தமிழ் அறிவோம்! 99. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...
தமிழ் அறிவோம்!  99. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு ஆ.தி.பகலன்

 


"கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு " 
 

இன்றைய காலகட்டத்தில் ஒரு நாட்டை ஆள்பவனே சிறந்தவன், உயர்ந்தவன் என்று எண்ணிக்கொண்டு அதிகார போதையில் மிதந்து கொண்டு இருக்கிறார்கள். ஆள்பவனை விடவும் சிறந்தவர்கள் இருக்கிறார்கள் என்பதை விளக்கும் அழகான பாடல் ஒன்றை இங்குக் காண்போம். 

" மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத்

தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்

சென்ற இடமெல்லாம் சிறப்பு. ( மூதுரை - 26) 

ஒரு நாட்டின் மன்னனைவிட குற்றமறக்  கற்றறிந்தவனே சிறந்தவனாகக் கருதப்படுகின்றான்.

ஏனெனில்,

மன்னனுக்கு அவன் ஆட்சி செய்கின்ற நாட்டில் மட்டுமே மதிப்பு உண்டு. மாலை மரியாதை எல்லாம் உண்டு. அம்மன்னன் மற்ற நாடுகளுக்கு சென்றால் மதிப்பு என்பது துளியளவு கூட கிடைக்காது .

ஆனால், கற்றறிந்தவர்கள் செல்லுகின்ற நாட்டில் எல்லாம்  அவர்களுக்கு  மதிப்பும் உண்டு. புகழும் உண்டு. எந்த ஒரு நாட்டிலும் கற்றவர்களுக்கென்று தனி மரியாதை உண்டு.

ஆதலால்,  மன்னனை விட மாசறக் கற்றவர்களே மதிப்பு மிக்கவர்கள். சிறப்பு மிக்கவர்கள்" . 

இந்த உலகத்தை  ஆள்பவர்களை விட உயர்ந்த இடத்தில்  நிற்க வேண்டும் என்றால் , நாம் கற்றவர்களாக இருக்கவேண்டும். அறிவைப் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

அதற்கு ஒரே வழி நாம் நூல்களை வாசிக்கும் பழக்கம் உடைவர்களாக மாற  வேண்டும்.

இந்ந உலகமே நம் உள்ளங்கையில் இருக்க வேண்டும் என்றால் , நம் கையில் எப்போதும் புத்தகம் இருக்க வேண்டும்.  நல்ல மனிதன் என்பவன்,  புத்தியோடும் இருக்க வேண்டும். புத்தகத்தோடும் இருக்க வேண்டும்.

 "நூலகம் சென்று

நூல்களை

வாசிக்கப் பழகு!

நீ வாழும் வாழ்க்கைக்கு

அதுதான் உண்மையான அழகு!

"உலக புத்தக நாள் "

( ஏப்ரல் - 23)


இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

 

0 Response to "தமிழ் அறிவோம்! 99. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel