எழுத்து - இலக்கணம்

Trending

Breaking News
Loading...

எழுத்து - இலக்கணம்

எழுத்து - இலக்கணம்

 

எழுத்து இலக்கணத்தில், எழுத்துகளின் வகைகள், அவை ஒலிக்கும் கால அளவு, எழுத்துகள் பிறக்கும் முறை ஆகியனவும் சந்தி இலக்கணமும் இடம்பெற்றுள்ளன. சந்தி இலக்கணம் என்பது இரண்டு சொற்கள் சேரும்போது முதல் சொல்லின் கடைசி எழுத்திலும் இரண்டாம் சொல்லின் முதல் எழுத்திலும் ஏற்படும் மாற்றங்களைச் சொல்லுவது ஆகும். தமிழ் இலக்கண நூல்களில் எழுத்து (letter) என்ற சொல் வழங்கும் ஒலிகளைக் குறிக்கவும், அவ்வொலிகளுக்குரிய வரிவடிவத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் “அ“ என்ற எழுத்து ஒலிவடிவம், வரிவடிவம் இரண்டையும் குறித்து நிற்கின்றது.

முதலெழுத்து, சார்பு எழுத்து  என்பன மொழியில் எழுத்து தனித்தன்மை, சார்புத்தன்மை குறித்த பாகுபாடுகள். உயிரெழுத்து, மெய்யெழுத்து என்பன அவற்றின் இயங்கு-தன்மை குறித்த பாடுபாடு. மெய் தனித்து இயங்காது. குறில், நெடில் என்பன எழுத்துகள் ஒலிக்கும் கால அளவு பற்றியவை. வல்லினம், மெல்லினம், இடையினம் என்பன எழுத்தின் பிறப்பிடத்தால் ஒலிப்பில் தோன்றும் வன்மை, மென்மை, இடைமை பற்றியவை.

சுட்டு, வினா என்பன மொழியிடை வரும் இடைச்சொல்லாகிப் பொருள் உணர்த்தும் எழுத்துகள். தனிநிலையில் இவை பொருள் உணர்த்துவது இல்லை. மயங்கும் எழுத்துகள், மயங்கா எழுத்துகள் என்பவை நாவால் ஒலிக்கமுடியும் எழுத்துகளையும், ஒலிக்கமுடியாத எழுத்துக்களையும் குறிப்பன.

மொழிமுதல் எழுத்துகள் என்பவை மொழியில் முதல் எழுத்தாக வருபவை

மொழியிறுதி எழுத்துகள் என்பவை மொழியின் இறுதியில் வருபவை.

எழுத்து என்பது ஒரு மொழியின் அடிப்படை கூறு ஆகும். மொழிக்கு  நிலைபேறு அளிப்பது எழுத்தாகும். ஒலி வடிவத்திற்கு வரிவடிவம் கொடுப்பது எழுத்து என்பர். எழுதப்படுவதனால் எழுத்து எனப் பெயர் பெற்றது. 

தமிழ் மொழி என்பது செம்மொழியாகவும் பண்டைகாலம் தொட்டே சிறந்த இலக்கண, இலக்கியங்கள் பெற்ற மொழியாகவும் உள்ளது. அவ்வாறான தமிழ் எழுத்துக்கள் படிப்படியாக சில மாறுதல்களைப் பெற்றே இன்றைய எழுத்து மொழியாக உருவம் பெற்றிருக்கின்றன.

எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதல், ஈறு, இடைநிலை, போலி, பதம், புணர்ப்பு போன்ற பன்னிரண்டு பகுதிகளையும் எடுத்துரைப்பது எழுத்து இலக்கணம் ஆகும். எழுத்து - மொழிக்கு ஒலிவடிவம், வரிவடிவம் ஆகிய இரண்டையும் கொடுக்கிறது. ஒலி வடிவம் என்பது ஒரு எழுத்தை உச்சரிக்கும்போது எழும் ஒலியைக் குறிக்கின்றது. வரி வடிவம் என்பது எழுத்தின் வடிவத்தைக் குறிக்கின்றது. எழுத்திலக்கணம் இரு வகைப்படும். அவை, தமிழ் மொழியில் எழுத்து இலக்கணம் மிகவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. எழுத்து இலக்கணத்தில், எழுத்தின் வகைகள், பத இலக்கணம், சந்தி இலக்கணம் ஆகியன முக்கியப் பகுதிகள் ஆகும்.

 

1.முதலெழுத்துகள்

 

மொழிக்கு அடிப்படைக் காரணமாக இருக்கும் உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள் ஆகியவை முதல் எழுத்துகள் என்று கூறப்படும்.

தமிழ் எழுத்துகள் முதலெழுத்து, சார்பெழுத்து என இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அ முதல் ஔ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், ‘க் முதல் ‘ன் வரையுள்ள 18 மெய்யெழுத்துகளும் ஆகிய முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும்.

 

"எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப" - தொல்காப்பியம்

"உயிரும் உடம்புமாம் முப்பது முதலே" - நன்னூல்

, , , , , , , , , , , ஒள என்ற பன்னிரண்டு எழுத்துகளும் உயிர் எழுத்துகள் ஆகும். இவை தமிழ் மொழிக்கு உயிர் போன்ற எழுத்துகள் ஆகும்.

க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்ற பதினெட்டு எழுத்துகள் மெய் எழுத்துகள் ஆகும். இவை தமிழ் மொழிக்கு மெய் (உடல்) போன்ற எழுத்துகள் ஆகும்.

பன்னிரண்டு உயிர் எழுத்துகளும், பதினெட்டு உடல் (மெய்) எழுத்துகளும் சேர்ந்து மொத்தம் 30 எழுத்துகளும் தமிழ் மொழியின் முதல் எழுத்துகள் எனப்படுகின்றன.

 

. உயிரெழுத்துகள்

உயிரெழுத்துகள் குறில், நெடில் என இரண்டு வகைப்படும்.

உயிரெழுத்துகளில் குறுகிய ஒலிப்புக் கால அளவு அதாவது ஒரு மாத்திரை அளவு மட்டுமே கொண்டிருக்கும் அ, , , , ஒஎன்னும் ஐந்தும் இவை முறையே 18 மெய்யெழுத்துகளுடன் புணர்வதால் உருவாகும் உயிர்மெய்யெழுத்துகளும் குறில் எழுத்துகள் அல்லது குற்றெழுத்துகள் என வழங்கப்படுகின்றன.

உயிரெழுத்துகளில் நெடிய ஒலிப்புக் கால அளவு அதாவது இரண்டு மாத்திரை அளவு மட்டுமே கொண்டிருக்கும் ஆ, , , , , , ஒள என்னும் ஏழும் இவை முறையே 18 மெய்யெழுத்துகளுடன் புணர்வதால் உருவாகும் உயிர்மெய்யெழுத்துக்களும் நெடில் எழுத்துகள் அல்லது நெட்டெழுத்துகள் என வழங்கப்படுகின்றன.

 

. மெய்யெழுத்துகள்

 

க் தொடக்கம் ன் வரையுள்ள (க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்) 18 எழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் எனப்படுகின்றன. இவை வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று பிரிவுகளாக உள்ளன. வல்லொலிகளைக் கொண்ட மெய்யெழுத்துகள் வல்லினத்தையும், மெல்லொலிகளைக் கொண்டவை மெல்லினத்தையும் ஏனையவை இடையினத்தையும் சார்ந்தவை.

வன்கண எழுத்துகள்

க், ச், ட், த், ப், ற் எனும் ஆறு எழுத்துக்களும் வல்லின எழுத்துக்களாகும். இவை வலிய ஓசையுடையவை. இவ்வெழுத்துக்கள் வலி எழுத்துக்கள், வன்கண எழுத்துகள் எனவும் கூறப்படும்.

இவ்வெழுத்துகளைச் சொல்லும் பொழுது வயிற்றுள் இருந்து வலிமையாக காற்று மேலே வரும். எனவே இவை வல்லின எழுத்துகள் ஆகும். கசடதபற என இலகுவில் நினைவில் நிறுத்திக்கொள்ளலாம்.

மென்கண எழுத்துகள்

ங், ஞ், ண், ந், ம், ன்  எனும் ஆறு எழுத்துக்களும் மெல்லின எழுத்துக்களாகும். இவை மென்மையான ஓசையுடையவை. இவ்வெழுத்துக்கள் மெலி எழுத்துக்கள், மென்கண எழுத்துகள் எனவும் கூறப்படும்.

இவ்வெழுத்துகளைச் சொல்ல மென்மையான முயற்சி போதும். எனவே இந்த மென்மையான எழுத்துகள் மெல்லின எழுத்துகள் எனப்படுகின்றன. ஙஞணநமன என இலகுவில் நினைவில் நிறுத்திக்கொள்ளலாம்.

இடையின எழுத்துகள்

ய், ர், ல், வ், ழ், ள்  எனும் ஆறு எழுத்துக்களும் இடையின எழுத்துக்களாகும். இவை இடைப்பட்ட ஓசையுடையவை. இவ்வெழுத்துகளைச் சொல்ல மென்மையும், வன்மையும் இல்லாமல் இடைப்பட்ட முயற்சி தேவைப்படுகிறது. எனவே இவை இடையின எழுத்துகள் எனப்படுகின்றன. யரலவழள என இலகுவில் நினைவில் நிறுத்திக்கொள்ளலாம்.

மெய் எழுத்துகள் உயிர்க்குறில் எழுத்துகளைவிடக் குறைவான நேரத்தில் ஒலிக்கப்படுகின்றன.

இவற்றின் (மெய் எழுத்து) ஒலிப்புநேரம் 1/2 மாத்திரை ஆகும். மாத்திரை என்றால் ஒரு கை நொடி அளவு (அதாவது கட்டை விரலையும் நடுவிரலையும் சேர்த்துச் சுண்டும் அளவு) அல்லது கண்ணிமை அளவு எனக் கணக்கிடப்படுகின்றது.

 

கண் இமை நொடி என அவ்வே மாத்திரை

நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே. -தொல்காப்பியம் - எழுத்ததிகாரம்

 

குறில் எழுத்துகள்     - 1 மாத்திரை  (அ, , , சி, து)

நெடில் எழுத்துகள்     - 2 மாத்திரை (ஆ, கா, சா, சீ, தூ)

மெய் எழுத்துகள்     - 1/2 மாத்திரை  (க், ங், ச், ஞ், ன்)

ஆய்த எழுத்து          - 1/2 மாத்திரை (ஃ)

 

2. சார்பெழுத்துகள்

மொழியை எழுதப் பயன்படுவது எழுத்து. இந்த எழுத்துகளால் எழுதப்பட்ட மொழியில் குறிப்பிட்ட சில எழுத்துகள் மொழியில் சார்ந்திருக்கும் இடத்தால் ஒலிக்கும் மாத்திரை குன்றும். செய்யுளில் மாத்திரை குன்றும் இடங்களில் சில எழுத்துகள் கூட்டியும் எழுதப்படும்.

இப்படிச் சார்பால் தன் இயல்புத்தன்மை மாறும் எழுத்துகளை முன்னோர் சார்பெழுத்து என்றனர். இப்படிச் சார்பெழுத்து என்னும் பாகுபாட்டைத் தொல்காப்பியர் குறிப்பிட்டுவிட்டதால் நன்னூல் சார்பல்லா எழுத்துகளை முதலெழுத்து எனக் குறிப்பிட்டுத் தெளிவுபடுத்தியது. நன்னூல் சார்பழுத்துகள் 10 வகை எனக் காட்டுகிறது.

முதல் எழுத்துகளைச் சார்ந்து வருபவை சார்பு எழுத்துகள் எனப்படுகின்றன.

(1) உயிர்மெய்

(2) ஆய்தம்

(3) உயிரளபெடை

(4) ஒற்றளபெடை

(5) குற்றியலுகரம்

(6) குற்றியலிகரம்

(7) ஐகாரக் குறுக்கம்

(8) ஒளகாரக் குறுக்கம்

(9) மகரக் குறுக்கம்

(10) ஆய்தக் குறுக்கம்

ஆகிய பத்தும் சார்பு எழுத்துகள் ஆகும்.

எழுத்துகள் ஒலிக்கும் நேரத்தை மாத்திரை என்று கூறுவர். எந்த எந்த எழுத்துகள் எவ்வளவு நேரம் ஒலிக்கும் என்பதைத் தெளிவாக வரையறுத்து இலக்கண நூல்கள் கூறுகின்றன.

மற்ற உயிரினங்களிலிருந்து மனிதனைப் பிரித்துக் காட்டுவது மொழி. மொழி, சொற்களால் உருவாகிறது. சொல், எழுத்துகளின் சேர்க்கை. எழுத்தின் அடிப்படை ஒலி. மனித உடலில் இருந்து ஒலி எப்படித் தோன்றுகிறது என்பதைத் தமிழ் இலக்கண நூல்கள் விளக்குகின்றன. மொழியின் அடிப்படை ஒலி என்பதால் ஒவ்வோர் எழுத்தும் எப்படிப் பிறக்கின்றன என்பது பற்றியும் இலக்கண நூல்களில் கூறப்பட்டுள்ளது. மூக்கு, உதடு, பல், நாக்கு, அண்ணம் ஆகிய உறுப்புகளின் செயல்பாட்டால் உயிர் எழுத்துகளும், மெய் எழுத்துகளும் எவ்வாறு தோன்றுகின்றன என்று இலக்கண நூல்கள் துல்லியமாகக் கூறுகின்றன.

தமிழில் எல்லா எழுத்துகளும் சொல்லுக்கு முதலில் வருவதில்லை. சொல்லின் முதல் எழுத்தாக வரக்கூடிய எழுத்துகள் இவை என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. அதுபோலவே சொல்லுக்கு இறுதியில் வரக்கூடிய எழுத்துகள் பற்றியும் வரையறை செய்யப்பட்டுள்ளது. சொல்லுக்கு இடையில் ஒரு மெய் எழுத்துக்கு அடுத்து எந்த மெய் எழுத்து வரும் என்ற வரையறையும் தரப்பட்டுள்ளது.

 

1.உயிர்மெய்

மெய்யெழுத்துகளுடன் உயிர் எழுத்துகள் சேர்வதால் உண்டாகும் எழுத்துகளே உயிர்மெய் எழுத்துகள் ஆகும். உயிர்மெய் எழுத்துகளை இரு வகையாகப் பிரிக்கலாம். அவை குறில்,நெடில் ஆகியனவாகும்.

18 (மெய் எழுத்துகள்) x 12 (உயிர் எழுத்துகள்)=216 (உயிர்மெய் எழுத்துகள் )

(எ.கா.) : க்+அ=க

, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ

, சா, சி, சீ, சு, சூ, செ, சே, சை, சொ, சோ ,சௌ

 

புள்ளி விட்டு அவ்வொடு முன் உரு ஆகியும்

ஏனை உயிரொடு உருவு திரிந்தும்

உயிர் அளபாய் அதன் வடிவு ஒழித்து இருவயின்

பெயரொடும் ஒற்று முன்னாய் வரும் உயிர் மெய் (நன்னூல் 89)

2.ஆய்தம்

ஆய்த எழுத்து என்பது தமிழ் கற்றலுக்கான, முதன்மைக் குறியீடு ஆகும். இது ஃ என்றவாறு மூன்று புள்ளி வடிவமாக இருக்கும். இதற்கு அஃகேணம், தனிநிலை, புள்ளி, ஒற்று என்னும் வேறு பெயர்களும் உண்டு.  இதனை அஃகு என்று கூறுவர். ஃ என்ற இந்த எழுத்து ‘அ என்ற உயிர் எழுத்தையும் ‘கு என்ற உயிர்மெய் எழுத்தையும் சேர்த்தே ஒலிக்கப்படும்.     உயிர் எழுத்தை முதலாகவும், வல்லின உயிர்மெய் எழுத்தை இறுதியாகவும் கொண்டு இது இடையில் வரும். தனித்து வராது. எனவே இது சார்பெழுத்து எனப்படுகிறது.

(எ.கா.)

அஃது - '' குறில். 'து' வல்லின உயிர்மெய்

இஃது - '' குறில். 'து' வல்லின உயிர்மெய்

 

குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி

உயிரொடு புணர்ந்த வல் ஆறன் மிசைத்தே (நன்னூல் 90)

அளபெடை

பழங்காலத்தில் தமிழ் மொழியில் இலக்கியங்கள் பெரும்பாலும் செய்யுள்களாகவே இருந்தன. செய்யுள், ஓசையை அடிப்படையாகக் கொண்டது. குறள் வெண்பா முதல் பல வகையான செய்யுள் வடிவங்கள் இருந்தன. செய்யுளில் ஓசைகுறையும் இடங்களில் ஓசையை நிறைவு செய்வதற்காக எழுத்துகள் நீண்டு ஒலிக்கும். இவ்வாறு நீண்டு ஒலிப்பதை, அளபெடுத்தல் என்று கூறுவர். அளபெடை இரண்டு வகைப்படும். அவை, உயிரளபெடை, ஒற்றளபெடை

 

3.உயிரளபெடை

உயிர் + அளபெடை = உயிரளபெடை

உயிரெழுத்துகளில் நெட்டெழுத்துகள் (ஆ, , , , , , ஒள) ஏழும் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிப்பதற்கு உயிரளபெடை எனறு பெயர். மொழி முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களிலும் உயிர்நெடில் அளபெடுக்கும்.

நெடில்எழுத்து இரண்டு மாத்திரை. அளபெடுக்கும்போது அதற்கு இனமான குறில் எழுத்தையும் எழுதுவதால், குறிலுக்கு உரிய ஒரு மாத்திரையும் சேர்த்து உயிரளபெடை மூன்று மாத்திரை நேரம் ஒலிக்கும்.

 

இன எழுத்துகள் ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஒளஉ என்பனவாகும், ஐகாரத்திற்கும் ஒளகாரத்திற்கும் இணையான குறில்இல்லை என்பதால், முறையே இகரம், உகரம் ஆகியவை அடையாளமாக எழுதப்படும்.

(எ.கா.)

  1. ஓஒதல் வேண்டும் - முதல்
  2. கெடுப்பதூஉம் கெட்டார்க்கு - இடை
  3. நல்ல படாஅ பறை - கடை

 

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் உயிர்நெடில் அளபெடுத்துள்ளதை காணலாம்.

இதில் செய்யுளிசை அளபெடை, இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை என மூன்று வகைகள் உள்ளன.

 

  1. சொல்லிசை அளபெடை

 

ஒரு பெயர்ச் சொல்லை வினை எச்சமாக மாற்றுவது சொல்லிசை அளபெடை எனப்படும்.

நசை என்பது விருப்பம் என்று பொருள்படும்.  அதையே

நசைஇ என்று அளபெடை ஆக்கினால், விரும்பி என்றுபொருள் தரும். இதுவே சொல்லிசை அளபெடை ஆகும்

 

தொகை    தொகைஇ (தொகுத்து)

வளை     வளைஇ (வளைத்து)

 

  1. இன்னிசை அளபெடை

 

செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசை தருவதற்காக குறில் எழுத்துகள் நெடில் எழுத்துகள் ஆகி, அளபெடுத்தல் இன்னிசை அளபெடை ஆகும்.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை

கெடுப்பதும் என்ற சொல்லில் உள்ள து என்ற குறில்எழுத்து, தூ என நெடில் எழுத்தாகி, கெடுப்பதூஉம் என அளபெடுத்தல் இன்னிசை அளபெடை ஆகும்.

இந்த திருக்குறளை,

கெடுப்பதும் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதும் எல்லாம் மழை.

என்று எழுதினாலும் வெண்டளை இலக்கணத்தில் பிழை நேராது. அப்படியிருக்க இன்னிசைக்காக அளபெடை கூட்டப்பட்டிருப்பதைக் காணலாம்.

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்

உண்பதூஉம் இன்றிக் கெடும்

இந்தக் குறளில் உள்ள உடுப்பதூஉம் உண்பதூஉம் என்ற இரண்டும் இன்னிசை அளபெடைகளே.

 

  1. செய்யுளிசை அளபெடை

 

செய்யுளில் ஓசை குறையும்போது அளபெடுத்து ஓசையைநிறைவு செய்வது செய்யுளிசை அளபெடை ஆகும்.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை

இந்தக் குறளில் தொழாள் என்று இயல்பாக இருந்தால், அது ஒரே நிரை அசை ஆகிவிடும். இந்த இடத்தில் ஓசை கெடாமல் இருக்க நிரை, நேர் என்ற இரு அசைகள் தேவை. தொழாஅள் என்று அளபெடுத்தபின், தொழா என்பது நிரை அசையாகவும், அள் என்பது நேர் அசையாகவும் அமைந்து ஓசையை நிறைவு செய்கின்றன. செய்யுளிசை அளபெடையை அறிந்துகொள்ள யாப்பிலக்கணம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். யாப்பிலக்கணப் பாடங்களில் அளபெடை பற்றி விரிவாக விளக்கப்படும்.

பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை

ஆஅதும் என்னு மவர்

நற்றாள் தொழாஅர் எனின்

என்று வரும் இவையும் செய்யுளிசை அளபெடை ஆகும். செய்யுளிசை அளபெடை சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் வரும். செய்யுளிசை அளபெடையை இசைநிறை அளபெடை என்றும் கூறுவர்

அளபெடைச் சொற்களைச் சொல்லும் போது, நெடில் எழுத்தைத் தனியாகவும் அதனோடு ஒட்டி வரும் குறில் எழுத்தைத் தனியாகவும் ஒலிக்கக் கூடாது. இரண்டு எழுத்துகளின் ஓசையும் ஒட்டி வரும்படியே நீட்டி ஒலிக்க வேண்டும். அளபெடையில் எழுத்துகளை விட்டு இசைப்பது ஓசை இனிமையைக் கெடுக்கும்.

 

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க

இசை கெடின் மொழி முதல் இடை கடை நிலை நெடில்

அளபு எழும் அவற்று அவற்று இனக் குறில் குறியே (நன்னூல் 91)

 

4.ஒற்றளபெடை

ஒற்று + அளபெடை = ஒற்றளபெடை

ஒற்றளபெடை என்பது ஒற்றெழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து நீண்டொலிப்பதாகும். செய்யுளில் ஓசை குறையுமிடத்து அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துகளில் ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல் ,ள் என்பனவும் ஆய்தமும் மொழிக்கு இடை, கடை ஆகிய இடங்களில் குறிற்கீழும் குறிலிணையின் கீழும் அளபெடுக்கும். இதுவே ஒற்றளபெடை ஆகும்.

(எ.கா.)

Ø  வெஃஃகு வார்க்கில்லை - குறிற்கீழ் இடை

Ø  கண்ண் கருவிளை - குறிற்கீழ் கடை

Ø  கலங்ங்கு நெஞ்ச்மிலை - குறிலிணைகீழ் இடை

Ø  மடங்ங் கலந்த மன்னே - குறிலிணைகீழ் கடை

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் ஒற்றெழுத்து அளபெடுத்துள்ளதை காணலாம்.

ங ஞ ண ந ம ன வ ய ல ள ஆய்தம்

அளபு ஆம் குறில் இணை குறில் கீழ் இடை கடை

மிகல் ஏ அவற்றின் குறி ஆம் வேறு ஏ – (நன்னூல் – 92)

குறுக்கம்

ஓர் எழுத்து தனக்குரிய மாத்திரை அளவினைவிட அதிகமாக ஒலிப்பதை அளபெடை     என்று கண்டோம். அவ்வாறே ஓர் எழுத்து தனக்குரிய மாத்திரைஅளவினைவிடக் குறைவாக ஒலிப்பதைக் குறுக்கம் என்பர்.

உயிர் எழுத்து, மெய்யெழுத்து, ஆய்த எழுத்து என்னும் மூவகை எழுத்துகளும் குறுகி ஒலிப்பது உண்டு. எனவே குறுக்கம் என்னும் சார்பெழுத்தை ஆறு வகையாக வழங்குவர். அவை,

(1) குற்றியலுகரம்

(2) குற்றியலிகரம்

(3) ஐகாரக் குறுக்கம்

(4) ஒளகாரக் குறுக்கம்

(5) மகரக் குறுக்கம்

(6) ஆய்தக் குறுக்கம்

 

5. குற்றியலுகரம்

குற்றியலுகரம் = குறுமை + இயல் + உகரம்

உகரம் ஒரு மாத்திரை உடையது. இந்த ஒரு மாத்திரை அளவும் குறைந்து (குறுகி) ஒலிக்கிற இடங்களும் உண்டு. அப்போது அது குற்றியலுகரம் (குறுகி ஒலிக்கின்ற உகரம்) என்று அழைக்கப்படும்.

 

வல்லின மெய்களோடு சேர்ந்த உகரம் மட்டுமே குற்றியலுகரமாக வருவதற்கு வாய்ப்பு உண்டு. அதாவது, கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு எழுத்துகள் மட்டுமே இந்த வகையில் அடங்கும்.

இதனையே வேறு விதமாகச் சொல்வதென்றால், தனி நெடிலுடனோ, பல எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்து வரும் உகரம், தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும். குற்றியலுகரம் என்பது அவ்வாறு குறைந்தொலிக்கும் உகரமாகும். இந்த ஆறும் சொல்லின் கடைசி எழுத்தாக இருக்க வேண்டும்.

(எ.கா.) : பாக்கு, பேசு, நாடு, காது, அம்பு, ஆறு.

தனிக்குறில் எழுத்தை அடுத்து வந்தால் அது குற்றியலுகரம் ஆகாது. எடுத்துக்காட்டு: அது, பசு, வடு, அறு முதலியவை.

 

1. நெடில் தொடர்க் குற்றியலுகரம்:

இதில் நெடில் எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.

 

எ.டு:

'நா'கு, 'கா'சு, 'மா'டு, 'மா'து, 'பே'று, 'ரா'சு

மா | டு +அல்ல = மாடல்ல

 ம்+ஆ | ட்+உ +'' ல்ல = மா ட் + அ ல்ல (நிலைமொழியின் உகரம் திரிந்தது)

'மாடு' என்ற சொல் 'அல்ல' என்ற சொல்லுடன் இணைந்து நெடில் தொடர் குற்றியலுகரம் ஆயிற்று. அதாவது டு என்ற உகர எழுத்தானது 'மா' என்ற நெடிலுக்கு அடுத்து வந்ததாலும் வரும் மொழியின் முதல் எழுத்தான '' உடன் நிலைமொழியின் ஈற்றிலுள்ள உகரம் திரிந்து ட்+உ= டு ஆனது ட்+அ=ட என்று குறுகியதால் நெடில் தொடர் குற்றியலுகரம் ஆனது. அதாவது நெடிலைத்தொடர்ந்த குற்றியலுகரம்.

 

2. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்

·'து' - ஆய்த எழுத்தை அடுத்து உகரம் ஆகும்.

·து, ·து, ·து, ·சு, ·கு போன்ற சொற்கள் வரும். இவற்றோடு வருமொழி முதலில்

உயிரெழுத்து வரும்போது குற்றியலுகரம் உண்டாகும்.

·து + இல்லை = அ·தில்லை

இங்கே நிலைமொழியில் '·' என்ற ஆய்த எழுத்தை அடுத்து 'து' வந்ததாலும்

வருமொழி '' உடன் இணைந்ததால் உகரம் போய் அ·தில்லை என்று ஆனதாலும்  ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் ஆனது.

 

3. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்:

இதில் உயிரெழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.

எ.டு: வி''கு, ''சு, கு''டு, 'ரி'து, ''பு, 'ளி'று, மி''கு, ''கு, ''கு போன்றவை.

அரசு + ஆட்சி = அரசாட்சி

நிலைமொழியின் ஈற்றயல் எழுத்து ர்+அ என்பதில் '' என்னும் உயிரெழுத்தை அடுத்து 'சு' என்ற  உகரம் வந்ததால் உயிர்த் தொடர் உகரம் ஆயிற்று. இது 'ஆட்சி' எனும் வரும் மொழியின் முதலெழுத்து '' உடன் இணைந்து நிலைமொழியின் உகரத்தைத் திரித்து அரசாட்சி என்று புணர்ந்ததால் உயிர்த்தொடர்க் குற்றியலுகரமாயிற்று.

 

4. வன் தொடர்க் குற்றியலுகரம் :

இதில் வல்லின எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.

எ.டு: சுக்கு, அச்சு, பட்டு, கழுத்து, உப்பு, கசப்பு.

பட்டு + ஆடை = பட்டாடை

இங்கே நிலைமொழியின் ஈற்றயல் எழுத்து 'ட்' என்ற வல்லின எழுத்தைத் தொடர்ந்து 'டு' என்ற உகர எழுத்து வந்ததாலும், அது 'ஆடை' என்ற வரும்மொழியுடன் இணைந்து தனது ட்+உ=டு விலுள்ள உகரத்தைத் திரிந்து ட்+ஆ=டா ஆனதாலும் வன் தொடர்க் குற்றியலுகரமாயிற்று.

 

5. மென் தொடர்க் குற்றியலுகரம்:

இதில் மெல்லின எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.

எ.டு: சங்கு, பஞ்சு, நண்டு, பந்து, கம்பு, கன்று.

சங்கு + ஊதினான் = சங்கூதினான்.

இங்கே 'ங்' என்கிற மெல்லின எழுத்தை அடுத்து 'கு' என்ற உகரம் வந்ததாலும் வரும்மொழியுடன் இணைந்து நிலைமொழி ''கரம் திரிந்து வரும்மொழி '' உடன் இணைந்து சங்கூதினான் என்று  ஆனதாலும் மென் தொடர்க் குற்றியலுகரம் ஆனது.

 

6. இடைத் தொடர்க் குற்றியலுகரம்:

இதில் இடையின எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.

எ.டு: பெய்து, கொய்து, மல்கு, புல்கு, எள்கு, மாழ்கு

பெய்து + உடுத்தான் = பெய்துடுத்தான்.

இங்கே நிலைமொழியில் 'ய்' என்ற இடையின எழுத்தை அடுத்து 'து' என்ற உகரம் வந்ததாலும் அது வரும்மொழி '' உடன் இணைந்து நிலைமொழி உகரம்கெட்டு பெய்துடுத்தான் என்று குறுகியதாலும் இடைத்தொடர்க் குற்றியலுகரம் ஆயிற்று

 

6. குற்றியலிகரம்

உகரம் சில இடங்களில் குறுகி, குற்றியலுகரம் ஆவது போலவே, இகரமும் சில இடங்களில் குறுகும். இவ்வாறு இகரம் குறுகி வருவதைக் குற்றியலிகரம் என்று கூறுவர். குற்றியலிகரம் இரண்டு வகையாக வரும்.

 

தனிமொழிக் குற்றியலிகரம்: மியா என்ற அசைச்சொல்லில் ம் என்ற எழுத்தோடு சேர்ந்த இகரம் குறுகும். இதில் ம் என்ற எழுத்திற்குப் பின் யகரம் வருவதால் குறைந்து ஒலிக்கிறது. இதுவே தனிமொழிக் குற்றியலிகரம் ஆகும்.

(எ.கா.) :  கேண்மியா, சென்மியா

புணர்மொழிக் குற்றியலிகரம்:  இரண்டு சொற்கள் சேரும்போது முதலில் உள்ள சொல்லின் இறுதியில் குற்றியலுகர எழுத்து வந்து, இரண்டாம் சொல் ‘ய என்ற எழுத்தில் தொடங்கும்போது, குற்றியலுகரத்தில் உள்ள உகரமானது, இகரமாகத் திரியும். அவ்வாறு திரிந்த இகரம், உகரம் குறைந்து ஒலிப்பது போலவே அரை மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கும்.

 

(எ.கா.)

 நாடு(ட்+உ) + யாது                     = நாடியாது(ட்+இ)

களிற்று(ற்+உ) + யானை     = களிற்றியானை(ற்+இ)

யகரம் வர குறள் உ திரி இகரம் உம்

அசைச்சொல் மியாவின் இகரம் உம் குறிய – (நன்னூல் -93)

 

7.ஐகாரக் குறுக்கம்

ஐகாரம் தனக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து குறைந்து ஒன்றரை மாத்திரையாகவும் ஒரு மாத்திரையாகவும் ஒலிப்பது. ஐகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்பொழுதே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். மொழிக்கு முதல், இடை, கடை ஆகிய இடங்களில் வரும்பொழுது, மொழிக்கு முதலில் ஒன்றரை மாத்திரையாகவும், இடை மற்றும் கடையில் ஒரு மாத்திரையாகவும் குறைந்து ஒலிக்கும். இவ்வாறு குறைந்தொலிப்பதே ஐகாரக் குறுக்கமாகும்.

(எ.கா.) :  ஐந்து, வளையல், மலை

ஐ என்னும் எழுத்துக்கு உரிய அளவு இரண்டு மாத்திரை ஆகும். ஆனால், இம் மூன்று எடுத்துக்காட்டுகளிலும் இடம்பெற்ற ஐ என்னும் உயிர்நெடில் தனக்குரிய இரண்டு மாத்திரை அளவினைவிடக் குறைந்து ஒலிக்கிறது. அதுவே ஐகாரக் குறுக்கம் ஆகும்.

தன் சுட்டு அளபு ஒழி ஐ மூ வழி உம்

நையும் ஔ உம் முதல் அற்று ஆகும் – (நன்னூல்- 95)

 

8.ஔகாரக் குறுக்கம்

ஔகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்போது மட்டுமே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். மொழிக்கு முதலில் வரும்போது ஒன்றரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதுவே ஔகாரக் குறுக்கம் ஆகும்.

எ.கா. : ஔவை

தன் சுட்டு அளபு ஒழி ஐ மூ வழி உம்

நையும் ஔ உம் முதல் அற்று ஆகும் – (நன்னூல்- 95)

 

9. மகரக் குறுக்கம்

மகரம் + குறுக்கம் = மகரக்குறுக்கம்

 “ம் என்னும் எழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பது மகரக் குறுக்கம்எனப்படும். சொல்லின் இறுதியில் அமைந்த    “ம்     என்னும் மெய்யெழுத்து     வருமொழியில் “வ என்னும் எழுத்து வந்ததால் தனக்குரிய அரை மாத்திரை அளவில் இருந்து குறைந்து ஒலிக்கும்.

 

(எ.கா.)

வரும் வசந்தம்

வரும் வண்டி

தரும் வளவன்

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் நிலைமொழியீற்றில் மகரமும் வருமொழி முதலில் வகரமும் உள்ளன. இது போல "நிலைமொழியீற்றில் மகரம் இருந்து வகர முதல் மொழியோடு புணரும் போது நிலைமொழியீற்றிலுள்ள மகரம் கால் மாத்திரையளவே ஒலிக்கும்". இது ஒரு வகை மகரக்குறுக்கம்.

ண ன முன் உம் வஃகான் மிசை உம் ம குறுகும்  (நன்னூல் – 95)

செய்யுள் இறுதிப் போலி மொழிவயின்

னகார மகாரம் ஈர் ஒற்றாகும் (தொல். 51)

பாடல்களின் முடிவில் போலும் என்று வரும் சொல்லில் னகரமும் மகரமும் ஒன்றாகி போன்ம் என்று ஈரொற்றாக நிற்கும். இந்நிலையில் மகரம் தன் ஒலிப்பளவிலிருந்து குறைந்து ஒலிக்கும். இது மற்றொரு வகை மகரக்குறுக்கம் ஆகும்.

 

10.ஆய்தக் குறுக்கம்

புணர்ச்சியில் சொல்லின் இடையில் புதியதாகத் தோன்றும் ஆய்த எழுத்து தனக்குரிய அரை மாத்திரை அளவினைவிடக் குறைந்து கால் மாத்திரையாக ஒலிப்பது.

(எ.கா.)      முள் + தீது = முஃடீது

         அல் + திணை = அஃறிணை

ல ள ஈற்று இயையின் ஆம் ஆய்தம் அஃகும் (நன்னூல் – 97)

0 Response to "எழுத்து - இலக்கணம் "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel