வேளாங்கண்ணி ஆலய திருவிழா – ஆகஸ்ட் 27ம் தேதி கொடியேற்றம்!

Trending

Breaking News
Loading...
வேளாங்கண்ணி ஆலய திருவிழா – ஆகஸ்ட் 27ம் தேதி கொடியேற்றம்!


நாகை மாவட்டத்தில் புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி திருவிழா ஆகஸ்ட்
27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. திருவிழா நிகழ்ச்சிகள் பேராலய இணையதளத்தில் ஒளிபரப்பப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வேளாங்கண்ணி திருவிழா:

 

நாகை மாவட்டத்தில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி கோயில் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவில் பங்கேற்க தமிழகத்தில் அனைத்து பகுதிகள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருகை புரிவர். 10 நாட்கள் தொடர்ந்து திருவிழா பக்தர்கள் ஆரவாரத்துடன் விமர்சையாக கொண்டாடப்படும். அதே போல நடப்பு ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. நடப்பு ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக பக்தர்கள் வருகை மறுக்கப்பட்டுள்ளது.

 

ஆகஸ்ட் 27 ஆம் தேதி தொடங்கவுள்ள இத்திருவிழா செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கு மாலை 4.30 மணிக்கு அன்னையின் புனித கொடி பவனி, தேர்பவனி பேராலய வளாகத்தில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கொடியை ஏற்ற உள்ளார். கொடியேற்றத்தை தொடர்ந்து செப்டம்பர் 7ம் தேதி தேர் பவனியும், 8ம் தேதி அன்னை பிறந்தநாள் விழாவும் நடைபெறும்.

 

மேலும் தொடர்ந்து 10 திருவிழா நாட்களில் காலை 6 மணிக்கு தமிழில் சிறப்பு திருப்பலி நடைபெறும். இந்த ஆண்டு யோசேப்பு ஆண்டாக இருப்பதால் யோசேப்பு மற்றும் ஆரோக்கிய அன்னை ஆகியோரை மையப்படுத்திய சிறப்பு மறையுரை வழங்கப்படும். வேளாங்கண்ணி நிகழ்ச்சிகள் அனைத்தும் பேராலய இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். செப்டம்பர் 8ம் தேதி கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

 

0 Response to "வேளாங்கண்ணி ஆலய திருவிழா – ஆகஸ்ட் 27ம் தேதி கொடியேற்றம்!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel