
செப்டம்பர்
1 ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
அதனை தொடர்ந்து பள்ளிகளில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.
வாகன சோதனை:
கொரோனா
தாக்கம் தமிழகம் முழுவதும் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனை தொடர்ந்து
பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள்
திறக்க இருப்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழக அரசு பள்ளிகள் திறப்பது குறித்து பல்வேறு நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதனை
தொடர்ந்து ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து பள்ளி வாகனங்களின் நிலை சரியாக உள்ளதா என
அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ராசிபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை
நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன் தலைமையில், வருவாய்த் துறையினா், வட்டாரப் போக்குவரத்து
துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது, மின் விளக்குகள், வேகக் கட்டுப்பாட்டுக்
கருவிகள் உள்ளனவா என்பன குறித்து ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளின் பாதுகாப்பு
உறுதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு சான்றளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆட்டத்தில் 32 பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டது தொடர்ந்து 7 வாகனங்களில் அவசரகால வழி, நடைபாதை பலகை, படிக்கட்டு, முதலுதவிப் பெட்டி
மருந்துகள், தீயணைக்கும் கருவிகள், ஓட்டுநர் தடுப்பு போன்றவற்றில் உள்ள குறைபாடுகள் கண்டறியப்பட்டன.
அதை சரி செய்து மீண்டும் ஆய்வுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது. பள்ளிகள் திறப்பு
குறித்து பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து வாகன பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது
குறிப்பிடத்தக்கது.
0 Response to "தமிழகத்தில் செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு – வாகனங்கள் ஆய்வு, ஏற்பாடுகள் தீவிரம்!"
Post a Comment