6.6.2021 இன்றைய காலை முக்கியச் செய்திகள்

Trending

Breaking News
Loading...

6.6.2021 இன்றைய காலை முக்கியச் செய்திகள்

6.6.2021 இன்றைய காலை முக்கியச் செய்திகள்

*🔷🔶திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி கொடைக்கானல் பூண்டி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டார்

*🔷🔶நாமக்கல் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கே படுக்கை வசதி இல்லாத நிலையில்  நாய்கள் உறங்கிக் கிடக்கும் காட்சி வீடியோ வெளியானத.

*🔷🔶அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே வாளரக்குறிச்சியில் மின்னல் தாக்கி எரிந்தது தென்னை மரம்


*🔷🔶மதுரை உசிலம்பட்டி தேவர் கல்லூரி அருகில் உள்ள சாலை ஓரங்களில், ஊரடங்கு காரணமாக போதிய விற்பனை இல்லாத நிலையில் சம்பங்கி பூக்கள் கொட்டப்பட்டது

🌎 வரலாற்றில் இன்று 🌎
          🌎06 - 06 - 2021🌎
✍️திருவள்ளுவர் ஆண்டு 2052
🏵️ வைகாசி 💎 23-ந் தேதி🏵️
   🧿 ஞாயிற்றுக்கிழமை 🧿
✍️ஆண்டின் 157 ஆம் நாளாகும்.
ஆண்டு முடிவிற்கு மேலும்
208 நாட்கள் உள்ளன.

             🔷🔸 நிகழ்வுகள் 🔸🔷

🔷913 – பைசாந்தியப் பேரரசர் மூன்றாம் அலெக்சாந்தர் போலோ விளையாடும் போது இறந்தார்.

🔷1523 – குசுத்தாவ் வாசா சுவீடனின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டென்மார்க்கு, சுவீடன், நோர்வே இணைந்த கல்மார் ஒன்றியம் முடிவுக்கு வந்தது. இது சுவீடனின் தேசிய நாளாகக் கொண்டாடப்படுகிறது.

🔷1644 – சிங் மஞ்சு படைகள் பெய்ஜிங் நகரைக் கைப்பற்றின. மிங் வம்சம் வீழ்ச்சியடைந்தது.

🔷1674 – சிவாஜி மராட்டியப் பேரரசராக முடிசூடினார்.

🔷1711 – யாழ்ப்பாணத்தில் இந்து மதச் சடங்குகளுக்கு ஒல்லாந்து அரசினால் தடை விதிக்கப்பட்டது.

🔷1762 – ஏழாண்டுப் போர்: பிரித்தானியப் படைகள் கியூபாவின் அவானா நகரை முற்றுகையிட்டுக் கைப்பற்றின.

🔷1761 – சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வீனஸ் கோளின் நகர்வு பூமியின் பல இடங்களிலும் அவதானிக்கப்பட்டது.

🔷1808 – பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியனின் சகோதரன் யோசப் பொனபார்ட் எசுப்பானியாவின் மன்னராக முடிசூடினார்.

🔷1809 – சுவீடன் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது. 20 ஆண்டுகள் முழுமையான முடியாட்சியின் பின்னர் அரசியல் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டது. பதின்மூன்றாம் சார்லசு புதிய மன்னராகப் பதவியேற்றார்.

🔷1832 – பாரிசில் மாணவர் எழுச்சி முறியடிக்கப்பட்டது.

🔷1844 – கிறித்தவ இளையோர் அமைப்பு (YMCA) லண்டனில் அமைக்கப்பட்டது.

🔷1859 – ஆத்திரேலியா: குயின்ஸ்லாந்து என்ற பெயரில் புதிய குடியேற்ற நாடு நியூ சவுத் வேல்ஸ் இலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது.

🔷1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க ஒன்றியப் படைகள் டென்னிசி, மெம்பிசு நகரை கூட்டமைப்பினரிடம் இருந்து கைப்பற்றின.

🔷1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் டென்னசியில் மெம்ஃபிசு நகரை கூட்டமைப்புப் படைகளிடம் இருந்து கைப்பற்றின.

🔷1882 – அரபிக் கடலில் இடம்பெற்ற புயலால் பம்பாயில் 100,000 பேர்களுக்கு மேல் கொல்லப்பட்டனர்.ஆனாலும் இந்தச் செய்தி பொய்யானது என பின்னர் நிரூபிக்கப்பட்டது.

🔷1889 – அமெரிக்கா, சியாட்டில் நகரில் ஏற்பட்ட தீயில் நகர மையம் முழுவதும் அழிந்தது.

🔷1912 – அலாஸ்காவில் நொவரப்டா எரிமலை வெடித்தது.

🔷1930 – இலங்கையில் வீரகேசரி நாளிதழ் தொடங்கப்பட்டது.

🔷1932 – அமெரிக்காவில் எரிவாயுவிற்கு முதன் முதலாக கலனிற்கு ஒரு சதம் என்ற அளவில் வரி அறவிடப்பட்டது.

🔷1942 – இரண்டாம் உலகப் போர்: மிட்வே சமரில் அமெரிக்கக் கடற்படை மிக்குமா என்ற சப்பானியப் போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.

🔷1944 – இரண்டாம் உலகப் போர்: ஓவர்லார்ட் நடவடிக்கை எனப் பெயரிடப்பட்ட நோமண்டி சண்டை ஆரம்பமானது. 155,000 கூட்டுப் படையினர் பிரான்சின் நோர்மண்டிக் கடற்கரைகளில் தரையிறங்கி, அத்திலாந்திக் சுவரைத் தகர்த்து முன்னேறினர்.

🔷1958 – தமிழருக்கு எதிரான இனவன்முறை, 1958: இலங்கையில் மேலும் 5,029 தமிழ் அகதிகள் கொழும்பில் இருந்து கப்பல் மூலம் யாழ்ப்பாணம் அனுப்பப்பட்டனர்.[3]

🔷1968 – அமெரிக்க அரசியல்வாதி இராபர்ட் எஃப் கென்னடி லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உணவு விடுதி ஒன்றில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

🔷1971 – சோவியத் ஒன்றியத்தின் சோயூசு 11 விண்கலம் ஏவப்பட்டது.

🔷1971 – கலிபோர்னியாவில் அமெரிக்க வான்படையின் எப்-4 பன்டெம் II போர் வானூர்தி பயணிகள் வானூர்தியுடன் வானில் மோதியதில் 50 பேர் உயிரிழந்தனர்.

🔷1971 – சோயுஸ் 11 விண்ணுக்கு ஏவப்பட்டது.

🔷1974 – சுவீடனில் நாடாளுமன்ற முடியாட்சி அமைக்கப்பட்டது.

🔷1981 – பீகார் தொடருந்து விபத்து: இந்தியாவில் தொடருந்து ஒன்று பாக்மதி ஆறு பாலம் ஒன்றில் தடம் புரண்டு வீழ்ந்ததில் 268 பேர் உயிரிழந்தனர், 300 பேர் காணாமல் போயினர்.

🔷1982 – லெபனான் போர் ஆரம்பமானது. இசுரேலியப் படையினர் தெற்கு லெபனானை ஊடுருவினர்.

🔷1984 – இந்திய இராணுவத்தினர் அம்ரித்சரில் உள்ள பொற்கோயிலில் தாக்குதல் நடத்தியதில் 576 பேர் கொல்லப்பட்டு 335 பேர் காயமுற்றனர்.

🔷1993 – மங்கோலியாவில் முதலாவது நேரடியான அரசுத்தலைவர் தேர்தல் நடைபெற்றது.

🔷2002 – 10 மீட்டர் விட்டமுள்ள புவியருகு விண்பொருள் ஒன்று நடுநிலக் கடலில் கிரேக்கத்திற்கும் லிபியாவிற்கும் இடையில் வீழ்ந்து வெடித்தது.

🔷2004 – இந்தியாவில் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

            *🔷🔸 பிறப்புகள் 🔸🔷*

🔶1436 – இரெகியோமோண்டேனசு, செருமானியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1476)

🔶1599 – டியேகோ வெலாஸ்க்குவெஸ், எசுப்பானிய ஓவியர் (இ. 1660)

🔶1799 – அலெக்சாந்தர் பூஷ்கின், உருசிய எழுத்தாளர், கவிஞர் (இ. 1837)

🔶1850 – கார்ல் பெர்டினாண்ட் பிரவுன், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1918)

🔶1875 – தாமசு மாண், நோபல் பரிசு பெற்ற செருமானிய எழுத்தாளர் (இ. 1955)

🔶1877 – உள்ளூர் எஸ். பரமேசுவர அய்யர், மலையாளக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1949)

🔶1890 – கோபிநாத் பர்தலை, அசாம் மாநிலத்தின் 1வது முதலமைச்சர் (இ. 1950)

🔶1891 – மாஸ்தி வெங்கடேச ஐயங்கார், இந்திய எழுத்தாளர் (இ. 1986)

🔶1901 – சுகர்ணோ, இந்தோவேசியாவின் 1வது அரசுத்தலைவர் (இ. 1970)

🔶1905 – என். எம். பெரேரா, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. 1979)

🔶1908 – பி. எஸ். பி. பொன்னுசாமி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1998)

🔶1908 – சா. கணேசன், தமிழக இலக்கியவாதி; காந்தியவாதி, சிற்பக்கலைஞர், கல்வெட்டாய்வாளர், அரசியல்வாதி (இ. 1982)

🔶1926 – அருள் செல்வநாயகம், ஈழத்து எழுத்தாளர் (இ. 1973)

🔶1929 – சுனில் தத், இந்திய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல்வாதி (இ. 2005)

🔶1933 – ஹைன்றிக் ரோரர், நோபல் பரிசு பெற்ற சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் (இ. 2013)

🔶1936 – டி. ராமா நாயுடு, இந்திய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 2015)

🔶1949 – ஜி. ராமகிருஷ்ணன், தமிழக இடதுசாரி அரசியல்வாதி

🔶1968 – அலீம் தர், பாக்கித்தானியத் கிரிக்கெட் வீரர், நடுவர்

🔶1986 – பாவனா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

🔶1988 – அஜின்கியா ரகானே, இந்தியத் கிரிக்கெட் வீரர்

             *◼️இறப்புக்கள் ◼️*

◼️1832 – ஜெரமி பெந்தாம், ஆங்கிலேய மெய்யியலாளர் (பி. 1748)

◼️1916 – யுவான் ஷிக்காய், சீனக் குடியரசின் 2வது அரசுத்தலைவர் (பி. 1859)

◼️1920 – வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியார், தமிழகப் புரவலர், தமிழறிஞர் (பி. 1870)

◼️1947 – மு. சி. பூரணலிங்கம் பிள்ளை, தமிழகத் தமிழறிஞர் (பி. 1866)

◼️1948 – லூயி லூமியேர், பிரான்சிய இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1864)

◼️1961 – கார்ல் யுங்கு, சுவிட்சர்லாந்து உளவியலாளர், மருத்துவர் (பி. 1875)

◼️1968 – இராபர்ட் எஃப் கென்னடி, அமெரிக்க அரசியல்வாதி (பி. 1925)

◼️1990 – ஆலங்குடி சோமு, தமிழகத் திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் (பி. 1932)

◼️2007 – வீ. கே. சமரநாயக்க, இலங்கை அறிவியலாளர், கல்வியாளர் (பி. 1939)

◼️2008 – ஜோர்ஜ் சந்திரசேகரன், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1940)

◼️2009 – ராஜமார்த்தாண்டன், தமிழகக் கவிஞர், எழுத்தாளர்

2015 – ஆர்த்தி அகர்வால், இந்தியத் திரைப்பட நடிகை (பி. 1984)

◼️2016 – எஸ். ஏ. ஐ. மத்தியு, இலங்கைத் தமிழ்ப் பன்னூலாசிரியர் (பி. 1939)

      *🌎சிறப்புநாள்🌍*

🌎ஆசிரியர் நாள் (பொலிவியா)

🌎உருசிய மொழி நாள் (ஐநா)

🌎தமிழீழ மாணவர் எழுச்சி நாள்


*🔷🔶இன்றைய சிந்தனை*
......................................

*''மனிதன் எப்படி வாழ வேண்டும்...?''*
......................................

🏵️பூமியில் பிறப்பெடுத்த மனிதனுக்கு அவனின் ஒவ்வொரு கால வயதிலும் பிறரின் உதவியில்லாமல் வாழவே முடியாது...

🏵️ஆனால்!, விலங்குகளுக்கு அப்படி அல்ல. பால் கறப்பு முடிந்து அடுத்த கன்றுக்கு பசு தயாரானதும் பசு வேறு கன்று வேறு என்றாகி விடும்...

🏵️அதன் பிறகு கன்றின் வாழ்க்கை அதன் கையிலோ அல்லது அது எவரிடம் இருக்கிறதோ அவரின் கையிலோ மாறி விடும். இதே போலத்தான் ஒவ்வொரு விலங்கினங்களும் வாழ்கின்றன...

🏵️ஒவ்வொரு விலங்கும், ஒவ்வொரு பறவையும், ஒவ்வொரு தாவரமும், ஒவ்வொரு புழுவும் தங்கள் பிழைப்பை தாங்களே கவனித்துக் கொள்கின்றன. ஆனால்!, மனிதன் மட்டும்தான் தன் பிழைப்பிற்கு மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்கிறான்...

🏵️குழந்தையாய் இருக்கும் பொழுதில் இருந்து அம்மாவின் உதவி தேவை. அம்மாவிற்கு அப்பாவின் உதவி தேவை. அப்பாவிற்கு பிறரின் உதவி தேவை என்று உதவி உதவி என்று பிறரிடமிருந்து பெறுவது வாழ் நாள் முழுதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்...

🏵️வளர்வதற்குப் பெற்றோர் உதவி தேவை. படிப்பதற்கு ஆசிரியர் உதவி தேவை. தலைமுறைக்குபெண்ணின் உதவி தேவை. இப்படி அவனின் ஒவ்வொரு நொடியிலும் பிறரிடமிருந்து அவன் பெற்றுக் கொள்வது அதிகம்...

🏵️ஆனால்!, தற்போதைய காலத்தில் பெற்றுக் கொள்பவன் பிறருக்கு கொடுக்க மறுக்கிறான். அதை பணம் என்ற அளவுகோலை கொண்டு நான் ஏன் கொடுக்க வேண்டும்...? என்று பொய்ப்பேச்சால் (விதண்டாவாதம்)  கேள்வி கேட்கின்றான்...

✍️இது ஒரு உண்மை சம்பவம்...!

🏵️ஒருவர் தன் நண்பரின் கடைக்குச் சென்றிருந்தபோது அழகிய பெண் ஒருவர் வந்து ஐநூறு ரூபாய்க்கு கரிக்கோல் (பென்சில்) மற்றும் எழுதுகோல்கள் (பேனாக்கள்) வாங்கிச் சென்றிருக்கிறார்...

🏵️கடையின் நண்பர், ”இப்பெண்ணைப் பார்த்தால் ஏதாவது வித்தியாசமாய் தெரிகிறதா...?” என்று கேட்டிருக்கிறார்...

”ஒன்றும் தெரியவில்லையே” என்றார் வந்தவர்...

🏵️இப்பெண் எப்போது சாகும் என்று தெரியாது. முற்றிய நிலையில் புற்றுநோயால் அவதிப்படுகிறார்...!

🏵️ஆனால்!, அப்பெண்ணின் முகத்தில் அதற்கான ஏதாவதொரு அறிகுறி தெரிகிறதா...? இந்தச் சூழலிலும் வெறும் ஐந்தாயிரம் ரூபாய்க்கு வேலை செய்து கொண்டு இருக்கிறார்...

🏵️வாங்கும் சம்பளத்தில் ஐநூறு ரூபாயை தன்னைப் படிக்க வைத்து ஆளாக்கிய அனாதை விடுதிக்கு கரிக்கோல் மற்றும் எழுதுகோல் வாங்கிக் கொடுத்து வருகிறார் “ என்றார் கடையின் நண்பர்...

🏵️மேலே இருக்கும் நிகழ்வைக் கேட்டதும் கடைக்கு வந்த நண்பருக்கு அந்த பெண்ணின் நன்றி மறவாமையை நினைத்து சில மணித்துளிகள் மகிழ்ச்சியாக இருந்தது. அவரின் உடல் நிலையை நினைத்து  அவரது மனம் கனத்தது...

😎ஆம் நண்பர்களே...!

🟡 மனிதன் சமூகத்திடமிருந்து பெற்றுக் கொண்டதை ஒரு நாள் திருப்பிக் கொடுத்தே ஆகவேண்டும்...

🔴 இங்கு நாம் பெற்றிருப்பது எதுவுமே நம்முடையது அல்ல. நமக்கு முன்னே வாழ்ந்தவர்கள் நமக்கு கொடுத்துச் சென்றது...!!

⚫ ஆனால்!, மனிதன் அதை மறந்து வாழ்கிறான். அதனால் துன்பத்தில் உழல்கிறான்...!!!

*வாழ்வில் நாம் எதைத் தேடுகிறோம்*

📖. *புத்தகங்களை இழந்துவிட்டு அறிவைத் தேடுகிறோம்... நல்ல உறவுகளை இழந்துவிட்டு அன்பைத் தேடுகிறோம்...*

*நம்மை நாமே இழந்துவிட்டு நிம்மதியைத் தேடுகிறோம்...*

*இருப்பதை தொலைத்து விட்டு... இல்லாததை தேடுவதையே.... "வாழ்க்கை" என வாழ்கிறோம்...*

*வெறுத்துச் சென்றவர்கள் மீது வருத்தங்கொள்ள ஏதுமில்லை... தனக்கொவ்வாத நிலத்தில் எந்தத் தாவரம் தான் உயிர்க்கும்...*

*துன்பங்கள் என்பது உதிரும் இலைகள் போன்றது... மகிழ்ச்சி என்பது துளிர்க்கும் இலைகள் போன்றது... உதிரும் இலைகளை துளிர்க்கும் இலைகளுக்கு உரமாக்கி விடுங்கள்...*

*உங்களிடம் உண்மை இல்லாத எந்த உறவுகளுக்காகவும் இறங்கிச் சென்று.... உங்கள் மதிப்பை நீங்களே குறைத்துக் கொள்ளாதீர்கள்...*

*அமைதியாய் இருப்பவை எல்லாம்.... வலிமை இல்லாதது இல்லை... அதன் வலிமையே அமைதிதான்...*

*சில தகவல்கள்.* 

1.
சூரிய ஒளியில் நடமாடுவதன் மூலம் வைட்டமின் டி உடலில் உற்பத்தியாகிறது. சூரிய ஒளியில் நேரம் செலவு செய்வதை நிறுத்தியதாலும், சன்ஸ்கிரீன் அதிகமாக பயன்படுத்துவதாலும் உலகின் பெரும்பாலான மக்களுக்கு வைட்டமின் டி குறைபாடு உள்ளதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால் உலகில் 1 பில்லியன் மக்களுக்கு வைட்டமின் டி குறைபாடு அல்லது போதுமான வைட்டமின் டி இல்லாததால் பலவித தீவிரமான தோல் நோய்களுக்கு ஆளாவதாக கூறப்படுகிறது. மக்கள் சூரிய ஒளியில் குறைந்த நேரம் செலவிடுவதாலும், அப்படியே வெளியில் சென்றாலும் சன்ஸ்கிரீன் பூசிக்கொண்டு போவதாலும், உடலில் வைட்டமின் டி உற்பத்தியாவது தடைபடுவதோடு புற்றுநோய் ஆபத்து ஏற்படுகிறதாம். செல் வளர்ச்சி, நோய் எதிர்ப்புசக்தி, நரப்பு தசை வளர்ச்சி மற்றும் உடலில் கட்டிகளை குறைப்பது போன்ற முக்கிய உடல் செயல்பாடுகளில் வைட்டமின் டி பங்காற்றுகிறது.

2.
ஐதராபாத்தில் நடைபெற்ற திருமணத்தில் 24 கேரட் மதிப்பிலான தங்க சாப்பாடு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, திருமணத்திற்கு வந்திருக்கும் விருந்தினர்களின் சாப்பாட்டு இலையில் தங்கத்தால் செய்யப்பட்ட இலையினை வைக்கும்போது உருகிவிடுகிறது. இந்த தங்கமானது, செரிமானப் பகுதியில் உறிஞ்சப்படாததால் சாப்பிடுவதற்கு சுவையற்றது மற்றும் பாதுகாப்பானது ஆகும். இதன் விலை வழக்கமான விலையை விட ரூ.250 முதல் 300 வரை அதிகமாம்.

3.
தக்காளியில் அதிகளவு உள்ள சிட்ரிக் ஆசிட், வயிற்றில் அதிக கேஸ் மற்றும் எரிச்சலை உண்டாக்கி, ஜீரண சக்தியை குறைத்துவிடும். மேலும், சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தி, இருமல், தும்மல், தொண்டை எரிச்சல் போன்ற பிரச்சனையை உருவாக்கும். கிட்னி தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள், பொட்டாசியம் நிறைந்த தக்காளியை அதிகம் சாப்பிடக் கூடாது.

*🔵 ஆப்கானிஸ்தானில் ராணுவ சோதனை சாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 8 வீரர்கள் பலி.*

     _20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வரும் ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாக வன்முறைகள் அதிகரித்து வருகின்றன._


*🔵 தடுப்பூசி போட்டும் கொரோனா வந்தால் உயிரிழப்பு அபாயம் இல்லை - எய்ம்ஸ் ஆஸ்பத்திரி ஆய்வு முடிவு.*

     _இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி திட்டத்தின்கீழ் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்படுகின்றன._


*🔵 இந்தியாவுக்கு அமெரிக்கா தடுப்பூசி அனுப்புகிறது - ஜோ பைடன் நிர்வாகத்துக்கு எம்.பி.க்கள் பாராட்டு.*

     _இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அமெரிக்கா 2.5 கோடி தடுப்பூசிகளை அனுப்பி வைத்து உதவ முன்வந்துள்ளது._


*🔵 தடுப்பூசி பாஸ்போர்ட்டுக்கு எதிராக இந்தியா போர்க்கொடி.*

     _தடுப்பூசி பாஸ்போர்ட்டுக்கு எதிராக இந்தியா போர்க்கொடி உயர்த்தி உள்ளது. இது பாரபட்சமானது என்று ‘ஜி-7’ சுகாதார மந்திரிகள் கூட்டத்தில் பதிவு செய்தது._

*🌎🇮🇳 முக்கிய செய்திகள்🇮🇳🌎*
           *➡️➡️➡️2️⃣0️⃣⬅️⬅️⬅️*
                               

*1️⃣🔷🔶சென்னை: சாமானிய மக்கள் சிறு தொகை எடுக்கவே பல கட்டுப்பாடுகள் உள்ளபோது ரூ.100 கோடி டெபாசிட் எங்கே? என்று இந்தியன் வங்கி மீது சென்னை துறைமுக கழகம் வழக்கு தொடர்ந்துள்ளது. சென்னை துறைமுக கழகம் இந்தியன் வங்கியில் டெபாசிட் செய்த ரூ.100 கோடி மாயமாகி ஓராண்டு ஆன நிலையில், இந்த வழக்கில் இந்தியன் வங்கி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.*
  
 *2️⃣🔷🔶உள்துறை அமைச்சகம் மறு பரிசீலனை செய்து, வெளிநாட்டினருக்கான விசா அல்லது தங்கும் காலத்தை அபராதம் இன்றி வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டித்துள்ளது.*

*3️⃣🔷🔶கடற்படைக்கு சுமார் 43 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 6 நீர்மூழ்கி கப்பல்களை, உள்நாட்டிலேயே வடிவமைக்கும் திட்டத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.*

 *4️⃣🔷🔶இந்திய மல்யுத்த வீரர் ஸ்மித் மாலிக் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறாத நிலை ஏற்பட்டுள்ளது.*

 *5️⃣🔷🔶வண்டலூர் வன உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு ஏற்பட்ட கோவிட் 19 தொற்று, மற்ற விலங்குகளுக்கு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.*


 *6️⃣🔷🔶மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி திரு. ஏ.கே. ராஜன் தலைமையில், உயர்நிலைக்குழு ஒன்றை தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது.*

  
 *7️⃣🔷🔶நீலகிரி: வெளி மாவட்டம்  மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து அவசரத் தேவைக்கு  வருவோர் இ-பாஸ் பெற வேண்டுமெனவும்,*

*தொற்று அதிகரிப்பதால் இ-பாஸ் முறை அமல்படுத்தப்படுவதாகவும்*

*மாவட்ட ஆட்சியர்  திருமதி  இன்னசெண்ட்  திவ்யா  கூறியுள்ளார்.* 

 *8️⃣🔷🔶தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக தினசரி கோவிட்-19 பாதிப்பு குறைய தொடங்கியதுடன் 30,000 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது*

- *கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் காந்தி*
 

 *9️⃣🔷🔶மொரீஷியஸ் நாட்டு அதிபர் சர் அனிருத் ஜக்நாத் மறைவுக்கு இந்தியா முழுவதும் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்பட நிலையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.*
 

 *1️⃣0️⃣🔷🔶மதுரை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு மூர்த்தி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் முன்னிலையில்,  அரசு மருத்துவ கல்லூரியில் தன்னார்வலர்கள் மூலம் RTPCR மற்றும் ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.*
 

 *1️⃣1️⃣🔷🔶மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு பிரதமர் திரு. நரேந்திர மோடியை முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.*
  

 *1️⃣2️⃣🔷🔶கோவை: ரெட்பில்ட்ஸ் பகுதியில் இந்திய கடற்படை நிலையத்தின் அக்ரணி வளாகத்தில் அமைந்துள்ள தலைமை பயிற்சி நிறுவன வளாகத்தில் 'உலக சுற்றுச்சூழல் தினத்தை' முன்னிட்டு பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.*


 *1️⃣3️⃣🔷🔶உலக சுற்றுச்சூழல் தினம்*

*மாணவர் ஒருவருக்கு மரம் ஒன்று" என்ற மத்திய கல்வி அமைச்சகத் திட்டத்தின் கீழ் மரம் நடுவது, இளவயதிலேயே சுற்றுச்சூழலை பராமரிக்க வேண்டும் என்ற உணர்வை மாணவர்களுக்கு ஊட்டுகிறது என்று அமைச்சர் திரு ரமேஷ் போக்ரியால் நிலங்கள் கூறியிருக்கிறார்.*
 

 *1️⃣4️⃣🔷🔶சேலம் மாநகரின் புதிய காவல் ஆணையாளராக திரு நஜ்முல் ஹோதா இன்று பதவி ஏற்று கொண்டார்.*

   *1️⃣5️⃣🔷🔶லிட்டில் ராக் ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த், கிரீஸின் பெற்வோ லாராக்கிஸ்  இணை அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.*

*1️⃣6️⃣🔷🔶திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூண்டி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி இன்று ஆய்வு மேற்கொண்டார்.*

*1️⃣7️⃣🔷🔶தூத்துக்குடி மாநகராட்சியில் டெங்கு தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு நடவடிக்கையாக புகை மருந்து நாள்தோறும்  அடிக்கபட்டு வருகிறது.*

 *1️⃣8️⃣🔷🔶திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் கோவிட் உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களை சட்டப் பேரவைத் துணைத் தலைவர் திரு கு.பிச்சாண்டி நேரில் வழங்கினார்.*
 
 *1️⃣9️⃣🔷🔶கன்வர்ஜன்ஸ் எனர்ஜி சர்வீசஸ் நிறுவனத்துடன் மின்னணு இயக்கத்திறன் ஒப்பந்தங்களில் தேசிய நீர்மின் கழகம் கையெழுத்திட்டது.*

 *2️⃣0️⃣🔷🔶தருமபுரி மாவட்டம் தொட்டம்பட்டி கிராமத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி குழந்தைகள் முதல் பெரியவர் வரை மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.*

*🔷🔶அச்சாரம்!*

நுழைவுத்தேர்வு நடத்துவதிலிருந்து விலக்கு பெற
மாநில பாடத்திட்டத்தில் + 2 தேர்வுகள் இரத்து.

*✍️சென்னை, ஜூன் 6 : தமிழ்நாட்டில் மாநில பாடத் திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவிருந்த மாணவர்களுக்கு, பொதுத் தேர்வு நடத்தப்படாது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.*

மாணவர்களின் உடல் நலம் மற்றும் மன நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசின் செய்தியறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

கொரோனா இரண்டாம் அலை மாநிலத்தின் பல பகுதிகளில் இன்னும் தீவிரமாகவே இருந்து வருவதாலும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த இயலும் என்பதாலும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மாணவர்களை தேர்வு எழுத அழைப்பது நோய்த்தொற்றினை அதிகரிக்கச் செய்யலாம் என்பதை கருத்தில் கொண்டும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பதாக அவ்வறிக்கையில் குறிபிடப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் தான் மத்திய அரசு சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்துக்கான 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்தது. அதனைத் தொடர்ந்து தற்போது பல்வேறு மாநில அரசுகளும், தங்கள் மாநில பாடத்திட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யத் தொடங்கின.

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டுதான் கல்லூரிகளில் சேர்க்கைகள் நடைபெறுகின்றன. அதை தமிழ்நாடு அரசும் வழி மொழிந்துள்ளது. 

இந்நிலையில் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதை ஆராய, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில், உயர்கல்வித் துறை செயலாளர், சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும்.

இக்குழு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து ஆய்வு செய்து, விரைவில் அரசுக்கு ஓர் அறிக்கையைச் சமர்பிக்கும். அதன் அடிப்படையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் வழங்கப்படுமென தமிழ்நாடு அரசு குறிப்பிட்டிருக்கிறது.

அந்த மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே தமிழக உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை நடைபெறும் எனவும் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு.

உயர்கல்விக்காக நடத்தப்படும் பல்வேறு நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வலியுறுத்தி, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழ்நாட்டில் அதிமுக மற்றும் பாஜக தவிர்த்து அனைத்துக் கட்சித் தலைவர்களும், பெற்றோர்களில் 60 % பேரும், பனிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள் அவசியமென்றும், அதுவே, கற்றலின் திறனறியும் உன்னத வழியென்றும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இருப்பினும், நோய்த்தொற்றின் வீரியம் சிறிது சிறிதாக குறைந்து வருவதாலும், பதினோரு மாவட்டங்களில் இன்னமும் இரண்டாம் அலையின் தாக்கம் இருப்பதால் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் இரத்து அறிவிப்பு வெளியாகியுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாநில கல்வித் திட்டத்தின் அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதென்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நீட் தேர்வை நடத்துவது உகந்தது அல்ல என்று ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது, வரவேற்கத்தக்கது என்று பெற்றோர்கள் கருத்து தெரிவித்தனர.

🔷🔶கிட்டுமா?

உச்சநீதிமன்றம் எழுப்பிய வினாக்களுக்கு விடை?
*தடுப்பூசிகள் போட 35,000 கோடியா?*

*✍️சென்னை, ஜூன் 06 : கொரோனா, தடுப்பூசி இவையிரண்டும் ஒலிக்காத நாளில்லை.*

 கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில், கையாளப்படும் செயல்பாடுகள் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துக்கொண்ட வழக்கை விசாரித்து வருகிறது.

இந்த வழக்கின் விசாரணை கடந்த புதனன்று வந்தபோது, உச்சநீதிமன்றம், ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்து அடுக்கடுக்கான வினாக்களை எழுப்பி, பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

அதுதருணம், 18 லிருந்து 44 வயதுடையோருக்குத் தடுப்பூசிகள் போடுவதற்கு கட்டணம் என்ற ஒன்றிய அரசின் கொள்கை, தன்னிச்சையானது மட்டுமின்றி தெளிவான சிந்தனையற்றது எனக் கூறியுள்ளது.

மேலும், நிர்வாகக் கொள்கைகளால் குடிமக்களின் அரசியலமைப்பு உரிமைகள் மீறப்படும் போது, நீதிமன்றங்கள் அமைதியான பார்வையாளராக இருப்பதை நமது அரசியலமைப்பு அனுமதிக்காது எனத் தெரிவித்துள்ளது.

தடுப்பூசிகள் வாங்குவதற்காக ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட 35,000 கோடி ரூபாய் இதுவரையில் எவ்வாறு செல்விடப்பட்டுள்ளது என்பதையும், 18 லிருந்து 44 வயதுடையோருக்குத் தடுப்பூசிகள் போடுவதற்கு அந்த 35,000 கோடி ரூபாயை ஏன்? செலவிடக்கூடாது என்பதையும் விளக்கமாக தெளிவுப் படுத்துமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

அதேபோன்று, இதுநாள் வரை கோவாக்ஸின், கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் கொள்முதலுக்காகத் தரப்பட்ட கொள்முதல் உத்தரவுகளின் நாள் வாரியாக விவரங்களையும், இது வரை எத்தனை தடுப்பூசி குப்பிகள் *(Multi dose Vial)*  வாங்கிட உத்தரவு தரப்பட்டுள்ளதையும், அவை எப்போது கிட்டும் உள்ளிட்ட விடயங்களையும் சமர்ப்பிக்க ஒன்றிய அரசுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இது தவிர இந்தாண்டு டிசம்பர் 31 தேதி வரை தடுப்பூசி எவ்வாறு கிட்டுமென்பதையும் தெரிவிக்கவும், கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகள் கிடைப்பதையும் உறுதி செய்திட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்குமாறு ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதுமட்டுமின்றி, மாநிலங்களிலும், ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட மாநிலங்களிலும் தடுப்பூசிகள் இலவசமாகப் போடப்படுகிறதா?  என்பது தொடர்பாக அந்தந்த மாநில மற்றும் ஒன்றிய ஆளுகைக்குட்ப்பட்ட மாநில அரசுகளும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் அடுக்கடுக்காக எழுப்பியுள்ள வினாக்களுக்கு ஒன்றிய அரசு விடையளிக்க வேண்டுமென, ஒன்றிய அரசின் மேனாள் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளதை வரவேற்பதாகவும், இவ்விடயத்தில் ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து வந்த மத்திய அரசு, தற்போது உச்சநீதிமன்றத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், தடுப்பூசி விவகாரத்தில் அரசாங்கத்தின் உறுப்பினர்கள் யாரும் பொறுப்பேற்க மாட்டார்களா என கேள்வி எழுப்பியுள்ள ப.சிதம்பரம், மக்களுக்கோ, மக்களால் தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்றத்துக்கோ பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்ற மோடி அரசின் நம்பிக்கையின் மற்றுமொரு உதாரணம்தான் இது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த வியாழனன்று, இந்தியா டுடே சேனலில் ராஜ்தீப் சர்தேசி நடத்திய விவாதத்தில், தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார். இதில் தடுப்பூசிக்கு யார் காசு கொடுக்க வேண்டும், மாநில அரசு கொடுக்க வேண்டுமா? அல்லது ஒன்றிய அரசு கொடுக்க வேண்டுமா? என்று கேள்வி வைக்கப்பட்டது.

இந்த விவாதத்தின் போது பதிலளித்த தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், ஒன்றிய அரசுக்கு பணம் எங்கிருந்து வருகிறது என்ற கேள்வி உள்ளது. ஒன்றிய அரசுக்கு பணம் எங்கிருந்து வருகிறது. வானத்தில் இருந்து வந்துவிடவில்லை. ஒன்றிய அரசுக்கு வரும் பணம் எல்லாம் மாநில அரசின் வரிதான். இது மக்களின் பணம்.

குஜராத் முதல்வராக இருந்த போது மோடி சொன்னதைத்தான் நான் இப்போதும் சொல்கிறேன். இது ஒன்றிய அரசின் பணம் கிடையாது. இது மாநில அரசு வழங்கும் மக்களின் பணம். மக்களின் பணத்தை வசூலித்து மாநில அரசு ஒன்றிய அரசுக்கு வழங்குகிறது. இதை யார் எப்படி செலவழித்தாலும் மக்களின் பணம் என்பதை முதலில் ஒன்றிய அரசு உணர வேண்டும்.

ஒன்றிய அரசு ஒன்றும் தங்கள் பரம்பரை சொத்துக்களை மக்களுக்கு செலவு செய்யவில்லை. மக்களிடம் வாங்கிய பணத்தை, மாநிலங்களிடம் வாங்கிய பணத்தை சரியாக, முறையாக செலவு செய்யுங்கள். தடுப்பூசி போடுவதற்கு ஒழுங்காக செலவு செய்யுங்கள் என்றுதான் கூறுகிறோம். ஒன்றிய அரசுதான் உலகம் முழுக்க ஒப்பந்தபுள்ளிகளை கோரி, அதை செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியும்.

சர்வதேச ஒப்பந்தங்களை மேற்கொள்வதில் ஒன்றிய அரசுக்கு மட்டுமே அதிக சக்தி இருக்கிறது. மாநில அரசு வெளிநாட்டு கடன்களை பல நாடுகளில் இருந்து வழங்க முடியாதென்று குறிப்பிட்டது பெரும் பேசும் பொருளானது என்பது குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசிகள் விவகாரத்தில் கடந்த 31.05.2021 அன்று உச்சநீதிமன்றத்தில், நீதியரசர் சந்திரசூட் தலைமையிலான அமர்வு எழுப்பிய கருத்துகள் தொடர்பாக கடந்த 02.06.2021 அன்று வணக்கம் தமிழ்நாடு இதழில் விரிவாக எழுதியிருந்தோம்.

தடுப்பூசிகள் விவகாரம் தொடர்பாக மருந்தியல் துறை  பேராசிரியராக நீண்ட நாள் பணியாற்றி ஓய்வுபெற்ற மருத்துவர் தன் அடையாளத்தை வேண்டாமென்று கூறிவிட்டு பகிர்ந்த செய்திகள் அதிர்ச்சிகரமானவை. 

ஒரு தெளிவான திட்டமிடலின்றி, தடுப்பூசிகள் உற்பத்தித்திறனுக்கு உட்பட்டு கால அட்டவணையின்றி  முன்னுக்குப்பின் அறிவிப்புகள், இந்தியாவில் தடுப்பூசி குப்பிகள் தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாரத் பையோடெக் நிறுவனங்களுக்கு அனுமதியளித்த மத்திய அரசு, உற்பத்தி முழுதும் இந்திய மக்களுக்கு வழங்க வேண்டுமென்ற நிபந்தனையை விதிக்காது, மேற்படி நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு 50 % விழுக்காடு உற்பத்தியை ஏற்றுமதி செய்ய அனுமதித்துள்ளது மிகவும் கண்டனத்துக்குரியது. இந்நிலையில் இதுவரை 3.3 % மக்களுக்கு மட்டுமே முழுமையாக இரண்டு கட்டமாக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிலையில் முழுமையாக  80 % மக்களுக்கு தடுப்பூசி போட்டு முடிக்க குறைந்தபட்சம் நான்காண்டுகள் ஆகும். கோவிஷில்ட் தடுப்பூசி இரண்டாவது டோஸ் போட குறிப்பிட்ட கால இடைவெளியை தீடிரென்று மாற்றி 88 நாட்கள் கழித்துப் போடலாமென்பது கேலிக்குரிய ஒன்றாகும். மேலும், ஏற்கனவே, கண்டுபிடிக்கப்பட்டு அனுமதியளித்துள்ள தடுப்பூசிகள் கொரோனாவின் முதல் நுண்ணுயிர் கிருமியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. இது உருமாறிய கொரோனா நுண்ணுயிர் கிருமிகளை எதிர்த்து வினையாற்றும் ஆற்றல் மிக்கதா என்று இது நாள் வரை தெளிவுபடுத்தபடவில்லை. மேலும், திடீரென்று கோவிஷில்டு சிங்கிள் டோஸ் போட்டால் மட்டும் போதமானதென்று முடிவெடுத்துள்ளதாக வரும் செய்திகள் குறித்தும் இந்திய மருத்துவக்கழகம் தெளிவுப்படுத்த  வேண்டும்" என்று கூறியது பெரும் அதிர்ச்சியைத் தந்தது.

இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களில், குறைந்த பட்சம் நூறு கோடி பேருக்கு தடுப்பூசிகள் இரண்டு கட்டமாக போட தேவைப்படும் தடுப்பூசி குப்பிகள் (Multidose Vial) இருபது கோடி குப்பிகள் மட்டுமே!

அதாவது, பத்து நபர்களுக்கு ஒரு தடுப்பூசி குப்பி என்ற அடிப்படையில் ( 100,00,00,000 ÷ 10 × 2 = 20,00,00,000)

தற்போது கோவிஷில்ட் தடுப்பூசி குப்பியின் விலை ஒன்றிய அரசுக்கு ₹150/- ; மாநில அரசுகளுக்கு ₹ 400/- ; தனியார் மருத்துவமனைகளுக்கு ₹ 600/- என்று நிர்ணயித்துள்ளது.

கோவாக்ஸின் தடுப்பூசி விலை ஒன்றிய அரசுக்கு ₹ 150/- என்றும், மாநில அரசுகளுக்கு ₹600/-என்றும், தனியார் மருத்துவமனைகளுக்கு ₹ 1,200/- என்றும் உயர்த்தி அறிவித்தது.

எனவே, ஒன்றிய அரசே தடுப்பூசிகளை கொள்முதல் செய்து அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். 

ஒன்றிய அரசே கொள்முதல் செய்யும் பட்சத்தில் இருபது கோடி தடுப்ப்பூசி  குப்பிகளுக்கு ₹ 150/- வீதம் மூன்றாயிரம் கோடி ரூபாய் மட்டுமே போதுமானது.

எனவே, தடுப்பூசிகள் கொள்முதல் உத்தேச கால அட்டவணை, அதிகபட்ச கொள்முதல் விலை, இதற்காக ஏற்படும் உத்தேச செலவினம் அனைத்துக்கும் உரிய விளக்கங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டியது ஒன்றிய அரசின் பிரதமர் மோடி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் ஆகியோரின் தலையாயக் கடமையாகும்.

உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ள வினாக்களுக்கு ஒன்றிய அரசு கட்டுப்பட்டு தடுப்பூசிகள் விடயத்தில் அணுகுவதே மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதமர் மோடியின் அரசுக்கு அழகு.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு பிரதமர் மோடி அரசின் பதிலென்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

🔷🔶2ம் அலையே முடியாத நிலையில் இந்தியாவை கொரோனா 3-வது அலை வருகிற செப்டம்பர் மாதம் தாக்கும்: நிதி ஆயோக் எச்சரிக்கை

✍️டெல்லி: கொரோனா தொற்றின் இரண்டாம் அலையிலிருந்தே மீளாத இந்தியாவை கொரோனா 3-வது அலை வருகிற செப்டம்பர் மாதம் தாக்கும் என நிதி ஆயோக் எச்சரித்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.சரஸ்வத், இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையை மருத்துவ நிபுணர்கள் சிறப்பாக கையாண்டு வருகின்றனர்.

ஆனால் தொடக்கத்தில் ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரண தட்டுப்பாடு இருந்தது. தற்போது அவை சரி செய்யப்பட்டு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் புதிய தொற்று எண்ணிக்கை சரிந்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலையும் தவிர்க்க முடியாது என நிபுணர்கள் மிகவும் தெளிவாக கூறிவருகின்றனர். அதன்படி 3வது அலை செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் தொடங்கும். எனவே அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.

கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கையில், இந்தியா, அமெரிக்காவையும் விஞ்சி விட்டது. அமெரிக்காவில் 16 புள்ளி 9 கோடி பேருக்கு முதல் டோஸ் போடப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் அந்த எண்ணிக்கை 17 புள்ளி 2 கோடியாக உள்ளது என நிதி ஆயோக் அமைப்பு தெரிவித்துள்ளது...

🔷🔶தமிழகம் முழுவதிலும் 46 எஸ்பிக்கள் அதிரடி மாற்றம்.. முழு விபரம்..


*✍️தமிழகத்தில் 46 எஸ்பிக்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.. இதன் விபரம்…*

1. திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. ஆகப் பதவி வகித்த பி.விஜயகுமார் மாற்றப்பட்டு, செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. சைபர் பிரிவு எஸ்.பி.-1 ஆகப் பதவி வகிக்கும் எம்.சுதாகர் மாற்றப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. சிபிசிஐடி சைபர் செல் பிரிவு எஸ்.பி. சிபிச்சக்கரவர்த்தி மாற்றப்பட்டு, திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

4. நாகப்பட்டினம் மாவட்ட எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனா மாற்றப்பட்டு, ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

5. திருச்சி நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பதவி வகிக்கும் அல்லாடி பவன் குமார் ரெட்டி மாற்றப்பட்டு, திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

6. மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா மாற்றப்பட்டு, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

7. நாமக்கல் மாவட்ட எஸ்.பி. சக்தி கணேசன் மாற்றப்பட்டு, கடலூர் மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

8. சேலம் நகர குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் பா.மூர்த்தி மாற்றப்பட்டு திருச்சி மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

9. திருப்பூர் நகரத் தலைமையிடத் துணை ஆணையர் சுந்தரவடிவேல் மாற்றப்பட்டு, கரூர் மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

10. சென்னை அமலாக்கப் பிரிவு எஸ்.பி. மணி மாற்றப்பட்டு பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

11. காத்திருப்போர் பட்டியலில் இருந்த பெரோஸ் கான் அப்துல்லா மாற்றப்பட்டு, அரியலூர் மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

12. பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. நிஷா பார்த்திபன் மாற்றப்பட்டு, புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

13. நெல்லை நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பி.ஆர்.ஸ்ரீனிவாசன் மாற்றப்பட்டு, திருவாரூர் மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

14. காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி. ஜவஹர் மாற்றப்பட்டு, நாகப்பட்டினம் மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

15. தென்காசி மாவட்ட எஸ்.பி. சுகுணாசிங் மாற்றப்பட்டு, மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

16. டெல்லியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு போலீஸ் எட்டாவது பட்டாலியன் கமாண்டன்ட் பதவி வகிக்கும் ஆஷிஸ் ராவத் மாற்றப்பட்டு, நீலகிரி மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

17. காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி. சசிமோகன் மாற்றப்பட்டு, ஈரோடு மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

18.கரூர் மாவட்ட எஸ்.பி. செஷாங் சாய் மாற்றப்பட்டு, திருப்பூர் மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

19. கடலூர் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீ அபிநவ் மாற்றப்பட்டு, சேலம் மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

20. சென்னை சைபர் கிரைம் பிரிவு-3 எஸ்.பி.யாகப் பதவி வகித்த சரத்குமார் தாகூர் மாற்றப்பட்டு, நாமக்கல் மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

21. போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி. கலைச்செல்வன் மாற்றப்பட்டு, தருமபுரி மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

22. தேனி மாவட்ட எஸ்.பி. சாய்சரண் தேஜஸ்வி மாற்றப்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

23. அரியலூர் மாவட்ட எஸ்.பி., பி.பாஸ்கரன் மாற்றப்பட்டு, மதுரை மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

24. சென்னை காவலர் நலன் ஏஐஜி மனோகர் மாற்றப்பட்டு, விருதுநகர் எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

25. திருச்சி ரயில்வே போலீஸ் எஸ்.பி., டி.செந்தில்குமார் மாற்றப்பட்டு, சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

26. காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி. டோங்க்ரா பிரவீன் உமேஷ் மாற்றப்பட்டு, தேனி மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

27. காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி., ஆர்.கிருஷ்ணராஜ் மாற்றப்பட்டு, தென்காசி மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

28 ஈரோடு மாவட்ட எஸ்.பி. ஆகப் பதவி வகிக்கும் தங்கதுரை மாற்றப்பட்டு, மதுரை நகர சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

29. கோயம்புத்தூர் நகர சட்டம்-ஒழுங்கு துணை ஆணையர் ஸ்டாலின் மாற்றப்பட்டு, மதுரை நகரத் தலைமையிடத் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

30. சென்னை விரிவாக்கப் பிரிவு ஏஜி ஈஸ்வரன் மாற்றப்பட்டு, மதுரை நகரப் போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

31. கோயம்புத்தூர் நகரத் தலைமையிடத் துணை ஆணையர் பி.ஜெயச்சந்திரன் மாற்றப்பட்டு, கோயம்புத்தூர் நகர சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

32. சென்னை போலீஸ் அகாடமி நிர்வாகப் பிரிவு துணை இயக்குநர் பதவி வைக்கும் செல்வராஜ் மாற்றப்பட்டு, கோவை நகரத் தலைமையிடத் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

33. சென்னை, பூந்தமல்லி தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை எட்டாவது பிரிவு கமாண்டன்ட் எஸ்.ஆர்.செந்தில்குமார் மாற்றப்பட்டு, கோவை நகரப் போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

34. சென்னை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி. சக்திவேல் மாற்றப்பட்டு, திருச்சி நகர சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

35. கோவை நகரப் போக்குவரத்து துணை ஆணையர் பதவி வகிக்கும் முத்தரசு மாற்றப்பட்டு, திருச்சி நகரக் குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

36. சென்னை லஞ்ச ஒழிப்புப் பிரிவு மேற்குப் பிரிவு எஸ்.பி. மோகன்ராஜ் மாற்றப்பட்டு, சேலம் நகர சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

37. திருச்சி நகர குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையர் வேதரத்தினம் மாற்றப்பட்டு, சேலம் நகர குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

38. திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. அரவிந்த் மாற்றப்பட்டு, திருப்பூர் நகர சட்டம்- ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

39. சென்னை சிபிசிஐடி-3 எஸ்.பி. ரவி மாற்றப்பட்டு, திருப்பூர் நகர குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

40.சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ராஜராஜன் மாற்றப்பட்டு, நெல்லை மாவட்ட சட்டம்- ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

41. திருப்பூர் நகர சட்டம்-ஒழுங்கு குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையர் சுரேஷ்குமார் மாற்றப்பட்டு, நெல்லை நகர குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

42. சென்னை, பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு-2 எஸ்.பி. ஆகப் பதவி வகிக்கும் தில்லை நடராஜன் மாற்றப்பட்டு, சென்னை சிபிசிஐடி-3 எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

43. ஆவின் விஜிலன்ஸ் எஸ்.பி. ஆகப் பதவி வகிக்கும் ரோஹித்நாதன் ராஜகோபால் மாற்றப்பட்டு, சென்னை சிபிசிஐடி சைபர் பிரிவு எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

44. கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. ஆகப் பதவி வகிக்கும் பண்டி கங்காதர் மாற்றப்பட்டு, சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

45. சென்னை தலைமையிட ஏஐஜி வி.எஸ்.ஷியாமளாதேவி மாற்றப்பட்டு, சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை மத்தியப் பிரிவு எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

46. திருச்சி மாவட்ட எஸ்.பி. ஆகப் பதவி வகிக்கும் மயில்வாகனன் மாற்றப்பட்டு சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை மேற்குப் பிரிவு எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

🔷🔶கொரோனா ஊரடங்கு காலத்தில் தினமும் 1000 பேருக்கு உணவு:* நண்பர்கள் குழு அசத்தல்

✍️பெரம்பூர்: சென்னை பெரம்பூர் வீனஸ் பகுதி அருகேயுள்ள தில்லைநாயகம் பிள்ளை தெருவை சேர்ந்த இளைஞர்கள் 25க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் ஒத்துழைப்போடு தினமும் ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி வருகின்றனர். காலை 7 மணிக்கு உணவு சமைக்க ஆரம்பிக்கும் இளைஞர்கள் 11 மணிக்குள் உணவை சமைத்து முடித்து மதியம் 1 மணி வரை சென்னையில் பல்வேறு இடங்களுக்கு சென்று வழங்கி வருகின்றனர்.  குறிப்பாக, சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் உள்ள தூய்மைப்பணியாளர்கள், மருத்துவமனைகளில் வேலை செய்யும் செவிலியர்கள், சாலையோரங்களில் வசிப்பவர்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் விதவிதமான உணவு தயார் செய்து வழங்குகின்றனர்.  இதுகுறித்து நண்பர் குழு நிர்வாகி கூறுகையில், ‘‘நாங்கள் காலையில் தினமும் எழுந்து சமைப்பதற்காக  5 மணிநேரம் கஷ்டப்படுவது 1000 பேரின் பசியை போக்குகிறது. சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் எங்களுக்கு உதவி செய்து வருகின்றனர். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 40 ஆயிரம் ரூபாய் எங்களது பணத்தை செலவு செய்து பொதுமக்களுக்கு உணவு வழங்கி வருகிறோம்.  நாங்கள் நல்ல வேலையில் இருப்பதால் பணத்தை பற்றி கவலைப்படாமல் கொரோனா பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு உதவி செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் விளம்பரமின்றி செய்து வருகிறோம்’’ என்றார்....

🔷🔶நாளை  முதல் தளா்வுகளுடன் பொது முடக்கம்; 11 மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

✍️கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்தப் பொது முடக்கமானது வரும் திங்கள்கிழமை (ஜுன் 7) முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

நோய்த் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கு ஒரு சில தளா்வுகளே அளிக்கப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது, இந்த மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 27 மாவட்டங்களில் தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட உத்தரவில், கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் ஜூன் 30-ஆம் தேதி வரை தொடா்ந்து அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்றை தடுக்கும் பொருட்டு சட்டப் பேரவைக் கட்சிகளின் உறுப்பினா்கள், மருத்துவ வல்லுநா்கள் மற்றும் அரசு உயா் அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதன்படி, ஜூன் 7-ஆம் தேதி காலை 6 மணி வரை தளா்வுகள் இல்லாத முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்த முழு பொது முடக்கம் நிறைவுக்கு வரும் நிலையில், கரோனா நோய்த் தொற்று நிலவரம் மாவட்ட வாரியாக ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வின் அடிப்படையில், முழு பொது முடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட உள்ளன. இந்தத் தளா்வுகள், நோய்த் தொற்று அதிகமுள்ள மாவட்டங்களுக்கு குறைவாகவும், இதர மாவட்டங்களுக்கு சற்று கூடுதலாகவும் வழங்கப்பட உள்ளன.

🏵️தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் அளிக்கப்பட்டுள்ள பொதுவான தளா்வுகள் என்ன?

1. தனியாகச் செயல்படும் மளிகை, பலசரக்குக் கடைகள், காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்.

2. காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

3. மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். மீன் சந்தைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகங்கள் உடனடியாகச் செய்ய வேண்டும்.

4. இறைச்சிக் கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.

5. அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளா்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

6. சாா்பதிவாளா் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவீத டோக்கன்களை மட்டும் வழங்கி பத்திரப் பதிவுகள்
மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

7. தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீதம் பணியாளா்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்படும்.

கோயம்புத்தூா், நீலகிரி, திருப்பூா், ஈரோடு, சேலம், கரூா், நாமக்கல், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம்,

மயிலாடுதுறை மாவட்டங்களில் நோய்த் தொற்று பரவல் அதிகமாக இருக்கிறது. எனவே, இந்த மாவட்டங்களில் மட்டும் கீழ்க்கண்ட தளா்வுகளுக்கு அனுமதி இல்லை.

நோய்த் தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் அளிக்கப்பட்டுள்ள கூடுதல் தளா்வுகள்: (இந்தத்

🏵️தளா்வுகளுக்கான நேரம் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை)

1. தனியாா் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள், அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இணைய பதிவுடன் அனுமதிக்கப்படும்.

2. மின் பணியாளா், பிளம்பா்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவா் மற்றும் தச்சா் போன்ற சுயதொழில் செய்பவா்கள் இணைய பதிவுடன் பணிபுரியலாம்.

3. மின்பொருள்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயா்கள் விற்பனைக் கடைகள் அனுமதிக்கப்படும்.

4. சைக்கிள்கள், இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் மட்டும் செயல்படலாம். விற்பனை நிலையங்களுக்கு அனுமதியில்லை.

5. வன்சாதனங்களை (ஹாா்டுவோ்) விற்பனை கடைகள் இயங்கலாம்.

6. வாகனங்களின் உதிரி பாகங்கள் விற்பனை கடைகள்.

7. கல்விப் புத்தகங்கள், எழுது பொருள்கள் விற்பனை கடைகள்.

8. வாகன விநியோக நிலையங்களில் பழுது பாா்க்கும் மையங்கள் மட்டும் செயல்படலாம்.

9. வாடகை வாகனங்கள், டாக்ஸிகள், ஆட்டோக்களில் பயணிகள் இணைய பதிவுடன் செல்லலாம். மேலும், வாடகை டாக்ஸிகளில் ஓட்டுநா் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில், ஓட்டுநா் தவிர இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படும்.

🏵️பொதுவான அனுமதிகள் என்ன?

நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடா்புடைய மாவட்ட ஆட்சியா்களிடம் இருந்து இணைய அனுமதிச் சீட்டு (இ-பாஸ்) பெற்று பயணிக்க வேண்டும்.

கோவை, திருப்பூர் சேலம், கரூா், ஈரோடு, நாமக்கல், திருச்சி, மதுரை மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், அவற்றுக்கு இடுபொருள் தயாரித்து அளிக்கும் நிறுவனங்கள், ஏற்றுமதி உத்தரவு வைத்துள்ளோா், ஏற்றுமதி தொடா்பான பணிகளுக்காகவும், மாதிரிகள் அனுப்பும் வேலைகளுக்காகவும் மட்டும் 10 சதவீத பணியாளா்கள் அனுமதிக்கப்படுகிறாா்கள்.

நடமாடும் காய்கறி-பழ விா்பனை வாகனங்கள்: தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் ஆகியன விற்பனை செய்யும் நடைமுறை தொடா்ந்து செயல்படுத்தப்படும். மக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருள்களைப் பெறலாம். இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கடைகளுக்குச் செல்வதைத் தவிா்க்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.

🏵️9 வகையான கூடுதல் தளா்வுகளைப் பெற்ற 27 மாவட்டங்கள்:

அரியலூா், செங்கல்பட்டு, சென்னை, கடலூா், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, கன்னியாகுமரி, பெரம்பலூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தேனி, திருவள்ளூா், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்தூா், திருவண்ணாமலை, வேலூா், விழுப்புரம், விருதுநகா்.

🏵️தளா்வுகளைக் குறைவாக பெற்ற 11 மாவட்டங்கள்:

கோயம்புத்தூா், நீலகிரி, திருப்பூா், ஈரோடு, சேலம், கரூா், நாமக்கல், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை.

0 Response to "6.6.2021 இன்றைய காலை முக்கியச் செய்திகள்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel