*1️⃣🔷🔶 நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 882 நியாய விலைக் கடைகளில், கோவிட் சிறப்பு நிவாரண நிதி 2-ஆம் தவணை ரூ. 2,000/- மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.*
*1️⃣6️⃣🔷🔶கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயிலில் கடந்த 2-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்திற்கு கவனக்குறைவே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு கேசர்பாபு தெரிவித்துள்ளார்.*
*
*1️⃣7️⃣🔷🔶நீலகிரி மாவட்டம், பழங்குடியின மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய முதலாவது மாவட்டம் என்ற நிலையை அடையும் வகையில் சிறப்பு செயல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக அம்மாவட்ட ஆட்சியர் திருமதி இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.*
*2️⃣1️⃣🔷🔶யூரோ கால்பந்து போட்டியில் ஸ்பெயின் - ஸ்வீடன் அணிகளுக்கு இடையயான ஆட்டம் கோல் இன்றி டிராவில் முடிவடைந்தது.*
@RailMinIndia
* 🇮🇳 முக்கிய செய்திகள்🇮🇳 *
*1️⃣5️⃣🔷🔶இந்திய ரயில்வே சமீபத்தில் உருவாக்கிய அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு நடைபாதையில் இந்திய ராணுவம் சோதனை ஓட்டம் மேற்கொண்டது.*
*@RailMinIndia*
*1️⃣7️⃣🔷🔶நுண்கடன் நிறுவனங்களை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.*
*1️⃣8️⃣🔷🔶துபாயில் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள உலக விண்வெளி கண்காட்சியில் இந்தியாவின் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் சாதனைகளை விளக்கும் கண்காட்சிகள் இடம்பெறும் என மத்திய விண்வெளித்துறை அமைச்சர் திரு ஜிதேந்திரசிங் கூறியுள்ளார்.*
*1️⃣9️⃣🔷🔶விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்தது எனவும், இதன்மூலம் விண்வெளி திட்டங்களின் பயன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் எளிதில் சென்றடையும் என்றும் திரு ஜிதேந்திரசிங் குறிப்பிட்டார்.*
*@mansukhmandviya*
*தெரிவித்துள்ளார்.*
*2️⃣1️⃣🔷🔶நாடு முழுவதும் கடந்த 75 நாட்களில் முதல் முறையாக கோவிட் தொற்று தினசரி பாதிப்பு 60 ஆயிரமாக குறைந்துள்ளது.*
*2️⃣2️⃣🔷🔶இந்தியாவில் 2030-ஆம் ஆண்டுக்குள் இரண்டு கோடியே 60 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் திரு நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.*
*@narendramodi*
*1️⃣🔷🔶சிவகங்கை மாவட்டத்தில் முதல் தலைமுறை இளைஞர்கள் புதிதாக தொழில் துவங்கிட திட்ட மதிப்பீட்டில் 10 லட்சம் ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் திரு மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.*
*8️⃣🔷🔶திருவெற்றியூரில் கோவிட் தடுப்பு மருந்து செலுத்தப்படுவதையும், சிகிச்சை* *மையத்தையும் அமைச்சர் திரு*
*மா.சுப்பிரமணியம்*
*நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.*
*1️⃣0️⃣🔷🔶தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையிலிருந்து பாசனத்திற்காக நாளை தண்ணீர் திறக்கப்படவுள்ளது.*
@TIRATHSRAWAT
*3️⃣🔷🔶அரியலூர்: படித்த ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 971 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு சிவசங்கர் வழங்கினார்.*
*8️⃣🔷🔶ஜூன் 16 முதல் ஜூன் 22 வரை பிஹார் மாநிலத்தில் COVID19 கட்டுப்பாடுகளை ஒரு வாரம் தளர்த்துவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.*
*1️⃣3️⃣🔷🔶திருவண்ணாமலை மாவட்டத்தில் கோவிட் சிறப்பு நிவாரணத்தொகை இண்டாவது கட்டமாக ரூபாய் 2 ஆயிரம் மற்றும் 14 வகையான இலவச மளிகை பொருட்கள் வழங்குவதை மாநில பொதுபணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு எ.வ.வேலு திருவண்ணாமலையில் இன்று தொடங்கி வைத்தார்.*
*_______________________________*
*சென்னை: தமிழக டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.127.09 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ரூ.164.87 கோடிக்கு மதுபானங்கள் விற்ற நிலையில் நேற்று ரூ.127.09 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது.*
*உத்தரப்பிரதேசம்: கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த தாஜ்மஹால் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தினமும் ஆன்லைனில் டிக்கெட் வாங்கிய 650 பேர் மட்டுமே தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க அனுமதி என கூறப்பட்டுள்ளது.*
*சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமின் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. நடிகை அளித்த பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸ் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.*
*டெல்லி: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த சிவசங்கர் பாபாவை டெல்லி காசியாபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தராகண்ட் டேராடூன் மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய சிவசங்கர் பாபா போலீசாரிடம் சிக்கியுள்ளார். காசியாபாத்தில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபாவை போலீஸ் கைது செய்து சிபிசிஐடியிடம் ஒப்படைத்துள்ளனர்.*
*திருச்சி: விரைவில் பக்தர்களின் வழிபாட்டுக்காக கோயில்கள் திறக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். திருச்சி மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோயிலில் ரோப் கார் சேவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.*
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பேரறிவாளன் தயார் அற்புதம்மாள் சந்தித்துள்ளார். பேரறிவாளனுக்கு பரோல் வழங்கியமைக்காக முதலமைச்சரை சந்தித்து அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் பேரறிவாளனின் பரோல் விடுப்பை நீட்டிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.*
0 Response to "16.06.2021 இன்றைய முக்கியச் செய்திகள்"
Post a Comment