கொரோனா தொற்று சூழலை
கருத்தில் கொண்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் மாணவர் சேர்க்கை நடத்த
அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், ஒவ்வொருநாளும் குறிப்பிட்ட மாணவர்களை அழைத்து சேர்க்கை
நடத்த அந்தந்த பள்ளிகள் திட்டமிட்டுள்ளன. முதலில் அந்தந்த பள்ளிகளில்
எஸ்.எஸ்.எல்.சி படித்தவர்களுக்கு அதே பள்ளியில் பிளஸ் 1மாணவர் சேர்க்கை
நடைபெற உள்ளது. அதன் பிறகு மற்ற பள்ளிகளில் இருந்து வருவோருக்கான சேர்க்கை நடைபெற
உள்ளது.
பிளஸ் 1 மாணவர் சேர்க்கை
முழுவதும் முடிந்தபிறகு பிற வகுப்புகளுக்கான சேர்க்கை நடைபெறும் என்று பள்ளி
நிர்வாகங்கள் அறிவித்துள்ளன. தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், எஸ்.எஸ்.எல்.சி
முடித்தவர்களுக்கு மாற்று ஏற்பாடாக அவர்களின் 9 ஆம் வகுப்பு
மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 2 மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இது குறித்து
சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:
தமிழகத்தில்
தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. 9 ஆம் வகுப்பு
மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
கொரோனா காலத்தில்
மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் விதிமுறைகளை மாணவர்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க
வேண்டும்
தற்போதைய நிலையில்
மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து பாடம் நடத்தும் நிலை குறித்து யோசிக்கவில்லை. கல்வி
தொலைக்காட்சி, வாட்ஸ் ஆப்
வழியாக மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வரும் முறை தொடரும்.
ஒரு வாரத்தில்
மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
10 ஆம் வகுப்பு
மதிப்பெண் சான்றிதழில் அனைவரும் தேர்ச்சி என்று இருக்கும். மதிப்பெண்கள்
இருக்காது.
தனியார் பள்ளிகள் 75 சதவீதம் மட்டுமே
கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும். அந்த 75 சதவீத
கட்டணத்தை 30 சதவீதம், 45 சதவீதம் என இரு
தவணைகளாக வசூலிக்க வேண்டும் என்று
அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்குமேல் ஏதேனும் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலித்தால்
எங்களுக்கு தகவல் தெரிவிக்கும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
தனியார் பள்ளி
ஆசிரியர்கள் பலர் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர் என்ற செய்தி அறிந்தோம்.
மிகவும் கடினமான சூழல் தான். இதுகுறித்தும் கலந்தாலோசித்து அவர்களுக்குத் தேவையான
உதவி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என
கூறினார்.
0 Response to "பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு இல்லை- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் "
Post a Comment