டாலின் அவர்களுடன் நடைபெற்ற ஆலோசனையில் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காட்டுத்தீ போல பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்க தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் முதற்கட்டமாக 14 நாட்கள் முழு ஊரடங்கை அறிவித்தார். அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் மட்டும் தடையின்றி கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் நோயின் தீவிரம் குறையவில்லை. அதனால் மேலும் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டது.
தற்போது கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவு குறையவில்லை. அந்த மாவட்டங்களில் அத்தியாவசிய கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு நாள் தொற்று எண்ணிக்கை 9000க்கு கீழ் குறைந்துள்ளது. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு வரும் 21ம் தேதியுடன் முடிவடையவுள்ள உள்ள நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று மருத்துவ குழுக்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
0 Response to "தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு – அரசுக்கு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை!"
Post a Comment