அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் மத அமைப்பு தேர்தல்களில் போட்டியிடக்கூடாது எனச் சுற்றறிக்கை அனுப்ப பள்ளிக் கல்வித்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Trending

Breaking News
Loading...
அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் மத அமைப்பு தேர்தல்களில் போட்டியிடக்கூடாது எனச் சுற்றறிக்கை அனுப்ப பள்ளிக் கல்வித்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

 


தூத்துக்குடி நாசரேத் சி.எஸ்.ஐ. பேராயம் தேர்தலிலும்
அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் போட்டியிடக்கூடாது என உத்தரவிட கோரிய வழக்கில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் தேர்தலில் போட்டியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
 
பள்ளி கல்வி துறை செயலாளர்,சி.எஸ்.ஐ. அமைப்பின் செயலாளர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற  மதுரை கிளை உத்தரவு.
 
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சகாயராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு, அதில், " தூத்துக்குடி நாசரேத் சி.எஸ்.ஐ. பேராயம் கீழ் அரசு உதவி பெறும் 21 உயர்நிலை பள்ளிகள், 6 உயர் பள்ளிகள், 70 நடுநிலை  பள்ளிகள் மற்றும் 241 துவக்கப் பள்ளிகள் மற்றும் சில கல்வி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றனர். இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அரசு மூலமாகவே ஊதியம் கொடுக்கப்படுகிறது.
 
 மேலும் அரசாங்கம் மூலம் ஊதியம் பெறும் பணியாளர்கள் சி.எஸ்.ஐ அல்லது சி.எஸ்.ஐ. பேராயம் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது. இவ்வாறு அனுமதித்தால், கூட்டமைப்பின் நிர்வாக பொறுப்பு முழுவதுமாக ஒருவரிடம் ஒப்படைக்க நேரிடும். இதையடுத்து மதுரை ராமநாதபுரம் பேராலயம்,தென்னிந்திய திருச்சபை கூட்டமைப்பின் கீழ் நடத்தப்படும் தேர்தலில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத  பணியாளர்கள் தேவாலய தேர்தலில் போட்டியிடுவதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும்  தூத்துக்குடி நாசரேத்
 
சி.எஸ்.ஐ. பேராயம் கீழ் இயங்கும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றுவோர் தேர்தலில் போட்டியிடுவது ஏற்கத்தக்கதல்ல. எனவே தூத்துக்குடி நாசரேத்
 
சி.எஸ்.ஐ. பேராயம்  நிர்வாக தேர்தலில் அதன் கீழ் இயங்கும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர், தேர்தலில் போட்டியிடுவதற்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் ,மேலும் தேர்தலை நடத்துவதற்கு நீதிமன்றம் ஆணையரை அமைத்து முறையாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் கூறியிருந்தார்.
 
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது மனு தாரர் தரப்பு வழக்கறிஞர் ,  தூத்துக்குடி நாசரேத் சி.எஸ்.ஐ. பேராயம்  தேர்தலில், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் போட்டியிடக்கூடாது என்ற உத்தரவுடன் வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே தூத்துக்குடி நாசரேத் சி.எஸ்.ஐ. பேராயம் தேர்தலிலும்,  அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் போட்டியிடக்கூடாது என உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
 
அப்போது நீதிபதிகள்,அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் மத அமைப்பிலான தேர்தல்களில் போட்டியிடக்கூடாது என  பள்ளிகல்விதுறை சுற்றிக்கை அனுப்ப உத்தரவிட்டு. தூத்துக்குடி நாசரேத் சி.எஸ்.ஐ. பேராயம்  நிர்வாக தேர்தலில்,அதன் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் தேர்தலில் போட்டியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து. தொடர்ந்து மனு தாரரின் கோரிக்கை குறித்து பள்ளி கல்வி துறை செயலாளர்,சி.எஸ்.ஐ. அமைப்பின் செயலாளர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜூலை 7 ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

0 Response to "அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் மத அமைப்பு தேர்தல்களில் போட்டியிடக்கூடாது எனச் சுற்றறிக்கை அனுப்ப பள்ளிக் கல்வித்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel