
கேரளா மாநிலத்தில்
கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் ஆகஸ்ட் 29ம் தேதியான நாளை முதல் முழு ஊரடங்கு
கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது.
முழு
ஊரடங்கு:
நாடு முழுவதும்
கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா தொற்றின் 2 ம் அலை பாதிப்பு ஏற்பட தொடங்கியது. இதனால்
அனைத்து மாநில அரசுகளும் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வந்தது.
இதனால் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. பல
மாநிலங்களிலும் இயல்பு நிலை மீண்டும் மெல்ல திரும்பி வருகிறது. ஆனால் கேரளா
மாநிலத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தது.
இதனால் மாநில அரசு தீவிர நோய் தடுப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வந்த
போதிலும்,
கட்டுப்படுத்த
முடியவில்லை. இதனால் மத்திய அரசு ஆய்வுக்குழு ஒன்றை கேரளா மாநிலத்திற்கு உதவிக்கு
அனுப்பியது. ஆய்வு குழுவினர் கேரளா மாநிலத்தில் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை
அளிப்பது குறித்து மட்டுமே மாநில அரசு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும், தொற்றை கட்டுப்படுத்த போதுமான
நடவடிக்கைகள் எடுக்க வில்லை என்று மத்திய அரசிடம் அறிக்கை அளித்தது.
தற்போது கடந்த நாட்களில் கொரோனா தினசரி
பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பதாகவும் இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமலுக்கு
கொண்டு வருவதாகவும் தெரிவித்தது. சில வாரங்களாக மாநிலத்தில் அளித்து வந்த
தளர்வுகளை மக்கள் முறையாக பயன்படுத்தாததே கரணம் என்று தெரிகின்றது. இதனால், ஆகஸ்ட் 29ம் தேதியான நாளை முதல் முழு ஊரடங்கு
அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. தேவையின்றி வெளியில் சுற்றும் மக்கள், வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை
எடுக்கப்படும் என்று உத்தரவு அளிக்கப்பட்டு உள்ளது.
0 Response to "ஆகஸ்ட் 29 முதல் முழு ஊரடங்கு அமல் – கேரளா அரசு முடிவு!"
Post a Comment