பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை செய்திகள்

Trending

Breaking News
Loading...
பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை செய்திகள்


  

சென்னை: முதலமைச்சர் மு.க ஸ்டாலினுடன் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்து போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா குறைந்து வரும் நிலையில் பேருந்து சேவைகளுக்கு தளர்வுகள் வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.
 
 
 *சென்னை: தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு ரத்துக்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் விளக்கத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என தலைமை நீதிபதி அமர்வு கூறியுள்ளது.*
 
 
*திருவண்ணாமலை மாவட்டம்* வந்தவாசியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சிபிஎம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்
 
*செங்கல்பட்டு* அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மேலும் ஒரு கொரோனா பாதிப்பிற்குள்ளான பெண் சிங்கம் உயிரிழந்துள்ளது.
 
*நீலகிரி* கூடலூரில் 2 ஆண்டாக காயங்களுடன் சுற்றித் திரிந்த 30 வயது மதிக்கத்தக்க ஆண்யானை பிடிப்பட்டுள்ளது. மயக்க ஊசி செலுத்தாமல் கும்கி யானைகள் உதவியுடன் கயிறுகளை கட்டி யானையை பாகன்கள் பிடித்துள்ளனர்
 
*கோவை மாவட்டம்* மேட்டுப்பாளையம் அருகே அன்னதாசம்பாளையத்தை சேர்ந்த 98 வயது மூதாட்டி கன்னியம்மாள்,தன்னுடைய சேமிப்பு 10 ஆயிரம் ரூபாயினை வரைவு காசோலையாக முதலமைச்சர் கொரொனா நிவாரண நிதிக்காக, காரமடை ஒன்றிய தி.மு.க பொறுப்பாளர் கல்யாணசுந்தரத்திடம் வழங்கினார்.
 
*இராமநாதபுரம்* ராமேஸ்வரம் அருகே பாம்பன் தூக்கு பாலத்தில் பழுது ஏற்பட்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் செல்ல வேண்டிய ரயில் மண்டபம் ரயில் நிலையத்திலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
 
*திருவள்ளூர்*
ஆந்திராவில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள கிருஷ்ணா நீர், இன்று காலை ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டுக்கு வந்தடைந்தது. எம்எல்ஏக்கள் ஆ.கிருஷ்ணசாமி, வி.ஜி.ராஜேந்திரன், டி.ஜெ.கோவிந்தராஜன், திருத்தணி எஸ்.சந்திரன், காரம்பாக்கம் கணபதி மற்றும் கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ், நீர்வளத்துறை அதிகாரிகள் ஆகியோர் மலர்தூவி வரவேற்றனர்
 
*அரியலூர் மாவட்டம்* ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரம் அருகில் அமைந்துள்ள மாளிகைமேடு  பகுதியில் அகழாய்வு பணிகள் தொடங்கியுள்ளது.  குறைந்தபட்ச தொழிலாளர்களை கொண்டு கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அகழாய்வு பணிகள் நடைபெறுவதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
*கோவை* சின்னாம்பதி மலை கிராமத்தின் முதல் பட்டதாரி பழங்குடியின பெண் சந்தியா நாளொன்றுக்கு 7 மணி நேரம் வகுப்புகள் எடுத்து கல்வி சேவை ஆற்றி வருகிறார். கொரோனா ஊரடங்களில் பள்ளி குழந்தைகளுக்கு ஆசிரியராக மாறிய பட்டதாரி பெண்ணிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது
 
*சென்னை* சாலிகிராமத்தில் லாரி ஓட்டுனரை கத்தியால் வெட்டி வழிப்பறி செய்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆகாஷ், செல்வகுமார் ஆகியோரை கைது செய்து போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.
 
*புதுச்சேரி* கோவில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது
 
*நெல்லை* களக்காடு அருகே காதல் திருமணம் செய்த நர்ஸ் தற்கொலை: போலீஸ் விசாரணை
 
*தென்காசி* குற்றாலத்தில் தொடர் சாரல்: அருவிகளில் வெள்ளப்பெருக்கு
 

0 Response to "பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை செய்திகள்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel