16.06.2021 வரலாற்றில் இன்று - சில தகவல்கள்

Trending

Breaking News
Loading...
16.06.2021 வரலாற்றில் இன்று - சில தகவல்கள்
 

*
திருவள்ளுவர் ஆண்டு 2052*
*பிலவ வருடம்* *_ஆனி 02_*
   *_16.06.2021 ஜூன்_*  *_புதன் கிழமை_*

*_வரலாற்றில் இன்று_*
 
363 - உரோமைப் பேரரசர் யூலியான் டைகிரிசு ஆறு வழியே பின்வாங்கி, தமது சரக்குக் கப்பல்களைத் தீயிட்டுக் கொளுத்தினார். உரோமைப் படைகள் பாரசீகரிடம் இருந்து பெரும் இழப்புகளைச் சந்தித்தன.
632 - மூன்றாம் யாசுடெகெர்டு சாசானியப் பேரரசின் மன்னராக முடிசூடினார். இவரே சாசானிய வம்சத்தின் (இன்றைய ஈரான்) கடைசி அரசராவார்.
1487 - ரோசாப்பூப் போர்களின் கடைசிப் போர் ஸ்டோக் ஃபீல்டு என்ற இடத்தில் இடம்பெற்றது.
1586 - ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி, இரண்டாம் பிலிப்பைத் தனது முடிக்குரிய வாரிசாக அறிவித்தார்.
1654 - சுவீடனின் கிறித்தீனா மகாராணி முடி துறந்தார். பத்தாம் சார்லசு குசுத்தாவ் புதிய மன்னராக முடிசூடினார்.
1745 - ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்: நியூ இங்கிலாந்து குடியேற்றப் படையினர் புதிய பிரெஞ்சு லூயிசுபேர்க் கோட்டையைக் கைப்பற்றினர்.
1773 - வங்காளம் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் முதன்மை மாகாணமானது. உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டது.
1779 - எசுப்பானியா பெரிய பிரித்தானியா மீது போரை அறிவித்தது. ஜிப்ரால்ட்டர் மீதான போர் ஆரம்பமானது.
1819 - குசராத்து மாநிலம், கச்சு என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,550 பேர் உயிரிழந்தனர்.
1846 - ஒன்பதாம் பயசு திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். இவரே நீண்ட காலம் (32 ஆண்டுகள்) பதவியில் இருந்த திருத்தந்தை ஆவார்.
1883 - இங்கிலாந்தில் விக்டோரியா நாடக அரங்கில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 183 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
1897 - அவாய் குடியரசை ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கும் ஒப்பந்தம் எழுதப்பட்டது.
1903 - போர்ட் தானுந்து நிறுவனம் நிறுவனமயப்படுத்தப்பட்டது.
1903 - ருவால் அமுன்சென் தனது முதலாவது வடமேற்குப் பெருவழியின் கிழக்கு-மேற்கு நோக்கிய கடற்பயணத்தை ஒசுலோவில் இருந்து ஆரம்பித்தார்.
1911 - ஐபிஎம் நிறுவனம் நியூயார்க்கில் ஆரம்பிக்கப்பட்டது.
1911 - 772 கிராம் எடையுள்ள விண்வீழ்கல் விஸ்கொன்சின் கில்போர்ன் நகரில் வீழந்தது.
1922 - அயர்லாந்து சுயாதீன மாநிலத்தில்திடம்பெற்ற பொதுத்தேர்தலில் சின் பெயின் கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியது.
1940 - லித்துவேனியாவில் கம்யூனிச அரசு ஆட்சிக்கு வந்தது.
1944 - ஐக்கிய அமெரிக்கா 14-வயது ஜார்ஜ் ஸ்டின்னி என்பவரை தூக்கிலிட்டது.
1948 - மலாயன் கம்யூனிச்டுக் கட்சி உறுப்பினர்கள் மூன்று பிரித்தானியத் தோட்ட அதிகாரிகளைக் கொன்றதை அடுத்து அங்கு அவசர காலச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
1955 - அர்கெந்தீனாவில் உவான் பெரோன் தலைமையிலான அரசைக் கவிழ்க்கும் பொருட்டு, அரசுக்கு ஆதரவான பேரணி ஒன்றின் மீது கடற்படையினர் குண்டுகள் வீசியதில் 364 பேர் கொல்லப்பட்டனர், 800 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
1958 - 1956 அங்கேரியப் புரட்சியில் ஈடுபட்ட தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
1963 - வஸ்தோக் 6: உருசியாவின் வலன்டீனா டெரெஷ்கோவா விண்வெளிக்குச் சென்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
1976 - தென்னாபிரிக்காவில் சுவெட்டோவில் 15,000 கறுப்பின மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் காவற்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 566 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
1997 - அல்சீரியாவில் நடத்த தீவிரவாதத் தாக்குதலில் 50 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
2010 - பூட்டான் புகையிலைப் பயன்பாட்டை முற்றாகத் தடை செய்த முதலாவது நாடானது.
2012 - ஐக்கிய அமெரிக்க வான்படையின் தானியங்கி போயிங் எக்ஸ்-37 விண்ணூர்தி 469-நாள் பயணத்தின் பின்னர் பூமி திரும்பியது.
2012 - சீனா சென்சூ 9 விண்கலத்தை லியு யங் என்ற பெண் உட்பட மூவருடன் வெற்றிகரமாக ஏவியது.
2013 - வட இந்திய மாநிலமான உத்தராகண்டத்தில் பெரும் வெள்ளம், நிலச்சரிவுகள் இடம்பெற்றதில் பெரும் அழிவுகள் ஏற்பட்டன.
 
 பிறப்புகள் 

1723 - ஆடம் சிமித், இசுக்கொட்டிய மெய்யியலாளர், பொருளியலாளர் (இ. 1790)
1829 - யெரொனீமோ, அமெரிக்க பழங்குடித் தலைவர் (இ. 1909)
1888 - அலெக்சாந்தர் ஃபிரீடுமேன், உருசிய இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1925)
1891 - விளாதிமிர் அலெக்சாந்திரோவிச் அல்பித்சுகி, உருசிய வானியலாளர் (இ. 1952)
1893 - கருமுத்து தியாகராஜன் செட்டியார், தமிழகத் தொழிலதிபர் (இ. 1974)
 
*சில தகவல்கள்.*
 
1.
உடல் மெலிந்தவர்கள் தேனில் பேரீச்சம்பழத்தை ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் சதை பிடிக்கும். அல்சர் நோய் குணமாக தினமும் சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டி தேனைச் சாப்பிட்டு வர வேண்டும். அரை அவுன்ஸ் தேனுடன் அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்த சுத்தியும், ரத்த விருத்தியும் ஏற்படும்.
 
2.
லிவர்பூல், ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தங்க மீன்கள் மற்றும் க்ருஷியன் கார்ப் என்ற மீன்களின் 100 மில்லி லிட்டர் இரத்தத்தில் 50 மில்லி கிராம் அளவுக்கு ஆல்கஹாலை உற்பத்தி செய்வதைக் கண்டறிந்துள்ளனர். பொதுவாக மீன்கள் நீரில் கரைந்துள்ள ஆக்ஸிஜனை சுவாசித்து உயிர் வாழ்கின்றன. ஆக்ஸிஜன் இல்லையென்றால் இறந்துவிடும். ஆனால் ஆக்ஸிஜன் இல்லாத சூழலிலும் மீன்கள் உயிர் வாழும் திறன் உடையது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காகவே அவை ஆல்கஹாலை உற்பத்தி செய்கின்றனவாம். தங்கமீன்கள் குளிர்காலங்களில் உறைந்த ஏரிகளுக்கு கீழே இருக்கும்போது அந்த சூழலை எதிர்கொள்ள ஆல்கஹாலை உற்பத்தி செய்கின்றன.
 
3.
ஒளியை ஒலி வடிவாகவும், ஒலியை ஒளி வடிவாகவும் மாற்றி கம்யூட்டர் சிப்பில் சேமித்து வைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் எதிர்காலத்தில் மிக அதிவேக கம்யூட்டர்களை வடிவமைக்க முடியும். இத்தொழில் நுட்பத்தைக் கொண்டு உருவாகும் கம்யூட்டர் போட்டோனிக் கம்யூட்டர்  என்றும் அவை தற்போதை கம்யூட்டர்களை விட 20 மடங்கு அதிவேகமாக இயங்குமாம்.
 
4.
ஒளியை ஒலி வடிவாகவும், ஒலியை ஒளி வடிவாகவும் மாற்றி கம்யூட்டர் சிப்பில் சேமித்து வைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் எதிர்காலத்தில் மிக அதிவேக கம்யூட்டர்களை வடிவமைக்க முடியும். இத்தொழில் நுட்பத்தைக் கொண்டு உருவாகும் கம்யூட்டர் போட்டோனிக் கம்யூட்டர்  என்றும் அவை தற்போதை கம்யூட்டர்களை விட 20 மடங்கு அதிவேகமாக இயங்குமாம்.

0 Response to "16.06.2021 வரலாற்றில் இன்று - சில தகவல்கள்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel