ஆசிரியர் தினக்கவிதை

Trending

Breaking News
Loading...

ஆசிரியர் தினக்கவிதை

ஆசிரியர் தினக்கவிதை
அன்புப் பகிர்வு
_________________
பிஞ்சு வயதில்
அகரம் சொல்லிக் கொடுத்த முதல் வகுப்பு
ஆசிரியரின் கிளையாய் நான்
விருட்சமாய் நீங்கள்
கள்ளமற்ற புன்னகையோடு
கணிதமும் கற்றுக்கொடுத்து
எழுத்துகளை எளிமையாய்ச் சொல்லி
சமூகவியலை தோட்டத்தில் ஆரம்பித்து
எண்ணப் பறவையை
உசுப்பிவிட்டே
ஏணியாய் இருந்து
நான் ஆசிர்வதிக்கப்பட
நீங்கள் செய்த தவங்கள்
நினைக்கும்போது
ஆசுவாசமாய் இனிக்கிறது
ஒரு கனவைப் போல
இன்று நினைவில்  வரிசையாய்
உங்கள் நல்லெண்ணங்கள்
தொடக்க வகுப்பு அச்சாணியாய்
திரைச்சீலை விலக்கி வைத்தாற் போல
உயர்கல்வி சொல்லிக் கொடுத்த
சில ஆசிரியர்கள்
அடர்மௌனத்தாலும் சிலர்
அதிர்ந்து அறைந்தும் சிலர்
சிலர் சுமைதாங்கியென சிலர்
பசுமரத்தாணி போல
பதிய வைத்தும்
உங்கள் முகங்களில்
நான் காணும் சுவடுகள்
குழந்தையின் நிசப்தத்தினூடே
தொங்கிக் கொண்டிருக்கிறீர் என்னுடன்
நினைவு அறைகளில்
நீங்கள் இன்றி நானில்லை
வாழ்க்கைக்கு வழி காட்டிய
வள்ளலல்களே அன்பைத் தருவதைவிட
வேறென்ன நல்ல கைம்மாறு
அனைத்து அன்னையர்களுக்கும்
அப்பாக்களுக்கும்
உடன் பணியாற்றும்
சமூகப் பொறுப்புள்ள
சகத் தோழர்களுக்கும்
இனிய ஆசிரியர் தின
நல்வாழ்த்துக்கள்
உரிமையுடன்
மயிலம் இளமுருகு
mailamilamurugu@gmail.com

0 Response to "ஆசிரியர் தினக்கவிதை"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel