19/06/2021- சனி - வரலாற்றில் இன்று, சில தகவல்கள்

Trending

Breaking News
Loading...
19/06/2021- சனி - வரலாற்றில் இன்று, சில தகவல்கள்

 


1269 :
பிரான்ஸில் மஞ்சள் அடையாளம் இல்லாமல் பொதுவில் திரியும் அனைத்து யூதர்களும் 10 வெள்ளி லிவ்ராக்கள் தண்டம் செலுத்த வேண்டும் என ஒன்பதாம் லூயி மன்னர் கட்டளையிட்டார்.
 
1862 : அமெரிக்க சட்டமன்றம் அமெரிக்க மாநிலங்களில் அடிமை முறையை தடை செய்தது.
 
1867 : மெக்ஸிகோ பேரரசர் முதலாம் மாக்ஸிமிலியன் மரண தண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
 
1903 : பொது வேலை நிறுத்தத்தை தூண்டியமைக்காக முசோலினி பெர்ன் நகரில் கைது செய்யப்பட்டார்.
 
1910 : வாஷிங்டனில் முதன் முறையாக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது.
 
1912 : அமெரிக்காவில் 8 மணி நேர வேலை திட்டம் அமலாகிறது.
 
1943 : டெக்சாஸில் இன மோதல் ஏற்பட்டது.
 
1944 : இரண்டாம் உலகப்போர் :- அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையே பிலிப்பைன்ஸ் கடல் போர் இடம்பெற்றது.
 
1953 : பனிப்போர் :- அமெரிக்காவின் அணு ஆயுத ரகசியங்களை சோவியத் ஒன்றியத்திற்கு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு ஜூலியஸ், எத்தேல் ரோசன்பர்க் என்ற யூதத் தம்பதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
 
1961 : பிரிட்டனிடம் இருந்து குவைத் விடுதலையை அறிவித்தது.
 
1964 : மனித உரிமைகள் சட்டம் அமெரிக்க மேலவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 
1969 : பிரதமர் இந்திரா காந்தியின் ஆலோசனைப்படி 14 வங்கிகள் அரசுடமையாக்கப்பட்டது.
 
1987 : ஸ்பெயினில் சூப்பர் மார்க்கெட்டில் ETA விடுதலை அமைப்பு போராளிகள் நடத்திய குண்டு தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
 
1988 : போப் இரண்டாம் ஜான்பால் 117 வியட்நாமியத் தியாகிகளை புனிதர் ஆக்கினார்.
 
1991 : சென்னை, கோடம்பாக்கத்தில் தமிழ் ஈழப் புரட்சி விடுதலை முன்னணி தலைவர் பத்மநாபா, கிருபாகரன் உட்பட 14 பேர் விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 
1991 : ஹங்கேரியில் சோவியத் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.
 
2007 : பாக்தாத்தில் அல் - கிலானி பள்ளிவாசலில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 78 பேர் கொல்லப்பட்டனர்.
218 பேர் காயமடைந்தனர்.
 
2009 : வடமேற்கு பாகிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான
ரஹ்-இ-நிஜாத் ராணுவ நடவடிக்கை ஆரம்பமானது.
 
2012 : விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாங்கே லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் அடைந்தார்.
2019 ல் கைது செய்யப்படும் வரை அங்கேயே அவர் தங்கியிருந்தார்.
 
சில தகவல்கள்.
 
1.
குழந்தைகள் காது பிரச்சனையால் அடிக்கடி அவஸ்தைப்படுவார்கள். காதுகளில் ஏற்படும் தொற்றுகளுக்கு பூண்டு சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இதில் ஆன்டி-மைக்ரோபியல் தன்மைகள் ஏராளமாக உள்ளது. இந்த பூண்டு சாற்றினை குழந்தைகளின் காதுகளில் 2 துளி விட்டால் வலி குறைந்து நிவாரணம் கிடைக்கும்.
 
2.
உலகின் மிகப்பெரிய பதிப்பக நிறுவனமான ஹார்ப்பர் கோலின்ஸ், தனது இந்திய கிளைகளில் பணியாற்றுபவர்களுக்கு, செல்லப்பிராணிகளை பராமரிப்பதற்காக, சம்பளத்துடன் கூடிய விடுமுறையை (ஐந்து நாட்கள்) அனுமதித்துள்ளது. மேலும், நொய்டாவில் உள்ள அலுவலகத்தில் செல்லப்பிராணிகளை அழைத்து வர அனுமதிக்கப்பட்டுள்ளது.
 
3.
சீனாவின் சுன்யி நகரில் வசிக்கிறாள், தந்தையால் கைவிடப்பட்ட வாங் அண்ணா என்ற 5 வயது சிறுமி. தனது பாட்டி, கொள்ளு பாட்டியுடன் வசித்து வரும் இவள்,  அவர்களுக்கு சமைப்பது, ஊட்டிவிடுவது, வீட்டைச் சுத்தம் செய்வது, நடைபயிற்சிக்கு அழைத்து செல்வது போன்ற வேலைகளை செய்வது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
 
4.
இத்தாலி அருகே உள்ள உலகின் மிகச்சிறிய நாடாக தவோலாரா என்னும் தீவு உள்ளது. இங்கு வசிக்கும் மொத்த மக்கள் தொகையின் எண்ணிக்கையே வெறும் 11 தான் ஆகும். இத்தாலியால் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்ட இந்தத் தீவின் ஒட்டுமொத்த பரப்பளவு வெறும் 5 கிலோ மீட்டர் மட்டும்தான். இந்த குட்டி  தீவின் மன்னர் பெயர் எந்தோனியோ பர்த்லியோனி.
 
5.
புற்று நோயை குணப்படுத்தவும், அது மேலும் பரவாமல் தடுக்கவும் பலவிதமான மருந்துகள் உட்கொள்ளப்படுகின்றன. அதனால் உடல் உறுப்புகளுக்கு பக்க விளைவுகள் ஏற்படுமா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், அந்த மருந்துகள் இதயத்தின் திசுக்களை வலுப்படுத்தி அவை நல்ல முறையில் செயல்பட புத்துயிர் அளிப்பது தெரிய வந்துள்ளது. இதனால் ரத்த செல்கள் மற்றும் ரத்த ஓட்டத்தில் தடை உள்ளிட்ட பாதிப்புகள் நீங்கும். எனவே மாரடைப்பு, இதய நோய்கள் ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பு ஏற்படும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகவலை ஆய்வு மேற்கொண்ட டெக்காஸ் பல்கலைக்கழகத்தின் தென் மேற்கு மருத்துவ மைய மருந்து பிரிவு பேராசிரியர் லாரன்ஸ்லம் தெரிவித்துள்ளார்.

0 Response to "19/06/2021- சனி - வரலாற்றில் இன்று, சில தகவல்கள் "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel