
தமிழகத்தில் வரும்
செப்டம்பர் 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படவுள்ள நிலையில் சுழற்சி முறையில்
வகுப்புகள் நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.
கல்லூரிகள்
திறப்பு:
தமிழகத்தில் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீடு
முறையிலான மதிப்பெண்கள் வெளியானதையடுத்து கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் மாணவர்
சேர்க்கை நடத்த உயர் கல்வித்துறை உத்தரவிட்டது. பிறகு கடந்த ஜூலை 26 முதல் அனைத்து கல்லூரிகளிலும் இணையதளம்
வாயிலாக சேர்க்கை பணிகள் நடைபெற்று வருகிறது. நடப்பாண்டு அனைத்து 12ம் வகுப்பு மாணவர்களும் ஆல் பாஸ்
பெற்றுள்ள நிலையில் கல்லூரிகளில் சேர மாணவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவியது.
மேலும் 2021
– 2022ம்
கல்வியாண்டில் 60 சதவீதத்திற்கு அதிகமானோர் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டியுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 17ம் தேதியுடன் மாணவர் சேர்க்கை முடிவடைந்த நிலையில் கலந்தாய்வு நடைபெற்று
வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று
அறிவுப்பு வெளியானதை அடுத்து கல்லூரிகள் திறப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதனையடுத்து பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பின்னர் செப்டம்பர் 1 முதல் மீண்டும் கல்லூரிகள் திறக்கப்படும்
என்று அரசு அறிவித்துள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி கல்லூரிகளில் மாணவர்களுக்கு
சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு வாரத்தில் திங்கள், புதன், வெள்ளியில் வகுப்புகள் நடைபெறும்.
மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன், சனி ஆகிய தினங்களில் வகுப்புகள்
நடைபெறும். மேலும் கல்லூரி முதுகலை படிப்பு 2ம் ஆண்டு மாணவர்களுக்கு வாரத்தில் 6 நாட்களும் வகுப்புகள் நடைபெறும்.
பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு வாரத்தில் 6 நாட்களும் வகுப்புகள் நடைபெறும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Response to "தமிழகத்தில் வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் திறப்பு – சுழற்சி முறையில் வகுப்புகள்!"
Post a Comment