ஸ்பெயின் அரசு - அறிவித்த தளர்வுகள்

Trending

Breaking News
Loading...
ஸ்பெயின் அரசு - அறிவித்த தளர்வுகள்

 


இனி மாஸ்க் போட தேவையில்லை.. தளர்வுகளை ஸ்பெயின் அறிவித்த அரசு!

 
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாஸ்க் அணிந்துகொள்வது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது, கூட்டம் கூடாமல் தனிமையில் இருப்பது, தடுப்பூசி போட்டுக்கொள்வது போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.
இந்த கட்டுப்பாடுகள் உலகம் முழுக்க பல நாடுகளில் அமலில் இருக்கின்றன. குறிப்பாக, அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்துகொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.
 
இந்நிலையில், மாஸ்க் அணிவதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், “வெளியே செல்லும்போது கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டியது இந்த வாரம் மட்டுமே.
 
ஜூன் 26ஆம் தேதி முதல் வெளியே பொது இடங்களுக்கு செல்லும்போது மாஸ்க் அணிய தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். விரைவில் ஸ்பெயின் தருக்களும், மக்களின் முகங்களும் இயல்பு நிலைக்கு திரும்பும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
 
ஸ்பெயின் கேபினட் கூட்டத்தில் மாஸ்க் கட்டுப்பாடுகளை தளர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இஸ்ரேல், பிரான்ஸ் ஆகிய நாடுகளும் மாஸ்க் கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

0 Response to "ஸ்பெயின் அரசு - அறிவித்த தளர்வுகள்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel