19.06.2021 முக்கிய செய்திகள்

Trending

Breaking News
Loading...
 19.06.2021 முக்கிய செய்திகள்

 


*1️
🔷🔶அரசு மற்றும், அறிவியல், சமூகம், கல்வி நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் தங்களுக்கான திறனை மேலும் உயர்த்திக் கொள்ள கோவிட்-19 பெருந்தொற்று உதவியதாக பிரதமர் கூறியுள்ளார்.*
*2️🔷🔶மத்திய மாநில அரசுகள் எடுத்த முயற்சி காரணமாக மருத்துவ கட்டமைப்புகளை மிகப்பெரிய அளவில் மேம்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.*
 
*3️🔷🔶45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்த பின்பற்றப்படும் நடைமுறையே, 45 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் பின்பற்றப்படும் -பிரதமர்.*
 
*4️🔷🔶சுகாதாரத்துறையில் எதிர்காலத்தில் ஏற்படும் தேவைகளை நிறைவேற்றும் வகையிலும், மருத்துவம் அல்லாத பணியாளர்களின் திறனை மேம்படுத்தும் வகையிலும் இந்த பயிற்சி அமையும் என்று பிரதமர் கூறியுள்ளார்.*
 
*5️🔷🔶நாடு முழுவதும் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால், நாட்டின் பொருளாதாரம் தேக்க நிலையிலிருந்து மீண்டு வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.*
 
*6️🔷🔶தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு க ஸ்டாலின், அமெரிக்க இலினொய் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தலைவராக திரு.ராஜ கோபால் ஈச்சம்பாடி பொறுப்பேற்றதை முன்னிட்டு, வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி.*
 
*7️🔷🔶மூன்றாம் பாலினத்தவர் நல வாரியத்தில் பதிவு செய்யாதவர்களுக்கும் கோவிட்19 நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.*
 
*8️🔷🔶கோவிட்-19 நோய்த்தொற்று நாட்டில் மருத்துவ கட்டமைப்பை விரைவாக மேம்படுத்த உதவியதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.*
 
*9️🔷🔶கோவிட்-19 தொற்று முன்களப் பணியாளர்களுக்கான பயிற்சித் திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.*
 
*1️0️🔷🔶கோவிட்19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்கான பயிற்சித் திட்டத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றி வருகிறார்.*
 
*1️1️🔷🔶மதுரை அருள்மிகு மீனாக்ஷி அம்மன் திருக்கோவில் யானை பார்வதிக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் சிகிச்சை குறித்து மருத்துவ குழுவினர்களிடம் மாநில அமைச்சர்கள் திரு மூர்த்தி,திரு.பி கே சேகர் பாபு, & திரு பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கேட்டறிந்தனர்.*
 
*1️2️🔷🔶கள்ளக்குறிச்சி: நைனார்பாளையம் பகுதியிலுள்ள பாண்டியன் என்பவரின் பசுமாடு, அவரது கிணற்றில் விழுந்து விட்டது. உடனடியாக பொதுமக்கள் சின்னசேலம் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு பணி நிலைய அலுவலர் திரு சேகர் தலைமையில், குழுவினரால் பசு மாடு மீட்கப்பட்டது.*
 
*1️3️🔷🔶தூத்துக்குடி: தமிழகத்தில் #கோவிட்19 நோய் தொற்றால் 2,500 குழந்தைகள் தாய் அல்லது தந்தையை இழந்துள்ளனர். தொடர்ந்து தமிழகம் முழுவதும் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.*
 
*1️4️🔷🔶மதுரை: தியாகசீலர் கக்கன் அவர்களின் 112 வது பிறந்த நாளை முன்னிட்டு மேலூர் தும்பைபட்டியில் உள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு  வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் திரு. அனீஷ் சேகர், ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.*
 
*1️5️🔷🔶உத்யோக் ஆதார் திட்டம் டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.*
*கோவிட்19 பாதிப்பு காரணமாக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு,இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அத்துறைக்கான அமைச்சகம் கூறியுள்ளது.*
 
*1️6️🔷🔶பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் எரிசக்தித் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாக மத்திய மின்துறை இணையமைச்சர் திரு ஆர் கே சிங் தெரிவித்துள்ளார்.*
 
*1️7️🔷🔶சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் 73 டாலராக உள்ளது.*
 
*1️8️🔷🔶ஜம்மு காஷ்மீரை ஒட்டிய எல்லைப் பகுதியில் உள்ள கிராமத்தில்  ராணுவத்தினரின் உதவியுடன் கோவிட்19 க்கான தடுப்பு மருந்து முகாம் நடைபெற்றது.*
 
*1️9️🔷🔶பங்களாதேஷில் கோவிட்19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக செயல்பாட்டில் உள்ள கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.*
 
 
*2️0️🔷🔶சென்னை தாம்பரம் ரயில்வே பணிமனையில்  இன்று காலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது, தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் 45 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர்.*
 
 
*1️🔷🔶சென்னை டைட்டில் பார்க் அருகே மேம்பாலம் அமைக்கும் பணியை மாநில நெடுஞ்சாலை துறை அமைச்சர் திரு எ வ வேலு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.*
 
*2️🔷🔶கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஆம்ப்போடெரிசின்-பி உற்பத்தி இந்த மாதத்தில் 3 லட்சத்து 75 ஆயிரம் குப்பிகளாக உயர்த்தப்படும் என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.*
 
*3️🔷🔶நாட்டில் சென்னை உள்ளிட்ட 14 நகரங்களில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.*
 
*4️🔷🔶இணையதள நிதி மோசடிகள் குறித்து புகார் தெரிவிப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் தேசிய அளவிலான உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.*
 
*1 5 5 2 6 0 என்ற உதவி எண், ரிசர்வ் வங்கி பிற வணிக வங்கிகள், இணையதள பணப் பரிவர்த்தனை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் ஒத்துழைப்புடன் தொடங்கப்பட்டுள்ளது.*
 
*5️🔷🔶இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் அங்கிதா ரெய்னா –மெக்ஸிக்கோவின் ரெண்டா சர்வ இணை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.*
 
*6️🔷🔶டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கிப் போட்டியில் பங்கேற்பதற்காக 8 புதுமுகங்களுடன், 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.*
@TheHockeyIndia
 
 
*7️🔷🔶யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியில், இன்று நடைபெறவுள்ள ஆட்டங்களில் ஸ்வீடன் - ஸ்லோவாக்கியாவையும், குரோஷியா – செக் குடியரசையும், இங்கிலாந்து - ஸ்காட்லாந்தையும் எதிர்கொள்கின்றன.*
 
*8️🔷🔶சென்னை டைட்டில் பார்க் அருகே மேம்பாலம் அமைக்கும் பணியை மாநில நெடுஞ்சாலை துறை அமைச்சர் திரு எ வ வேலு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.*
 
*9️🔷🔶எந்தவொரு சழூக வலைதளத்தையும் தடை செய்யும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்றும், ஆனால் அரசின் நெறிமுறைகளை அவை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.*
 
*1️0️🔷🔶மோட்டார் வாகன ஆவணங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு.*
 
*1️1️🔷🔶தமிழகத்தில் 10 ஆண்டு காலத்திற்கு பின்னர், தற்போது மீண்டும் மின்வெட்டு ஏற்பட தொடங்கியுள்ளதாக அஇஅதிமுக குற்றம் சாட்டியுள்ளது.*
 
*1️2️🔷🔶நாட்டு மக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை வழங்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக பிஜேபி தெரிவித்துள்ளது.*
 
*1️3️🔷🔶நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒரு சில பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது* *-வானிலை ஆய்வு மையம்.*
 
 
*1️4️🔷🔶கோவிட்19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்கான பயிற்சித் திட்டத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.*
 
*1️5️🔷🔶கோவிட்19 பரவலை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் -மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன்.*
 
*1️6️🔷🔶நாடு முழுவதும் இதுவரை 32,000 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் ரயில்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.*
 
*இதில் தமிழகத்திற்கு மட்டும் 5,674 மெட்ரின் டன் ஆக்ஸிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது*
 
 
*1️7️🔷🔶கருப்பு பூஞ்சை சிகிச்சைக்காக 6,67,000 மருந்து, மாநில அரசுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது - மத்திய அரசு.*
 
*1️8️🔷🔶தமிழக அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகள் காரணமாக #கோவிட்19 பரவல் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது* *- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன்.*
 
*1️9️🔷🔶சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 50 சதவீதம் குறைக்கவேண்டும் என்ற இலக்கோடு மத்திய அரசு செயல்படுவதாக சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.*
 
 
   *2️0️🔷🔶மதுக்கடைகள் திறப்பால் குடும்ப வன்முறை அதிகரிக்கும் என்பதால் மதுபான கடைகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாட்டைக் காப்போம் அமைப்பு வலியுறுத்தியுள்ளது*
 
 
   *2️1️🔷🔶நடிகையிடம் குடும்பம் நடத்தி ஏமாற்றிய வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் நிலையில், மதுரையிலுள்ள அவரது வீட்டில் தனிப்படை போலீஸார் இன்று ஆய்வு செய்தனர். அவரது மனைவியிடம் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக அவரைப் பற்றி விசாரித்தனர்*
 

0 Response to " 19.06.2021 முக்கிய செய்திகள்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel