
முதலமைச்சரின்
அறிவுறுத்தலின்படி திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த படித்த
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது.
வேலைவாய்ப்பு
முகாம் :
தமிழகத்தில்
தற்போதைய இளைஞர்களுக்கு வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. படித்த
பட்டதாரி இளைஞர்கள் பலர் வேலை தேடி தங்கள் வாழ் நாளை கழித்து வருகின்றனர். கொரோனா
காலம் என்பதால் வேலை கிடைப்பது பெரும் பாடாக உள்ளது. தி.மு.க. தலைவர்
மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக
பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இளைஞர்கள் பலர்
பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், முதல் அமைச்சரின் அறிவுறுத்தலின்படியும், தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் ,திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.,வுமான உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும், திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் திருப்பூரில் நாளை (29-ந்தேதி) வேலை வாய்ப்பு முகாம் நடைபெற
உள்ளது என கூறப்படுகிறது. இந்த முகாமில் திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார
பகுதிகளை சேர்ந்த ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, இன்ஜினியரிங் படித்த பட்டதாரிகள் பங்கேற்க தகுதியுடையவர்கள்.
7 பெரிய தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடு
நடைபெற உள்ள இந்த வேலை வாய்ப்பு முகாம் திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள
காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது. இளைஞர்கள் காலை 9 மணி முதல் கலந்து கொள்ளலாம் என
கூறப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகமானது படித்து முடித்து வேலை இன்றி
தவிக்கும் பலருக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Response to "திருப்பூரில் ஆகஸ்ட் 29ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – பட்டதாரிகள் கவனத்திற்கு!"
Post a Comment