நல்லாசிரியர் விருது உண்டா?

Trending

Breaking News
Loading...
நல்லாசிரியர் விருது உண்டா?



சென்னை:தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில்
, பள்ளிகள் நடக்காததால், மாநில நல்லாசிரியர் விருது வழங்குவதா, வேண்டாமா என, பள்ளி கல்வி துறையில் ஆலோசனை நடந்து வருகிறது.
 
ஆலோசனை
 
கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலை பாதிப்புகளால், தமிழகத்தில் பள்ளி, கல்லுாரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. கடந்த கல்வி ஆண்டில் 'ஆன்லைன்' வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டன. இந்த கல்வி ஆண்டிலும் ஆன்லைன் வகுப்புகளைத் துவங்கலாம் என, அமைச்சர் மகேஷ் கூறியுள்ளார்.
 
இந்நிலையில், மத்திய அரசின் சார்பில், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களில், தேசிய அளவிலான நல்லாசிரியர் விருதுக்குத் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப் பட்டு உள்ளது. ஆனால், தமிழகத்தில் மாநில அளவிலான நல்லாசிரியர் விருதுக்கு, இன்னும் விண்ணப்பங்கள் பெறப்படவில்லை.
 
கடந்த கல்வி ஆண்டில், பள்ளிகளைப் பொறுத்தவரை, ஒன்பது முதல் பிளஸ் 1 வரையிலான மாணவர்கள், ஒரு மாதமும்; பிளஸ் 2 மாணவர்கள் நான்கு மாதங்களும், பள்ளிகளில் நேரடியாக வகுப்புகளில் பங்கேற்றனர்.தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், ஆண்டு முழுதும் பள்ளிகள் இயங்கவில்லை. கல்வி 'டிவி'யில், பள்ளி கல்வி இயக்குனரகம் சார்பில்பாட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின. தனியார் பள்ளிகள், எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரையிலும், ஆன்லைனில் முழுமையாக பாடங்களை நடத்தின.
 
இந்நிலையில், இந்த ஆண்டு நல்லாசிரியர் விருது வழங்குவதா, வேண்டாமா என, பள்ளி கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.

முன்னுரிமை

கொரோனாவால், அரசுக்கு நிதி நெருக்கடி உள்ள நிலையில், நல்லாசிரியர் விருதுக்கு ஒவ்வொருவருக்கும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகை, வெள்ளிப்பதக்கம் உள்ளிட்டவற்றுக்கான நிதி செலவை குறைத்து, சான்றிதழ் மட்டும் வழங்கலாமா என்றும், அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
 
விருது வழங்கினால், கல்வி 'டிவி' நிகழ்ச்சி தயாரிப்பில் ஈடுபட்ட ஆசிரியர்கள், பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் நடத்திய முதுநிலை ஆசிரியர்களுக்கு மட்டுமே, முன்னுரிமை அடிப்படையில் விருது வழங்கி ஊக்குவிக்கலாம் என்றும், ஆலோசிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 Response to "நல்லாசிரியர் விருது உண்டா? "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel