அசத்தும் ஆசிரியர்கள் அரசு பள்ளியில் சேர்ந்தால் ₹1,000 ஊக்கத்தொகை

Trending

Breaking News
Loading...

அசத்தும் ஆசிரியர்கள் அரசு பள்ளியில் சேர்ந்தால் ₹1,000 ஊக்கத்தொகை

அசத்தும் ஆசிரியர்கள் அரசு பள்ளியில் சேர்ந்தால் ₹1,000 ஊக்கத்தொகை

 


தேனி மாவட்டம்
, உத்தமபாளையம் அருகே காமயகவுண்டன்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தற்போது மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில், 6ம் வகுப்பு சேரும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சார்பில் ₹1,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. ஆசிரியர்களின் இச்செயலுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் நடந்த மாணவர் சேர்க்கை நிகழ்ச்சியில் பொறுப்பு தலைமை ஆசிரியர் வீரமணி,  முதுகலை ஆசிரியர்கள் மாதவன், ராஜா, பட்டதாரி ஆசிரியர் ஷபி அகமது, ஆசிரியை ராதிகா ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
  
ஆசிரியர்கள் கூறுகையில், ‘‘கொரானா காரணமாக பெரும்பாலான பெற்றோர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். இந்த சூழ்நிலையிலும் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் அவர்களை ஊக்குவிப்பதற்காக நாங்கள் ₹1,000 வழங்குகிறோம். இதன் மூலம் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்’’ என்று தெரிவித்தனர்.

0 Response to "அசத்தும் ஆசிரியர்கள் அரசு பள்ளியில் சேர்ந்தால் ₹1,000 ஊக்கத்தொகை "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel