தமிழ்நாடு சிறப்பு காவல் படை 3 ஆம் அணி, வீராபுரம், சென்னை... காவலர் வீரவணக்க நாள்.. போட்டி மற்றும் பரிசளிப்பு விழா....

Trending

Breaking News
Loading...
தமிழ்நாடு சிறப்பு காவல் படை 3 ஆம் அணி, வீராபுரம், சென்னை... காவலர் வீரவணக்க நாள்.. போட்டி மற்றும் பரிசளிப்பு விழா....

 





வீராபுரம், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 3 ஆம் அணி...காவலர் வீரவணக்க நாள்.. போட்டி மற்றும் பரிசளிப்பு விழா....

 

இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ல் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப் படுகிறது. இந்நாளை வீராபுரம் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 3 ஆம் அணி... காவல்துறை உயர் அதிகாரிகள் – DC - C. Boopathy TPS, Ac-1 - Ramamoorthy TPS, Ac-3-Prabhakaran TPS ஆகியோர்கள் திருவள்ளூர் மாவட்டம் அரசு உயர்நிலைப்பள்ளி வீராபுரம் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப் போட்டிகளை வைத்து மாணவர்களுக்குப் பரிசுகளைக் கொடுத்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

 





மேலும் மாணவர்களுக்குத் தமிழக காவல்துறையினரின் பொறுப்பு மற்றும் பணிகள், சமூகப் பாதுகாப்பு, சமூக ஒழுக்கம் போன்றவற்றை வெளிப்படுத்தும் வகையில் குறும்படம் போட்டுக் காண்பித்தனர். மேற்படி காவல் துறை உயர் அதிகாரிகள் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை, முயற்சி, ஒழுக்கம், சமூகப் பொறுப்பு, பாதுகாப்பு போன்றவற்றை விளக்கும் வகையில் உரை நிகழ்த்தினார்கள்... நிகழ்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் எழுதுகோலைப் பரிசாகக் கொடுத்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்...





 இந்நிகழ்வில் வீராபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியின் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.... பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் காவல் துறையினர் அவர்களின் சிறப்பு மற்றும் சமூகப் பொறுப்பு, பாதுகாப்பு போன்றவற்றைக் குறித்து உரை நிகழ்த்தினார்.






காவலர் வீர வணக்கம் நாள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள்..

 

பேச்சுப் போட்டி

1.A. காவ்யபிரியா 8B

2. N. சாய் லட்சுமி 8B

3. J. ஜெஸிந்தா 8B

 

கட்டுரை போட்டி

1. S. ஜீவப் பிரியா 9B

2. அஸ்கர் 9C

 3. தேவஶ்ரீ 8B

 

ஓவியப் போட்டி

1. K. ரோஸ்னா 9B

2. P. கவிவர்ஷின் 7C

 3. T. ஆதில் 8C

 






0 Response to "தமிழ்நாடு சிறப்பு காவல் படை 3 ஆம் அணி, வீராபுரம், சென்னை... காவலர் வீரவணக்க நாள்.. போட்டி மற்றும் பரிசளிப்பு விழா...."

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel