கொரோனா நோய் காரணமாக குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் இறந்திருப்பின் NSFDC நிறுவனத்தில் ASHA திட்டத்தின் கீழ் கடன் தொகை வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் வெளியிட்டுள்ள வரைவு வழிகாட்டுதல்கள்

Trending

Breaking News
Loading...

ஆதிதிராவிடர் மக்கள், கொரோனா தொற்று பாதிப்புள்ளாகி குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் இறந்தருப்பின் அவர்களின் குடும்பம் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் NSFDC நிறுவனத்தால் ASHA என்ற திரும்ப செலுத்தும் கடன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் மற்றும் அத்திட்டத்திற்காக வரைவு வழிகாட்டுதலில் (Draft Guidelines) பார்வையில் காணும் மின்னஞ்சல் வழியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் கீழ்க்கண்டவாறு.

1. பயனாளிகள் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். 2. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

3. குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய இறந்தவர்களின் வயது 18 முதல் 60 க்குள் இருக்க வேண்டும். 4. இத்திட்டத்தில் அதிகபட்சமாக திட்டத்தொகை ரூ.5.00 இலட்சம் வரை இருக்கலாம்.

5. திட்டத்தொகை 80 சதவீதம் (அல்லது) அதிகப்பட்சமாக ரூ.4.00 இலட்சம் வரை கடன்

NSFDC நிறுவனத்தால் வழங்கப்படும். 6. மீதமுள்ள 20 சதவீதம் (அல்லது) ரூ.1.00 இலட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

7. இக்கடனுக்கு ஆண்டு 6.5 சதவீதம் என்ற வட்டி விகிதத்தில் கடனை 6 ஆண்டுகளுக்கு திரும்ப செலுத்தலாம்.

8. குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடியவர் கொரோனா தொற்றினால்தான் இறந்துள்ளார் என ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும். ( ASHA திட்டத்தின் வழிமுறைகளில் வ.எண் 4ல் தெரிவிக்கப்பட்டுள்ளது).

மேற்கூறிப்பிட்ட வரிசை எண்.1,2,3,8 ஆகியவைக்கு சம்மந்தமாக சான்றுகள். சாதி சான்று, வருமான சான்று, இறப்பு சான்று மற்றும் ஆதார் ஆகியவை பெற்று தங்கள் அலுவலகத்தில் வைத்துக்கொள்ளும்படியும், இவ்வலுவலம் மூலம் கேட்கப்படும்போது வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ASHA Schemes செயல்முறைகளைப் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 👇👇👇

                         Click Here Download Proceedings 

0 Response to "கொரோனா நோய் காரணமாக குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் இறந்திருப்பின் NSFDC நிறுவனத்தில் ASHA திட்டத்தின் கீழ் கடன் தொகை வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் வெளியிட்டுள்ள வரைவு வழிகாட்டுதல்கள்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel