19.06.2021 மாலை முக்கிய செய்திகள்

Trending

Breaking News
Loading...

19.06.2021 மாலை முக்கிய செய்திகள்

 19.06.2021 மாலை முக்கிய செய்திகள்
 

நாட்டிலேயே முதல் மாநிலம். இனி எந்த கட்டுப்பாடும் இல்லை. ஊரடங்கை முழுமையாக வாபஸ் பெறும் தெலங்கானா.*
 
புனேவில் இருந்து 3.10 லட்சம் டோஸ் #கோவிஷீல்டு தடுப்பூசி இன்று மாலை சென்னை வர உள்ளன.*
 
ஆந்திராவில் புதிதாக 5,674 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது*
 
*குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 8,014 பேர்*
 
*சிகிச்சை பலனின்றி 45 பேர் உயிரிழப்பு*
 
ஆந்திராவில் புதிதாக 5,674 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது*
 
*குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 8,014 பேர்*
 
*சிகிச்சை பலனின்றி 45 பேர் உயிரிழப்பு*
 
வீர வசனம் பேசிக் கொண்டு டெல்லி சென்ற ஸ்டாலின் எதைச் சாதித்தார் என்று கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, சட்டசபையில் ஸ்டாலின் போல சட்டையைக் கிழித்துக் கொண்டு நாடகம் போடாமல், எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம் என்றும் தெரிவித்துள்ளார்,*
 
ஏற்றுக்கொள்ளக் கூடிய விலையில் சிமெண்ட் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் அசோஷியேசன் உறுதி அளித்துள்ளது.*
 
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நீண்ட நாட்கள் தேங்கக்கூடிய திடக்கழிவுகளை அகற்ற 21 முதல் 26-ஆம் தேதி வரை ஒரு வாரகாலத்திற்கு தீவிர தூய்மை பணி நடைபெறவுள்ளது.*
 
திருப்பதி- திருமலை இடையே 100 பசுமைப் பேருந்துகள் விரைவில் இயக்கப்படும் என்று அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பாரெட்டி கூறியுள்ளார். சுற்றுச்சூலை மாசுப்படுத்தாத வகையில் பேட்டரியால் இயங்கும் 100 பசுமைப் பேருந்துகளை இயக்கத் திட்டம் என அவர் தெரிவித்துள்ளார்.*
 
தொலைதூரக் கல்வி மூலம் சட்டப்படிப்பை நடத்த அண்ணாமலை பல்கலைக் கழகத்துக்கு விதித்த தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.*
கொரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள உள்கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழ்நாட்டுக்கு அடுத்த மாதம் 1 கோடி தடுப்பூசி வருகிறது. மேலும் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு 50 ஆக்சிஜன் செறிவூட்டிகள், மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.*
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் விவரங்களை மருத்துவமனைகள் சரியாக தருகின்றனவா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.*
 
பிகார் பெண்ணுக்கு 5 நிமிட இடைவெளியில் இரண்டு தடுப்பூசிகள் செலுத்திய பரிதாபம்*
 
பாட்னா: மருத்துவக் கவனக் குறைவால், பிகார் மாநிலத்தில் ஒரு கிராமப் பெண்ணுக்கு ஐந்து நிமிட இடைவெளியில் இரண்டு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
 
விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த படிப்பறிவு இல்லாத 60 வயது மூதாட்டிக்கு, ஒரு தடுப்பூசி செலுத்திய 5 நிமிடத்தில் மற்றொரு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதிலும் கொடுமை என்னவென்றால், முதல் தடுப்பூசி கோவிஷீல்ட், இரண்டாவது செலுத்தப்பட்டது கோவாக்சின்.
 
தனக்கு என்ன நேர்ந்தது என்பது கூட தெரியாமல், கரோனா தடுப்பூசிகளை ஒன்றன் பின் ஒன்றாக செலுத்திக் கொண்டு வீடு வந்து சேர்ந்துள்ளார் சுனிலா தேவி.
 
வீட்டுக்கு வந்ததும், அவரிடம் குடும்பத்தினர் எப்படி தடுப்பூசி போட்டுக் கொண்டீர்கள் என்று கேட்க, அப்போது அவர் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக அவரை அழைத்துக் கொண்டு தடுப்பூசி செலுத்திய இடத்துக்குச் சென்றுள்ளனர்.
 
அவர்களிடம் நடந்த விவரத்தைக் கூற, அவர்களிடமிருந்து மௌனமே பதிலாகக் கிடைத்துள்ளது.
 
இதையடுத்து சுகாதாரத் துறைக்கு புகார் அளிக்கப்பட்டதையடுத்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு செவிலியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஜூன் 16-ஆம் தேதி நடந்துள்ளது. அவரை மருத்துவர்கள் தங்கள் கண்காணிப்பில் வைத்துள்ளனர். இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்ட நிலையில், அந்தப் பெண்மணிக்கு கடுமையான உடல்சோர்வு ஏற்பட்டதாகக் கூறியுள்ளார்.
 
இது பற்றி சுனிலா கூறுகையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளச் சென்றேன். அங்கே முதலில் எனக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பிறகு ஒரு அறையில் இருக்குமாறு கூறினார்கள். அப்போது அங்கிருந்த சிலர் மற்றொரு வரிசையில் நின்றனர். நானும் அவர்களுடன் நின்றிருந்தேன். அங்கே என்ன நடக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. மீண்டும் எனக்கு தடுப்பூசி போடப்பட்டது. அவர் எனக்கு தடுப்பூசி போடும் போது, எனக்கு இப்போதுதான் தடுப்பூசி போட்டார்கள் என்று கூறினேன். ஆனால், அந்த செவிலியர் அதை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை இரண்டு தடுப்பூசிகளும் ஒரே கையிலேயே போடப்பட்டது என்கிறார் கவலையோடு.
 
பிறகு கை வலியோடு வீட்டுக்குத் திரும்பி வந்து, அங்கு நடந்ததை தனது மகனிடம் கூற, உறவினர்களும் குடும்பத்தினரும் மருத்துவமனைக்குச் சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
பிறகு தவறிழைத்த செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவ நிர்வாகம் உறுதியளித்து இரண்டு செவிலியர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பப்ஜி மதனிடம் பணத்தை இழந்தவர்கள் புகாரளிக்காலம்: காவல்துறை அறிவிப்பு*
 
பப்ஜி மதனிடம் ஏமாந்து பணத்தை இழந்தவர்கள் புகாரளிக்கலாம் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்து ஆபாசமாக பேசி தனது யூடியூப்பில் விடியோ வெளியிட்டு வந்த மதனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தர்மபுரியில் வைத்து கைது செய்தனர். மதன் தொடர்ந்து விபிஎன் செர்வரை பயன்படுத்தி தலைமறைவாக இருந்து வந்த நிலையில் தர்மபுரியில் மதன் பதுங்கி இருந்த தகவல் அறிந்து போலீசார் விரைந்து கைது செய்யும் போது, மதன் போலீசார் காலில் விழுந்து கண்ணீர் விட்டு கெஞ்சியதாக தகவல் வெளியானது.மேலும் மனைவி மற்றும் குழந்தையை விடக்கூறி கெஞ்சியதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும் விடியோவில் ஆபாசமாக பேசுவதற்காக பணம் கொடுத்து பெண்ணை தயார் செய்ததும் மதனிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
 
ஆபாச விடியோ மூலம் சம்பாதித்த பணத்தில் 2 சொகுசு கார்கள்,2 சொகுசு பங்களாக்கள் வாங்கியதாகவும், ரூ. 4 கோடி வரை வங்கி கணக்கில் வைத்துள்ளதாகவும் தெரியவந்தது.
 
இதனையடுத்து பப்ஜி மதன்- கிருத்திகா வங்கி கணக்கை போலீசார் முடக்கியுள்ளனர். மேலும் மதனின் சொகுசு கார்கள் இரண்டையும் பறிமுதல் செய்து காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்துள்ளனர்.
 
இதனையடுத்து கைது செய்யப்பட்ட மதனை போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில், பப்ஜி மதனிடம் ஏமாந்து பணத்தை இழந்தவர்கள் புகாரளிக்கலாம் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதாவது பப்ஜி மதனிடம் பணத்தை இழந்தவர்கள் dcpccbi@gmail.com என்ற இணையதள முகவரியில் புகாரளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மதனிடம் ஏமாந்தது ரூ.5 ஆயிரமாக இருந்தாலும் புகாரளிக்கலாம் என்று குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
 
புதிய 10 ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்*
 
சென்னை: புதிதாக 10 ஆம்புலன்ஸ்களின் சேவையை முதல்வர் ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில் தொடங்கிவைத்துள்ளார். 10 ஆம்புலன்ஸ்களில் 8 வாகனம் மலைப்பகுதிகளிலும், 2 வாகனம் மற்ற இடங்களிலும் பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 5 இடங்களில் எண்ணெய் கிணறு அமைக்க விண்ணப்பித்தது ஓஎன்ஜிசி*
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் 5 இடங்களில் எண்ணெய் கிணறு அமைக்க ஓஎன்ஜிசி விண்ணப்பித்துள்ளது. நெய்வேலி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட இடங்களில் எண்ணெய் கிணறு அமைக்க ஓஎன்ஜிசி அனுமதி கேட்டுள்ளது. ஆய்வுக்கு அனுமதி கேட்டு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தில் ஓஎன்ஜிசி விண்ணப்பித்துள்ளது.
 
கல்வி தொலைக்காட்சியில் புதிய பாடங்கள் அடங்கிய விடியோ தொகுப்பை தொடங்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின்*
 
சென்னை: கல்வி தொலைக்காட்சியில் புதிய பாடங்கள் அடங்கிய விடியோ தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
 
ஒன்றாம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான புதிய பாடங்களுக்கான வகுப்புகள் கல்வி தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டுள்ளது.
 
2021-22 ஆம் கல்வி ஆண்டுக்கான பாடநூல்களை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
 
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அமைச்சர் எ.வ.வேலு, உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
 
*சென்னை: வண்டலூரில் மேலும் 4 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 4 சிங்கங்களுக்கும் இந்தியாவில் வேகமாக பரவி வரும் டெல்டா வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.*
 
 
*சென்னை: ஜூன் 21-ம் தேதி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூன் 21-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.*
 
   *சென்னை: மேகதாது அணை கட்டும் முடிவினை கர்நாடக மாநில அரசு உடனடியாக கைவிட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஒன்றிய அரசு அனுமதி வழங்கியதும் மேகதாது அணை கட்டப்படும் என்று எடியூரப்பா கூறியிருப்பது ஒருதலைப்பட்சமானது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மேகதாது கட்டப்படும் என்பது கண்டனத்துக்குறியது எனவும் தெரிவித்துள்ளார்.*
 
   *சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, சவரன் ரூ.35,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,430-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வௌ்ளியின் விலை ரூ.73.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.*
 
   *மேட்டூர் அணை நீர்மட்டம் சனிக்கிழமை காலை 92.84 அடியிலிருந்து 92.12 அடியாக சரிந்தது.*
 
*அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 466 கன அடியிலிருந்து 443 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 55.10 டிஎம்சி -ஆக இருந்தது.*
 
    *என்னுடைய, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில், சேப்பாக்கம் குடிசைப்பகுதி மக்கள் என்னை அவர்களின் வீடுகளுக்கு வர வேண்டும் என, அன்புடன் அழைத்தனர். அதன்படி அவர்கள் வீடுகளுக்கு சென்ற போது, அன்பை பொழிந்து மகிழ்ந்தனர்.*
 
- *தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி*
 
 
   *புதுடெல்லி,*
 
*இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் குறைந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.*
 
 
   *இந்திய முன்னாள் தடகள் வீரர் மில்கா சிங்(91) கரோனா தொற்றுக்கு பிந்தைய பாதிப்புகளால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.*
 
*📌📌திருவாரூர்* அருகே ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஒருவர் கொலை.
கூடூர் கிராமத்தில் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.-ஐ கேஸ்கட்டர் மூலம் உடைத்து கொள்ளை முயற்சி.
தடுக்க முயன்ற முதியவர் கத்தியால் குத்தி கொலை.
 - ஒருவர் கைது.

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மதன் என்பவரை கைது செய்தனர். உடன் வந்த மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓட்டம் .
 
*📌📌புதுக்கோட்டை மாவட்டம்* கைகாட்டி டாஸ்மாக் கடைக்கு குழந்தையுடன் வந்து மது வாங்கிய சங்கர் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஏனாதி கறம்பை சங்கர் தனது கைக்குழந்தையுடன் மதுவாங்க வந்தபோது ஊர்காவல்படை காவலர் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் வழக்கு பதிந்த வடகாடு போலீசார் சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
*📌📌திண்டுக்கல்* காய்கறி வாகன ஓட்டுனரிடம் ரூ.50 லஞ்சம் வாங்கிய நத்தம் சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜவகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பரளிப்புத்தூர் சோதனைச்சாவடியில் காய்கறி வாகனங்களை மறித்து ஓட்டுநர்களிடம் ரூ.50 லஞ்சம் வாங்கியுள்ளார். லஞ்சம் வாங்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆனதை அடுத்து ஜகவரை மாவட்ட எஸ்.பி. பணியிட நீக்கம் செய்துள்ளார்.
 
*📌📌சென்னை* ஆவடியில் பாதுகாப்புத்துறை தொழிற்சாலை ஊழியர்கள் பிரதமர் மோடி உருவபொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான தொழிற்சாலைகளை கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னை ஆவடியில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
 
*📌📌சிவகங்கையில்* அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் அபகரித்து இருந்த ரூ.10 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் உறவினர் சரவணன், கோயில் நிலம் 10 ஏக்கரை அபகரித்ததாக புகார் கூறப்பட்டு இருந்தது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீகெளரி விநாயகர் ஆலயத்துக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
 
*📌📌சிவகங்கை மாவட்டம்,* திருப்புவனம் அருகே  நள்ளிரவு இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்
 
*📌📌கிருஷ்ணகிரி மாவட்டத்தில்* கொரோனாவால் இறந்த 140 பேரின்  அறிக்கை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது
 
 *📌📌கிருஷ்ணகிரி*
ஓசூரில், ஜாமீனில் வந்த பிரபல ரவுடி வெட்டிக்கொலை: நண்பர் உள்பட 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
 
*📌📌திருவண்ணாமலை*
கர்நாடகாவில் இருந்து திருவண்ணாமலைக்கு மினிவேனில் புகையிலை பொருட்களை கடத்த முயன்ற 2 பேர் கைது
 
*📌📌சென்னை* ப‌ப்ஜி' மதனிடம் கைப்பற்றப்பட்ட 3 டேப்லட்களில் இருந்த 700 வீடியோக்கள் சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பிவைப்பு. மதனின் யூடியூபில் உள்ள 700 வீடியோக்களையும் முடக்க திட்டம்
 

0 Response to " 19.06.2021 மாலை முக்கிய செய்திகள்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel