தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதிகரித்ததையடுத்து, ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டு பொதுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டன. அந்த வகையில், சென்னை மின்சார ரயில் சேவையும் குறைக்கப்பட்டு, புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டது.
இதனிடையே கொரோனா பரவல் குறையத் தொடங்கியதும்
தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, இன்று முதல்
கொரோனா பரவல் அதிகமாக உள்ள 11 மாவட்டங்களை தவிர இதர மாவட்டங்களில் அளிக்கப்பட்ட
தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்த நிலையில், சென்னை ரயில்வே
கோட்டமும், மின்சார
ரயில் சேவையை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 7ஆம் தேதி முதல் 208 ஆக இருந்த மின்சார
ரயில் சேவையின் எண்ணிக்கையை, 279 ஆக சென்னை ரயில்வே கோட்டம் அதிகரித்த நிலையில், தற்போது கூடுதலாக
ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல்
சென்னையில் 343 மின்சார
ரயில் சேவைகள் இயக்கப்படும். மேலும் வருகிற 20ஆம் தேதி முதல்
ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் 98 மின்சார ரயில் சேவைகளும் இயக்கப்படும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Response to "சென்னை மின்சார ரயில் சேவை: முக்கிய அறிவிப்பு!"
Post a Comment