*🌏♨️திருக்கோவில் சார்பாக நடத்தப்படும் வழக்குகளுக்கு
வழக்கறிஞர்களை நியமனம் செய்ய ஆணையரின் ஒப்புதல் அவசியம் என இந்து சமய
அறநிலையத்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.*
*🌏♨️காவி திருவள்ளுவர் புகைபடத்தை அகற்றி, வெள்ளை திருவள்ளுவர் புகைபடத்தை நிறுவிய
வேளாண் பல்கலைக்கழக நிர்வாகம்.*
*🌏♨️மீனாட்சியம்மன் கோவில் யானைக்கு கண் சிகிச்சை
குறித்து தாய்லாந்து மருத்துவர்களிடம் ஆலோசனை.*
*🌏♨️டெல்லியில் கட்டப்பட்டு வரும் திமுக கட்சி அலுவலகத்தை
பார்வையிடும் முதல்வர் ஸ்டாலின்... @mkstalin*
*பதிவேற்றப்பட்ட
வீடியோக்கள் ஆபாசமாக உள்ளது நீதிபதிகள் காட்டம்*
*வழக்கு நாளை
ஒத்தி வைப்பு*
*🌏♨️கோவை சித்திரை சாவடி அணையில் வெள்ளப்பெருக்கு.*
*நொய்யல்
ஆற்றிலும் நீர் ஆர்ப்பரித்து செல்கிறது*
*🌏♨️பதிவேற்றப்பட்ட யூடியூபர் மதனின் பேச்சுகள் கேட்க
முடியாத அளவிற்கு மோசமாக இருக்கிறது. அவற்றை முழுமையாக கேட்டுவிட்டு முன் ஜாமின்
வழக்கில் வாதிடும்படி மதன் தரப்பு வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை*
*🏮🏮ஆபாச
பேச்சு விவகாரத்தில் தலைமறைவாக உள்ள நிலையில், அவராகவே சரணடைய உள்ளதாக தகவல்.*
*🏮🏮யூடியூபில்
சம்பாதித்த பணத்தை கிரிப்டோகரன்சி உள்ளிட்டவற்றில் முதலீடு செய்துள்ளதாக காவல்துறை
தகவல்.*
*கன அடி
தண்ணீர் வெளியேற்றம்.பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஒடுவதால் கரையோர பகுதி
மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.*
*🟢தமிழ்நாடு மின் மிகை மாநிலம்
அல்ல;*
*🟢நமக்கு தேவையான மின்சாரத்தை
நாமே உற்பத்தி செய்தால் தான் அது மின் மிகை மாநிலம்;*
*🟢கடந்த ஆட்சியில் மின் மிகை
மாநிலம் என்று அழைத்தார்கள்;*
*🟢விவசாயிகளுக்கு மின்சாரம்
தரவில்லை.*
*🟢சட்டமன்றத்தில்
அனைத்துக்கும் பதில் தரப்படும்.*
*செந்தில்பாலாஜி*
*🌏♨️யூடியூபர் மதன்குமாரின் பேச்சுகள் கேட்க முடியாத
அளவிற்கு மோசமாக உள்ளது - சென்னை உயர் நீதிமன்றம்*
*🌏♨️அந்த பேச்சுகளை கேட்டுவிட்டு வந்து வாதிடும்படி முன்
ஜாமீன் வழக்கில் ஆஜரான வழக்கறிஞருக்கு
அறிவுறுத்தல்...*
*முன் ஜாமீன்
மனு மீதான விசாரணை நாளைக்கு தள்ளிவைப்பு*
*🌏♨️புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசின் பொதிகை
இல்லத்தில் , முதலமைச்சர்
மு.க ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காவல்துறையின் திகார் 8வது பட்டாலியன் பிரிவு
போலீசார் காவல்துறை மரியாதை வழங்கினர்.*
*🌏♨️பெண்கள் சிறுவர்களிடம் ஆபாசமாக பேசி தலைமறைவாக உள்ள
பப்ஜி மதன் முன் ஜாமீன் கோரிய வழக்கு...*
*🌏♨️சக தொழில் போட்டியாளர்களால் என் மீது புகார்
அளிக்கப்பட்டுள்ளது - மதன் தரப்பு வழக்கறிஞர்*
*🌏♨️மதன் பேசிய விடியோ பதிவுகளை கேட்டுள்ளிர்களா? முழுமையாக கேட்ட பின் நாளை வந்து
வாதிடவும் - நீதிபதி*
*🌏♨️யுடியூபர்
மதன் வீட்டில் சோதனை நடத்தி கம்ப்யூட்டர் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்து, அவரது மனைவியை கைது செய்துள்ளோம்;
தலைமறைவாக உள்ள மதனையும் விரைவில் கைது செய்து விடுவோம் - சென்னை
மாநகர காவல் ஆணையர் பேட்டி*
*🌏♨️கொரான காலத்தில் மதுக்கடைகளை முழுமையாக மூட
வலியுறுத்தியும், தற்போது
திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்
போராட்டம்,*
*🌏♨️தமிழக அரசு உத்தரவுப்படி விருதுநகர் மாவட்ட
ஆட்சித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜெ.மேகநாதரெட்டி இஆப., மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று 23வது மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.*
*🌏♨️நடிகர் ரஜினிகாந்த் தனது உடல் பரிசோதனைக்காக நாளை
இரவு அமெரிக்காவுக்கு செல்கிறார்.*
*🌏♨️தவறு செய்யும் வழக்கறிஞர்களை நீதிமன்றம் காப்பாற்றி
விடும் என மக்கள் நினைப்பது வேதனை அளிக்கிறது -நீதிபதி*
*🌏♨️ரூ.61 கோடி
செலவில் குறுவை சாகுபடி சிறப்பு திட்டம்*
*தமிழ்நாடு
முதல்வர் அறிவிப்பு*
*🏮சட்டப்பேரவை ஏற்பாடு -
கலைவாணர் அரங்கில் சபாநாயகர் அப்பாவு ஆய்வு*
*🏮🏮21 ஆம் தேதி
சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் சபாநாயகர் அப்பாவு ஆய்வு*
*🏮🏮கூட்ட
அரங்கை சபாநாயகர் அப்பாவு உடன் துணை சபாநாயகர் பிச்சாண்டியும் ஆய்வு*
*🌏♨️சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி
பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம்
நிறைவேற்றம்*
*🌏♨️சசிகலாவுடன் தொடர்பில் இருந்தால் அதிமுகவில் இருந்து
உடனடி நீக்கம்*
*🌏♨️சேலம், ஓமலூரில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி
பழனிசாமி எச்சரிக்கை*
*🏮🏮எம்.பி.-
எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும்*
*🏮🏮சிறப்பு
நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு*
*🏮🏮சிறப்பு
நீதிமன்றங்களின் செயல்பாடுகள் குறித்து தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்கை
முடித்து வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்*
*🏮🏮நீலகிரி
மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்*
*🏮🏮கோவையில்
கன மழையும், குமரி,
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான
மழைக்கும் வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்*
*🌏♨️காணாமல் போன கோவில் சிலைகள், நகைகளை கண்டுபிடிக்க நடவடிக்கைகள்
எடுக்க வேண்டும்*
*🌏♨️தமிழக இந்து சமய அறநிலைய துறைக்கு சென்னை உயர்
நீதிமன்றம் அறிவுறுத்தல்*
*🌏♨️டெல்லி தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பாக கொரனா
தடுப்பு பணிகளுக்காக ரூ.50 ஆயிரம் நிதியுதவி*
*🌏♨️சசிகலாவுக்கு
எதிராக அதிமுக கூட்டத்தில் தீர்மானம்*
*🌏♨️விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக கூட்டத்தில்
தீர்மானம்*
*🌏♨️முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்ற
கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்*
*🌏♨️மதுரையில்
கலைஞர் நினைவு நூலகம் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்ட இடங்கள் பட்டியல் வெளியீடு!*
*🌏♨️இந்தியாவில் பெங்களூரு, மும்பை, சென்னை
உள்ளிட்ட மேலும் 9 நகரங்களில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி
கிடைக்கும் - டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம்*
*🌏♨️ஏற்கனவே ஐதராபாத்தில் மட்டும் ஸ்புட்னிக்-வி
தடுப்பூசி கிடைத்து வந்த நிலையில் புதிய ஏற்பாடு*
*🌏♨️போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி:சேலம்
சீலநாயக்கன்பட்டியில் கலெக்டர் ஆய்வு*
சேலம்:
சேலம் சீலநாயக்கன்பட்டி
பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக கலெக்டர் கார்மேகம் நேற்று நேரில் ஆய்வு
மேற்கொண்டார்.
போக்குவரத்து நெரிசல்
சேலம் மாநகராட்சி பகுதியில்
சீலநாயக்கன்பட்டியில் மேம்பாலம் ஒன்று உள்ளது. சேலத்தில் இருந்து ஆத்தூர், திருப்பத்தூர், வேலூர், சென்னை, கள்ளக்குறிச்சி
உள்ளிட்ட ஊர்களுக்கு இந்த பாலம் வழியாக லாரிகள் மற்றும் பிற வாகனங்கள் செல்கின்றன.
இந்த பாலம் உள்ள பைபாஸ்
பகுதியில் காலை, மாலை
நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும். இதுதவிர விபத்துக்களும் அதிகம்
ஏற்பட்டு வந்தது. சீலநாயக்கன்பட்டி பைபாஸ் அருகே பல்வேறு ஊர்கள் உள்ளதால்
போக்குவரத்து நெரிசலால் இந்த வழியே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்ல
முடியாத நிலை அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.
கலெக்டர் ஆய்வு
இது குறித்து அறிந்த சேலம்
மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேற்று காலை சீலநாயக்கன்பட்டி பைபாஸ் வந்தார். பின்னர்
அவர், சேலம் மாநகர
போலீஸ் துணை கமிஷனர் வேதரத்தினம் மற்றும் உதவி கலெக்டர் விஷ்ணு தர்ஷினி மற்றும்
அதிகாரிகளுடன் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பது குறித்து அதிகாரிகளுடன்
ஆலோசனை மேற்கொண்டார்.
தற்போது உள்ள பாலம்
பகுதியில் வேறு என்ன வசதிகள் செய்து தருவது, விபத்துக்களை தடுக்க என்ன செய்வது என மாவட்ட கலெக்டர் கார்மேகம்
கேட்டறிந்தார். பல ஆண்டுகளாக சிரமப்பட்டு வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள்
சிரமம் இன்றி சீலநாயக்கன்பட்டி பைபாஸ் வழியே சென்று வர மாவட்ட நிர்வாகம் போர்க்கால
அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
*🌏♨️மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது*
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து
காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போது அணைக்கு வினாடிக்கு
ஆயிரத்து 170 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அதன்பிறகு அணைக்கு
வரும் தண்ணீர் அளவு தினமும் குறைந்து வருகிறது. கடந்த 13-ந்
தேதி 764 கன அடியாக இருந்த நீர் வரத்து, 15-ந் தேதி 489 கன அடியாக குறைந்தது. நேற்று முன்தினம்
மேலும் குறைந்து அணைக்கு 315 கன அடி நீர் மட்டுமே வருகிறது.
இதற்கிடையே டெல்டா பாசனத்துக்காக அணையில் இருந்து தினமும் 10
ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே அணையின் நீர்மட்டம் வேகமாக
குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 94.87 அடியாக இருந்த
அணையின் நீர்மட்டம், நேற்று 94.25
அடியாக குறைந்துள்ளது.
*🌏♨️சென்னையில் இருந்து 31,500 டோஸ்கள் கொரோனா தடுப்பூசி சேலம்
வந்தன*
சேலம்:
சென்னையில் இருந்து மேலும் 31,500 டோஸ்கள் கொரோனா தடுப்பூசி சேலத்துக்கு
வந்தன.
பொதுமக்கள் ஏமாற்றம்
சேலம் மாவட்டத்தில் கொரோனா
பாதிப்பு எண்ணிக்கை 80 ஆயிரத்தை
தாண்டியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள்
எடுத்து வருகிறது. நோய் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த ஜனவரி மாதம்
முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.
கொரோனாவின் பாதிப்புகளும்
மற்றும் உயிரிழப்புகளும் அதிகரித்ததை தொடர்ந்து பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்கு
அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கிடையில் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி
தட்டுப்பாடு ஏற்படுவதால் தடுப்பூசி போடும் பணி அவ்வப்போது நிறுத்தி வைக்கப்படும்.
இந்த நிலையில் தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால் நேற்று 2-வது நாளாக மாவட்டத்தில் கொரோனா
தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டன. இதனால் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு
ஆஸ்பத்திரிகளுக்கு தடுப்பூசி போடுவதற்காக வந்த பொதுமக்கள் பலர் நேற்றும்
ஏமாற்றதுடன் திரும்பி சென்றனர்.
31,500
டோஸ்கள்
இந்த நிலையில் சென்னையில்
இருந்து வாகனம் மூலம் நேற்று தடுப்பூசிகள் சேலத்துக்கு கொண்டு வரப்பட்டன. சேலம்
மற்றும் ஆத்தூர் சுகாதார மாவட்டங்களுக்கு சேர்த்து மொத்தம் 31,500 தடுப்பூசி டோஸ்கள் வந்தன. இதில்
25,500 கோவிஷீல்டும், 6 ஆயிரம் கோவேக்சினும்
அடங்கும்.
இதுகுறித்து சுகாதாரத்துறை
அதிகாரிகள் கூறும் போது, மாவட்டத்தில்
போதிய அளவு கொரோனா தடுப்பூசிகள் இல்லாததால் 2-வது நாளாக
இன்றும் (நேற்று) தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில்
சென்னையில் இருந்து 31,500 டோஸ்கள் வந்து உள்ளதால் நாளை
(இன்று) முதல் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையங்களில் பொதுமக்களுக்கு
கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றனர்.
*🌏♨️சேலம் மாவட்டத்தில்122 மையங்களில் இன்று தடுப்பூசி போட
ஏற்பாடு-கலெக்டர் தகவல்*
சேலம்:
சேலம் மாவட்டத்தில் 122 மையங்களில் இன்று கொரோனா
தடுப்பூசிகள் போடுவதற்கு ஒதுக்கீடு செய்துள்ளது.
இதுதொடர்பாக கலெக்டர்
கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
2 வார்டுக்கு
ஒரு மையம்
சேலம் மாவட்டத்தில் பல்வேறு
மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. பொதுமக்கள்
ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொள்ள தற்போது முன் வந்துள்ளனர். இதன் காரணமாக
தடுப்பூசி போடும் பணியை மேலும் செம்மைப்படுத்த மாவட்ட நிர்வாகம் சில நடவடிக்கைகள்
எடுத்துள்ளன.
சேலம் மாநகராட்சி பகுதியில்
ஏற்கனவே 16 இடங்களில்
தடுப்பூசி போடப்பட்டு வந்தன. இனிமேல் 2 வார்டுகளுக்கு ஒரு
மையம் என்ற அளவில் 30 மையங்களில் தடுப்பூசி போடப்படும்.
இதைத்தவிர ஊரக பகுதியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் 92 ஆரம்ப சுகாதார மையங்களிலும் தடுப்பூசி போடப்படும். மாவட்டத்தில் இன்று
(வியாழக்கிழமை) மொத்தம் 122 மையங்களில் தடுப்பூசி
போடப்படும்.
31,520
தடுப்பூசி ஒதுக்கீடு
மாவட்டத்தில் இன்று ஊரக
பகுதிகளில் உள்ள 92 மையங்களில்
4,820 கோவேக்சினும், 16 ஆயிரத்து 900 கோவிஷீல்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் மாநகராட்சி பகுதிகளில் 1,200 கோவேக்சினும், 6 ஆயிரம் கோவிஷீல்டும் போடப்படுகின்றன.
இதுதவிர நிறுவனங்களுக்காக 2,600 கோவிஷீல்டு ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. மொத்தம் மாவட்டம் முழுவதும் 122
மையங்களில் 31 ஆயிரத்து 520
தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.தடுப்பூசி மையங்களில் பொதுமக்களுக்கு
கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளுக்கும் வெவ்வேறு பணியாளர்
மூலம் போடப்படும். பொதுமக்கள் தங்களுடைய ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள
அட்டை, அல்லது வேறு அடையாள ஆவணங்களுடன் நேரில் சென்று
தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் தவறாமல் தங்களது
செல்போன் எண்ணை அங்கு தெரிவிக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள்
அனைத்து தடுப்பூசி
மையங்களிலும் அன்றைய தினம் போடப்படும் தடுப்பூசி எண்ணிக்கை விவரங்களை அறிவிப்பு
பலகைகள் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், எந்தெந்த பகுதியில் எந்தெந்த
நாட்களில் தடுப்பூசி போடப்படுகிறது என்ற விவரத்தினை தெரிவிக்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை போடப்படும்.
பொதுமக்கள் தங்கள் வசிக்கும்
பகுதிக்கு உட்பட்ட மையங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். மேலும் அங்கு
பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிந்து செல்வதுடன் சமூக இடைவெளியை பின்பற்ற
வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு அவரவர் வசிக்கும் இடங்களுக்கு நேரில் வந்து
தடுப்பூசி போடப்படும். மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்காக 1,270 கோவேக்சினும், 2,200 கோவிஷீல்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் அவர் கூறி
உள்ளார்.
*🌏♨️பயணிகள் வருகை குறைந்ததால்சேலம் வழியாக செல்லும் 18 ரெயில்கள் ரத்து*
சூரமங்கலம்:
பயணிகள் வருகை குறைந்ததால்
சேலம் வழியாக செல்லும் 18 ரெயில்கள்
ரத்து செய்யப்பட்டுள்ளன.
தற்காலிகமாக ரத்து
கொரோனா ஊரடங்கு காரணமாக
ரெயில்களில் பயணிகளின் வருகை குறைந்து வருவதால் பல ரெயில்கள் தற்காலிகமாக ரத்து
செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சேலம் வழியாக செல்லும் 18 ரெயில்கள் பயணிகள் வருகை குறைவால்
இன்று (வியாழக்கிழமை) முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, சென்னை சென்டிரல்-ஈரோடு தினசரி
சிறப்பு ரெயில் (வண்டி எண் 02649) இன்று முதல் ஜூலை 1-ந் தேதி வரையும், மறுமார்க்கத்தில் ஈரோடு-சென்னை
சென்டிரல் சிறப்பு ரெயில் (வண்டி எண் 02650) வருகிற 30-ந் தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகின்றன.
18 ரெயில்கள்
சென்னை சென்டிரல்-மதுரை
வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண் 06019)
நாளை (வெள்ளிக்கிழமை), 21, 23, 25, 28, 30
ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கத்தில் மதுரை-சென்னை சென்டிரல்
வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண் 06020) இன்று,
20, 22, 24, 27, 29 மற்றும் ஜூலை 1 ஆகிய
தேதிகளிலும் ரத்து செய்யப்படுகின்றன.
சென்னை சென்டிரல்-ஆலப்புழா
சிறப்பு ரெயில் (வண்டி எண் 02639), சென்னை
சென்டிரல்-மேட்டுபாளையம் தினசரி சிறப்பு ரெயில் (வண்டி எண் 02671), சென்னை சென்டிரல்-திருவனந்தபுரம் தினசரி சிறப்பு ரெயில் (வண்டி 02695)
ஆகியவை வருகிற 30-ந் தேதி வரையும், ஆலப்புழா-சென்னை சென்டிரல் தினசரி சிறப்பு ரெயில் (வண்டி எண் 02640),
மேட்டுபாளையம்-சென்னை சென்டிரல் தினசரி சிறப்பு ரெயில் (02672)
உள்பட 18 ரெயில்கள் தற்காலிகமாக ரத்து
செய்யப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
: *🌏♨️தம்மம்பட்டி அருகேடாஸ்மாக் கடை ஒதுக்குவதில்
தகராறு:தி.மு.க. பிரமுகரை தாக்கிய 2 பேர் கைது*
தம்மம்பட்டி:
தம்மம்பட்டி அருகே
செந்தாரப்பட்டியை சேர்ந்தவர் அகிலன் (வயது 46).
கெங்கவல்லி ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளரான இவர், தனது கட்சியினருடன் பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த 4 பேர் டாஸ்மாக் கடை ஒதுக்குவது தொடர்பாக அவரிடம் தகராறு செய்ததாக
தெரிகிறது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த 4 பேரும்,
அகிலனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில்
தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில்
தி.மு.க. பிரமுகரை தாக்கியது செந்தாரப்பட்டியை சேர்ந்த ராம்குமார் (32), தம்மம்பட்டியை சேர்ந்த பேபி (எ) சந்தோஷ் (32), காந்திநகரை
சேர்ந்த வெங்கடேசன் (27), கொண்டையம்பள்ளியை சேர்ந்த
செல்வக்குமார் (36) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதில் பேபி,
செல்வகுமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை
தேடி வருகின்றனர்.
*🌏♨️சேலத்தில்
60 நடமாடும்
வாகனங்கள் மூலம்26,715 பேருக்கு கொரோனா பரிசோதனை-மாநகராட்சி
ஆணையாளர் தகவல்*
சேலம்:
சேலத்தில் 60 நடமாடும் வாகனங்கள் மூலம் 26,715 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர்
கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
நடமாடும் பரிசோதனை வாகனங்கள்
சேலம் மாநகராட்சிக்கு
உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுத்திடும் வகையில் மாநகராட்சி
நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 1,200 களப்பணியாளர்கள் மூலமாக வீடு,
வீடாக சென்று குடியிருப்போர் அனைவரின் உடல் வெப்பநிலையை பரிசோதனை
செய்வதோடு, சளி மற்றும் காய்ச்சல் போன்ற கொரோனா நோய் அறிகுறி
உள்ளதா? என்பதை கண்காணிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள்
விவரங்களை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தெரிவித்து நடமாடும் பரிசோதனை
வாகனங்கள் மூலமாக அறிகுறி உள்ளவர்களின் வீடுகளுக்கே உடனடியாக சென்று கொரோனா
பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 60 நடமாடும் வாகனங்கள்
மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
26,715
பேருக்கு பரிசோதனை
மாநகராட்சி பகுதிகளில்
தற்போது தினமும் சராசரியாக 48 இடங்களில்
காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்களும், சளி
தடவல் பரிசோதனை முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. நடமாடும் கொரோனா பரிசோதனை
வாகனங்கள் மூலமாக இதுவரை 26 ஆயிரத்து 715 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 1,194 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, நேற்று நடமாடும் வாகனங்கள் மூலமாக 2 ஆயிரத்து 748 பேர் உள்பட 3
ஆயிரத்து 516 பேருக்கு சளி தடவல் பரிசோதனை
செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் கடந்த ஏப்ரல் 1-ந்
தேதி முதல் இதுவரை 1 லட்சத்து 19
ஆயிரத்து 906 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில் 18 ஆயிரத்து 779 பேருக்கு கொரோனா
நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது.
ஆணையாளர் ஆய்வு
இந்நிலையில், அம்மாபேட்டை மண்டலம் ஜோதி தியேட்டர்
அருகில் நேற்று நடமாடும் வாகனம் மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த
பணியை நேற்று மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அருகில் உள்ள கொரோனா பரிசோதனை
மையம் அல்லது காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்களுக்கு தாங்களாகவே சென்று
பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என ஆணையாளர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்
இந்த ஆய்வின்போது மாநகர நல
அலுவலர் பார்த்திபன், உதவி
ஆணையாளர் சண்முகவடிவேல், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார்,
சுகாதார அலுவலர் மாணிக்கவாசகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
*🌏♨️சேலத்தில், இன்றுகாய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும் இடங்கள்*
சேலம்:
சேலம் மாநகராட்சியில் கொரோனா
நோய் தொற்று பரவல் தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய் பாதிப்பு
கண்டறியப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு
அப்பகுதியில் உள்ள அனைவரும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, நேற்று மாநகராட்சிக்கு உட்பட்ட 49 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு 3 ஆயிரத்து 267 காய்ச்சல் பரிசோதனை
செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாநகராட்சி பகுதிகளில் இன்று
(வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் 11
மணி வரை காந்திநகர், பத்மாவதி காலனி, காமராஜர்
தெரு, மல்லிகா நகர், அழகாபுரம்
காட்டூர், என்.ஜி.ஜி.ஓ. காலனி, கள்ளிக்காடு
பார்க் தெரு, கொய்யாத்தோப்பு, சத்தியமூர்த்தி
தெரு, தம்பி காளியம்மன் கோவில் தெரு, பழனி
செட்டி தெரு, ஓபுளி தெரு, புட்டாமெசின்
ரோடு, பாரதி தெரு, ஸ்ரீரங்கன் தெரு
ஆகிய பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
அதேபோல் இன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை பெருமாள் மலை அடிவாரம், தர்ம நகர், இந்திரா நகர், முத்துசாமி தெரு, வஜ்ஜிரவேல் நகர், ராஜம் தெரு, சுப்பிரமணியபுரம்
அனெக்ஸ், ஏ.வி. அய்யர் தெரு, ெரயில்வே
கிழக்கு தெரு, பெரமன் தெரு, எல்லப்பன்
தெரு, பச்சப்பட்டி மெயின் ரோடு, திருஞானம்
தெரு, கொடம்பை காடு, கேசவன் தெரு,
சிவசக்தி நகர் ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள்
நடைபெறும். அதேபோல் பெரிய மோட்டூர், புதுரோடு, குறிஞ்சி தெரு, பார்வதிபுரம், மணிமேகலை
தெரு, ராஜ கணபதி தெரு, மாரியம்மன்
கோவில் தெரு, முகமது காசிம் தெரு, தில்லைநகர்,
ராஜகோபால் தெரு, பழைய பிள்ளையார் கோவில் தெரு,
முனியப்பன் கோவில் தெரு, நக்கீரர் தெரு,
ரங்காபுரம், தார்ப்பாய் காடு, போலீஸ்காரன் தெரு ஆகிய பகுதிகளிலும் இன்று மதியம் 2
மணி முதல் 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. சேலம்
மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நடைபெற்று வரும் சிறப்பு
மருத்துவ முகாம்களை அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக்
கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
*🌏♨️கெங்கவல்லி அருகே புளிய மரம் சாய்ந்து விவசாயி
பலி-மோட்டார் சைக்கிளில் சென்ற போது பரிதாபம்*
கெங்கவல்லி:
கெங்கவல்லி அருகே
ஆணையம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த பெரியசாமி மகன் சின்னசாமி (வயது23), விவசாயி. நேற்று இரவு 9 மணி அளவில் வளையமாதேவியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தெடாவூர் பிரிவு
சாலையில் சென்ற போது, சாலை ஓரத்தில் நின்ற புளியமரம் ஒன்று
சாய்ந்து விழுந்தது. இதில் சின்னசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
🌏♨️பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர் பகுதியில்பாக்கெட்டுகளில்
அடைத்து வீடு வீடாக சாராயம் விற்பனை*
பெத்தநாயக்கன்பாளையம்:
சேலம் கருமந்துறை
மலைப்பகுதியில் இருந்து தினமும் லாரிகளில் சாராயம் அடைக்கப்பட்டு கொண்டு
வரப்படுகிறது. அதனை சிறு சிறு பாக்கெட்டுகளாக தயார் செய்து பெத்தநாயக்கன்பாளையம்
ஏத்தாப்பூர் கல்லேரிப்பட்டி, வைத்தியகவுண்டன்புதூர்,
பெத்தநாயக்கன்பாளையம், தும்பல், பனைமடல், இடையப்பட்டி ஆகிய பகுதிகளில் வீடு வீடாக
விற்பனை செய்யப்படுகிறது. தேவைப்படும் நபர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்துக்கே
கொண்டு வந்து கொடுக்கும் வகையில் அதாவது ‘டோர் டெலிவரி’ செய்யப்படுகிறது. அந்த பகுதியில் சாராய விற்பனை
ஜோராக நடப்பதாக கூறப்படுகிறது. இது சமூக ஆர்வலர்களுக்கும், பொதுமக்களுக்கும் அச்சத்தை
ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து சாராய விற்பனையை தடுக்க
வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
*தமிழ்நாட்டின்
மொத்த நிலப்பகுதியில் 33% காடுகள் உருவாக்க நடவடிக்கை
எடுக்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி*
*2019
கணக்கீட்டின்படி தமிழ்நாட்டில் 20.27% காடுகள் உள்ளது*
*காடுகள்
பரப்பளவை உயர்த்தும் நடவடிக்கையாக 33 கோடி மரங்கள் நட
வனத்துறை திட்டம்*
*🌏♨️பென்னாகரம் அருகேஇளம்பெண் தீக்குளித்து தற்கொலை*
பென்னாகரம்:
பென்னாகரம் அருகே உள்ள
பெரியபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கன் மகள் கவுதமி (வயது 24). இவருக்கும், சேலம் மாவட்டம் மேட்டூர் புதுசாம்பள்ளியை சேர்ந்த பாபு என்பவருக்கும்
கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்தநிலையில் கடந்த 13-ந் தேதி கணவன், மனைவி
இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கவுதமி தனது அம்மா சித்ராவை
வீட்டிற்கு வரவழைத்து அவருடன் வீட்டுக்கு சென்று விட்டார். இதன் காரணமாக
மனமுடைந்து காணப்பட்ட கவுதமி நேற்று அதிகாலை உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்
கொண்டார். உடல் கருகிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு
ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்
ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு
செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 7 மாதத்தில்
இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணைக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.
பாப்பிரெட்டிப்பட்டி
அருகேவாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை*
பொம்மிடி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே
உள்ள பாப்பம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் குலசேகரன். இவருடைய மகன் சுரேஷ் (வயது 19). கூலித்்தொழிலாளி. இந்தநிலையில்
சுரேசுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும்
கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே சம்பவத்தன்று சுரேசும்,
அந்த பெண்ணும் அங்குள்ள பகுதியில் தனிமையில் உல்லாசமாக இருந்ததை
அப்பகுதியை சேர்ந்த சிலர் பார்த்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்து அவமானம் அடைந்த
சுரேஷ் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து
வருகின்றனர்.
*🌏♨️3-வது நாளாகதொப்பூர் பகுதி டாஸ்மாக்
கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்கொரோனா பரவல் அச்சத்தில் கிராம மக்கள்*
நல்லம்பள்ளி:
தமிழகத்தில் கொரோனா தொற்று
குறைந்ததையொட்டி தர்மபுரி உள்பட 27
மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. தர்மபுரி மாவட்ட எல்லையான தொப்பூர்
சுற்று கிராமங்களான உம்மியம்பட்டி, சனிசந்தை, மானியதஅள்ளியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இங்கு அண்டை மாவட்டமான
சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மதுப்பிரியர்கர்கள் கொரோனா விதிமுறைகளை
பின்பற்றாமல் அதிகளவில் வந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.
இந்தநிலையில் நேற்றும் 3-வது நாளாக ஏராளமான மதுப்பிரியர்கள் 3 கிராமங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். அவர்கள் கடும்
வெயிலையும் பொருட்படுத்தாது நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்கள்
வாங்கியதை காணமுடிந்தது.
இதுகுறித்து சனிசந்தை, மானியதஅள்ளி, உம்மியம்பட்டி
கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், இங்கு டாஸ்மாக்
கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் சமூக
இடைவெளியை கடைபிடிக்காமலும், கொரோனா விதிகளையும்
பின்பற்றுவதில்லை. இதனால் 3 கிராமங்களிலும் கொரோனா பரவும்
அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மாவட்ட எல்லையில் உள்ள
மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
🌏♨️பாலக்கோடு அருகேகுட்டையாக மாறிய சின்னாறு அணை*
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளியில்
உள்ள சின்னாறு அணை மூலம் 11 இடங்களில்
ஆழ்துளை கிணறுகள் அமைத்து பாலக்கோடு பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம்
செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 2 நாட்களுக்கு ஒரு முறை
அணையில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. மேலும் சின்னாறு மூலம் 4,500 ஏக்கர் பாசன விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
தர்மபுரி, பாலக்கோடு பகுதிகளுக்கு குடிநீர்
ஆதாரமாக உள்ள இந்த அணை கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழை
இல்லாததால், தண்ணீர் இன்றி வறண்டு குட்டை போல்
காட்சியளிக்கிறது. இதனால் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு
ஏற்படும் அபாய நிலை உள்ளது. மேலும் இந்த அணையை நம்பி உள்ள ஏராளமான விவசாய நிலங்கள்
வானம் பார்த்த பூமியாக மாறி உள்ளன. பருவமழை தொடங்கினால் மட்டுமே சின்னாறு அணைக்கு
தண்ணீர் வரும் என்பதால், விவசாயிகள் பருவழையை எதிர்பார்த்து
உள்ளனர்.
*🌏♨️தொப்பூர் கணவாயில்சிமெண்டு லாரி கவிழ்ந்து விபத்து; டிரைவர் பலி*
நல்லம்பள்ளி:
தொப்பூர் கணவாயில் சிமெண்டு
லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் பலியானார்.
டிரைவர் பலி
பெங்களூருவில் இருந்து
சேலத்திற்கு நேற்று சிமெண்டு பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி தர்மபுரி மாவட்டம்
தொப்பூர் கணவாய் வழியாக வந்தது. இந்த லாரியை தொப்பூர் பகுதியை சேர்ந்த ரத்தினம்
(வயது 52) என்பவர்
ஓட்டி வந்தார். சிமெண்டு லாரி தொப்பூர் கணவாயில் உள்ள முதல் வளைவில் வந்தபோது
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரியை ஓட்டி
வந்த ரத்தினம் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ
இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த
தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் ஒன்றிணைந்து உயிரிழந்த
டிரைவர் ரத்தினத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த விபத்தால்
தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து
சுங்கச்சாவடி ரோந்து படையினர் விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தி
போக்குவரத்தை சீர் செய்தனர்.
விபத்து குறித்து தொப்பூர்
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
🌏♨️ராயக்கோட்டையில்ஆம்னி வேன் திருடிய தொழிலாளி கைது*
ராயக்கோட்டை:
பர்கூர் ஜெ.ஜெ.ரோடு பகுதியை
சேர்ந்தவர் காமராஜ் (வயது 50). இவர்
ராயக்கோட்டை தக்காளி மண்டி அருகே உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கி ஆம்னி வேன்
மூலம் ஜவுளி துணி வியாபாரம் செய்து வந்தார். அதே விடுதியில் கள்ளக்குறிச்சி
மாவட்டம் அந்தியூரை சேர்ந்த தையல் தொழிலாளி கோவிந்தராஜ் (42) என்பவரும் தங்கி இருந்தார். இதனால் 2 பேரும் நட்பாக
பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை
விடுதியில் காமராஜ் தூங்கி கொண்டு இருந்த போது அவருக்கு தெரியாமல் ஆம்னி வேன்
சாவியை எடுத்த கோவிந்தராஜ் ஆம்னி வேன் மற்றும் அதில் இருந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள துணி ஆகியவற்றை
திருடி சென்றார். இதையடுத்து கண் விழித்த காமராஜ் தன்னுடைய ஆம்னி வேன் இல்லாததை
கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன் இதுகுறித்து ராயக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார்
கொடுத்தார். அதன்பேரில் ராயக்கோட்டை சப்- இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார்
உடனடியாக தேடுதல் வேட்டை நடத்தி பிள்ளாரி அக்ரஹாரம் பஸ் நிறுத்தம் அருகே சென்று
கொண்டு இருந்த ஆம்னி வேனை மடக்கி பிடித்தனர். பின்னர் கோவிந்தராஜை கைது செய்ததுடன்
ஆம்னி வேன் மற்றும் துணிகளை பறிமுதல் செய்தனர்.
*🌏♨️ஊத்தங்கரை அருகேபெயிண்டர் தற்கொலை*
கல்லாவி:
ஊத்தங்கரை அடுத்த
அப்பிநாயக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த பெயிண்டர், சந்திரன் (வயது 30). இவரது மனைவி சரண்யா (25). இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. காதல் திருமணம் செய்த இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளான். சந்திரனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக
கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக குடிக்காமல் இருந்த சந்திரன் மீண்டும்
குடித்துவிட்டு வந்ததால், குடும்பத்தில் தகராறு
ஏற்பட்டுள்ளது. இதனால் வேதனை அடைந்த சந்திரன் கடந்த 14-ந்
தேதி வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது
குறித்து சரண்யா கொடுத்த புகாரின்பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து
விசாரணை நடத்தி வருகின்றனர்.
*🌏♨️பர்கூர் அருகேதம்பதியிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது*
பர்கூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம்
அருகே உள்ள சென்மேடு பகுதியை சேர்ந்தவர் தயாநிதி (வயது 35). இவர் கிருஷ்ணகிரி
காட்டிநாயனப்பள்ளியில் குடியிருந்து வருகிறார். சம்பவத்தன்று இவரும், இவருடைய மனைவி மஞ்சுளா (25) ஆகியோர் மொபட்டில்
கிருஷ்ணகிரி- சென்னை நெடுஞ்சாலையில் பர்கூர் அருகே ஒப்பதவாடி பகுதியில் சென்றனர்.
அப்போது மோட்டார்சைக்கிளில் 2 வாலிபர்கள் மொபட்டின் அருகே
சென்று தயாநிதி பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்தனர்.
இதனால் மொபட்
நிலைதடுமாறியது. இதில் மொபட்டில் பின்னால் அமர்ந்து சென்ற மஞ்சுளா கீழே விழுந்து
படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து
பர்கூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ்
இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து செல்போன் பறித்து சென்ற திருடர்களை தேடி
வந்தார். இந்தநிலையில் பர்கூர் பஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில்
போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர
வாகனத்தை நிறுத்தி அவர்களிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப்பின் முரணாக
பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில்
அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் பொன்னேரி மூர்த்தி பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி
மகன் மவுன பிரகாஷ் (22) என்றும்,
மற்றொருவர் வாணியம்பாடி அருகே உள்ள சின்ன வேப்பம்பட்டியை சேர்ந்த
பிரதாப் (21) என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள்
தயாநிதியிடம் செல்போன் மற்றும் சிலரிடம் பணப்பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார்
அவர்களிடம் இருந்து செல்போன், பணத்தை பறிமுதல் செய்தனர்.
பர்கூர்:
பர்கூர் அருகே சொத்து
தகராறில் எலக்ட்ரீசியன் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில்
கூறப்பட்டதாவது:-
எலக்ட்ரீசியன்
கிருஷ்ணகிரி மாவட்டம்
பர்கூர் அருகே உள்ள பண்டசீமனூர் பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (வயது 38). எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி
வரலட்சுமி (30). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் சுகுமாருக்கும், அப்பகுதியை
சேர்ந்த சிலருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக
கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்ததாக
தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று
வரலட்சுமி தன்னுடைய மகன், மகள்களை
அழைத்து கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் சுகுமார் மட்டும்
வீ்ட்டில் தனியாக இருந்தார். இதை அறிந்த அவர்கள் சுகுமார் வீட்டுக்கு சென்றனர்.
சொத்து பிரச்சினை தொடர்பாக சுகுமாருக்கும், அவர்களுக்கும்
இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
பரபரப்பு
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள்
கம்பு, கட்டையால்
சுகுமாரை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த
காயம் அடைந்த அவர் சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பர்கூர் போலீசார் சுகுமாரின் உடலை கைப்பற்றி
பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும்
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய மர்மநபர்களை தேடி
வருகின்றனர். சொத்து தகராறில் எலக்ட்ரீசியன் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம்
அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
🌏♨️வேப்பனப்பள்ளி அருகேவிவசாய நிலங்களில் புகுந்து
யானைகள் அட்டகாசம்வாழை, தக்காளி
பயிர்களை சேதப்படுத்தின*
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே விவசாய
நிலத்தில் புகுந்த காட்டு யானைகள் வாழை, தக்காளி பயிர்களை சேதப்படுத்தின.
காட்டு யானைகள்
கிருஷ்ணகிரி மாவட்டம்
வேப்பனப்பள்ளி அருகே உள்ள சிகரமாகனப்பள்ளி கிராமமானது தமிழக- கர்நாடக மாநில
எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு வாழை, பப்பாளி, தக்காளி உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள்
சாகுபடி செய்துள்ளனர். இந்தநிலையில் கடந்த சில தினங்களாக 10-க்கும்
மேற்பட்ட காட்டு யானைகள் சிகரமாகனப்பள்ளி கிராமத்திற்கு வந்து சென்றது.
இதற்கிடையே நேற்று அதிகாலை 10-க்கும் மேற்பட்ட யானை கூட்டங்கள்
சிகரமானப்பள்ளி கிராமத்துக்கு வந்தனர். பின்னர் அந்த யானைகள் கிராமத்தில் உள்ள
விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால்
மிதித்தும் சேதப்படுத்தின.
வனத்துறையினர் மெத்தனம்
இதில் சத்திஷ் என்பவரது
விவசாய நிலத்தில் 500-க்கும்
மேற்பட்ட வாழை மரங்களையும், ராதாகிருஷ்ணன் என்பவரது
நிலத்தில் 1 ஏக்கர் தக்காளி செடிகளையும் யானைகள்
சேதப்படுத்தின. மேலும் கிராமத்தை சுற்றியுள்ள விவசாயிகள் நிலத்தில் புகுந்த காட்டு
யானைகள் தென்னை, பப்பாளி மரங்களை சேதப்படுத்தியதுடன்,
தண்ணீர் குழாய்களை உடைத்து அட்டகாசம் செய்து விட்டு அங்கிருந்து
சென்றது.
இதுகுறித்து கிராமமக்கள்
கூறுகையில், இந்த
பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால்
வனத்துறையினர் யானைகளை காட்டுக்குள் விரட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காமல்
மெத்தனம் காட்டி வருகின்றனர் என்றனர். காட்டு யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து
அட்டகாசம் செய்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் இடையே
அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.
*🌏♨️தொடக்கப்பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள் பள்ளிக்கூடம்
செல்வதா? வேண்டாமா?-
கல்வித்துறை அதிகாரிகள் தெளிவான உத்தரவு வழங்காததால் குழப்பம்*
ஈரோடு
தொடக்கப்பள்ளி
ஆசிரிய-ஆசிரியைகள் பள்ளிக்கூடம் செல்வதா? வேண்டாமா? என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள்
தெளிவான உத்தரவுகள் வழங்காததால் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
மாணவர்கள் சேர்க்கை
தமிழ்நாட்டில் கொரோனா
ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்தநிலையில் பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் ஊரடங்கு
கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டு உள்ளன. ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தளர்வுகள் இல்லாத
ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்தநிலையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை கடந்த 14-ந் தேதியில் இருந்து பள்ளிக்கூடங்கள் இயங்கும் என்று அறிவித்தது.
மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கு வரத்தேவை இல்லை என்றாலும், நடப்பு 2021-2022-ம் கல்வி ஆண்டுக்கு மாணவர்
சேர்க்கை, தேர்வு முடிவுகள் அறிவிப்பு, இ.எம்.ஐ.எஸ். பதிவு உள்ளிட்ட பணிகளுக்காக அரசு பள்ளிக்கூடங்களின் தலைமை
ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
அதைத்தொடர்ந்து நேற்று
முன்தினம் முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு மேல்நிலைப்பள்ளிக்கூடங்களிலும் பிளஸ்-1 வகுப்புகளுக்கு சேர்க்கை நடந்தது.
பிற வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை தொடங்கியது.
குழப்பம்
இந்த நேரத்தில் தொடக்க
மற்றும் நடுநிலைப்பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு பள்ளிக்கூடத்துக்கு வருவது குறித்த
எந்த உரிய அறிவிப்பும் வழங்கப்படவில்லை. காரணம், தமிழ்நாட்டில் அரசு
மேல்நிலைப்பள்ளிக்கூடங்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளிக்கூடங்களில் மட்டும்தான்
அலுவலக பணியாளர்கள் உள்ளனர். தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கூடங்களில் அலுவலக
பணிகளையும் தலைமை ஆசிரியர்களே செய்ய வேண்டும். எனவே இந்த உத்தரவு மேல்நிலை மற்றும்
உயர்நிலை பள்ளிக்கூடங்களுக்கானதா, தொடக்க மற்றும்
நடுநிலைப்பள்ளிக்கூடங்களுக்கானதா என்பதே சரியாக இல்லாமல் குழப்பம் அடைய வைத்து
இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுபற்றி ஆசிரியர் ஒருவர்
கூறியதாவது:-
தமிழ்நாட்டில்
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் மேல் நிலை கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை
தனித்தனியாக இயங்கி வந்தது. இதுபோல் அனைவருக்கும் கல்வி இயக்கமும் தனியாக
இருந்தது. இந்த ஒவ்வொரு துறைக்கும் தனியாக கல்வி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு
இருந்தனர். இதனால் மாவட்டத்துக்கு 2 முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் தொடக்கக்கல்வித்துறைக்கு தனியாக கல்வி
அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் இருந்தனர்.
அடிப்படை வசதிகள்
முதன்மை கல்வி அதிகாரி
மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களின்
செயல்பாடுகளை கவனித்து வருவார்கள். தொடக்கக்கல்வித்துறை அதிகாரி தொடக்க மற்றும்
நடுநிலைப்பள்ளிக்கூடங்களின் செயல்பாடுகளை கவனிப்பார். அவருக்கு கீழ் உதவி
தொடக்கக்கல்வி அதிகாரிகள், வட்டார
வளமைய கல்வி அதிகாரிகள் இருப்பார்கள். ஆனால் கடந்த ஆட்சியில் அனைத்து
பள்ளிக்கூடங்களும் ஒரே தலைமையின் கீழ் கொண்டு வரப்பட்டன. இது நிர்வாகத்துக்கு
எளிதாக இருந்தாலும், செய்திகள் பகிரப்படுவதில் பல சிக்கல்கள்
ஏற்பட்டன.
குறிப்பாக உயர் அதிகாரிகள்
மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிக்கூடங்களுக்கு விடும் உத்தரவுகள் அனைத்தும்
தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கூடங்களுக்கும் அறிவிக்கப்பட்டன. இது நடைமுறையில்
சாத்தியம் இல்லாத நிலையில் உள்ளது. அதிகார மாற்றம் மட்டுமே செய்து விட்டு அடிப்படை
வசதிகள் செய்யப்படவில்லை. இதுபோல் அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிக்கூடங்களுக்கான ஒரு குறு மையத்தை ஏற்படுத்தி அதற்கு ஒரு மேல்நிலைப்பள்ளி
தலைமை ஆசிரியர் பொறுப்பு என்ற நடைமுறை புகுத்தப்பட்டதால், சம்பந்தப்பட்ட மேல்நிலைப்பள்ளி தலைமை
ஆசிரியர் அவரது பள்ளி பணிகளை செய்வதில் பாதிப்பு ஏற்படுவதுடன், பிற தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் நிர்வாகத்தில் தலையிட்டு
அவர்களின் பணிகளும் பாதிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது.
இந்தநிலையில்தான் இப்போது
வந்து இருக்கும் பள்ளி திறப்பு உத்தரவு ஆசிரிய-ஆசிரியைகளுக்கு பெரும் குழப்பத்தை
ஏற்படுத்தி இருக்கிறது.
மாணவர்கள் சேர்க்கை
இதற்கிடையே கொரோனா ஊரடங்கு
தளர்வு இல்லாத ஈரோடு உள்ளிட்ட 11
மாவட்டங்களில் தற்போது பள்ளிக்கூடங்கள் திறக்க வேண்டியது இல்லை என்று ஒரு
அறிவிப்பு வருகிறது. ஆனால், அதில் ஈரோடு மாவட்ட முதன்மை
கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி, வட்டார
கல்வி அதிகாரி ஆகியோரின் எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை. ஏற்கனவே கொரோனா தொற்று
அதிகமாக இருக்கிறது. தேர்தல் பணி, புள்ளிவிவர சேகரிப்பு பணி
என்று ஆசிரிய-ஆசிரியைகள் ஏராளமானவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி விட்டனர்.
உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன.
இந்தநிலையில்
ஆசிரிய-ஆசிரியைகள் பள்ளிக்கூடத்துக்கு வரவேண்டுமா? வேண்டாமா? என்ற
அறிவிப்பில் கூட குழப்பத்தை ஏற்படுத்துவதால் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.
பள்ளிக்கூடத்தில் மாணவ-மாணவியர் சேர்க்கை தொலைபேசியில் நடத்தினால் போதும் என்று
கூறப்பட்டு உள்ளது. இது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை. ஏற்கனவே ஒவ்வொரு
ஆண்டும் ஆசிரிய-ஆசிரியைகள் மாணவர் சேர்க்கை ஊர்வலம், வீடு
வீடாக களப்பணி என்று பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து மாணவ-மாணவிகளை சேர்த்து
வருகிறோம். கிராமப்புறங்களில், உங்கள் பள்ளிக்கூடத்தில்
எங்கள் குழந்தைகளை சேர்த்துக்கொள்ளுங்கள் என்று எந்த பெற்றோரும் வருவதில்லை.
போராடிதான் ஒவ்வொரு சேர்க்கையையும் கொண்டு வருகிறோம்.
உத்தரவு
ஆசிரிய-ஆசிரியைகளை
பொறுத்தவரை பணி செய்ய தயாராக இருக்கிறோம். ஆனால் உரிய உத்தரவு இல்லாமல்
பள்ளிக்கூடத்துக்கு வருவது என்பது குழப்பத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும்.
காரணம், தற்போது
உரிய உத்தரவு இல்லாமல் இருக்கிறது. அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவுக்கு ஏற்ப
பள்ளிக்கூடம் வரும்போதோ, திரும்ப செல்லும்போதே ஏதேனும்
அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விட்டால் அதற்கு யார் பொறுப்பு ஏற்பது. அதிகாரிகள்
நாங்கள் எந்த உத்தரவையும் வழங்கவில்லை என்று தப்பித்துக்கொள்வார்கள். ஆனால்
அப்பாவி ஆசிரிய-ஆசிரியைகளின் குடும்பங்கள்தான் பாதிக்கப்படும். ஏற்கனவே ஓய்வூதியம்
இல்லை, பணிக்கொடைகள் கிடைக்குமா என்ற கேள்வியில் இருக்கும்
ஆசிரியர்களின் குடும்பங்கள் திண்டாடும் நிலை வேண்டாம். எனவே தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள் பணிக்கு செல்ல வேண்டுமா வேண்டாமா என்ற
சரியான உத்தரவு மற்றும் சுழற்சி முறையில் எத்தனை சதவீதம் ஆசிரியர்கள் பணியாற்ற
வேண்டும் என்ற உத்தரவினையும் அதிகாரிகள் வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
*🌏♨️சென்னிமலையில் அதிக பாரம் ஏற்றிய லாரி மின்கம்பியில்
உரசியதால் மின்தடை- நிற்காமல் சென்ற லாரியை மின் ஊழியர் துரத்தி பிடித்தார்*
சென்னிமலை
சென்னிமலையில் அதிக பாரம்
ஏற்றிய லாரி மின் கம்பியில் உரசியதால் மின்தடை ஏற்பட்டது. நிற்காமல் சென்ற லாரியை
மின் ஊழியர் துரத்தி பிடித்தார்.
மின்கம்பியில் உரசியது
அறச்சலூர் பகுதியிலிருந்து
சீமாறு பாரம் ஏற்றிய லாரி ஒன்று நேற்று பகல் 1 மணி அளவில் பெருந்துறை செல்வதற்காக சென்னிமலையில் உள்ள காட்டூர் ரோடு
வழியாக மெயின் ரோட்டுக்கு சென்று கொண்டு இருந்தது. லாரியில் பாரம் உயரமாக
இருந்ததால் காட்டூர் பகுதியில் ரோட்டின் குறுக்கே செல்லும் மின் கம்பியில்
உரசியது.
இதனால் டமார் என்ற
சத்தத்துடன் அந்த பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் மின்தடை ஏற்பட்டது. ஆனால் அந்த
லாரி நிற்காமல் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது மற்றொரு
டிரான்ஸ்பார்மரில் இருந்து செல்லும் மின் கம்பியிலும் லாரி உரசியதால் அந்த
டிரான்ஸ்பார்மரிலும் தீப்பொறியுடன் மின்தடை ஏற்பட்டது. அதன்பிறகும் அந்த லாரி
நிற்காமல் சென்று கொண்டிருந்தது.
துரத்தி பிடித்தார்
அப்போது அந்த பகுதியில் வேைல
பார்த்துக்கொண்டு இருந்த லைன்மேன் சின்னசாமி நிற்காமல் சென்ற லாரியை மோட்டார்சைக்கிளில்
துரத்தி சென்று சென்னிமலை பஸ் நிலையம் அருகே மடக்கி பிடித்தார்.
பின்னர் லாரி டிரைவரை
கண்டித்த சின்னச்சாமி, 2
டிரான்ஸ்பார்மர்களிலும் பழுது நீக்கப்பட்ட பிறகுதான் நீங்கள் செல்ல வேண்டும்
என்றார்.
அதன் பிறகு 2 டிரான்ஸ்பார்மர்களிலும் பியூஸ்
போடப்பட்டது. வேறு எந்த பழுதும் ஏற்படாததால் அந்த லாரியை செல்வதற்கு சின்னச்சாமி
அனுமதித்தார்.
மின்கம்பியில் லாரி
உரசியதால் காட்டூர், ரோஜா நகர்,
முல்லை நகர், ராஜீவ் நகர் பகுதிகளில் சுமார் 30 நிமிடம் மின்தடை ஏற்பட்டது.
*🌏♨️திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதானதால் போக்குவரத்து
பாதிப்பு*
தாளவாடி
திம்பம் மலைப்பாதையில் லாரி
பழுதானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திம்பம் மலைப்பாதை
ஈரோடு மாவட்டம் தாளவாடியை
அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி
வளைவுகள் உள்ளன. தமிழகம்-கர்நாடக இடையே முக்கிய போக்குவரத்து வழித்தடமாக இருக்கும்
இந்த பாதையில், தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள்
பயணிக்கின்றன. குறைந்த அளவு பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகள் கொண்டை ஊசி வளைவுகளை
கடந்துவிடுகின்றன. ஆனால் அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் கொண்டை ஊசி வளைவுகளில்
திரும்ப முடியாமல் பழுதாகி நின்றுவிடுகின்றன. இதனால் திம்பம் மலைப்பாதையில்
போக்குவரத்து பாதிப்பு என்பது தொடர்கதையாக உள்ளது.
லாரி பழுதானது
இந்தநிலையில் கர்நாடக
மாநிலம் மைசூருவில் இருந்து ஈரோடு மாவட்டம் கோபிக்கு மஞ்சள் மூட்டைகள்
ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்துகொண்டு இருந்தது.
நேற்று காலை 10 மணியளவில் 8-வது
கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பும்போது பழுதாகி நின்றுவிட்டது. இதனால் கனரக
வாகனங்கள் எதுவும் இருபுறமும் செல்ல முடியாமல் ஆங்காங்கே நின்றன. சிறிய வாகனங்கள்
மட்டும் சென்று வந்தன. இதுபற்றி தகவல் அறிந்ததும் கர்நாடகாவில் இருந்து வந்த
வாகனங்களை ஆசனூரிலும், தமிழ்நாட்டு வாகனங்களை பண்ணாரி சோதனை
சாவடியிலும் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
போக்குவரத்து பாதிப்பு
இதையடுத்து ஆசனூர் போலீசார்
சம்பவ இடத்துக்கு சென்று போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் பண்ணாரியில் இருந்து
மெக்கானிக் வரவழைக்கப்பட்டு லாரியில் ஏற்பட்ட பழுது நீக்கப்பட்டது. அதன்பிறகே லாரி
புறப்பட்டுசென்றது. எனினும் திம்பம் மலைப்பாதையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து
பாதிக்கப்பட்டது.
🌏♨️ஈரோடு மாவட்ட 34-வது கலெக்டராக கிருஷ்ணனுண்ணி பொறுப்பு ஏற்றார்- கொரோனாவை கட்டுப்படுத்தும்
பணிகளுக்கு முன்னுரிமை என்று பேட்டி*
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தின் 34-வது கலெக்டராக பொறுப்பு ஏற்ற புதிய
கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து
செயல்பட உள்ளதாக கூறினார்.
புதிய கலெக்டா்
ஈரோடு மாவட்டத்தின் 34-வது கலெக்டராக எச்.கிருஷ்ணனுண்ணி
நேற்று காலை பொறுப்பு ஏற்றார். முன்னதாக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த அவரை மாவட்ட
வருவாய் அதிகாரி முருகேசன் வரவேற்று, கலெக்டரின் அறைக்கு
அழைத்துச்சென்றார். அங்கு கோப்புகளில் கையொப்பமிட்டு ஈரோடு மாவட்ட புதிய கலெக்டராக
எச்.கிருஷ்ணனுண்ணி பொறுப்பு ஏற்றுக்கொண்டார். பின்னர் நிருபர்களை சந்தித்த அவர்
பேசியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் புதிய
கலெக்டராக பொறுப்பு ஏற்று இருக்கிறேன். நான் கலெக்டராக பணியாற்றும் 2-வது மாவட்டம் இதுவாகும். இங்கு
ஏற்கனவே கோபி சப்-கலெக்டராகவும் பணியாற்றி உள்ளேன்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா
தடுப்பு பணிகள் அரசின் வழிகாட்டுதலுடன் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து கொரோனாவை
கட்டுப்படுத்தும் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட இருக்கிறேன். அனைத்து
மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்று தமிழக அரசு திட்டமிட்டு
செயல்பட்டு வருகிறது. அதுபோல ஈரோடு மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்படும்
தடுப்பூசிகள் முன்னுரிமை அடிப்படையில் அனைத்து மக்களுக்கும் சரியாக கிடைக்க
நடவடிக்கைகள் எடுக்கப்படும். தடுப்பூசி அல்லது கொரோனா சிகிச்சை மையங்கள், கொரோனா சிகிச்சை அளிக்கும்
ஆஸ்பத்திரிகள் தொடர்பாக புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம்
உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒத்துழைப்பு
அரசின் வழிகாட்டுதலின் படி
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு காப்பீட்டு திட்ட பலன்கள் சரியாக கிடைக்க
நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் காப்பீட்டு திட்டம் தனியார் ஆஸ்பத்திரிகளில்
செயல்படுவதை உறுதி செய்து, தகுதியானவர்கள்
சிகிச்சை பெற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இதுமட்டுமின்றி, மாவட்டத்தில் உள்ள அனைத்து துறைகள்
சார்ந்த பிரச்சினைகளும் இனி உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நிவர்த்தி
செய்யப்படும். நான் புதிதாக பொறுப்பு ஏற்று இருப்பதால், ஒவ்வொரு
துறைகளைப்பற்றியும் முழுமையாக தெரிந்து கொண்டு சிறந்த நிர்வாகம் அமைய நடவடிக்கை
எடுப்பேன். மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க
வேண்டும். கொரோனா பரவலை தடுக்க மக்கள் முழுமையாக ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர்
கிருஷ்ணனுண்ணி கூறினார்.
அவருடன் மாவட்ட வருவாய்
அதிகாரி முருகேசன், மாவட்ட ஊரக
வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் எஸ்.பிரதிக் தயாள் ஆகியோர் இருந்தனர்.
வாழ்த்து
புதிதாக பொறுப்பு ஏற்ற
கலெக்டர் கிருஷ்ணனுண்ணிக்கு அனைத்து துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். இவர்
கடந்த 2012-ம் ஆண்டு
ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றார். பின்னர் 2013-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை திருச்சி மாவட்ட பயிற்சி கலெக்டராக இருந்தார். 2014-ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் கோபி சப்-கலெக்டராக பொறுப்பு ஏற்ற அவர் 2016-ம் ஆண்டு வரை பணியாற்றினார். 2017-ம் ஆண்டு தமிழக
அரசின் நிதித்துறை துணை செயலாளர் பதவி ஏற்றார். 2019-ம்
ஆண்டு பதவி உயர்வு பெற்ற அவர் நிதித்துறை இணை செயலாளராக பணியாற்றினார்.
கடந்த 22-2-2021 அன்று தேனி மாவட்ட கலெக்டராக
நியமிக்கப்பட்டார். அங்கிருந்து பணியிட மாறுதல் பெற்று ஈரோடு மாவட்டத்தின் 34-வது கலெக்டராக நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
ஈரோடு மாவட்டத்தில்
சப்-கலெக்டராக பதவி வகித்து, ஈரோடு
மாவட்ட கலெக்டராக உயர்ந்து உள்ளார் என்பதும் ஈரோடு மாவட்டத்தின் 26-வது கலெக்டர் டாக்டர் ஆனந்தகுமாருக்கு பின்னர், கலெக்டராக
பதவி ஏற்ற நேரடி ஐ.ஏ.எஸ். அதிகாரி கிருஷ்ணனுண்ணி என்பதும் குறிப்பிடத்தக்கது.
*🌏♨️தாளவாடி
அருகே வாழைத்தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்*
தாளவாடி
தாளவாடி அருகே
வாழைத்தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன.
வாழைகள் நாசம்
ஈரோடு மாவட்டம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் ஏராளமான
யானைகள் வசித்து வருகின்றன. அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள்
விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.
இந்தநிலையில் தாளவாடி அடுத்த
சேஷன்நகரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 40).
இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் தோட்டத்தில்
வாழை சாகுபடி செய்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு
வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 யானைகள்
குணசேகரனின் தோட்டத்துக்குள் புகுந்த வாழைகளை தின்றும், கால்களால்
மிதித்தும் நாசப்படுத்தின.
இழப்பீடு
தோட்டத்து வீட்டில்
தூங்கிக்கொண்டு இருந்த குணசேகரன் யானைகளின் சத்தம் கேட்டு எழுந்து வந்த
பார்த்தார். அப்போது வாழைகளை யானைகள் சேதப்படுத்துவதை கண்டு, உடனே அக்கம் பக்கத்து விவசாயிகளுக்கு
தகவல் கொடுத்தார்.
சிறிது நேரத்தில் அந்த
பகுதியை சேர்ந்த விவசாயிகள் அங்கு வந்தார்கள். பின்னர் ஒலி எழுப்பியும், பட்டாசு வெடித்தும் யானைகளை விரட்ட
முயன்றார்கள். சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு யானைகள்
வனப்பகுதிக்குள் சென்றன. எனினும் யானைகள் சேதப்படுத்தியதில் சுமார் 1 ஏக்கர் அளவில் வாழைகள் நாசமாகிவிட்டதாக கூறப்படுகிறது. சேதமடைந்த
வாைழகளுக்கு வனத்துறையினர் உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை
விடுத்துள்ளார்கள்.
*🌏♨️திருமணமான
8 மாதத்தில்
பெண் சாவு:தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது*
ராசிபுரம்:
பெண் தற்கொலை
ராசிபுரம் அருகே உள்ள
கட்டனாச்சம்பட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 40). ராசிபுரத்தில் சைக்கிள் ஸ்டாண்ட்
நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சத்யா (32). இவர்களுக்கு
திருமணமாகி 8 மாதங்கள் ஆகிறது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி
குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று
முன்தினம் சத்யா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து
அவரது தாய் வெண்ணிலா ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் தனது மகள் சாவில் சந்தேகம்
இருப்பதாக புகார் அளித்தார்.
கணவர் கைது
அதன்பேரில் ராசிபுரம் துணை
போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், போலீஸ்
இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) இந்திரா, சப்-இன்ஸ்பெக்டர்
மாணிக்கம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். திருமணமாகி 8 மாதங்களில் பெண் தற்கொலை செய்து கொண்டதால் நாமக்கல் உதவி கலெக்டர்
கோட்டைகுமாரும் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் சத்யாவை அவரது
கணவர் ராமச்சந்திரன் தற்கொலைக்கு தூண்டியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார்
கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ராசிபுரம் கிளை சிறையில்
அடைத்தனர்.
*🌏♨️பரமத்தி அருகே பெற்றோர் திட்டியதால் கொதிக்கும்
எண்ணெயை உடலில் ஊற்றி கல்லூரி மாணவி தற்கொலை*
பரமத்திவேலூர்:
கல்லூரி மாணவி
நாமக்கல் மாவட்டம் பரமத்தி
அருகே உள்ள கோனூர்கந்தம்பாளையத்தை சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மனைவி சாந்தி.
இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த தம்பதியின் மகள் காவியா (வயது 18). இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு
தனியார் கல்லூரியில் பி.காம். சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து
வந்தார். தற்போது கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் காவியா
வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் பாடங்கள் படித்து வந்தார்.
கடந்த 12-ந் தேதி பெற்றோர் கூலி வேலைக்கு
சென்று விட்டு வீடு திரும்பினர். அப்போது காவியா சமையல் செய்யாமல் இருந்ததாக
கூறப்படுகிறது. இதனால் மனோகரன், சாந்தி ஆகியோர் அவரை
திட்டியதாக தெரிகிறது. இதில் காவியா மனவேதனை அடைந்தார்.
தற்கொலை
இந்தநிலையில் திடீரென அவர்
வீட்டு சமையல் அறையில் இருந்த கொதிக்கும் எண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டார். இதனால்
வலியால் அலறிய அவரை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு
கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை
அளித்தும் பலனளிக்காமல் காவியா நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து
பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
🌏♨️நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.14 உயர்வு*
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில்
கறிக்கோழி கிலோ ரூ.62-க்கு
விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி
ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.14 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதனால் கறிக்கோழி விலை கிலோ ரூ.76 ஆக உயர்ந்து உள்ளது.
முட்டை கொள்முதல் விலை 520 காசுகளாகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ.80 ஆகவும் நீடிக்கிறது.
அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
🌏♨️சரவணம்பட்டியில் மசாஜ் சென்டரில் விபசாரம் 2 பேர் கைது*
சரவணம்பட்டி
கோவை சரவணம்பட்டி மகாநகர்
பகுதியில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல்
கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த வீட்டிற்கு சென்று விசாரணை செய்தனர்.
அப்போது அங்கு மசாஜ் சென்டர்
என்ற பெயரில் அழகிகளை வைத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அங்கு
விபசாரம் நடத்திய கேரளாவை சேர்ந்த அஜித்மோன் (வயது 32), கர்நாடகாவை சேர்ந்த மகந்த்ஷா (26)
ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் அங்கு வங்காளதேசத்தை
சேர்ந்த 20 வயது அழகி
உள்பட 2 பேர் மீட்கப்பட்டனர். இதில் வங்காளதேசத்தை
சேர்ந்தவர் பாஸ் போர்ட் இல்லாமல் மேற்கு வங்காளம் வழியாக கோவை வந்தது தெரியவந்தது.
அழகிகள் 2 பேரையும் போலீசார் காப்பகத்தில்
ஒப்படைத்ததுடன், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
*🌏♨️கொரோனா 3 வது அலையை எதிர்கொள்ள ஏற்பாடு குழந்தைகள் பிரிவில் 300 படுக்கைகளுடன் தனி
வார்டு*
கோவை
நாடு முழுவதும் கொரோனா பரவல்
தற்போது குறைந்து வருகிறது. இதையடுத்து 3-வது அலை விரைவில் தொடங்கலாம் என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்து
உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தொற்றின் 3-வது அலையை எதிர்கொள்ள தேவையான
நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறைக்கு மத்திய, மாநில
அரசுகள் அறிவுறுத்தி உள்ளன.
இதையடுத்து கோவை அரசு
ஆஸ்பத்திரியில் குழந்தைகளுக்கு தேவையான படுக்கைகள், மருந்துகள், ஆக்சிஜன்,
மருத்துவ உபகரணங் களை கொள்முதல் செய்யும் பணி தீவிரமாக நடந்து
வருகிறது.
இது குறித்து அரசு
ஆஸ்பத்திரி டீன் நிர்மலா கூறியதாவது:-
கொரோனா தொற்றின் 3-வது அலையில் குழந்தைகள் அதிகளவில்
பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே கொரோனா தொற்றுக்காக
குழந்தைகள் நலப்பிரிவில் 300 படுக்கைகள்
கூடிய தனி வார்டு அமைக்கப்பட்டு வருகிறது.
இதில் தீவிர
சிகிச்சைப்பிரிவு, ஆக்சிஜன்,
செயற்கை சுவாசம் உள்பட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும். மேலும்
குழந்தைகளுக்கு அளிக்கப்படும் இம்யூனோ குளோபலின் மருந்து 300
குப்பிகள் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
தவிர குழந்தைகளுக்கு
சிகிச்சை அளிக்க மருந்துகள், மருத்துவ
உபகரணங்கள் குறித்து குழந்தைகள் நலப் பிரிவு டாக்டர்களிடம் கேட்கப்பட்டு கொள்முதல்
செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
*🌏♨️ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படும்
குளங்களில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு*
கோவை
கோவை மாநகராட்சியில்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.62.17 கோடியில் மேம்படுத்தப்பட்ட உக்கடம் பெரியகுளம், ரூ.31.47 கோடியில் புனரமைக்கப்பட்ட செல்வசிந்தாமணி குளம், ரூ.67.86 கோடியில் புனரமைக்கப்பட்டு வரும் வாலாங்குளம் ஆகிய குளங்களை மாநகராட்சி
ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது குளக்கரையில்
நடைபயிற்சி பாதை, மிதிவண்டி
பாதை, இருக்கைகள், சூரிய மின்சக்தி
மேற்கூரை அமைப்புடன் கூடிய இருக்கைகள் மற்றும் நிழற்குடைகள் அமைக்கப்பட்டு
உள்ளதையும் அவர் பார்வையிட்டார்.
மேலும், திறந்தவெளி அரங்கம், விளையாட்டுத்திடல், உணவுக்கூடங்கள், கழிப்பறைகள், திறந்தவெளி உடற்பயிற்சி நிலையங்கள்,
படகுத்துறை, மிதவை உணவகம், பாதுகாப்பு கேமராக்கள், வாகனங்கள் நிறுத்தும்
வசதிகள் ஆகியவற்றையும் அவர் பார்வையிட்டார்.
தொடர்ந்து கெம்பட்டி
காலனியில் உள்ள மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் களப்பணியாளர்கள்
வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பதையும் அவர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி
அதிகாரிகள் உடன் இருந்தனர்.
*🌏♨️மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை நொய்யல் ஆற்றில்
நீர்வரத்து அதிகரிப்பு*
கோவை
மேற்கு தொடர்ச்சி
மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து
உள்ளது.
தென்மேற்கு பருவமழை
கோவை மாவட்டத்திற்கு அதிக
அளவில் மழை தரக்கூடிய தென்மேற்கு பருவமழை கடந்த 12-ந் தேதி தொடங்கியது. கடந்த 4 நாட்களாக மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து
வருகிறது.
இந்த நிலையில் கோவையில் உள்ள
நொய்யல் ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்
தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் தண்ணீர்
வரத்து அதிகரித்து உள்ளது.
புதுவெள்ளம்
இந்த தண்ணீர் அனைத்தும்
நொய்யல் ஆற்றில் கலந்ததால், ஆற்றில்
புதுவெள்ளம் பாய்ந்து வருகிறது. இந்த ஆற்றில் உள்ள முதல் தடுப்பணையான
சித்திரைச்சாவடி அணையில் நுங்கும் நுரையுமாக நீர்வரத்து அதிகரித்து இருந்தது.
இதனை பொதுமக்கள் ஆர்வமுடன்
பார்த்து சென்றனர். மேலும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மாவட்டம்
முழுவதும் மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்பதால் ஆறுகள் குளங்கள் நிரம்ப
வாய்ப்பு இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அருவியில் வெள்ளப்பெருக்கு
மேலும் தொடர்மழை காரணமாக
கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஊரடங்கு காரணமாக
இந்த அருவிக்கு செல்ல பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில்
வெள்ளப்பெருக்கால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று வனத்துறை அதிகாரிகள்
தெரிவித்தனர்.
அதுபோன்று சிறுவாணி அணை
நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் நீர்மட்டம்
உயர்ந்துவருவதாக குடிநீர் வடிகால் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்மேற்கு பருவ மழை
பெய்யக்கூடிய பகுதிகளான மேட்டுப் பாளையம், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றங்கரையோர பகுதியில் வசித்து வரும்
மக்கள் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.
மீட்பு படையினரும் தயார்
நிலையில் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
மழை அளவு
கோவை மாவட்டத்தில் பெய்த மழை
அளவு (மி.மீட்டர்) விவரம் வருமாறு:-
பொள்ளாச்சி-6 மி.மீ., சின்கோனா
- 68, சின்னகல்லார் - 107, வால்பாறை
(பி.ஏ.பி) - 39, சோலையார்-52, ஆழியாறு-6,
கோவை வேளாண் பல்கலைக்கழகம் - 2.5 மி.மீ.
*🌏♨️கோவை மாவட்ட புதிய கலெக்டராக சமீரன் பொறுப்பேற்பு*
கோவை
கோவை மாவட்ட புதிய கலெக்டராக
சமீரன் பொறுப்பேற்றார். கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என
பேட்டியளித்தார்.
பொறுப்பேற்பு
தமிழக சட்டமன்ற
தேர்தலின்போது கோவை மாவட்ட கலெக்டராக பணியாற்றிய ராஜாமணி பணியிட மாற்றம்
செய்யப்பட்டு, அவருக்கு
பதிலாக நாகராஜன் புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் கோவை கலெக்டர்
எஸ்.நாகராஜன் நில நிர்வாக ஆணையராக மாற்றம் செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்ட கலெக்டராக
பணியாற்றி வந்த ஜி.எஸ்.சமீரன் கோவை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். அவர் கோவை
மாவட்ட 182-வது
கலெக்டராக பொறுப்பெற்றுக்கொண்டார்.
முன்னாள் கலெக்டர் நாகராஜன்
புதிய கலெக்டர் ஜி.எஸ்.சமீரனிடம் அனைத்துப் பொறுப்புகளையும் ஒப்படைத்தார்.
இதன்பின்னர் கலெக்டர் சமீரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்
கூறியதாவது:-
தடுப்பூசி
தமிழக அரசு எடுத்த துரித
நடவடிக்கையால் கோவையில் தினசரி கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தில் இருந்து 1,500 ஆக குறைந்து உள்ளது.
கோவையில் கொரோனா பாதிப்பை
முழுமையாக கட்டுப் படுத்த பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
கொரோனா பரவலை முழுமையாக
கட்டுப்படுத்த முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
மாநகராட்சியில் போல் ஊரகப்
பகுதிகளிலும் அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி
விரைவுப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவ படிப்பு
கலெக்டர் சமீரன், திருவனந்தபுரம் அரசு மருத்துவ
கல்லூரியில் மருத்துவ படிப்பும், டெல்லி தேசிய சட்ட
பல்கலைக்கழகத்தில் நகர சுற்று சூழல் மேலாண்மை மற்றும் சட்டத்தில் முதுகலை பட்டய
படிப்பும் படித்து உள்ளார்.
கடந்த 2012-ம் ஆண்டு இந்திய குடிமைப்பணிக்கான
போட்டித் தேர்வில் வெற்றி பெற்று பரமக்குடியில் சப்-கலெக்டர், ராமநாத புரத்தில் கூடுதல் கலெக்டர், மீன்வளத்துறை
இயக்குனர், தென்காசி மாவட்ட கலெக்டராக பணியாற்றியது
குறிப்பிடத்தக்கது.
*🌏♨️கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் கோவை*
கோவை
ஊரடங்கு தளர்வுகளுக்கு
பின்னர் கோவை மாநகரில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. எனவே அதை
கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார் களா என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பரவலை
தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது தொற்று குறைந்து வருவதால்
ஊரடங்கில் சென்னை உள்பட 27
மாவட்டங்களுக்கு அதிகப்படியான தளர்வுகளும், கோவை உள்பட 11 மாவட்டங்களுக்கு ஒரு சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி கோவையில் தனியார்
நிறுவனங்கள் 25 சதவீத
ஊழியர்களுடன் பணியாற்ற அனுமதிக்கப்பட்டது.
மேலும் வாடகை கார்கள்
மற்றும் ஆட்டோக்கள் குறிப்பிட்ட பயணிகளுடன் இயங்கவும் சலுகை வழங்கப்பட்டது. இதனால்
மாநகரில் உள்ள பெரும்பாலான சிக்னல்கள் இயங்க ஆரம்பித்துள்ளன.
போக்குவரத்து நெரிசல்
ஆனால் ஊரடங்கு முழுவதும்
தளர்த்தப்பட்டதைப்போல் கோவை மாநகரில் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பொள்ளாச்சி சாலை, சத்தி சாலை, அவினாசி
சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
இதனால் வாகனங்கள் நீண்ட
வரிசையில் அணிவகுத்து நிற்பதால் கொரோனா நோயாளிகளை அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ்
மற்றும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள்
கூறியதாவது:-
கட்டுப்படுத்த வேண்டும்
வழக்கமாக உக்கடம் போலீஸ்
நிலையத்தில் இருந்து ஆத்து பாலத்திற்கு 5 நிமிடத்தில் சென்று விடலாம். ஆனால் கடந்த 3 நாட்க
ளாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் 30 நிமிடங்கள்
ஆகிறது.
தற்போது செட்டிபாளையம்
பைபாஸ் சாலை வழியாக சென்று கொண்டிருந்த லாரிகளும் இந்த சாலையில் வருவதால் கூடுதல்
நெருக்கடி ஏற்படுகிறது.
மேலும் சாலையோரத்தில் சிலர்
வாகனங்களில் பழங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
இதுவும் போக்குவரத்து
நெரிசலுக்கு காரணமாகி விடுகிறது. எனவே அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே சுற்று
பவர்கள் மீதும், போக்குவரத்து
நெரிசல் ஏற்படும் வகையில் வாகனங்கள் நிறுத்துபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை
எடுத்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள்
கூறினார்கள்.
*🌏♨️பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றம்*
மேட்டுப்பாளையம்
பில்லூர் அணையின் நீர்மட்டம்
93 அடியாக
உயர்ந்ததையடுத்து அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம்
கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
ஏற்பட்டுள்ளது.
பில்லூர் அணை
தமிழக-கேரள எல்லை பகுதியில்
கோவை மாவட்டத்தில் பில்லூர் அணை உள்ளது. கேரளா, நீலகிரி மாவட்டம் மற்றும் நீர்தேக்க பகுதிகளில் பெய்யும் மழை நீரை ஆதாரமாக
கொண்டு இந்த அணை கட்டப்பட்டது. தற்போது கேரளா மற்றும் நீலகிரி மாவட்டத்தில் மழை
பெய்து வருவதால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று காலை
பில்லூர் அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
நீர்வரத்து அதிகரிப்பின்
காரணமாக 100 அடி
கொள்ளளவு கொண்ட பில்லூர் அணை நீர்மட்டம் நேற்று இரவு 9 மணி
நிலவரப்படி 93 அடியாக உயர்ந்தது. பில்லூர் அணைக்கு தொடர்ந்து
நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி, வினாடிக்கு
6 ஆயிரம் கனஅடியும், மின்உற்பத்திக்கு
பின் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியும் என மொத்தம் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பவானி ஆற்றில்
வெள்ளப்பெருக்கு
இதன் காரணமாக
மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவின்பரில் மேட்டுப்பாளையம்
தாசில்தார் ஷர்மிளா பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிறுமுகையில் சிறுமுகை
பேரூராட்சி மற்றும் காவல்துறை சார்பில் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம்
பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் பில்லூர் அணை மின்சார
உதவி செயற்பொறியாளர் தலைமையில் பொறியாளர்கள் மேற்பார்வையில் அணைக்கு நீர்வரத்தை
கண்காணித்து வருகின்றனர். அணையின் நீர்மட்டம் 97 அடியாக உயரும் போது அணையின் பாதுகாப்பு கருதி அணையின் 4 மதகுகளில் இருந்து எந்த நேரமும் தண்ணீர் திறந்துவிடப்படலாம் என்று
அதிகாரிகள் தெரிவித்தனர்.
🌏♨️நடிகர் நடிகை பெயரில் வலம் வந்து கஞ்சா விற்ற காதல்
ஜோடி கைது*
கோவை
நடிகர்-நடிகை பெயரில் வலம்
வந்து கஞ்சா விற்ற காதல் ஜோடி கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸ்
தரப்பில் கூறப்படுவதாவது:-
காதல் ஜோடி
கோவை மாநகர கிழக்குப்பகுதி
போலீஸ் உதவி கமிஷனர் அருண் மேற்பார்வையில், பீளமேடு இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார், நேரு நகர் வீரியம்பாளையம் ரோட்டில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு
சந்தேகத்துக்கு இடமாக சுற்றிய இளம்பெண் உள்பட 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.
அதில் அவர்கள் கோவை பீளமேடு
காந்திமாநகரை சேர்ந்த சூர்ய பிரகாஷ் (வயது 21),
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த வினோதினி (21) என்பதும்,
2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதும் தெரிய வந்தது.
2 பேர் கைது
தொடர்ந்து போலீசார் 2 பேரிடம் விசாரணை செய்தபோது, கஞ்சா விற்று வருவது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார்,
அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதற்குள் 2¼ கிலோ கஞ்சா
இருந்தது.
அவர்கள் 2 பேரும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து
கஞ்சா விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.
உடனே போலீசார் 2 பேரையும் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அத்துடன் அவர்கள் அளித்துள்ள
வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-
2 வருடமாக
காதல்
வினோதினி கோவையில் தங்கி
இருந்து நர்சிங் படித்து உள்ளார். சூர்யபிரகாஷ் பட்டப்படிப்பு படித்து வந்தார்.
அப்போது முகநூல் மூலம் 2 பேருக்கும்
தொடர்பு ஏற்பட்டு, நட்பாக பழகினார்கள்.
பின்னர் அது காதலாக மாறியது.
2 வருடங்களாக
ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்து உள்ளனர்.
விரைவில் திருமணம் செய்து
கொள்ள திட்டமிட்ட 2 பேரும்,
தங்கள் பெற்றோருக்கு தெரியாமல் தனியாக வீடு எடுத்து ஒன்றாக தங்கி
இருந்தனர்.
கல்லூரியில் படிக்கும்போதே
சூர்யபிரகாசுக்கு கஞ்சா விற்கும் பழக்கம் இருந்து உள்ளது.
கஞ்சா விற்றனர்
இந்த நிலையில் கொரோனா காரணமாக
ஊரடங்கு அமல்படுத்தப் பட்டதால் கல்லூரி திறக்கவில்லை. எனவே கல்லூரி படிப்பை அவர்
பாதியில் நிறுத்தி உள்ளார். பல இடங்களில் வேலை கேட்டும் கிடைக்க வில்லை.
ஏற்கனவே தனக்கு கஞ்சா
விற்கும் பழக்கம் உள்ளதால், தனது
காதலியுடன் சேர்ந்து கஞ்சா விற்க முடிவு செய்தார்.
இதையடுத்து தனக்கு
தெரிந்தவர்களிடம் இருந்து கஞ்சாவை வாங்கி, கோவையில் அறை எடுத்து தங்கி உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்று
உள்ளனர்.
ஆடம்பரமான வாழ்க்கை
அதில் நல்ல வருமானம்
கிடைத்து உள்ளது. அதை வைத்து ஆடம்பரமாக வாழ்க்கை நடத்தி வந்தனர். கல்லூரி மாணவர்களிடையே
கஞ்சா விற்பனை நல்ல முறையில் சென்றது.
இதனால் தொடர்ந்து அவற்றை
விற்க முடிவு செய்து கல்லூரி மாணவர்கள் பலரை தங்களின் தொடர்புக்குள்
வைத்துக்கொண்டனர்.
மேலும் போலீசார் தங்களை
பிடித்து விட்டால் எளிதில் தப்பிப்பதற்காக சூர்யபிரகாஷ் தனது பெயரை நடிகர் சூர்யா
என்றும், வினோதினி
நடிகை தமன்னா என்றும் பெயரை மாற்றிக்கொண்டு கோவையில் வலம் வந்து உள்ளனர் என்று
போலீசார் தெரிவித்தனர்.
🌏♨️ஒரே நாளில் சோலையார் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்வு*
வால்பாறை,
வால்பாறையில் பலத்த மழை
பெய்து வருகிறது. இதனால் ஒரே நாளில் சோலையார் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்ந்துள்ளது.
தொடர் மழை
கோவை மாவட்டம் வால்பாறையில்
தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று 5-வது நாளாக வால்பாறை மற்றும் அதன்
சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலை முதலே அவ்வபோது கனமழை பெய்து வந்தது. மேலும்
மழையுடன் பலத்த காற்றும் வீசியது.
தொடர் மழையின் காரணமாக
சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி
நின்றன. கடை வீதிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்தவர்கள் குடைப்பிடித்தப்படி
சென்றதை காணமுடிந்தது. தொடர் மழையின் காரணமாக வால்பாறை வனப்பகுதியில் ஆங்காங்கே
புதிய அருவிகள் உருவாகி உள்ளன.
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
வால்பாறை மற்றும் அதன்
சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆறுகளில்
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல் அக்காமலை கருமலை எஸ்டேட் பகுதியில்
பெய்யும் கனமழை காரணமாக கருமலை ஆற்றில் தண்ணீர் பாய்ந்தோடுகிறது.
சின்னக்கல்லாரில் மழையின்
காரணமாக அணையின் சுரங்க கால்வாய் வழியாக சோலையார் அணைக்கு வெளியேற்றப்படும்
தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளது. இங்கிருந்து வினாடிக்கு 1,614 கனஅடி தண்ணீர் சோலையார் அணைக்கு
திறந்து விடப்பட்டு வருகிறது.
இதேபோல் நீரார் அணையில்
இருந்து வினாடிக்கு 151 கனஅடி
தண்ணீர் சுரங்க கால்வாய் வழியாக சோலையார் அணைக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் வெள்ளமலை
எஸ்டேட் சுரங்க கால்வாயின் வாயில் பகுதியில் வெளியேறி வெள்ளமலை ஆற்றில் கலந்து
சோலையார் அணைக்கு செல்கிறது.
ஒரே நாளில் 8 அடி உயர்வு
மழையின் காரணமாக 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையார்
அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை
4 மணி நிலவப்படி சோலையார் அணையின் நீர்மட்டம் 73 அடியாக இருந்தது. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்ந்தது. அதாவது நீர்மட்டம் 65 அடியில்
இருந்து 73 அடியாக உயர்ந்துள்ளது.
அணைக்கு தொடர்ந்து
நீர்வரத்து அதிகரித்து வருவதால் 5-வது நாளாக
சோலையார் மின் நிலையம்-1 இயக்கப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு 42 மெகாவாட் மின் சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மின்உற்பத்திக்கு பின் 426 கனஅடி தண்ணீர் பரம்பிக்குளம்
அணைக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டமும்
உயர்ந்து வருகிறது.
பச்சை தேயிலை உற்பத்தி
குறைவு
இந்த கனமழை காரணமாக வால்பாறை
வட்டார பகுதி முழுவதும் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இதனால் எஸ்டேட் பகுதியில்
பச்சை தேயிலை உற்பத்தியும் குறைந்து உள்ளது. எனவே பல்வேறு எஸ்டேட் நிர்வாகங்கள்
தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மதியம் 2 மணி வரை மட்டும் பணி வழங்கினர்.
ஏற்கனவே கொரோனா தொற்று
பாதிப்பு ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தொடர் மழை காரணமாகவும்
வால்பாறை பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மழையளவு
வால்பாறையில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
சின்னக்கல்லார்- 107, நீரார்- 100, வால்பாறை-39,
சோலையார் அணை- 52, பொள்ளாச்சி-5, சுல்தான்பேட்டை-12 மழையும் பதிவானது.
சோலையார் அணைக்கு வினாடிக்கு
2,822 கனஅடி
தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மின் உற்பத்திக்காக அணையில் இருந்து 426 கனஅடி தண்ணீர் சோலையார் மின் நிலையத்திற்கு திறக்கப்பட்டு வருகிறது.
0 Response to "17.06.2021 இன்றைய ஒட்டுமொத்த செய்திகளும் ஒரே பதிவில் "
Post a Comment