
இலங்கை
தமிழர்களுக்கான முகாம்கள் இனி மறுவாழ்வு முகாம்கள் என அழைக்கப்படும் என்று
முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மறுவாழ்வு
முகாம்கள் :
தமிழக சட்டமன்ற
கூட்டத்தொடர் சில தினங்களுக்கு முன் ” கோவிட் -19 வைரஸ்” தடுப்பு வழிமுறைகள் உடன் தொடங்கி நடந்து வருகிறது. இதில் நாள்தோறும்
பல்வேறு துறை ரீதியான விவாதங்கள் எழுப்பப்பட்டு, துறை சார்ந்த அமைச்சர்களின் முக்கிய
அறிவிப்புகள் உடன் நிறைவடைந்து வருகிறது. இந்த நிலையில், இன்று வேளாண் மற்றும் பொதுப்பணித்துறை
சார்பான விவாதங்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், மத்திய அரசின் மூன்று வேளாண்
சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதனை அடுத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கான
முகாம்கள் இனி “மறுவாழ்வு முகாம்கள்” என அழைக்கப்படும் என்று அறிவித்தார். மேலும், இலங்கை தமிழர்களின் நலனில் முக்கியத்துவம்
செலுத்த அரசு எல்லா விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், அவர்களின் மேம்பாட்டுக்காக ரூபாய் 317 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட
உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதோடு சேர்த்து, இலங்கை தமிழர்களை இனி அந்நியர்களாக
பார்க்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார். அவர்கள் ஒன்றும் அகதிகள் இல்லை எனவும், அவர்களுக்கு ஆதரவாகவும் தோள் கொடுக்கவும்
தமிழர்களாகிய நாம் இருக்கிறோம் என்று இலங்கை தமிழர்கள் குறித்து சட்டப்பேரவையில்
முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
0 Response to "இலங்கை தமிழர்கள் அகதிகள் அல்ல, அவர்களுக்கு நாம் இருக்கிறோம் – முதல்வர் பேச்சு!"
Post a Comment