05.06.2021 தமிழகத்தின் இன்றைய 42 முக்கிய செய்திகள்

Trending

Breaking News
Loading...

05.06.2021 தமிழகத்தின் இன்றைய 42 முக்கிய செய்திகள்

05.06.2021 தமிழகத்தின் இன்றைய 42 முக்கிய செய்திகள்

1. 1️⃣🔷🔶சென்னை: தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதா? ரத்து செய்வதா? என்பது குறித்து சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனைக்கூட்டத்தில் சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்ற கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்

2. 🔷🔶சென்னை: தமிழ்நாட்டில் நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலை குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், தமிழ்நாட்டில்  மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

3. 🔷🔶சென்னை: சென்னை கஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனை செவிலியர் ஜெயக்குமாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். மருத்துவமனை தீ விபத்தில் இருந்து பச்சிளம்குழந்தைகள், தாய்மார்கள் உள்பட 47 பேர் உயிர்களை காப்பாற்றியதற்காக பாராட்டியுள்ளார்.

4. 🔷🔶மயிலாடுதுறை: மணல்மேடு அருகே சித்தமல்லி கிராமத்தில் புகுந்த ராட்சத முதலையை கிராம மக்கள் பிடித்துள்ளனர். வனத்துறையினருக்கு உரிய தகவல் அளித்தும் அதிகாரிகள் வராமல் காலம் தாழ்த்துவதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.

5. 🔷🔶சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.90 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 60.89 டிஎம்சியாக இருக்கிறது. அணைக்கு நீர்வரத்து 555 கனஅடியாக குறைந்தது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

6. 🔷🔶கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை உருவாக்க 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கல்லூரி கல்வி இயக்குனர் பூர்ணசந்திரன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு ஜூன் 11ல் அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கலை மற்றும் அறிவியல், கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய கட்டுப்பாடுடன் கூடிய விதிகள் உருவாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

7. 🔷🔶சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ரூ.36,920 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 30 உயர்ந்து ரூ.4,615-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.76.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

8. 🔷🔶சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் ஓ.பன்னீர்செல்வத்துடன் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துள்ளார். அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் நேற்று ஈபிஎஸ் தனியாக ஆலோசனை நடத்திய நிலையில் சந்தித்துள்ளார். தனக்கும், ஓபிஎஸ்க்கும் இடையே கருத்து வேறுபாடு இல்லை என கூறிய நிலையில் சந்திப்பு நடந்துள்ளது. சகோதரர் மறைவுக்கு துக்கம் விசாரிக்க ஓபிஎஸ்சை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

9. 🔷🔶சென்னை: தமிழகத்தில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  7ம் தேதி காலை 6 மணியுடன் முடியவிருந்த நிலையில் தமிழகத்தில் 14ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

10. 🔷🔶சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் ஜூன் 14ம் தேதி வரை பேருந்து போக்குவரத்துக்கு தடை நீடிக்கும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தொற்று குறைவான பகுதிகளில் மளிகை, காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இ-பதிவு பெற்று வாடகை கார்களில் 3 பயணிகள், ஆட்டோக்களில் 2 பயணிகள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

11. 🔷🔶டெல்லி: குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்த ப்ளூ டிக் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனை துணை குடியரசுத் தலைவர் அலுவலகமும் உறுதி செய்துள்ளது. குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு 2 ட்விட்டர் பக்கத்தை பயன்படுத்தி வருகின்றார்.

12. 🔵 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணியை தொடங்குங்கள்... மோடிக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்.

13.சென்னை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதற்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்கு பணிகளை செயல்படுத்துவதற்காக முழு அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

14. 🔵 சட்டசபை தேர்தல்: உ.பி. யோகி ஆதித்யநாத்துக்கு செக்- துணை முதல்வராக்கி களமிறக்கப்படும் ஏ.கே. சர்மா.

15. லக்னோ: அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு செக் வைக்கும் வகையில் பிரதமர் மோடியின் வலதுகரமான ஏ.கே. சர்மா களமிறக்கப்பட உள்ளார். ஏ.கே. சர்மாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படக் கூடும் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

16. கொழும்பு: இலங்கையில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். 7 பேரைக் காணவில்லை.

17. வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சுமார் 5 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

18. இந்தியப் பெருங்கடலை ஒட்டியிருக்கும் இலங்கையின் 6 மாவட்டங்களில் வியாழக்கிழமை முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டு, வீடுகள், வேளாண் நிலங்கள், சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

19. இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கி இருவரும், நிலச்சரிவில் இருவரும் பலியாகியுள்ளனர். மேலும் 7 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

20. கரோனா வைரஸ் தொற்றுக்கு இந்தியாவில் நேற்றுவரை 646மருத்துவர்கள் தங்கள் உயிரைப் பறிகொடுத்துள்ளனர்.

21. நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலையில் அதிக பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் பதிவாகி வருகின்றது. இதுவரை3.44 லட்சம்பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

22. இந்நிலையில் இன்று இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்ட செய்தியில், நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின் போது ஜூன் 2 வரை மொத்தம் 646 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலும் 30 முதல் 55 வயதுக்குள்பட்டவர்கள் ஆவார்.

23. அதில் அதிகபட்சமாக தில்லியில் 109, பிகாரில் 97, உத்தரப் பிரதேசத்தில் 79 மருத்துவர்கள் பலியாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

24. ஜுன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை பாசனத்துக்காகத் திறக்கப்படும். தமிழக முதல்வர் அறிவிப்பை வெளியிட்டார். மேட்டூர் அணையைத் திறக்க வரும் 12 அன்று முதல்வர் அங்கு செல்கிறார்.

25. கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவிப்பு வெளியான நாளில் சுமார் 65 டிஎம்சி இருப்பு இருந்தது. அதேபோல் இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு அணையைத் திறக்கும் வகையில் நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளது. மே 26ஆம் தேதி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 97 அடியாக இருந்தது. அணையில் சுமார் 62 டிஎம்சி நீர் இருப்பு தற்போது உள்ளது. ஆகவே மேட்டூர் அணை ஜுன் 12 ஆம் தேதி தன்னுடைய முன்னிலையிலே திறக்கப்படும் என்ற அறிவிப்பை தற்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதனால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

26. புதுடில்லி: 'கோவிட் தொற்றின் 2வது அலையை வென்றுவிட்டதாக முன்கூட்டியே பொய்யான வெற்றியை மத்திய அரசு அறிவித்துவிட்டது ' என, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.

27. கை நரம்புகளை வெட்டி தற்கொலை செய்ய முயன்ற தில்லியைச் சேர்ந்த நபரை, முகநூல் நிறுவனம் தகவல் கொடுத்து, தில்லி காவல்துறைக்கு துரிதமாக செயல்பட்டதால் உயிருடன் மீட்கப்பட்டார்.

28. அமெரிக்காவிலிருந்து, தில்லி காவல்துறைக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுக்கப்பட்டதால், இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான 39 வயது நபர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

29. மேற்கு தில்லி துவாரகாவில் வியாழக்கிழமை இரவு அந்த நபர் கை நரம்புகளை வெட்டி தற்கொலைக்கு முயன்றார். 2016-ஆம் ஆண்டு அவரது மனைவி இறந்த பிறகு, அவரது மனநிலை அவ்வப்போது பாதிக்கப்படுவது வழக்கமாக இருந்ததாம்.

30. இந்த நிலையில், தனது தற்கொலையை முகநூலில் நேரலையாக ஒளிபரப்பியுள்ளார். இதைப் பார்த்த முகநூல் நிறுவனம் தில்லி காவல்துறைக்கு தகவல் கொடுக்க, அந்த முகவரிக்கு அருகே ரோந்துப் பணியில் இருந்த காவலர்கள் அவரது வீட்டுக்கு அனுப்பி, அவரை உயிருடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

31. அமெரிக்காவை விட இந்தியாவில் அதிகம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி: நிதி ஆயோக் மருத்துவர்.

32. சிபிஎஸ்சி, ஐசிஎஸ்இ பள்ளிகளில் 12 வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படும் அறிவிப்பு என்பது அனைத்து பட்ட வகுப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு முறையைத் திணிக்கும் இந்திய அரசின் சூழ்ச்சி என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.

33. இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டிருக்கும் ட்வீட்டில், “சிபிஎஸ்சி, ஐசிஎஸ்இ பள்ளிகளில் 12 வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. தமிழகத்திலும் அதனைப்பின்பற்ற வேண்டாம். அனைத்து பட்ட வகுப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு முறையைத் திணிப்பதற்காகவே இந்த நாடகம். இந்திய அரசின் சூழ்ச்சிக்கு பலியாகவேண்டாம் என தெரிவித்திருக்கிறார். முதலவர் ஸ்டாலினுக்கு டேக் செய்து இந்த பதிவினை அவர் செய்துள்ளார்.

34. CBSE, ICSE பள்ளிகளில் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. #தமிழகத்திலும் அதனைப் பின்பற்ற வேண்டாம். அனத்துப் பட்ட வகுப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு முறையைத் திணிப்பதற்காகவே இந்த நாடகம். இந்திய அரசின் சூழ்ச்சிக்குப் பலியாக வேண்டாம்.@mkstalin

35. டெல்லி: COWIN இணையதளத்தில் தமிழுக்கு இடம் கேட்டதால் மற்ற மொழிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழ் மொழி இடம்பெறாததற்கு கண்டனம் எழுந்த நிலையில் அனைத்து பிராந்திய மொழிகளும் நீக்கப்பட்டு ஆங்கிலம், இந்தி மொழிகள் மட்டுமே தற்போது இடம்பெற்றுள்ளது.

36.திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கடன் தவணை கட்டுமாறு தனியார் வங்கிகள் பொதுமக்களுக்கு நெருக்கடி தருவதாக புகார் எழுந்துள்ளது. கொரோனா காலத்தில் மாத கடன் தவணையை கேட்டு துன்புறுத்துவதாக திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் தெரு, நாராயணபிள்ளை தோட்டம் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

37. டெல்லி: தகவல் தொடர்பு சட்டப்படி செயல்பட வேண்டும் என்று ட்விட்டருக்கு இந்திய அரசு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. சட்டப்படி செயல்படாவிட்டால் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று ட்விட்டருக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

38. சென்னை: சென்னை மாவட்ட பள்ளி ஆசிரியர்கள் ஜூன் 20ம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தடுப்பூசி போட வேண்டும். கொரோனா தடுப்பூசி போடாதவர்களின் காரணத்தை ஆதாரத்துடன் பெற்று வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

39.🔵 நீட் தேர்வு பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய நீதிபதி ராஜன் தலைமையில் குழு- முதல்வர் ஸ்டாலின்.

40. சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வின் பாதிப்பு மற்றும் மாற்று மாணவர் சேர்க்கை குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

41. 🔵 அரசுக்கு ஆலோசனை- சமூக செயற்பாட்டாளர்கள் குழு அமைக்க முதல்வர் ஸ்டாலினுக்கு ஹென்றி திபேன் வேண்டுகோள்.

42.சென்னை: தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்க சமூக செயற்பாட்டாளர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 Response to "05.06.2021 தமிழகத்தின் இன்றைய 42 முக்கிய செய்திகள்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel