*🔷🔶கொரோனா
தடுப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை
11 மணிக்கு ஆலோசனை.*
*🔷🔶ரேஷன்
கடைகளில் இன்று முதல் ரூ.2,000, 14 வகை மளிகை
பொருட்கள் அடங்கிய தொகுப்பு வினியோகம்.!*
*🔷🔶1.19லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளும் , 4.97லட்சம் கோவிஷீல்டு தடுப்பூகள் ஆக மொத்தமாக 6.16லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இன்று மாலை
தமிழகத்துக்கு வரவுள்ளன.*
*🔷🔶டெல்லி
எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று முதல் 6-12 வயது
குழந்தைகளுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.*
*🔷🔶முசிறி
கிளைச்சிறையில் உள்ள சாட்டை துரைமுருகனை இன்று திருவிடைமருதூர் நீதிபதி
முன்னிலையில் ஆஜர் செய்யப்படுகிறார்*
*🔷🔶இந்திரபிரஸ்தா
அப்பல்லோ மருத்துவமனையில் இன்று முதல் ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் – வி’ தடுப்பூசி நாளை முதல் மக்களுக்கு கிடைக்கும் என
அறிவிக்கப்பட்டு உள்ளது.*
*🔷🔶உலக மற்றும்
ஆசியக்கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியா இன்று
ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.*
*1️⃣🔷🔶தமிழக
அரசுக்கு எதிராக தான் பதிவிட்டதாக போலி ட்விட்டரை உருவாக்கி அவதூறு பரப்பும்
நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகர் செந்தில் சென்னை காவல் ஆணையர்
அலுவலகத்தில் புகார் அளித்தார்.*
*2️⃣🔷🔶சசிகலாவுடன்
தொலைபேசியில் உரையாடிய அதிமுகவினரை உடனடியாக கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளது*
*3️⃣🔷🔶தமிழகத்தில் கரோனா மூன்றாம் அலையில் தொற்று பாதிக்கும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, உடனிருக்கும் பெற்றோர், பாதுகாவலருக்கு கரோனா சிறப்பு உணவுடன் படுக்கை உள்ளிட்ட வசதிகளை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அரசின் முதன்மை செயலாளருக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கோரிக்கை வைத்துள்ளார்*
*4️⃣🔷🔶உலக ரத்ததான தினத்தை
முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன், கோவை மாநகரக் காவல் ஆணையர் தீபக் டாமோர், மேற்கு மண்டலக் காவல்துறை தலைவர் ர.சுதாகர், துணைத் தலைவர் எம்.எஸ்.முத்துசாமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்
செல்வநாகரத்தினம், மாநகராட்சி
ஆணையர் ராஜகோபால் சுங்காரா ஆகியோர் இன்று (ஜூன் 14) ஒரே நேரத்தில் ரத்த தானம் அளித்தனர்.*
*5️⃣🔷🔶அதிமுகவின்
செய்தித் தொடர்பாளர் புகழேந்தியை கட்சியிலிருந்து நீக்கி ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் உத்தரவிட்டுள்ளனர்*
*6️⃣🔷🔶பாஜக ஆட்சியில் உயர் கல்வித்துறையில் எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மாபெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்*
*7️⃣🔷🔶பாஜக ஆட்சியில் உயர் கல்வித்துறையில் எஸ்.சி, எஸ்.டி. மக்கள், முஸ்லிம்களுக்கு மாபெரும் அநீதி: திருமாவளவன்*
*8️⃣🔷🔶மண்டைக்காடு
பகவதியம்மன் கோயில் புனரமைப்பு பணிக்கு தமிழக அரசு ரூ.85 லட்சம் ஒதுக்கீடு: அமைச்சர் சேகர்பாபு தகவல்*
*9️⃣🔷🔶கரோனாவால்
குணமடைந்தோர் எண்ணிக்கை புதுச்சேரியில் 94% ஆக உயர்வு:
நோய்த் தொற்று 5000-க்குக் கீழ்
குறைந்தது*
*1️⃣0️⃣🔷🔶ராமநாதபுரம்
மாவட்ட விவசாயியின் மகன் சொந்த மாவட்டத்திலேயே ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளது
மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.*
*1️⃣1️⃣🔷🔶ராமநாதபுரம்
மாவட்ட ஆட்சியராக கடந்த 7 மாதங்களாக
பணியாற்றிய தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பணியிடம் மாற்றப்பட்டு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக
நியமிக்கப்பட்டுள்ளார்*
*1️⃣2️⃣🔷🔶மதுரை
மாநகரின் தொன்மை, பாரம்பரியம்
மாறாமல் நவீனப்படுத்தப்படும், ’’ என்று
மாநகராட்சியின் 66வது புதிய
ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்ட கே.பி. கார்த்திகேயன் தெரிவித்தார்*
*1️⃣3️⃣🔷🔶புதுச்சேரியில் தனியார் பள்ளிகள் முழுக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் தெரிவித்தும், ஆளுநர், அரசு கண்டுகொள்ளாததால் கல்வித்துறையை திமுக இன்று முற்றுகையிட்டது. அதேபோல் காமராஜர் சிலையருகே சுயேச்சை எம்எல்ஏக்களும் போராட்டம் நடத்தினர்.*
*1️⃣4️⃣🔷🔶புதுச்சேரி:
புதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களும் ஜூன் 16-ம் தேதி முதல் 100
பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அலுவலகங்களில் கொரோனா தடுப்பு, முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொள்ளவும்
புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.*
*1️⃣5️⃣🔷🔶சென்னை:
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. சென்னை
மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை, பூவிருந்தவல்லி, காட்டுப்பாக்கம், கரையான்சாவடி, நசரத்பேட்டையில் காற்றுடன் மழை பெய்து
வருகிறது.*
*1️⃣🔷🔶புதுச்சேரி:
முகக்கவசம், தடுப்பூசி
செலுத்திக் கொள்ளாததால் தான் எனக்கு கொரோனா வந்தது என்று புதுச்சேரி முதல்வர்
ரங்கசாமி கூறியுள்ளார். புதுச்சேரியில் புதியதாக கட்டப்பட்ட நகர்ப்புற சுகாதார
நிலையத்தை திறந்து வைத்த பின் முதல்வர் ரங்கசாமி இதனை தெரிவித்துள்ளார்.*
*2️⃣🔷🔶சென்னை:
தடுப்பூசி செலுத்தியவர்கள் 14 நாள் கழித்து
ரத்ததானம் செய்யலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அமைச்சர்
மா.சுப்பிரமணியன் ரத்ததானம் செய்துள்ளார். தடுப்பூசி போடுவதற்கு முன்பும்
அச்சப்படாமல் ரத்ததானம் செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார்.*
*3️⃣🔷🔶சென்னை:
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 39 பேர்
பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை இணை
செயலாளராக ஜான் லூயிஸ் நியமனம். திருப்பூர் ஆட்சியராக இருந்த விஜய்கார்த்திகேயன், மாநில மனித உரிமை ஆணைய செயலராக நியமித்து தமிழக
அரசு ஆணையிட்டுள்ளது.*
*4️⃣🔷🔶கொல்கத்தா:
மேற்கு வங்க மாநிலத்தில் ஜூலை 1-ம் தேதி வரை
ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். அரசு அலுவலகங்கள் 25% பணியாளர்களுடன் இயங்க அனுமதி. தனியார்
நிறுவனங்கள் காலை 10 முதல் 4 மணி வரை 25%
பணியாளர்களுடன் இயங்கலாம் என அவர் அறிவித்துள்ளார்.*
*5️⃣🔷🔶சென்னை: கன்னியாகுமரி, அய்யா வைகுண்டர் தலைமைப்பதி நிர்வாகி மகன் பால பிரசாந்த் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பால லோகாதிபதி மகன் பால பிரசாந்த் இளம் வயதிலேயே மறைந்தது குறித்து பெரிதும் வருந்துகிறேன் என அவர் முதல்வர் கூறியுள்ளார்.*
*6️⃣🔷🔶நீலகிரி:
கோத்தகிரியில் அனுமதியின்றி 9 மரங்களை
வெட்டியவர்கள் மீது வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தனது தேயிலைத் தோட்டத்தில் 9 நாவல் மரங்களை வெட்டிய கெளரி என்பவர் மீது
வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது*.
*7️⃣🔷🔶கடலூர்: தடை
செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்களை பிடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்
என்று கடலூர் ஆட்சியர் பாலசுப்பிரமணியம் எச்சரித்துள்ளார். தடை செய்யப்பட்ட வலைகள்
மூலம் பிடிக்கப்பட்ட மீன்களை வாங்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
என் அவர் கூறியுள்ளார்.*
*8️⃣🔷🔶சென்னை:
சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
பிறப்பித்துள்ளது. 27
மாவட்டங்களில் அனைத்து வகுப்புகளுக்கும் 1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கையை தொடங்கலாம். 1 முதல் 12ம் வகுப்பு
மாணவர்களின் தேர்ச்சி விபரங்களை கல்வி மேலாண்மை தாக்கல் முறைமை இணையதளத்தில்
வெளியிடவும் அறிவுறுத்தியுள்ளது.*
*9️⃣🔷🔶நீட் தேர்வால்
பாதிப்பு இருப்பதால்தான் அரசு குழு அமைத்திருக்கிறது என, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன்
தெரிவித்துள்ளார்*
*1️⃣0️⃣🔷🔶சென்னை-
கன்னியாகுமரி தொழில் வழித்தடம் திட்டத்தின் கீழ் திருச்செந்தூர்- கல்லிடைக்குறிச்சி
இடையே ரூ.637 கோடி செலவில் சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர்
அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்*
*1️⃣1️⃣🔷🔶புதுக்கோட்டை
மாவட்டம், வடத்தெரு பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான
ஏல அறிவிக்கையை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்
வலியுறுத்தியுள்ளார்*
*1️⃣2️⃣🔷🔶புதுச்சேரி
சபாநாயகர் தேர்தலுக்காக முதல்வர் மற்றும் கட்சியினருடன் சென்று சட்டப்பேரவைச்
செயலரிடம் பாஜக எம்எல்ஏ செல்வம் இன்று மனுத் தாக்கல் செய்தார்.*
*1️⃣3️⃣🔷🔶அதிமுக
சட்டப்பேரவை நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில்
எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓபிஎஸ்ஸும், கொறடாவாக
எஸ்.பி.வேலுமணியும் தேர்வு செய்யப்பட்டனர்.*
*1️⃣4️⃣🔷🔶61 நாள் மீன்பிடித் தடைக்காலம் இன்றுடன்
முடிவடைந்தது. இதையடுத்து விசைப்படகு மீனவர்கள் நாளை (ஜூன் 15) முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்.
கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் தூத்துக்குடியில் விசைப்படகுகள் சுழற்சி
முறையில் கடலுக்கு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது*
*3️⃣🔷🔶தமிழகத்தில் கரோனா மூன்றாம் அலையில் தொற்று பாதிக்கும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, உடனிருக்கும் பெற்றோர், பாதுகாவலருக்கு கரோனா சிறப்பு உணவுடன் படுக்கை உள்ளிட்ட வசதிகளை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அரசின் முதன்மை செயலாளருக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கோரிக்கை வைத்துள்ளார்*
*6️⃣🔷🔶பாஜக ஆட்சியில் உயர் கல்வித்துறையில் எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மாபெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்*
*7️⃣🔷🔶பாஜக ஆட்சியில் உயர் கல்வித்துறையில் எஸ்.சி, எஸ்.டி. மக்கள், முஸ்லிம்களுக்கு மாபெரும் அநீதி: திருமாவளவன்*
*1️⃣3️⃣🔷🔶புதுச்சேரியில் தனியார் பள்ளிகள் முழுக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் தெரிவித்தும், ஆளுநர், அரசு கண்டுகொள்ளாததால் கல்வித்துறையை திமுக இன்று முற்றுகையிட்டது. அதேபோல் காமராஜர் சிலையருகே சுயேச்சை எம்எல்ஏக்களும் போராட்டம் நடத்தினர்.*
*5️⃣🔷🔶சென்னை: கன்னியாகுமரி, அய்யா வைகுண்டர் தலைமைப்பதி நிர்வாகி மகன் பால பிரசாந்த் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பால லோகாதிபதி மகன் பால பிரசாந்த் இளம் வயதிலேயே மறைந்தது குறித்து பெரிதும் வருந்துகிறேன் என அவர் முதல்வர் கூறியுள்ளார்.*
0 Response to "15.6.2021 முக்கியச் செய்திகள்"
Post a Comment