*🔷🔶பஞ்சாபில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது*
*இதன்படி, கடைகளை மாலை 6 மணி வரை திறக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.*
*அதேபோல், தனியார் அலுவலகங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது*
*சென்னையில் இன்று முதல் அனைத்து போக்குவரத்து சிக்னல்களும் இயங்கும் - மாநகர காவல் ஆணையர்*
*சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இன்று முதல் அனைத்து போக்குவரத்து சிக்னல்களும் இயங்கும்*
*ஜூன் 10 முதல் ஊரடங்கு நாட்களில் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இன்றியமையாப் பொருட்கள் விற்கும் கடைகளைத் திறக்க அனுமதி*
*பொருட்களை வாங்கிக் கொள்ளவும் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.*
*அரசு அலுவலகங்கள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி*
*🔷🔶புதுச்சேரியில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.*
*மதுபானக்கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.*
*🔷🔶தமிழகத்தில் இன்று முதல் மாலை 5 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் - தமிழக அரசு*
*ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மாலை 5 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் - தமிழக அரசு*
*🔷🔶மதியம் வரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை🔶🔷*
*📌🧿📌கன்னியாகுமரி மாவட்டம்* இறச்சகுளம் - நாவல்காடு சாலையில் ஆட்டோ மீது லாரி மோதியதில், அதே பகுதியை சேர்ந்த 2 பேர் உயிரிழப்பு - விபத்தை ஏற்படுத்தி தப்பி ஓடிய லாரி டிரைவரை பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
*📌🧿📌ஈரோடு* கோபி அருகே தாழைக்கொம்பு புதூரை சேர்ந்த மணிகண்டன் 11-ம் வகுப்பு படித்து விட்டு, கிளினிக் அமைத்து மருத்துவம் பார்த்து வந்ததை கண்டறிந்த அதிகாரிகள், அவரை கைது செய்து நடவடிக்கை
*📌🧿📌திருவள்ளுர்* காட்டுப்பாக்கத்தில் கொரோனாவால் தாயும், மகனும் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழப்பு.
*📌🧿📌தூத்துக்குடி:* விளாத்திகுளம் அருகே ஊரடங்கை மீறி கோவில் திருவிழா நடத்தியதாக 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவிழாவில் விளையாட்டு போட்டிகளை முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியின்றி நடத்தியுள்ளனர்
*📌🧿📌புதுச்சேரியில்* உள்ள மதுபான கடைகளில் மதுபானப்பிரியர்களின் கூட்டம் அலைமோதுகிறது. 42 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் மதுபானங்களை வாங்க மதுபானப்பிரியர்கள் குவிந்துள்ளனர்.
*📌🧿📌வேலூர்* பழைய அரசு மருத்துவமனையின் செவிலியர் சாந்தகுமாரி(50) கொரோனாவால் உயிரிழந்துள்ளார். வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவிலியர் சாந்தகுமாரி சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்
*📌🧿📌நீலகிரி*
முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள 28 வளர்ப்பு யானைகளிடம் இருந்து கொரோனா பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கும் பணிகள் இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. யானைகளிடம் இருந்து சேகரிக்கப்படும் மாதிரிகள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட உள்ளது
*📌🧿📌தஞ்சை* அரசு மருத்துவமனையில் பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் பெண்குழந்தையின் கை விரல் துண்டிக்கப்பட்டுள்ளது. குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையின் கட்டை விரலை செவிலியர்கள் கவனக்குறைவாக துண்டித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. குளுக்கோஸ் வயரை அகற்றுவதற்கு பதிலாக குழந்தை கை விரல் துண்டிக்கப்பட்டதாக பெற்றோர் புகார் கூறியுள்ளனர்
*📌🧿📌கோவை*
குறைந்த வட்டிக்கு கடன் பெற்று தருவதாக ஆசை காட்டி
ஏ.டி.எம்.கார்டுகளின் ரகசிய எண்களை பெற்று மோசடி செய்த பொள்ளாச்சி இளைஞர்கள் 4 பேரை
போலீசார் கைது செய்துள்ளார். சிவகாசியில் தொடங்கி தமிழகம் முழுவதும் இந்த கும்பல்
கைவரிசையை காட்டியிருப்பதும் தெரியவந்துள்ளது.
*📌🧿📌தஞ்சை* பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தஞ்சையில் 100 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையை தமிழ்நாடு அரசிடம் ஒன்றிய அரசு ஒப்படைக்க வலியுறுத்தியுள்ளனர். மேலும் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை உடனே தரக் கோரியும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
*🔷🔶திமுக செய்தித் தொடர்பாளர் தமிழன் பிரசன்னா மனைவி நதியா தூக்கிட்டு தற்கொலை*
*தனது பிறந்தநாளான இன்று காலை 11.30 மணி வாக்கில் தற்கொலை செய்துக்கொண்டதாக தகவல்* *கொடுங்கையூர் காவல் நிலையத்தில் குற்றவியல் நடைமுறை சட்டம்174படி வழக்கு பதிவு*
0 Response to "08.06. 2021 மதியம் வரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை செய்திகள்"
Post a Comment