தமிழக கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் கவனத்திற்கு – உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவுறுத்தல்!

Trending

Breaking News
Loading...
தமிழக கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் கவனத்திற்கு – உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவுறுத்தல்!


தமிழகத்தில் சில நாட்களில் கல்லூரிகள் திறக்கப்படவுள்ள நிலையில் கொரோனா பெருந்தொற்று பரவி வருவதால் மாணவர்கள்
, பேராசிரியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தியுள்ளார்.

கல்லூரிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து அரசு ஊரடங்கில் பல்வேறு கூடுதல் தளர்வுகளை அளித்துள்ளது. இந்த நேரத்தில் மீண்டும் கல்லூரிகள் திறப்பது குறித்து உயர் கல்வித்துறை அதிகாரிகள் கலந்தாலோசனையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து செப்டம்பர் 1 முதல் கல்லூரிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் கொரோனா பெருந்தொற்று பரவுவதால் கல்லூரிகளில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

மேலும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதுகலை இரண்டாம் ஆண்டு மற்றும் பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் வாரத்தில் 6 நாட்களும் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் தடுப்பூசி சிறப்பு முகாமை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் பொன்முடி ஆகியோர் துவக்கி வைத்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர், வைரஸ் தொற்று பரவி வருவதால் கல்லூரிகளில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

அனைத்து மாணவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு தான் கல்லூரிக்கு வர வேண்டும். கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு அவசியம் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளை விட கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். எனவே இந்தாண்டு 25% இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.


 

0 Response to "தமிழக கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் கவனத்திற்கு – உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவுறுத்தல்!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel