தமிழகத்தில் டெல்டா வகை வைரஸ் பரவல் தீவிரம் – சுகாதாரத்துறை தகவல்!

Trending

Breaking News
Loading...

தமிழகத்தில் டெல்டா வகை வைரஸ் பரவல் தீவிரம் – சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில் டெல்டா வகை வைரஸ் பரவல் தீவிரம் – சுகாதாரத்துறை தகவல்!


தமிழகத்தில் டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்றால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

டெல்டா பிளஸ்:

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தபட்டு உள்ளது. கொரோனா தொற்று அதிகரிக்கும் மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கடைகள் இயங்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் கட்டுப்பாட்டு மண்டலங்கள் அதிகரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் பரவி வரும் வைரஸ் டெல்டா வகை வைரஸ் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் அதிகமானோர் டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா வகைகளை கண்டறியும் மரபணு ஆய்வகம் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் சோதனை அடிப்படையில் பணிகள் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் எடுக்கப்பட்ட மாதிரிகளில் 80% பேர் டெல்டா வகை பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில வாரங்களாக 100% டெல்டா வகை வைரசால் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை செயலர் தெரிவித்துள்ளார். டெல்டா வைரஸ் தொற்றுக்கான மருத்துவ முறைகள் தமிழக மருத்துவமனையில் உள்ளது. பண்டிகைகள் அதிகம் வரவுள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொரோனாவை தடுக்க மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்த்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

0 Response to "தமிழகத்தில் டெல்டா வகை வைரஸ் பரவல் தீவிரம் – சுகாதாரத்துறை தகவல்!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel