
தினசரி
பாதிப்பு:
கொரோனா தொற்றின் 2ம் அலை தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் முதல்
படிப்படியாக குறையத் தொடங்கியது. இதனால் தமிழக அரசு மாநிலம் முழுவதும்
விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியது. இதனால் தமிழகத்தில் மெல்ல இயல்பு
நிலை திரும்பி வருகிறது. இருப்பினும், தொற்று பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில்
மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழக
சுகாதாரத்துறை தமிழகத்தின் தினசரி கொரோனா பாதிப்பு குறித்து அறிக்கை
வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1551 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு
உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை 26,10,299 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 21 பேர் தொற்று பாதிப்பினால்
உயிரிழந்துள்ளனர். 26 மாவட்டங்களில் புதிய உயிரிழப்புகள் ஏதும் இல்லை.
இதனால் மாநிலத்தின் மொத்த பலி 34,856 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில்
மாநிலம் முழுவதும் 1768 பேர் தொற்று பதிப்பில் இருந்து குணடமடைந்து வீடு
திரும்பியுள்ளனர்.
இதனால் இதுவரை குணமடைந்தவர்களின்
எண்ணிக்கை மொத்தம் 25,57,884 ஆக உள்ளது. மேலும், தற்போது தமிழகம் முழுவதும் 17,559
பேர்
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,63,230
மாதிரிகள் கொரோனா
பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 4,18,53,989 மாதிரிகள் கொரோனா பரிசோதனை
செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 182 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் இதுவரை சென்னையில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 5,43,599
ஆக
அதிகரித்துள்ளது.
0 Response to "தமிழகத்தில் இன்று 1551 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி – சுகாதாரத்துறை அறிவிப்பு!"
Post a Comment