19.06.2021 நடப்பு செய்திகள்

Trending

Breaking News
Loading...
19.06.2021 நடப்பு செய்திகள்

 


மதுக்கடைகள் திறப்பால் குடும்ப வன்முறை அதிகரிக்கும் என்பதால் மதுபான கடைகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாட்டைக் காப்போம் அமைப்பு வலியுறுத்தியுள்ளது*

 
 
   *நடிகையிடம் குடும்பம் நடத்தி ஏமாற்றிய வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் நிலையில், மதுரையிலுள்ள அவரது வீட்டில் தனிப்படை போலீஸார் இன்று ஆய்வு செய்தனர். அவரது மனைவியிடம் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக அவரைப் பற்றி விசாரித்தனர்*
 
   *சென்னை பெருநகர எல்லைக்குள் உள்ள 4 சுங்கச்சாவடிகளைப் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.*
 
சென்னை ராஜீவ் காந்தி சாலையில் ரூ.108.13 கோடி மதிப்பில் இந்திரா நகர் சாலை சந்திப்பு, டைடல் பார்க் சந்திப்புகளில் நடைபெற்றுவரும் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுப் பணிகளையும், ‘யூவடிவ மேம்பாலங்கள், ஈசிஆர் சாலைப் பிரிவில் நடை மேம்பாலம், பக்கிங்காம் கால்வாய் குறுக்கே கட்டப்படும் கூடுதல் பாலம் ஆகியவற்றையும் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்து, பணிகளை விரைவுபடுத்திட அறிவுரை வழங்கினார்
 
 
   *தவறு செய்யும் வழக்கறிஞர்கள் குறித்து புகார் வரும் வரை காத்திருக்காமல், தானாக முன்வந்து பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.*
 
*மேலும், வழக்கறிஞர் தனுஜாவின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிமன்றம், சட்டக்கல்வி பயிலும் அவரது மகளுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது*
 
 
   *ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,341பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.*
 
ஆந்திர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 18,39,243ஆக உயர்ந்துள்ளது.
 
மேலும் 8,486 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 57 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
 
இதுவரை மொத்தம் 17,59,390 பேர் குணமடைந்துள்ளனர். 12,224 பேர் பலியாகியுள்ளனர்.
 
இன்றைய நிலவரப்படி 67,629பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
   *தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 8,633 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.*
 
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 24,06,497ஆக உயர்ந்துள்ளது.
 
அதிகபட்சமாக கோவையில் 1,089, ஈரோட்டில் 964, சேலம் 541, சென்னை 492 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
 
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 287 பேர் பலியாகியுள்ளனர்.இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 30,835 ஆக உயர்ந்துள்ளது.
 
மேலும் 19,860 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 22,86,653பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.தற்போது மருத்துவமனையில் 89,009 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
 
ஒரே நாளில் 1,63,649 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
 
 
   *✍🏻நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் சித்த மருத்துவத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் சிறப்பு சித்த மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வரும்  திவாகர் என்பவர் சித்த மருத்துவத்தால் நல்ல பயன் கிடைத்ததாகக் கூறுகிறார்.*
 
 
*✍🏻நீலகிரி மாவட்டம் உதகை மாரியம்மன் கோவிலில் கோவிட் தொற்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 16 அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு தலா ரூ 4000  நிவாரண உதவி தொகைக்கான காசோலை, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகை பொருட்களை அமைச்சர் திரு ராமச்சந்திரன் வழங்கினார்.*
 
 
 *✍🏻கோவிட் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகளை வலியுறுத்தும் வகையில் மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் இன்று*

*@MoHFW_INDIA*   *முன்களப்பணியாளர்களுக்கு முகக்கவசங்களை வழங்கினார்.*
 
 
   *என்.சி.சி சிறப்பு நுழைவு திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்க இந்திய ராணுவம் அழைப்பு விடுத்துள்ளது.*
 
*விண்ணப்பிக்க தகுதியான ஆண் மற்றும் பெண், ஆன்லைனில்*
 
 http://joinindianarmy.nic.in
 
மூலம் விண்ணப்பிக்கலாம்.
 
*பதிவு செய்ய இறுதி நாள்  ஜூலை 15 ஆம் தேதி.*
 
 
   *கோவிட் தொற்று காரணமாக காடுகள், சரணாலயங்களில் உள்ள விலங்குகளுக்கு நோய் தொற்று குறித்து கண்காணிக்கவும் தடுக்கவும் ஈடுபடும் அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்க முதன்மை செயலாளர் திருமதி சுப்ரியா சாகு தலைமையில் ஆறு உறுப்பினர்களை கொண்ட மாநில அளவிலான குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.*
 
 
  
   *✍🏻சேலம் மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள மக்கும் கழிவுகளை கொண்டு உரம் தயாரிக்கும் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் இன்று பார்வையிட்டார்*.
 
 
 *✍🏻சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் திடக்கழிவு பணிகள் குறித்து பார்வையிட வந்த பஞ்சாப் மாநிலம் லூதியானா மாநகராட்சி மேயர் தலைமையிலான குழுவினருக்கு ஆணையர் திரு ககன்தீப் சிங் பேடி இன்று நடைபெற்ற கூட்டத்தில் திட்டப்பணிகள் குறித்து விளக்கி கூறினார்.*
 
 
*✍🏻21.06.2021 அன்று தொடங்க உள்ள சட்டமன்றப் பேரவை கூட்டத்தை முன்னிட்டு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து முக்கிய துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.*
 
*✍🏻திண்டுக்கல் மாவட்டம்  வேலாயுதம்பாளையத்தில் மனு அளித்தவருக்கு இலவச வீட்டுமனைபட்டா மற்றும் வீடு கட்டுவதற்கு ஆணையை மனுதாரர் வீட்டிற்கே சென்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு சக்கரபாணி வழங்கினார்.*
 
 
 *✍🏻சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் திரு வேலு நேரில் பார்வையிட்டார்.*
 
*✍🏻இதுவரை தென் மாநிலங்களுக்கு 17,700 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் இந்திய ரயில்வே விநியோகம் செய்துள்ளது.*
 
 *✍🏻பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் தேசிய யோகா தினம் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை கொண்டாடுகிறது. இந்நிகழ்ச்சியில் சுமார் 500 பேர் பங்கேற்கின்றனர்*.
 
 *✍🏻மாநிலம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்து 500 குழந்தைகள் கோவிட் நோய் காரணமாக தங்கள் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையோ இழந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.*
 
 
 *✍🏻புதுக்கோட்டை மாவட்டம் வடதெரு பகுதியில் ஹைட்ரோ கார்பன் அகழ்வுக்கான ஏல அறிவிப்பை மத்திய பெட்ரோலிய மற்றும் எரிவாயு அமைச்சகம் திரும்பப்பெற வேண்டும் என்று அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் திரு ஓ பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.*
 
 
*✍🏻வரவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கட்சி பேதமின்றி அனைத்து உறுப்பினர்களுக்கும் உரிய வாய்ப்பு அளிக்கப்படும் என்று பேரவைத் தலைவர் திரு மு. அப்பாவு கூறியிருக்கிறார்.*
 
 
*✍🏻கோவிட் மூன்றாம் அலை ஒருவேளை வந்தாலும், அதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.*
 
 
   *✍🏻கோவிட் வைரசுக்கு எதிரான எளிய மற்றும் மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் முகக்கவசம் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.*
 
 
 *✍🏻தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து கூடுதல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் இரா.வைத்திநாதன் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.*
 
 
*✍🏻2021க்கான விளையாட்டு விருதுகள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசி தேதியை ஜூன் 28 வரை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நீட்டித்துள்ளது.*
 
 
 *✍🏻சுற்றுச்சூழல் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்தியாவும் பூட்டானும் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.*
 
 
*விழுப்புரம்:* அனுமதியின்றி கொரோனா டெஸ்ட் எடுத்த தைராய்டு பரிசோதனை மையத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அரசின் அனுமதி பெறாமல் கொரோனா பரிசோதனை செய்ததாக சிஜிஎன் பரிசோதனை மையம் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
______________________
 
*கன்னியாகுமரி மாவட்டம்* பள்ளியாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராக கடந்த 8 ஆண்டுகளாக அதிமுக பிரமுகர் மோகன்தாஸ் உள்ளார். இவர் அதிமுகவின் வால்வச்சகோஷ்டம் பேரூர் செயலாளராகவும் பதவி வகித்திருக்கிறார்.
இவர் அந்த கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக 34 ஆண்டுகளாக பணிபுரியும் கேசியா என்ற பெண்ணை பணி செய்விடாமல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. கூட்டுறவு சங்க செயலாளரான பெண் ஊழியரை சங்க தலைவரே தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
______________________
 
*சென்னை* புதுக்கல்லூரியில் ஹால் டிக்கெட் வழங்காததைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். தேர்வு கட்டணம் செலுத்தாத 500-க்கும் மேற்பட்டோருக்கு ஹால் டிக்கெட் வழங்கவில்லை எனப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
______________________
 
*வேலூர்* மத்திய சிறையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்யும் சிறப்பு அங்காடி திடீரென மூடப்பட்டது
______________________
 
*நெல்லை*
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால் கால்வாய்களில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து களக்காடு பகுதி விவசாயிகள் கார் சாகுபடி பணிகளை தொடங்கி உள்ளனர்.
______________________
 
*சிவகங்கை மாவட்டம்* மானாமதுரை அருகே மழவராயனேந்தல் கிராமத்தில் சரவணபுலி என்பவர் தனது நண்பர்கள் சரண், பாண்டியராஜன், முத்துக்குமார், அபிஷேக் ஆகியோருடன் வாழைத்தோப்பில் பட்டாக்கத்தி, வால், வீச்சரிவாளுடன்
சுப்ரமணியபுரம் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுடன் ஸ்டைலாக நடந்து வருவது போன்று படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் அதை பரப்பியுள்ளார். இவரை கண்டறியும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது
______________________
 
*அரியலூர்:* சாத்தமங்கலம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியதில் தந்தை, இரு மகள்கள் உயிரிழந்துள்ளனர். ராமலிங்கம், அவரது மகள்கள் நாகவள்ளி, நாகலட்சுமி ஆகியோர் நிகழ்விடத்திலேயே இறந்த நிலையில், 6 பேர் காயமடைந்துள்ளனர்.
______________________
 
*வேலூர் மாவட்டத்தில்* தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் ரூ 60 லட்சத்தில் பிளாக் ஸ்பாட்களில் சிக்னல் விளக்குகள் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன
______________________
 
*தருமபுரி:* நல்லம்பள்ளி வேளாண்மை விரிவாக்க மைய கிடங்கில் விதைகள் இருப்பு குறித்து சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
______________________
 
*திருப்பூர் மாவட்ட* காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் துறை சார்பாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டன.
______________________
 
*தருமபுரி மாவட்டம்* காரிமங்கலம் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி இன்று நேரில் ஆய்வு செய்தார்.
______________________
 
*செங்கல்பட்டு* வண்டலூர் உயிரியல் பூங்காவில் மேலும் 4 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி
______________________
 
*தஞ்சாவூர்*
விளாங்குடி  கொள்ளிடம் ஆற்றில்  திருமானுர்  ஒயின் ஷாப்புக்கு சரக்கு  வாங்க  வந்த  தஞ்சை  கீழவாசல்  சேர்ந்த சதீஷ்  என்ற வாலிபர் மர்மமான முறையில் இறந்து  கிடந்தார்!
______________________
 
*கோவை* மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் திரு.ராஜ கோபால் சுன்கரா  அவர்கள் கிழக்கு மண்டலம், வார்டு எண். 75க்குட்பட்ட நஞ்சுண்டாபுரம், எரிவாயு மின் மயான செயல்பாடுகள் குறித்து  ஆய்வு செய்தார்.

0 Response to "19.06.2021 நடப்பு செய்திகள் "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel