தமிழகத்தில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்? கொரோனா பரவல் எதிரொலி!

Trending

Breaking News
Loading...
தமிழகத்தில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்? கொரோனா பரவல் எதிரொலி!


தமிழகத்தில் தற்போது கொரோனா
2 ஆம் அலை பரவல் தாக்கம் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கு தொடர்பிலான நடவடிக்கைகள் மீண்டும் மேற்கொள்ளப்படுமா என எழுந்து வந்த கேள்விக்கு சில விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு

கடந்த ஏப்ரல் மாதம் முதல் தீவிரமடைந்து வந்த கொரோனா 2 ஆம் அலை காரணமாக தமிழகம் முழுவதும் மே மாதத்தில் இருந்து முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த வகையில் தீவிரப்படுத்தப்பட்ட பொது முடக்க கட்டுப்பாடுகள் நிமித்தமாக தற்போது புதிய பாதிப்புகள் வீழ்ச்சியடைந்து வருகிறது. இதை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு, தற்போது அனைத்து வகையான செயல்பாடுகளுக்கும் அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதன் கீழ் திரையரங்குகள் அனைத்தும் 50% திறனுடன் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வரும் செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இருந்தாலும் முழு ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடுகள் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இந்நிலையில் தமிழகத்தில் நேற்று (ஆகஸ்ட் 27) ஒரு நாளில் மட்டும் 1,542 பேர் கொரோனா நோய் தாக்கத்துக்கு ஆளாகியுள்ளனர். ஆனால் மாவட்டங்கள் தோறும் ஏற்படும் புதிய பாதிப்புகளை கவனத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை விதிக்க அரசு அனுமதி கொடுத்துள்ளது. அந்த வகையில் கேரளாவின் அண்டை பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் மொத்த பாதிப்பு குறைந்து வந்தாலும், சில மாவட்டங்களில் புதிய பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் மாநிலம் தழுவிய பொது முடக்கம் அமல்படுத்தப்படுமோ என்கிற கேள்விகள் மக்களிடையே எழுந்துள்ளது. ஆனால் தலைமை செயலக வட்டாரங்கள் இது தொடர்பாக கூறுகையில், ‘தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புகளை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகங்கள் ஊரடங்கு தொடர்பான முடிவுகளை எடுத்துக்கொள்ள அரசு அனுமதி கொடுத்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது தான் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கடைகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது.

அதனால் முழு முடக்கம் என்பது சாத்தியமில்லை. இருந்தாலும் கொரோனா 3 ஆம் அலை தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு பல முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் பொது மக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், தடுப்பூசி செலுத்துதல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது. தவிர அக்டோபர் மாதத்தில் உச்சமடையும் என கூறப்பட்டுள்ள கொரோனா 3 ஆம் அலை உருவாக்கும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு தான் ஊரடங்கு தொடர்பிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Response to "தமிழகத்தில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்? கொரோனா பரவல் எதிரொலி!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel