
விகடன் இயர் புக் 2021, இயர் புத்தகங்களாக வெளிவந்துள்ள நூல்களில் மிகச்சிறந்த இயர் புத்தகமாக விளங்குகிறது. இப்புத்தகம் பள்ளி, கல்லூரி மாணவர்கள், படிப்பில் ஆர்வம்கொண்ட வாசகர்கள், தங்கள் குழந்தைகளின் பொது அறிவை வளர்க்க விரும்பும் தாய்மார்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் பயன்படும் வகையில் விகடன் பிரசுரத்தால் தயாரித்து தமிழ் உலகிற்குக் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாகப் போட்டித் தேர்வு எழுதுவோர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கிறது. இவர்களிடையே இப்புத்தகம் மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. 2013-ம் ஆண்டு முதல் ‘விகடன் இயர் புக்’ வெளியிடப்பட்டு வருகிறது. இந்நூல் ஒவ்வோர் ஆண்டும் எப்போது வெளிவரும் என்று தமிழக மாணவர்கள், இளைஞர்கள் எதிர்பார்த்துக் காத்திருப்பர். அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் விதமாக, ஆண்டுதோறும் புதுப்பொலிவோடு விகடன் இயர் புக் தொடர்ந்து வெளிவருவது வரவேற்கத்தக்கதே. குறிப்பாக இந்நூலில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், எழுத்தாளர்கள், பொது அறிவு ஆர்வலர்கள், அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் போன்றோர்களின் கருத்துகள் கட்டுரைகளாக இடம்பெற்றுள்ளன..
உலக நடப்புகள் தொடங்கி இந்தியா, தமிழ்நாடு, மாநிலங்கள் எனப் பல்வேறு தலைப்புகளையும் அறிவியல் சார்ந்த கருத்துகள், நோபல் பரிசு விபரங்கள், உலக நடப்புகள் என மிகச் சிறப்பான தலைப்புகளைக் கொண்ட நூலாக இந்நூல் உள்ளது. மிகச் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. வடிவமைப்பிலும் மிகச் சிரத்தைக் கொண்டு தயாரித்து உள்ளதை நாம் பார்க்க முடிகின்றது.
அதிக பக்கங்களின் (768) ஊடாக, செறிவான, தேவையான கருத்துகளைக் கொண்டதாக இந்த இயர்புக் திகழ்கிறது. அனைவருக்கும் பயன்படும்படியாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நூல் உருவாக்கத்தில் தனக்குரிய பங்கைப் பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்து முடித்துள்ளனர். குறிப்பாக கெளரவத் தலைமை ஆலோசகர் டாக்டர் சங்கர சரவணன் அவர்களின் பணி ஆகச்சிறந்த ஒன்றாகவே இருக்கின்றது. நூலில் ஆங்காங்கே தேவையான இடத்தில் புகைப்படங்களோடு பட்டியலும் இடம்பெற்று படிப்பதற்கு எளிமையையும் ஆர்வத்தையும் ஊட்டுவதாக திகழ்கின்றது.
தேவையான புகைப்படங்கள் செறிவான கருத்துகள் நல்ல
கட்டுரைகள், தமிழின் இனிமையை, ஆழத்தைப் பேசும் இலக்கியங்கள் என மிக சிறந்த நூலாக ஆனந்த விகடன் 2021 இயர்புக் விளங்குகிறது. பொதுஅறிவு நிகழ்வுகளின்
சிகரம் ஆனந்த விகடன் இயர் புக் என்று சொன்னால் அது மிகையாகாது. போட்டித் தேர்வில்
வெற்றி பெற்ற ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட ஆட்சிப்பணியினரின் அனுபவங்களை இந்நூலில் பார்க்க
முடிகின்றது. அறிவியல் தொழில்நுட்பம், தமிழ்நாடு முத்திரை முகங்கள் என்ற தலைப்பிலும் மேலும்
உலகம், இந்தியா, பொது அறிவு, முத்திரைச் செய்திகள் எனத் தேவையான கருத்துகளைக் கொண்டதாக இந்த இயர் புத்தகம்
விளங்குகிறது.
இந்தியச் சட்டங்கள்-2020, நோபல் பரிசுகள்-2020 குறித்த விளக்கமான கட்டுரைகள், உலகம், இந்தியா, தமிழக நடப்பு நிகழ்வுகள், அமெரிக்க அதிபர் தேர்தல், லெபனான் வெடிவிபத்து, சங்கச் சுரங்கம், வள்ளுவத்தில் நடையழகு, இணையத் தமிழுக்கு வயது-25, இந்திய பாதுகாப்பு அதிகாரி பதவி, இந்தியா பட்ஜெட்-2020, எங்கேயும் எப்போதும் எஸ்.பி.பி., இந்திய-தமிழக முத்திரை முகங்கள், எடுத்துப் படிக்க வேண்டிய எட்டு புத்தகங்கள்
என்ற பகுதிகள் கவனத்திற்கு உரியன.
விகடன்
இயர்புத்தகத்தை உருவாக்க பணிபுரிந்த அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். மிக அழகான
வடிவமைப்பில் நல்ல தாளில் இடம்பெற்றுள்ள இந்நூல் அனைவரின் கைகளிலும் தவழ வேண்டும்.
படிப்பவர்கள் மற்றவர்களுக்குப் பரிந்துரை செய்யும் அளவிற்குத் தனித்துவமான
பொருண்மைகளையும் கருத்துகளையும்
கொண்டதாக ஆனந்த விகடன் இயர்புக் 2021 விளங்குகிறது. முப்பத்து எட்டு மாவட்டங்களைக்
காட்டும் புதிய வரைபடம் என்று தொடங்கி அடிப்படை தகவல்கள், மாநில அடையாளங்கள், தமிழக அடையாளங்கள், தமிழ்நாடு மாவட்டங்கள் என்று அனைத்து மாவட்டங்களையும்
குறிப்பிட்டு அந்த மாவட்டத்தில் உள்ள சிறப்புகள், தொழில்கள், விவசாயத்துறை, தகவல்கள், சுற்றுலா மற்றும் புள்ளி விவரங்கள் என அனைத்தையும்
தரும் பகுதியாக தமிழ்நாடு என்ற பகுதி அமைகிறது. அதேபோல புதிய மாவட்டமாக
உருவாக்கப்பட்டிருந்த மாவட்டங்களையும் சேர்த்து எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. மிகச்சிறந்த இப்புத்தகம் மாணவர்களுக்கும் போட்டித் தேர்வு
எழுதுவோர்களுக்கும் ஆகச்சிறந்த ஒரு பொக்கிஷமாக விளங்கும் என்று சொல்லலாம்.
பொதுவாக ஆங்கிலத்தில் ஆண்டு முழுவதும் நடக்கும்
விவரங்களை எல்லாம் தொகுத்து ‘இயர் புக்’ ஆக வழங்கும்போது ஆங்கிலம் தெரிந்த மாணவர்கள் அவற்றை நன்கு பயன்படுத்துவார்கள்.
ஆனால், அவற்றில் தமிழ்நாடு குறித்த செய்திகள் ஆங்காங்கே தூவப்பட்டிருக்குமே தவிர, அதுவே முழுமையாக இடம்பெறுவது இல்லை. அந்தப் புத்தகங்களைக் கொண்டு தமிழ்நாட்டில் நடக்கும்
போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்வது கடினம். இதனால் தமிழில் அதுபோன்ற ‘இயர்
புக்’ எப்போது வரும் என்று நான் ஏங்கியது உண்டு. என்ற வெ. இறையன்பு அவர்களின் கருத்தைப்
பூர்த்தி செய்துள்ளது 2021 விகடன் இயர்புக்.
இத்தகு சிறப்புமிக்க இந்த இயர்புக்கில் என்னுடைய ஒரு கட்டுரையும்
இடம்பெற்றுள்ளது. நான் எழுதியுள்ள "எடுத்துப் படிக்க வேண்டிய எட்டு புத்தகங்கள்" என்ற கட்டுரை பிரசுரம் பெற காரணமாக இருந்த
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல்
பணிகள் கழக துணை இயக்குநர் டாக்டர் சங்கர
சரவணன் அவர்களுக்கு நன்றி.
விகடன் இயர்புக் உருவாக்கத்தில் ஈடுபட்ட பொறுப்பாளர்கள்
உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றிகளும்.
நூல் வாங்குவதற்கான👇👇👇👇👇
இணைய இணைப்பு - https://books.vikatan.com/index.php?bid=2541
மயிலம்
இளமுருகு
9600270331
0 Response to "விகடன் இயர் புக் 2021 - பள்ளி, கல்லூரி மாணவர்கள், வாசகர்கள், போட்டித் தேர்வு எழுதுவோர் போன்றோர்களின் ஆகச்சிறந்த கையேடு - மயிலம் இளமுருகு"
Post a Comment