*1️⃣🔷🔶வேளாண் சட்டகளையும் குடியுரிமை திருத்த சட்டத்தையும் திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் வரவு- செலவு திட்ட கூட்டத்தொடரின் போது தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.*
*2️⃣🔷🔶தமிழகத்தில், முக கவசம் அணியாததற்காக கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் இதுவரை சுமார் 15 லட்சத்து 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன.*
*3️⃣🔷🔶முதல் முறையாக ஆறு முதல் ஒன்பது வயது வரையிலான குழந்தைகளிடம் செரோ ஆய்வின் நான்காவது சுற்று சோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் தெரிவித்துள்ளது.*
*4️⃣🔷🔶இந்திய ராணுவத்தால் கொல்கத்தாவில் நடத்தப்படும் ராணுவ மேலாண்மை கல்வி நிலையத்தில் எம்.பி.ஏ. பயில்வதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன.*
*5️⃣🔷🔶செங்கல்பட்டு நகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீடீர் ஆய்வு மேற்கொண்டார்.*
*6️⃣🔷🔶 நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் திரைப்பட நடிகர் திரு விவேக், பிரபல எழுத்தாளர் திரு ராஜநாராயணன், சுதந்திர போராட்ட வீரர் திரு துளசி அய்யா வாண்டையார் மற்றும் சட்டமன்ற பேரவை முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோரது மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.*
*7️⃣🔷🔶டாய்கேத்தான்-2021 போட்டியில் பங்கேற்பவர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூன் 24ம் தேதி கலந்துரையாடுகிறார்.*
*8️⃣🔷🔶மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் திரு சஞ்செய் கோத்தாரி இன்று குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார்.*
*9️⃣🔷🔶வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசின் புதிய மூன்று வேளாண் சட்டங்கள் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.*
*1️⃣0️⃣🔷🔶தமிழகத்தில் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்படமாட்டாது என்று தொழில்துறை அமைச்சர் திரு தங்கம் தென்னரசு இன்று பேரவையில் தெரிவித்துள்ளார்.*
*1️⃣1️⃣🔷🔶அரியலூர், கடலூர் மாவட்டங்களில் 15 இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்க அனுமதி கேட்டு ஓ என் ஜி சி அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தொழில்துறை அமைச்சர் திரு தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.*
*1️⃣2️⃣🔷🔶தமிழ்நாட்டில் கோவிட்-19 தொற்றின் மூன்றாவது அலையை சமாளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.*
*1️⃣3️⃣🔷🔶கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் திரு ஜெய்சங்கர், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் திரு தினேஷ் குணவர்தனே -யை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.*
*1️⃣4️⃣🔷🔶கன்னியாகுமரி: கன்னியாகுமரி திடல் பகுதியில் ஒருவாரமாக சுற்றித்திரிந்த காட்டு யானை நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தது. யானையின் உடலை மீட்ட வனத்துறை அதிகாரிகள், உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.*
*1️⃣5️⃣🔷🔶டெல்லி: கோவாக்சின் தடுப்பூசி 74% நோய் எதிர்ப்புத் திறன் கொண்டது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கோவாக்சின் 3-ம் கட்ட பரிசோதனை முடிவுகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் கலந்தாய்வு நடத்தினர்.*
*1️⃣6️⃣🔷🔶சென்னை: சென்னையில் ஏ.டி.எம். கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்த தனிப்படை வடமாநிலம் விரைந்தது. சென்னையில் பல இடங்களில் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.களில் நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளதால் தனிப்படை விரைந்தது.*
*1️⃣7️⃣🔷🔶டெல்லி: சிபிஎஸ்இ +2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பல்வேறு தரப்பு ஆலோசனைகளை மேற்கொண்டு எடுத்த முடிவில் தலையிட விரும்பவில்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளது.*
*1️⃣8️⃣🔷🔶கர்நாடகா: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது. கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றம் செய்யப்டுகிறது. காவிரி ஆற்றில் விநாடிக்கு 1,500 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது.*
*1️⃣9️⃣🔷🔶லட்சத்தீவு: லட்சத்தீவின் நிர்வாக அதிகாரி பிரஃ புல் படேல் கொண்டு வந்த புதிய சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. லட்சத்தீவில் சர்ச்சைக்குரிய புதிய சட்டங்களுக்கு இடைக்காலத்தடை விதித்து கேரளா அரசு உத்தரவிட்டுள்ளது.*
*2️⃣0️⃣🔷🔶சென்னை: தமிழ்நாட்டில் சிமெண்ட் விலை ஒரு மூட்டைக்கு மேலும் ரூ. 25 குறைந்து உள்ளதாக கட்டுமான துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த வாரம் ரூ.490-க்கு விற்கப்பட்டு வந்த சிமெண்ட் விலை தற்போது ரூ.435-க்கு விற்கப்படுகிறது.*
*2️⃣1️⃣🔷🔶சென்னை: ஜூன் 26-ம் தேதி முதல் பாரீஸ்-சென்னை இடையே மீண்டும் விமான சேவையை ஏர் ஃபிரான்ஸ் தொடங்குகிறது. பாரீஸ்-சென்னை இடையே வாராந்திர விமான சேவையை தொடங்க ஏர் ஃபிரான்ஸ் திட்டமிட்டுள்ளது.*
*2️⃣2️⃣🔷🔶டெல்லி: இந்தியாவில் 553 மாவட்டங்களில் கொரோனா தொற்று விகிதம் 5%-க்கும் கீழ் குறைந்துள்ளது என ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது. கடந்த வாரத்தைவிட சராசரியாக தினசரி தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 29% ஆக குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 88 லட்சத்து 9 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 88 லட்சம் தடுப்பூசிகள் 63.68% தடுப்பூசிகள் கிராமப்புற மக்களுக்கு போடப்பட்டுள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.*
*2️⃣3️⃣🔷🔶திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வசீம் அக்ரம் என்ற ஆசிரியர் வீட்டில் 25 சவரன் நகை, ரூ.10 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது பின்பக்க கதவை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். கொள்ளை சம்பவம் தொடர்பாக வாணியம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்*
*2️⃣4️⃣🔷🔶சென்னை: கட்டுமானத்துக்கு பயன்படுத்தும் 10, 8 M.M TMT கம்பி ஒரு டன் விலை 69,000-லிருந்து ரூ.68,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் அறிவுறுத்தலை அடுத்து ஜி.எஸ்.டீ. உள்பட ஒரு டன்னுக்கு ரூ.1,180 குறைக்கப்பட்டு உள்ளது.*
*2️⃣5️⃣🔷🔶டெல்லி: டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இல்லத்தில் முக்கிய எதிர்கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சமுதாயத்தின் முக்கிய பிரமுகர்கள் சிலரும் பவார் இல்லத்தில் நடைபெறும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.*
26.அமெரிக்காவின் கொலம்பசில் உள்ள ஓகியோ பல்கலைக்கழக பேராசிரியர் தலைமையிலான குழு இதுவரையில்லாத அளவு மிக சூடான பெரிய வாயுக்கிரகம் கண்டறியப்பட்டுள்ளது. கெல்ட் 9 பி என்று கிரகத்திற்கு பெயர் வைத்துள்ளனர். இந்த கிரகத்தின் பகல்நேர வெப்பநிலை 4,300 டிகிரி செல்சியஸ் ஆகும். இது வியாழன் கிரகத்தை விட 2.8 மடங்கு பெரியதாகும்.
27. குளிர் காலத்தில் பொடுகு தொல்லை அதிகரிப்பதோடு, தலையில் மலசேஷ்யா என்ற பூஞ்சை தொற்றும் உருவாகும். முகம், மார்பு, முதுகு ஆகிய உடலின் பிற பாகங்களுக்கும் பூஞ்சைத் தொற்று பரவும் ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு தீர்வு வாரத்திற்கு இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
27.சீனாவின் ஷெய்ஜங் மாகாணத்தில் சுமார் 65 முதல் 145 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் படிமங்கள் மற்றும் வரலாற்றுக்கு முந்தைய எட்டு விலங்கு இனங்களை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளதன் மூலம் அங்கு உண்மையான ஜூராசிக் பார்க் இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஷெய்ஜங் பகுதியை சேர்ந்த 11,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மொத்தம் 82 டைனோசர் படிம தளங்கள், ஆறு டைனோசர் இனம் மற்றும் 25 வகையான படிம டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஷெய்ஜங் ஹைட்ராலஜி மற்றும் ஜியோலஜி நிறுவனத்தை சேர்ந்த ஆய்வாளர் குழுவினர் இத்தகவலை உறுதி செய்துள்ளனர்.
28.சந்திரகுப்த மௌரியரின் முதன்மை அமைச்சராகவும், வழிகாட்டியாகவும் இருந்து, மிகப்பெரிய மௌரிய பேரரசு அமைவதற்கு முக்கிய காரணமானவர் தான் சாணக்கியர். இவர் படிப்பை பழம்பெரும் தக்ஷஷீலா பல்கலைகழகத்தில் முடித்தார். உலகிலேயே மிகச்சிறந்த பாடசாலையாக இருந்த இந்த இடம் தற்போது பாகிஸ்தானில் அமைந்துள்ளது.
0 Response to " 23.06.2021 முக்கிய செய்திகள்"
Post a Comment