செப்.25ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் – விவசாயிகள் சங்கம் அழைப்பு!

Trending

Breaking News
Loading...
செப்.25ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் – விவசாயிகள் சங்கம் அழைப்பு!


வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து செப்டம்பர்
25ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வேலை நிறுத்த போராட்டம்:

இந்தியா முழுவதும் விவசாயிகள் பாடு திண்டாட்டமாக உள்ளது. வருடம் முழுவதும் உழைத்து பயிர்களை விளைய வைக்கும் விவசாயிகளால் அவர்கள் விளைவித்த பொருளுக்கான விலையை நிர்ணயம் செய்யும் உரிமை இல்லை. விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு பொருட்களை வாங்கி கொள்ளை லாபத்திற்கு விற்பனை செய்து வருகின்றனர் வணிகர்கள். இது போன்ற பல்வேறு காரணங்கள் விவசாயிகளை பாதித்து வருகின்றன.

அதனை தொடர்ந்து வேளாண் சட்டம் இயற்றப்பட்டது. இது விவசாயிகளுக்கு பாதகமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 9 மாதங்களாக ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை மேற்கொண்டது தற்போது வரை தொடர்கிறது.

மேலும் மத்திய அரசுடன் விவசாயிகள் சங்கத்தினர் நடத்திய 12 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தது. அதனை தொடர்ந்து தற்போது பல்வேறு விதமான போராட்டத்தை முன்னெடுத்து வரும் போராட்டக் குழுவினர் வருகின்ற செப்டம்பர் 25 ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து ஆதரவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Response to "செப்.25ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் – விவசாயிகள் சங்கம் அழைப்பு!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel