
வருமானவரி தாக்கல்
செய்வதற்கான அவகாசம் செப்டம்பர் 30ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும், கூடுதலாக அவகாசம் அளிக்கப்பட வேண்டும்
என்று பல தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.
கூடுதல்
அவகாசம்:
இந்திய அரசின் வருமானவரி சட்டம் 1961-ன் படி, 15 CA,15 CB படிவங்களை மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டும். தற்போது நாடு முழுவதும் உள்ள வரி செலுத்துவோர், வெளிநாட்டு பணம் பெற்றிருந்தால், 15 CA படிவத்தை, பட்டய கணக்காளர் சான்றிதழுடன் அங்கீகரிக்கப்பட்ட டீலரிடம் நகலை தாக்கல் செய்வதற்கு முன்பாக, மின்னணு தாக்கல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்காக வருமான வரித்துறை புதிய இணையதளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த
இணையதளத்தில் படிவங்களை தாக்கல் செய்ய சில சிக்கல்கள் ஏற்பட்டது. இது குறித்து
வருமான வரித்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே 15
CA, 15 CB படிவங்களை
தாக்கல் செய்ய செப்டம்பர் 30 கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கணக்கை தாக்கல் செய்வதற்கான புதிய
இணையதளத்தில் பிரச்னைகள் இன்னும் சரிசெய்யப்படவில்லை. ஆகஸ்ட் 21 மற்றும் 22ம் தேதிகளில் வருமானவரித்துறையின்
இணையதளம் முற்றிலுமாக செயல்படவில்லை. இதனால் வருமான வரி தாக்கல் செய்வதற்கான
காலஅவகாசத்தை மேலும் நீடிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது.
இந்நிலையில், வருமான வரித்துறையின் அதிகாரி ஒருவர்
இணையதள பிரச்னைகள் அனைத்தும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் தீர்க்கப்பட்டு விட
வேண்டும் என, ‘இன்போசிஸ்’ நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால்
தனிநபர்களுக்கு கணக்கு தாக்கல் செய்ய 15 நாட்கள் அவகாசம் மட்டுமே கிடைக்கும்.
இதற்குள் அனைவரும் தாக்கல் செய்வது கடினம் என்பதால், கால அவகாசத்தை நீட்டிக்கும் கோரிக்கை பல
முனைகளிலிருந்தும் வந்துகொண்டிருக்கின்றது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டிலும்
வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படும் என்று
அனைவரும் எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளார்.
0 Response to "வருமான வரி தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் அளிக்கப்படுமா? – அதிகாரியின் தகவல்!"
Post a Comment