16.06.2021 இன்றைய முக்கியச் செய்திகள்

Trending

Breaking News
Loading...
16.06.2021 இன்றைய முக்கியச் செய்திகள்

 


*1️
🔷🔶 நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 882 நியாய விலைக் கடைகளில், கோவிட் சிறப்பு நிவாரண நிதி 2-ஆம் தவணை ரூ. 2,000/- மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.*
 
*2️🔷🔶மீன்பிடி தடைக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து தூத்துக்குடியிலிருந்து விசைப்படகு மீனவர்கள் இன்று அதிகாலை மீன்பிடிக்க புறப்பட்டுச் சென்றனர்.*
 
*3️🔷🔶இந்தியாவில் நிலவளம் குறைந்த சுமார் இரண்டு கோடியே அறுபது லட்சம் ஹெக்டேர் நிலத்தை, 2030-ம் ஆண்டுக்குள் மீண்டும் வளப்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.*
 
*4️🔷🔶உலக நாடுகள் அனைத்திற்கும் தடுப்பூசிகள் எளிதில் கிடைக்கச் செய்ய வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் திரு எஸ் ஜெய்சங்கர் மற்றும் கென்யா வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி ரேச்சல் ஒமாமோ ஆகியோர் நைரோபியில் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.*
 
*5️🔷🔶மனித செயல்பாடுகளால் நிலத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்வதே மனிதகுலத்தின் ஒட்டுமொத்த கடமை என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.*
 
*6️🔷🔶பிஎம் கேர்ஸ் நிதியத்தின் நிதியுதவியுடன் நாடு முழுவதும் 850 ஆக்ஸிஜன் ஆலைகள் நிறுவப்பட்டு வருவதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான - டிஆர்டிஓ-வின் தலைவர் திரு சதீஷ் ரெட்டி கூறியுள்ளார்.*
 
*7️🔷🔶தேசிய அளவில் வெற்றிகரமாக செயல்படக்கூடிய உற்பத்தியாளர்களை உருவாக்குவதற்காக, வீட்டு உபயோகப் பொருட்களுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.*
 
*8️🔷🔶தமிழ்நாட்டில் கோவிட்-19 நிவாரண உதவிக்கான இரண்டாவது தவணையாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் பணி இன்று தொடங்குகிறது.*
 
*9️🔷🔶ராமநாதபுரம் மாவட்டத்திற்கான காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டக் குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சீரமைக்கும் பணி இரண்டு நாட்களுக்குள் முடிக்கப்பட்டு பொது மக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் என மாநில நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு கே என் நேரு தெரிவித்துள்ளார்.*
 
*1️0️🔷🔶நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டி நியாய விலை கடையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று கோவிட் - 19 நிவாரண உதவித் தொகை ரூபாய் 2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்களை பெற்று வருகின்றனர்.*
 
 *1️1️🔷🔶வருமானவரி படிவம் 15 சி ஏ மற்றும் 15B -யை, மின்னணு  முறையில் தாக்கல் செய்வதில் பல்வேறு சிக்கல் ஏற்பட்டிருப்பதாக வந்துள்ள தகவலையடுத்து, இந்தப் படிவங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கைப்பிரதியாகவும் தாக்கல் செய்யலாம் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.*
 
*1️2️🔷🔶தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறையில் புரட்சி ஏற்படுத்தக்கூடிய திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக அத்துறைக்கான அமைச்சர் திரு மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.*
 
*1️3️🔷🔶இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் கூடுதலாக முப்பது லட்சம் ஹெக்டேர் அளவிலான வனப்பரப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.*
 
*1️4️🔷🔶உலக நாடுகளுக்கிடையே மிக குறைந்த அளவிலான கார்பன் வாயுவை இந்தியா வெளியிடுவதாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.*
 
*1️5️🔷🔶நாட்டில் இதுவரை 25 கோடியே 87 லட்சத்திற்கும் மேற்பட்ட கோவிட் தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.*
 
*1️6️🔷🔶கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயிலில் கடந்த 2-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்திற்கு கவனக்குறைவே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு கேசர்பாபு தெரிவித்துள்ளார்.*
*
*1️7️🔷🔶நீலகிரி மாவட்டம், பழங்குடியின மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய முதலாவது மாவட்டம் என்ற நிலையை அடையும் வகையில் சிறப்பு செயல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக அம்மாவட்ட ஆட்சியர் திருமதி இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.*
 
*1️8️🔷🔶தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் செயல்படும் கோவிட் சிறப்பு சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்புவோருக்கு, அங்கு பணியாற்றும் மருத்துவர்கள் மரக்கன்றுகளை வழங்கி வழி அனுப்பி வருகின்றனர்.*
 
*1️9️🔷🔶இங்கிலாந்தில் டெல்டா வகையைச் சேர்ந்த கோவிட் தொற்று பரவி வருவதால், தற்போதுள்ள கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் 19-ம் தேதிவரை நீடிக்கும் என அந்நாட்டு பிரதமர் திரு போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.*
 
*2️0️🔷🔶நாடு முழுவதும் மத்திய அரசின் தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் புராதன சின்னங்கள் நாளை முதல் திறக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.*
 
 *2️1️🔷🔶யூரோ கால்பந்து போட்டியில் ஸ்பெயின் - ஸ்வீடன் அணிகளுக்கு இடையயான ஆட்டம் கோல் இன்றி டிராவில் முடிவடைந்தது.*
 
*2️2️🔷🔶ரூர்கேலாவில் இருந்து 6 கொள்கலன்களில் 114.98 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஏற்றிவந்த தமிழகத்துக்கான 70-வது சிறப்பு ரயில், நேற்று இரவு சென்னை, தொண்டையார்பேட்டை ரயில்நிலையம் வந்தடைந்தது.*
 
*2️3️🔷🔶ரூர்கேலாவில் இருந்து 4 கொள்கலன்களில் 77.78 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஏற்றிவந்த தமிழகத்துக்கான 72-வது சிறப்பு ரயில், இன்று காலை கோவை  வந்தடைந்தது.*
@RailMinIndia
* 🇮🇳 முக்கிய செய்திகள்🇮🇳 *
 
        *1️🔷🔶நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.*
 
 
       *2️🔷🔶மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்.*
 
         *3️🔷🔶இளம் பெண்ணின் கோரிக்கையை ஏற்று  தனியார் நிறுவனத்தில் வேலைக்கான நியமன ஆணையினை அமைச்சர் திரு செந்தில் பாலாஜி இன்று நேரில் வழங்கினார்.*
 
        *4️🔷🔶ஆம்பூர் அருகே தனியார் தோல் தொழிற்சாலையில் பணியின்போது  தோல் கழிவுநீர் தொட்டியில் விழுந்து விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு.  2 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.*
 
        *5️🔷🔶சென்னை இராயபுரம் குடியிருப்பு பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பொது கழிப்பிடத்தை அமைச்சர் திரு கே வி சேகர் பாபு இன்று ஆய்வு செய்தார்.*
 
        *6️🔷🔶முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் புதியதாக பொறுப்பேற்க உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.*
 
   *7️🔷🔶நீலகிரி மாவட்டத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய சர் ஜான் சல்லிவனின் 233 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.*
 
    *8️🔷🔶பிஹாரில் சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.*
 
     *9️🔷🔶ஜூன் 16-ஆம் தேதி நடைபெறவுள்ள விவாடெக்கின் 5-ஆம் பதிப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி முக்கிய உரையாற்றுகிறார்.*
 
       *1️0️🔷🔶முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் தலைமையில், தலைமை செயலகத்தில் இன்று புதிதாக  பொறுப்பேற்கவுள்ள  மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்தாலோசனை  நடைபெற்றது.*
 
       *1️1️🔷🔶மாநிலங்கள் மற்றும் யுனியன் பிரதேசங்களுக்கு அடுத்த மூன்று நாட்களில் சுமார் 47 லட்சம் கோவிட் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.*
 
     *1️2️🔷🔶கோவிட்-19-க்கான சுமார் ஆறு லட்சம் கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் தமிழகம் வந்துள்ளன.*
 
       *1️3️🔷🔶மாநிலத்தில் கோவிட் தொற்று படிப்படியாக குறைந்து வருவதாகவும், அதனை முழுமையாக ஒழிக்க பொதுமக்கள் அரசு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் திரு பொன்முடி கேட்டுக் கொண்டுள்ளார்.*
 
      *1️4️🔷🔶அரசு மருத்துவமனைகளில் கோவிட் அல்லாத பிற நோய்களால் பாதிக்கப்பட்டு சிசிக்சைக்காக காத்திருப்பவர்களுக்கும் சிகிச்சை அளிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் திரு ஓ பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.*
 
   *1️5️🔷🔶இந்திய ரயில்வே சமீபத்தில் உருவாக்கிய அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு நடைபாதையில் இந்திய ராணுவம் சோதனை ஓட்டம் மேற்கொண்டது.*
*@RailMinIndia*
 
   *1️6️🔷🔶இந்தியாவும் - கென்யாவும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த முடிவு செய்துள்ளன.*
 
*மூன்று நாள் பயணமாக கென்யா சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் திரு ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் திரு உகுரு கென்யாட்டா மற்றும் அந்நாட்டு மூத்த அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.*
 
 
   *1️7️🔷🔶நுண்கடன் நிறுவனங்களை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.*
 
       *1️8️🔷🔶துபாயில் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள உலக விண்வெளி கண்காட்சியில் இந்தியாவின் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் சாதனைகளை விளக்கும் கண்காட்சிகள் இடம்பெறும் என மத்திய விண்வெளித்துறை அமைச்சர் திரு ஜிதேந்திரசிங் கூறியுள்ளார்.*
  
         *1️9️🔷🔶விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்தது எனவும், இதன்மூலம் விண்வெளி திட்டங்களின் பயன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் எளிதில் சென்றடையும் என்றும் திரு ஜிதேந்திரசிங் குறிப்பிட்டார்.*
 
*2️0️🔷🔶நாட்டில் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் பத்தாயிரமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் திரு*
*@mansukhmandviya*
 *தெரிவித்துள்ளார்.*
      *2️1️🔷🔶நாடு முழுவதும் கடந்த 75 நாட்களில் முதல் முறையாக கோவிட் தொற்று தினசரி பாதிப்பு 60 ஆயிரமாக குறைந்துள்ளது.*
 
   *2️2️🔷🔶இந்தியாவில் 2030-ஆம் ஆண்டுக்குள் இரண்டு கோடியே 60 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் திரு நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.*
*@narendramodi*
 
*🔷🔶ஜூப்லியன்ட் புட் மார்ச் காலாண்டு லாபம் 395% வளர்ச்சி*
 
*10 சதவீத உயர்வில் பியூச்சர் ரீடைல் பங்குகள்*
 
*தங்க ஈடிஎப் மீதான முதலீடுகள் சரிவு*
 
*டூரிசம் மற்றும் ஹாஸ்பிடாலிட்டி துறை பங்குகள் வளர்ச்சி*
 
*பார்மா பங்குகளை விற்கும் முதலீட்டாளர்கள்*
 
*8 சதவீத உயர்வில் ஜஸ்ட்டயல் பங்குகள்*
 
*30 வருடத்தில்  முதல் முறையாக நஷ்டத்தை சந்திக்கும் எமிரேட்ஸ்*
 
*ஜூன் 16 நாளை ஐபிஓ வெளியிடுகிறது டொட்லா டைய்ரி*
 
 *🔷🔶சென்னை*
 
*✍️கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்ற கோரிய  வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசு பதில் தர உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.*
 
*✍️மனுதார் கோரிக்கை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ஓப்புதலுக்காக காத்திருப்பதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.*
 
*✍️2 வாரத்திற்குள் மனுதாரர் கோரிக்கை குறித்த திட்ட செயல்முறை தொடங்கப்படும் என்று அரசு உறுதியளித்துள்ளது.*
 
* 🇮🇳 முக்கிய செய்திகள்🇮🇳 *
 
*1️🔷🔶சிவகங்கை மாவட்டத்தில் முதல் தலைமுறை இளைஞர்கள் புதிதாக தொழில் துவங்கிட திட்ட மதிப்பீட்டில் 10 லட்சம் ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் திரு மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.*
 
*2️🔷🔶தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் தமிழக அரசின் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கோவிட் நிலுவைத்தொகை இரண்டாவது தவணை ரூபாய் 2000/- ரொக்கம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்களின் தொகுப்பு வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி இன்று காலை தொடங்கி வைத்தார்.*
 
*3️🔷🔶உலக மற்றும் ஆசிய கால்பந்து தகுதிச்சுற்று ஆட்டத்தில் இந்திய அணி இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.*
 
*4️🔷🔶சர்வதேச சூரிய கூட்டமைப்பு, பேரிடர் மறுகட்டமைப்பு போன்ற சர்வதேச நடவடிக்கைகளை இந்தியா ஊக்குவித்து வருவதாக அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார்.*
 
 
*5️🔷🔶18 வயது முதல் 44 வயதுகுட்பட்டவர்களில் ஒரு லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.*
 
*6️🔷🔶மக்களவையில் லோக் ஜன்சக்தி கட்சித் தலைவராக இருந்த திரு சிராக் பஸ்வான் நீக்கப்பட்டு புதிய தலைவராக திரு பசுபதி குமார் பரஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.*
 
*7️🔷🔶நடப்பு ரபி பருவத்தில் இதுவரை 4 கோடியே 25 லட்சத்து 77 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிலான கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.*
 
*8️🔷🔶திருவெற்றியூரில் கோவிட் தடுப்பு மருந்து செலுத்தப்படுவதையும், சிகிச்சை* *மையத்தையும் அமைச்சர் திரு*
*மா.சுப்பிரமணியம்*
 *நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.*
 
*9️🔷🔶விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு துறை சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கோவிட் சிறப்பு உதவி தொகை இரண்டாம் தவனையாக ரூபாய் 2000 மற்றும் 14 பொருள்கள் அடங்கிய சிறப்பு நிவாரண மளிகை பொருட்கள் வழங்கும் திட்டதை அமைச்சர் திரு பொன்முடி துவக்கி வைத்தார்.*
*1️0️🔷🔶தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையிலிருந்து பாசனத்திற்காக நாளை தண்ணீர் திறக்கப்படவுள்ளது.*
 
*1️1️🔷🔶1.05 கோடிக்கும் அதிகமான கோவிட் தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.*
 
*1️2️🔷🔶சிறைக் கைதிகளுடன் தொலைப்பேசி அல்லது காணொலி காட்சி மூலம் வழக்கறிஞர்கள் பேச அனுமதிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.*
 
*1️3️🔷🔶6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கான சோதனை இன்று முதல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடங்கியது.*
 
*1️4️🔷🔶தமிழ்நாட்டில் கோவிட் தொற்று தடுப்பு மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் தற்போது காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்*
 
*இந்த கூட்டத்திற்குப் பின் மருத்துவ நிபுணர்கள் உடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்*
 
*1️5️🔷🔶கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் திரு மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.*
 
*இந்த நோயின் பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய குழு ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.*
 
*1️6️🔷🔶Covid19 க்கான ஒரு லட்சத்து 19 ஆயிரம் கோவாக்ஸின் தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வந்தடைந்தது.*
 
*1️7️🔷🔶உலக முதியோர் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.*
 
*ஐநா வின் பரிந்துரையின்படி 2011 ஆம் ஆண்டு முதல் இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.*
 
 *1️8️🔷🔶திருவாரூர் மாவட்டத்தின் கடைமடைப் பகுதியான முத்துப்பேட்டை தில்லைவிளாகம் பகுதியில் எந்திரம் மூலம் நேரடி குறுவை நெல் விதைப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது.*
 
*1️9️🔷🔶மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக கடந்த 12-ம் தேதி திறந்துவிடப்பட்ட தண்ணீர் நேற்று கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையை வந்தடைந்தது.*
 
*2️0️🔷🔶தூத்துக்குடி வஉசி துறைமுகம் கடந்த ஆண்டுமுதல் இதுவரை நான்காயிரத்து 800 காற்றhலைகள் மற்றும் கோபுரங்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது.*
 
 *🔷🔶சென்னை*
 
*✍️தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகங்களை கலைக்கப் போவதில்லை என தமிழக அரசு கூறியுள்ளது.*
 
*✍️முறைகேடு புகாருக்குள்ளான கூட்டுறவு சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீஎதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.*
 
*✍️கூட்டுறவு சங்கங்களின் தற்போதைய நிர்வாகத்தை  களைத்து புதிதாக தேர்தல் நடத்த உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் கூறியுள்ளது.*
 
 
*🔷🔶போராட்டம் நடத்துவது என்பது தீவிரவாதம் ஆகாது என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது.*
 
*தேசிய குடியுரிமை  திருத்த சட்ட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியோர் தொடர்பான வழக்கில் நீதிமன்ற கருத்து தெரிவித்துள்ளது.*
 
*🔷🔶யூடியூபில் ஆபாசமாக பேசிய பப்ஜி மதன் மீதான புகார்கள் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளார்.*
 
*ஏற்கனவே 2 புகார்கள் உள்ள நிலையில் மேலும் ஒரு புகார் மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைமுக்கு வந்துள்ளது.*
 
 
*🔷🔶ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி ரமேஷ் என்பவர் உயிரிழந்துள்ளார்.*
 
*கழிவுநீர் தொட்டி சுத்தம்  செய்த மேலும் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.*
 
*துத்திப்பட்டிலுள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் இருந்த கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது*
 
 
*🔷🔶மாணவிகளின் வாட்ஸ் அப் குழுவுக்கு ஆபாசப்படம் அனுப்பிய ஈரோடு பள்ளி பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.*
 
*மாணவி ஒருவரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சித்தோடு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளார்.*
 
 
*1️🔶🔶சேலத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கோவிட் நிவாரணத் தொகை இரண்டாம் தவணை தொகையான ரூபாய் 2,000 மற்றும் 14 வகையான அத்தியாவசிய மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை மாவட்ட ஆட்சியர் திரு கார்மேகம், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு எஸ் ஆர் பார்த்திபன் ஆகியோர் வழங்கினர்.*
 
*2️🔷🔶உத்தரகண்ட் மாநில முதலமைச்சர் திரு தீரத் சிங் ராவத், குடியரசுத் துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடுவை இன்று சந்தித்து பேசினார்.*
@TIRATHSRAWAT
 
*3️🔷🔶அரியலூர்: படித்த ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 971 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு சிவசங்கர் வழங்கினார்.*
 
*4️🔷🔶முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் தமது முதல் அரசுமுறை பயணமாக பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்திக்க வருகின்ற வியாழக்கிழமை டெல்லி செல்கிறார்.*
 
*5️🔷🔶மைக்ரோ பிளாக்கிங் சமூக ஊடக தளமான ட்விட்டரின் பிரதிநிதியை ஜூன் 18 ஆம் தேதி ஆஜராகுமாறு தகவல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.*
 
*6️🔷🔶இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே சவுத்தாம்ப்டனில் நடைபெறவுள்ள  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக இந்திய அணி கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.*
 
*7️🔷🔶குறிஞ்சிப்பாடியில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கோவிட் சிறப்பு நிதி இரண்டாவது தவணை 2000 ரூபாய் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் வழங்கினார்.*
 
*8️🔷🔶ஜூன் 16 முதல் ஜூன் 22 வரை பிஹார் மாநிலத்தில் COVID19 கட்டுப்பாடுகளை ஒரு வாரம் தளர்த்துவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.*
 
*9️🔷🔶உத்தராகண்டில் ஜூன் 22 அம் தேதி வரை கோவிட் ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.*
 
*1️0️🔷🔶நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதையடுத்து தாழ்வான இடங்கள், நிலச்சரிவு அபாயமுள்ள இடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு முதல் நிலை பொறுப்பாளர்கள் மூலம் எச்சரிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் திருமதி இன்ன சென்ட் திவ்யா கூறியுள்ளார்.*
 
*1️1️🔷🔶கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட கோவிட் நிவாரண நிதி ரூபாய் 2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரணத் தொகையினை உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பொன்முடி திருக்கோவிலூரில் தொடங்கி வைத்தார்.*
 
*1️2️🔷🔶நாமக்கல்: மாநில அரசின் தேவைகளை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறார் என்றும்  நாமக்கல் மாவட்டத்தில் 5 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர்  திரு மா.மதிவேந்தன் பேட்டி...*
 
 *1️3️🔷🔶திருவண்ணாமலை மாவட்டத்தில் கோவிட் சிறப்பு நிவாரணத்தொகை இண்டாவது கட்டமாக ரூபாய்  2 ஆயிரம் மற்றும் 14 வகையான இலவச மளிகை பொருட்கள் வழங்குவதை மாநில பொதுபணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு எ.வ.வேலு  திருவண்ணாமலையில் இன்று தொடங்கி வைத்தார்.*
 
*1️4️🔷🔶திண்டுக்கல்:அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கோவிட் நிவாரண நிதி இரண்டாம் தவணையாக ரூபாய் 2000  மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள்  வழங்கும் நிகழ்ச்சியை கூட்டுறவு துறை அமைச்சர் திரு ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார்.*
 
*1️5️🔷🔶காஞ்சிபுரத்தில் அமைச்சர் திரு தா.மோ. அன்பரசன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு நிவாரண நிதி இரண்டாவது தவணையாக 2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் மற்றும் கோவிட் நிவாரண உதவித் தொகைகளை வழங்கினார்.*
 
*1️6️🔷🔶பெரம்பலூர் மாவட்டத்தில் 1.84 லட்சம் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.36.95 கோடி மதிப்பீட்டில் கோவிட் நிவாரண உதவித் தொகை ரூ.2,000 மற்றும் 14 வகையான பொருட்களை வழங்கும்பணி துவங்கியது.*
 
 
*1️7️🔷🔶தமிழக அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் கோவிட் தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.*
 
*1️8️🔷🔶திருவள்ளூர் மாவட்டம் கூட்டுறவுத்துறை வாயிலாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கோவிட் சிறப்பு நிவாரண நிதி இரண்டாம் தவணை ரூ.2,000 மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புக்களை  பால்வளத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் வழங்கினார்.*
 
*✅✅தினசரி கரோனா பாதிப்பு 85 சதவிகிதம் குறைந்துள்ளது: மத்திய அரசு*
 
நாட்டில் கரோனா நோய்த் தொற்றின் தினசரி பாதிப்பு 85 சதவிகிதம் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
 
நாட்டின் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத் துறையின் இணைச் செயலர் லவ் அகர்வால் செய்தியாளர் சந்திப்பில் கூறியது:
 
"கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதைக் கண்டு மேற்கொண்ட ஆய்வில் தினசரி கரோனா பாதிப்பு 85 சதவிகிதம் குறைந்துள்ளது. இது மிகப் பெரிய முன்னேற்றம். இருப்பினும், கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
 
கடந்த சில நாள்களாக நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. மே 10-ம் தேதி நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை சராசரியாக 37.45 லட்சமாக இருந்தது. தற்போது அது 10 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. மொத்த பாதிப்பில் இது 2.9 சதவிகிதம்.
 
கரோனா பாதிப்புகளைவிட குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால் ஒட்டுமொத்தமாக குணமடைவோர் விகிதம் 95.6 சதவிகிதத்தை அடைந்துள்ளது."
 
நாட்டில் கடந்த மே 7-ம் தேதி அதிகபட்சமாக 4.14 லட்ச பாதிப்புகள் பதிவாகின. அதன்பிறகு மே 19-ம் தேதி தினசரி பாதிப்பு 2.67 லட்சமாகக் குறைந்து பதிவானது. இதுவே கடந்த 24 மணி நேரத்தில் 86,490 ஆக தினசரி பாதிப்பு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 
*✅✅விராலிமலை தொகுதியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்ற தேர்தல் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் பழனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விரைவில் விசாரணை...*
 
 
 *✅✅விராலிமலையில் அதிமுகவின் விஜயபாஸ்கர் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கோரி திமுக வேட்பாளர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு*
 
 
*EVM எந்திரம் மற்றும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்ட எண்களில் மாறுபாடு இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.*
 
 
* பிரதமர் மோடியை சந்தித்த மறுநாள் 18-ஆம் தேதி புது தில்லியில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியையும் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசுகிறார்: தில்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் தகவல்*
 
*  நேரலை செய்திகள்*
 
 
* கொரோனாவால் பெற்றோரை இழந்த 5 வயது குழந்தையை வளர்க்கத் துடிக்கும் 79 வயது மூதாட்டி - நெகிழ்ச்சி கதை*
 
 
* கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதிலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தற்போது வரை, நாடு முழுவதும் 1,500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோர் இருவரையும் இழந்துள்ளது.*
 
* இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 15 குழந்தைகள் தாய், தந்தை இருவரையும் இழந்துள்ளனர். இதுபோன்று பெற்றோரை இழந்து பல குழந்தைகள் தவிக்கும் இந்த சூழ்நிலையில், கடலூர் அருகே தள்ளாத வயதிலும் பெற்றோரை இழந்த ஐந்து வயது தத்து பிள்ளையை வளர்க்க துடிக்கு 79 வயதுடைய மூதாட்டி - பேரன் குறித்து இந்த கட்டுரையில் விளக்கமாக பார்க்கலாம்.*
 
* கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை சேர்த்தவர் ஞானம். அவரது மனைவி அருள்விழி பார்வைக் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளியான இவர், கடலூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். ஞானம் - அருள்விழி தம்பதிகளுக்கு திருமணமாகி குழந்தை இல்லாத காரணத்தினால், குழந்தை ஒன்றை தத்து எடுத்து வளர்த்து வந்தனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குழந்தையின் பெற்றோர் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்து விட்டனர்.*
 
* இதனால், 5 வயதுடைய குழந்தை மீண்டும் தாய், தந்தை இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.*
 
 * இந்த குழந்தை இருக்கும் வீடு முழுவதும் விளையாட்டு சாமான்களும், சுவற்றில் இந்த மழலையின் கிறுக்கல்களும் ஞானம், அருள்விழி தம்பதியர் இந்த குழந்தை மீது வைத்திருந்த அன்பை பறைசாற்றுகிறது. தனது பாட்டியை அம்மா என அழைக்கும் இந்த மழலைக் குரலானது பார்ப்பவர்களை கண்ணீர் விட வைக்கிறது.*
 
*▪️கல்லணையில் இன்று காவிரி நீர் திறப்பு*
 
*▪️தமிழக எல்லைக்கு இன்று வந்து சேருகிறது கிருஷ்ணா நீர்*
 
*▪️ஜூன்-16: பெட்ரோல் விலை ரூ. 97.91, டீசல் விலை ரூ.92.04*
 
*▪️கன்னியாகுமரி: கோதையாறு அணை இன்று திறப்பு*
 
*▪️'ஹால் மார்க்' முத்திரை இன்று முதல் கட்டாயம்*
 
*▪️சாதிப்பரா இந்திய பெண்கள்: இங்கிலாந்து டெஸ்ட் இன்று துவக்கம்*
 
*▪️கோவிட்டில் இருந்து உலகில் 16.18 கோடி பேர் மீண்டனர்*
 
*▪️உலகில் 17.73 கோடி பேருக்கு கோவிட் பாதிப்பு; 38.37 லட்சம் பேர் பலி*
 
 
 
 
*  அமெரிக்காவில் புதிதாக 11,937 பேருக்கு கொரோனா தொற்று.*
 
*◼️ ஒரே நாளில் 341 பேர் பலி...*
 
 
*  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில்,*
 
கொரோனா பாதிப்புக்கு 6 லட்சம் பேர் பலி என்ற கொடூர மைல் கல்லை நாம் கடந்துள்ளோம்.
 
அன்பிற்குரியவர்களை இழந்தவர்கள் அனைவருடனும் எனது மனம் இணைந்திருக்கிறது.
 
உங்களை உள்வாங்கி கொள்ளும் கருந்துளையை பற்றி எனக்கு தெரியும்.
 
ஆனால், உங்களுடைய கண்களில் இருந்து கண்ணீர் வருவதற்கு முன் உங்களுடைய உதடுகளில் புன்னகையை கொண்டு வரும் காலமும் வரும் என்று அவர் பதிவிட்டு உள்ளார்...
 
* 69% இட ஒதுக்கீட்டை கட்டாயம் பின்பற்ற வேண்டும்;*
 
*மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை*
 
*எந்தக் காரணத்தைக் கொண்டும் சாதி ரீதியாக பாகுபாடு காட்டக்கூடாது.*
 
*அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவு.*
*_______________________________*
 
*  காஷ்மீர் :  ஸ்ரீ நகர் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொலை.*
 
 
* டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பூசி உற்பத்தி உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து குறித்து காணொளி மூலம் என்று ஆலோசனை...*
 
*  புதுச்சேரி சட்டசபை சட்டப்பேரவை சபாநாயகராக பாஜக எம்எல்ஏ செல்வம் இன்று பதவி ஏற்கிறார்...*
 
  
* மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி.*
 
* கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுவர்.*
 
 
* தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களின் 55 நீதிபதிகளை இடமாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் உத்தரவு!*

 
*  ️+2 மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீட்டு வழிமுறைகள் இரண்டு வாரங்களில் அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.*
 
 
*  ️CBSE-இன் வழிமுறைகளையும் கவனத்தில் கொண்டு முடிவு.*
 
  
* ️ ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் துவங்கவே கூடாது என, தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமருக்கு மடல் எழுதி இருப்பதை பாராட்டுகிறோம்.*
 
*விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்*
 
  
*அடேங்கப்பா... கடிதம் எழுதியதற்கே பாராட்டா... புல்லரிக்குது சார் உங்கள் நட்பின் ஆழத்தை பார்த்து...' என, சிரிக்க தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை.*
 
*ஜாதி மறுப்பு திருமண இணையர்களுக்குவழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசு தொகையை, அ.தி.மு.க., அரசு நிறுத்தியது கண்டனத்திற்குரியது. தி.மு.க. அரசில் ஊக்கத்தொகை அளிப்பு தொடரட்டும்.- ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு கல்வி,- வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளித்து, நாட்டையே சமத்துவபுரமாக ஆக்கட்டும்!*
 
*திராவிடர் கழக தலைவர் வீரமணி*
 
*முந்தைய ஆட்சி பற்றி, நாளுக்கு நாள் புதிது புதிதாக குறைகளை கண்டுபிடித்து, அறிக்கை விட்டு வந்த தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், இந்த விவகாரத்தை, நான்காண்டுகளுக்கும் மேலாக எப்படி கவனிக்க தவறினர்...' என கேட்க தோன்றும் வகையில், திராவிடர் கழக தலைவர் வீரமணி அறிக்கை.*
 
*சாலையோரங்களில், 'மது குடித்து வாகனங்களை ஓட்டாதீர்கள்' என்ற விளம்பரம் இருக்கும். அது இனிமேல், 'குடியுங்கள்; வாகனம் ஓட்டாதீர்கள்' என்று மாறும் நிலைக்கு வந்து விட்டது. ஆம். பீர் மதுபானம் விலையை விட, பெட்ரோல் விலை அதிகரித்து விட்டது*.
 
*காங்., முன்னாள் எம்.பி., கீர்த்தி ஆசாத்*
 
*நீங்கள் சொல்வதுபடி பார்த்தால், பீர் விலையை நன்கு அறிந்து வைத்துள்ள நீங்கள் பீர் பிரியரோ என எண்ண தோன்றுகிறது...' என, ஜாலியாக கூறத் தோன்றும் வகையில், காங்., முன்னாள் எம்.பி., கீர்த்தி ஆசாத் அறிக்கை.*
 
*குடித்து பழகியவர்களுக்கும், விற்று பழகியவர்களுக்குமே மது அத்தியாவசியம்' என, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர், நடிகர் கமல் கூறிஉள்ளார். இல்லை. மது உற்பத்தியில், விற்பனையில் லஞ்சம் மற்றும் ஊழலில் திளைத்தவர்களுக்கே மது அத்தியாவசியம்.*
 
*தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி*
 
*உங்கள் இருவருக்கும் இப்போதைய நிலையில், மது அவசியம் என்பது தெரிகிறது. அதாவது, மது அரசியல்...' என, சிரித்தபடி கூறத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை.*
 
*இந்த கொரோனா நேரத்திலும், தெலுங்கானா மாநிலத்தில், 32 மாவட்ட கூடுதல் கலெக்டர்களுக்கு, தலா, 30 லட்சம் ரூபாய் செலவில், ஆடம்பர கியா கார்கள் வழங்கப்பட்டுள்ளன. இதை பார்க்கும் போது, ஐதராபாதில் கியா மோட்டார்ஸ் டீலர் யார் என்ற முக்கியமான கேள்வி எழுகிறது.*
 
- தமிழக காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம்
 
*இப்படி தான் மத்தியில் காங்., ஆட்சியிலும் நடந்ததா... விமானங்கள், ஹெலிகாப்டர்கள், பஸ்கள் எல்லாம் மொத்தம் மொத்தமாக வாங்கப்பட்டனவே...' என, சொல்ல தோன்றும் வகையில், தமிழக காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம்*.
 
*மேற்கு வங்கத்தில், பா.ஜ.,வினருக்கு எதிராக நடத்தப்பட்ட கொடூர செயல்கள் ஒவ்வொன்றாக உச்ச நீதிமன்றத்தில் அம்பலமாகி வருகிறது. திரிணமுல் குண்டர்களால், 60 வயது பெண், தன் 6 வயது பேரன் முன் கற்பழிக்கப்பட்டதை பதிவு செய்துள்ளார். ரவீந்திரநாத் தாகூரின் மேற்கு வங்கமல்ல அது; ஜிஹாதிகளின் வங்காளமாக மாறிவிட்டது.*
 
- தமிழக பா.ஜ., பொறுப்பாளர் சி.டி.ரவி
 
*இப்படியும் கொடூரங்கள் நடக்குமா என்ற அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது, மம்தா பானர்ஜியின் வெற்றி...' என, சொல்ல துாண்டும் வகையில், தமிழக பா.ஜ., பொறுப்பாளர் சி.டி.ரவி அறிக்கை.*
 
* ️ ஜூன் தொடக்கத்தில் தினசரி சரியத் தொடங்கிய நிலையில், தற்போது 2வது அலை முடிவுக்கு வர தொடங்கி உள்ளது.*
 
*கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 2 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது.*
 
*இந்நியாவின் 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தினசரி தொற்று 1000-க்கு கீழ் சரிந்துள்ளது. இதில் பல மாநிலங்களில் பாதிப்பு 500-க்கு கீழ் உள்ளது. கொரோனா பாதிப்பின் விகிதத்தை கடந்த சில மாதங்களோடு ஒப்பிடும் போது தற்போது 85% தொற்று பரவல் குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.*
 
*இந்தியாவில் கொரோனா 2வது அலையில் இறப்புகள் அதிகளவில் ஏற்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி நடுவில் ஆரம்பித்த 2வது அலை ஏப்ரல் 15 ஆம் தேதிக்குப் பிறகு உச்சத்தை தொட்டு, பின்னர் ஜூன் தொடக்கத்தில் தினசரி சரியத் தொடங்கிய நிலையில், தற்போது 2வது அலை முடிவுக்கு வர தொடங்கி உள்ளது.*
 
*இரண்டாவது அலை முடிவுக்கு வரும் நிலையில் 3வது அலை குறித்து எச்சரிக்கையும் விடப்படுத்துள்ளது. கொரோனா 3 ஆம் அலை செப்டம்பர் அல்ல அக்டோபர் மாதத்தில் துவங்க வாய்ப்பிருப்பதாகவும் இது குழந்தைகளை அதிகம் பாதிக்கும் எனவும் கூறப்படுகிறது.*
 
#JUSTNOW
 
சென்னை ஆழ்வார்பேட்டை ரேஷன் கடையில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு!
 
நிவாரணப் பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை ஸ்டாலின் நேரில் ஆய்வு.
 
# #TNGovt #MKStalin #Rationshop #Rs2000 #Inspection #Chennai
 
*🔷🔶ஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் - திட்டம் துவக்கம்*
 
*✍️சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் செலுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.*
 
 *✍️ரூ.5 லட்சம் வைப்பு நிதியாக செலுத்தப்பட்டு 18 வயது ஆனவுடன் வட்டியுடன் சம்பந்தப்பட்டவருக்கு தரப்படும்.*
 
 
*🔷🔶 கருப்பு பூஞ்சை நோய் அறிகுறி தென்பட்ட உடனேயே அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிசிச்சை எடுத்துக் கொள்ளுமாறு மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு மா சுப்பிமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.*
 
 
   *சென்னை: தமிழக டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.127.09 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ரூ.164.87 கோடிக்கு மதுபானங்கள் விற்ற நிலையில் நேற்று ரூ.127.09 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது.*
 
    *சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, சவரன் ரூ.36,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,575-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வௌ்ளியின் விலை ரூ.76.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.*
 
  
  *உத்தரப்பிரதேசம்: கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த தாஜ்மஹால் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தினமும் ஆன்லைனில் டிக்கெட் வாங்கிய 650 பேர் மட்டுமே தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க அனுமதி என கூறப்பட்டுள்ளது.*
 
   *சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமின் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. நடிகை அளித்த பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸ் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.*
 
    *டெல்லி: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த சிவசங்கர் பாபாவை டெல்லி காசியாபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தராகண்ட் டேராடூன் மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய சிவசங்கர் பாபா போலீசாரிடம் சிக்கியுள்ளார். காசியாபாத்தில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபாவை போலீஸ் கைது செய்து சிபிசிஐடியிடம் ஒப்படைத்துள்ளனர்.*
 
    *திருச்சி: விரைவில் பக்தர்களின் வழிபாட்டுக்காக கோயில்கள் திறக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். திருச்சி மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோயிலில் ரோப் கார் சேவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.*
 
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பேரறிவாளன் தயார் அற்புதம்மாள் சந்தித்துள்ளார். பேரறிவாளனுக்கு பரோல் வழங்கியமைக்காக முதலமைச்சரை சந்தித்து அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் பேரறிவாளனின் பரோல் விடுப்பை நீட்டிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.*
 
 

0 Response to "16.06.2021 இன்றைய முக்கியச் செய்திகள்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel