23.06.2021 இன்றைய ஒட்டுமொத்த முக்கிய செய்திகள்

Trending

Breaking News
Loading...

23.06.2021 இன்றைய ஒட்டுமொத்த முக்கிய செய்திகள்

23.06.2021 இன்றைய ஒட்டுமொத்த முக்கிய செய்திகள்

         
 
 

*1️
🔷🔶சென்னை: சென்னையில் எஸ்.பி.ஐ. ஏடிஎம் இயந்திரத்தில் நூதன முறையில் பணம் திருடிய கொள்ளையர்கள் கைது என தகவல் வெளியாகியுள்ளது. வெளிமாநிலத்தில் முகாமிட்டுள்ள தனிப்படை போலீஸ், வடமாநில கொள்ளை கும்பலை பிடித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.*
 
*2️🔷🔶சென்னை: சென்னை பெரியமேடு பகுதியில் மேலும் ஒரு எஸ்.பி.ஐ. ATMல் ரூ.16 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 190 முறை ATM கார்டு பயன்படுத்தி ரூ.16 லட்சம் நூதன முறையில் திருடப்பட்டுள்ளது சி.சி.டி.வி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. கொள்ளை தொடர்பாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.*
 
 
*3️🔷🔶சென்னை: சென்னை கொளத்தூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தனியார் பிளாஸ்டிக் நிறுவன விற்பனை பிரதிநிதி விஷால், தனது மனைவி, 2 பெண் குழந்தைகளுடன் தூக்க மாத்திரை சாப்பிட்டார். மாத்திரை சாப்பிட்ட 4 பெரும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.*
 
 
 
*4️🔷🔶திருச்சி: விமானத்தில் பயணிகள் கடத்தி வந்த ரூ.3 கோடி மதிப்புள்ள 6 கிலோ தங்கம் திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஷார்ஜாவில் இருந்து திருச்சிக்கு கடத்தி வந்த தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.*
 
 
*5️🔷🔶கரூர்: கரூர் மாவட்டம் வெள்ளியணை அடுத்த உப்பிடமங்கலம் பகுதியில் பூட்டி இருந்த வீட்டில் புகுந்து 58 பவுன் தங்க நகைகள், சுமார் 1 கிலோ வெள்ளியை கொள்ளையடித்து திருடர்கள் தப்பி சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்*
 
*6️🔷🔶சென்னை: பிடிபட்ட எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையர்களை அழைத்துவர தி.நகர் துணை ஆணையர் டெல்லி விரைந்துள்ளார். சென்னை தியாகராயர் நகர் காவல் துணை ஆணையர் ஹரிஹரன் பிரசாத் டெல்லி விரைந்துள்ளார்.*
 
 
 
*7️🔷🔶கத்துவா: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டம் ஹிராநகரில் ரூ.135 கோடி மதிப்புள்ள 27 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஹெராயின் பறிமுதல் செய்த போது ஏற்பட்ட சண்டையில் கடத்தல்காரன் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.*
 
 
 
*8️🔷🔶அரியானா: சென்னையில் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை அடித்த கும்பலில் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். அரியானாவில் ஒரு கொள்ளையன் சிக்கிய நிலையில் மேலும் 3 பேரை தனிப்படை போலீஸ் தேடி வருகின்றனர்.*
 
 
*9️🔷🔶சென்னை: சென்னையில் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு 7 வழக்குகள் மாற்றப்பட்டுள்ளன. எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். கொள்ளை தொடர்பாக இதுவரை 16 புகார்கள் வந்துள்ளன.*
 
 
*1️0️🔷🔶திருவாரூர்: திருவாரூர் ஐஓபி வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் வங்கி ஊழியர் இளையராஜா ரூ.2.06 லட்சம் திருடியுள்ளார். வங்கி ஊழியர்கள் அளித்த புகாரில் சிசிடிவி காட்சியை கொண்டு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.*
 
 
*1️1️🔷🔶வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38.97 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 3,897,207 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 179,906,095 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 164,661,652 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 81,982 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.*
 
 
 
*1️2️🔷🔶சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.98.65,ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.ரூ.92.83 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது*
 
 
 
*1️3️🔷🔶டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50,848 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 3,00,28,709-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,358 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,90,660-ஆக அதிகரித்துள்ளது.
 
இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 2,89,94,855 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 6,43,194 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.*
 
 
 
*1️4️🔷🔶திருவாரூர்: திருவாரூரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏ.டி.எம்-மில் ரூ. 2.50 லட்சம் திருடிய வங்கி ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். வங்கி ஒப்பந்த ஊழியர் இளையராஜா(38) பணம் திருடியதாக வங்கி காசாளர் கொடுத்த புகாரின் போரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது*
 
 
 
*1️5️🔷🔶சென்னை: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தனி அலுவலர் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தனி அலுவலர் பதவிக்காலத்தை டிசம்பர் 31 வரை நீட்டிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜூன் 30-ம் தேதியுடன் தனி அலுவலர் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.*
 
 
*1️6️🔷🔶சென்னை: சென்னையில் மேலும் 2 எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையங்களில் வடமாநில கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். சென்னை பெரியமேடு-வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்-மில் ரூ.16 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும் சைதாப்பேட்டையில் உள்ள ஏ.டி.எம்-மில் ரூ.4.99 லட்சம் பணத்தை நூதன முறையில் திருடியுள்ளனர்.*
 
 
 
*1️7️🔷🔶சென்னை: 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடுதல் அவகாசம் தேவை என்று தமிழக அரசு கூறியுள்ளது. கூடுதல் அவகாசம் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.*
 
 
 
*1️8️🔷🔶சேலம்: வாழப்பாடி அருகே எடப்பட்டி சோதனைச் சாவடியில் போலீஸ் தாக்கியதில் காயமடைந்தவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த வாழப்பாடியை சேர்ந்த வெள்ளையன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். வாகன சோதனையின் போது போதையில் வந்தவரை பிடித்து விசாரிக்கும் போது போலீஸ் தாக்கியதாக புகார் கூறப்பட்டுள்ளது.*
 
 
*1️9️🔷🔶சென்னை.: தமிழகத்தில் நிதி நிலைமை எப்போது சீராகிறதோ அப்போது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் எனஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.  மத்திய அரசு பல மடங்கு வரி உயர்த்தியதால் தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.*
 
*2️0️🔷🔶மதுரை: ஊதிய ஒப்பந்தத்தை ஒரு கருவியாக போக்குவரத்து கழகங்கள் பயன்படுத்த முடியாது என்று ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. ஒய்வு பெற்ற அரசு ஓட்டுநர் போக்குவரத்து கழகத்துக்கு கட்டிய அபராதத்தை திரும்ப செலுத்த கோரியது ரத்து செய்யப்பட்டுள்ளது.*
 
 
*2️1️🔷🔶சென்னை: பப்ஜி மதனை 2 நாள் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 2 நாள் போலீஸ் காவலுக்கு பப்ஜி மதன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.*
 
 
*2️2️🔷🔶சென்னை: புதிய தகவல் தொழிநுட்ப சட்ட விதியின் கீழ் கடும் நடவடிக்கை எடுத்தால் இடைக்கால நிவாரணம் கோரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இடைக்கால நிவாரணம் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.*
 
 
 
*2️3️🔷🔶சென்னை: தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் எஞ்சிய மாவட்டங்கள், புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.*
 
 
 
*2️4️🔷🔶சென்னை: மத்திய அரசை குறிப்பிட ஒன்றியம் என்ற சொல்லைத் தான் இனி எப்போதும் பயன்படுத்துவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமான க்கோரியுள்ளார். ஒன்றியம் என்ற வார்த்தையில் கூட்டாட்சி தத்துவம் அடங்கியுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள ஒன்றியம் என்ற சொல்லையே பயன்படுத்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.*
 
 
*2️5️🔷🔶டெல்லி: தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் டெல்டா பிளஸ் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று ஒன்றிய சுகாதாரத்துறை கூறியுள்ளது. மராட்டியம், மத்தியப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில்  டெல்டா பிளஸ் கொரோனா தொற்றால் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்*
 
 
 
*2️6️🔷🔶மதுரை: தஞ்சையில் கட்டை விரல் துண்டிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோருக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடு தர உத்தரவிடப்பட்டுள்ளது. குழந்தை கட்டைவிரலை பழையபடி சேர்க்கும் வகையில் நவீன மருத்துவமனைக்கு மாற்றம் செய்யவும் ஐகோர்ட் கிளை ஆணையிடப்பட்டுள்ளது.*
 
 
*2️7️🔷🔶சென்னை: நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெற பாஜக எம்.எல்.ஏ-க்கள் குரல் கொடுக்க தயாரா? என்று முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரனிடம் இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டு உள்ளார்.*
 
 
*2️8️🔷🔶சேலம்: உடையாப்பட்டி பகுதியில் இருசக்கர வாகனம் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் தந்தை, மகன் உயிரிழந்துள்ளனர். விபத்தில் வெள்ளிமலையை சேர்ந்த செல்வம், அவரது மகன் விக்னேஷ்(13) ஆகியோர் இறந்துள்ளனர்.*
 
 
 
 
 
*🔷🔶மதியம் 2 மணிவரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை🔶🔷*
 
*📌🧿📌கரூர் மாவட்டம்* வெள்ளியணை அடுத்த உப்பிடமங்கலம் பகுதியில் பூட்டி இருந்த வீட்டில் புகுந்து 58 பவுன் தங்க நகைகள், சுமார் 1 கிலோ வெள்ளியை கொள்ளையடித்து திருடர்கள் தப்பி சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
 
 
 
*📌🧿📌திருவாரூரில்* இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏ.டி.எம்-மில் ரூ. 2.50 லட்சம் திருடிய வங்கி ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். வங்கி ஒப்பந்த ஊழியர் இளையராஜா(38) பணம் திருடியதாக வங்கி காசாளர் கொடுத்த புகாரின் போரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
 
 
 
*📌🧿📌சென்னையில்* மேலும் 2 எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையங்களில் வடமாநில கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். சென்னை பெரியமேடு-வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்-மில் ரூ.16 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும் சைதாப்பேட்டையில் உள்ள ஏ.டி.எம்-மில் ரூ.4.99 லட்சம் பணத்தை நூதன முறையில் திருடியுள்ளனர்.
 
 
 
*📌🧿📌சென்னை:* பப்ஜி மதனை 2 நாள் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 2 நாள் போலீஸ் காவலுக்கு பப்ஜி மதன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
 
 
 
*📌🧿📌சேலம்:* உடையாப்பட்டி பகுதியில் இருசக்கர வாகனம் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் தந்தை, மகன் உயிரிழந்துள்ளனர். விபத்தில் வெள்ளிமலையை சேர்ந்த செல்வம், அவரது மகன் விக்னேஷ்(13) ஆகியோர் இறந்துள்ளனர்.
 
 
 
*📌🧿📌சென்னை* கொளத்தூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தனியார் பிளாஸ்டிக் நிறுவன விற்பனை பிரதிநிதி விஷால், தனது மனைவி, 2 பெண் குழந்தைகளுடன் தூக்க மாத்திரை சாப்பிட்டார். மாத்திரை சாப்பிட்ட 4 பெரும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
 
 
*📌🧿📌திருச்சி:* விமானத்தில் பயணிகள் கடத்தி வந்த ரூ.3 கோடி மதிப்புள்ள 6 கிலோ தங்கம் திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஷார்ஜாவில் இருந்து திருச்சிக்கு கடத்தி வந்த தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
 
*📌🧿📌திண்டுக்கல்* பழனி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பழனி பேங்க் ஆஃப் இந்தியா கோவை மண்டலத்தின் சார்பாக  நிவாரண பொருட்கள் 50 ஏழை குடும்பங்களுக்கு வங்கி மேலாளர் காவல் துணை கண்காணிப்பாளர் சிவா தலைமையில் வழங்கப்பட்டது
 
 
 
*📌🧿📌நீலகிரி*
பந்தலூர் அருகே உள்ள தேவாலா, வாளவயல் பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் தங்களது தோட்டங்களில் வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர். இங்கு காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்
 
 
 
*📌🧿📌திருவாரூர்*
கல்லணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் கடைமடை பகுதியான திருவாரூருக்கு வந்தடைந்ததால் விவசாயிகள் குறுவை சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
 
 
 
*📕📰 "ஒன்றியம்" என்ற சொல்லை கண்டு யாரும் மிரள வேண்டாம்..!*
 
*கூட்டாட்சி கொள்கையின் படியே அதனை பயன்படுத்தினோம், இனியும் பயன்படுத்துவோம்.*
 
*எனவே "ஒன்றிய அரசு" என்று சொல்வதை சமூக குற்றம் போல கருத வேண்டாம்..!*
 
*- சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கேள்விக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் விளக்கம்*
 
 
 
*சென்னை*
 
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாநகராட்சியின் நகர்ப்புற சமுதாய நல மையங்கள் மற்றும் பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
 
சென்னையில் இதுவரை 17,58,187 முதல் தவணை தடுப்பூசியும், 6,04,804 இரண்டாம் தவணை தடுப்பூசியும் என மொத்தம் 23,62,991 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
 
தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் தரவுகளை ஆய்வு செய்ததில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய காலத்தை கடந்து சுமார் 89,500 பேர் இருப்பது தெரிய வந்துள்ளது.
 
2ம் தவணை தடுப்பூசி செலுத்த தவறியவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக செலுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
 
அதன்படி, 30,480 பேர் 2ம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
 
 
 
*சென்னை*
 
கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று சட்டசபையில் திமுக எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார். 
 
சட்டப்பேரவையில் இன்று திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் பேசுகையில், ‘‘கடந்த ஆட்சியில் தமிழருக்கு வேலை கொடுக்கவில்லை.
 
வடமாநிலத்தவர்களுக்கு வேலை  வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார்கள்.
 
ஆனால், ஆளுநர் உரையில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
 
மத்திய அரசு அலுவலகங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன்மூல்ம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 
 
 
*வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு தொடர்பாக நிச்சயமாக ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் : மு.க. ஸ்டாலின் உறுதி!!*
 
*10.5 சதவிகித உள் ஒதுக்கீடு தொடர்பாக திரு. ஜி.கே. மணி அவர்கள் பேசிய நிலையில், மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அளித்த பதில்*
 
*மாண்புமிகு முதலமைச்சர்*
 
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் உள்ள 20 விழுக்காடு ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த வேண்டும் என்று நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் திரு. ஜி.கே. மணி அவர்கள் இங்கே பேசிக் கொண்டிருக்கிறார்.
 
ஏற்கெனவே, இரண்டு நாட்களுக்கு முன்பு, பாட்டாளி மக்கள் கட்சியினுடைய நிறுவனர் டாக்டர் அவர்கள், இவர் மூலமாக ஒரு கடிதத்தையும் எனக்கு அனுப்பியிருக்கிறார்கள். 
 
அதிலே அவர் பல்வேறு பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி, இதனுடைய முக்கியத்துவத்தை, இதிலுள்ள பிரச்சினைகளை எல்லாம் எடுத்துச் சொல்லி, நிறைவாகக் குறிப்பிடுகிறபோது, ‘தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதற்கான தமிழ்நாடு சட்டம் எண் 8/2021-ஐ விரைந்து செயல்படுத்தும்படியும், அதற்குத் தேவையான அரசாணைகள் மற்றும் வழிகாட்டுதல்களை உடனடியாகப் பிறப்பிக்கும்படியும் கேட்டிருக்கிறார். 
 
நான் இதையெல்லாம் அடிப்படையாக வைத்து இங்கே சொல்ல விரும்புவது, ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து கொரோனா தொற்றைக் குறைப்பதற்காக இரவு பகல் பாராது கவனம் செலுத்தி, இப்போதுதான் கொஞ்சம் மூச்சு விட ஆரம்பித்திருக்கிறோம். 
 
ஆகவே, மாண்புமிகு உறுப்பினருடைய கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய துறையினுடைய அதிகாரிகளோடு விரிவாக ஆலோசனையும், ஆய்வும் நடத்தி, நிச்சயமாக ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என்ற அந்த உறுதியை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
 
 
*சென்னை*
 
ஆபாசமாக பேசிய புகாரில் கைதான யூ-டியூபர் பப்ஜி மதனை ஜூலை 7 வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 
2 நாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மதனை மத்திய குற்றப்பிரிவு ஆஜர்படுத்தியது.
 
நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து சைதாப்பேட்டை கிளைச் சிறையில் பப்ஜி மதன் அடைக்கப்பட்டுள்ளார்.
 
 
*சென்னை*
 
சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் உடன் பாஜக எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் சந்தித்துள்ளனர்.
 
பாஜக எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், வானதி, எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி மற்றும்  நிர்வாகிகள் ஆளுநரை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 
*சென்னை*
 
நீட் விவகாரத்தில் அனைத்து தரப்பு மாணவர்களும் பாதிக்காத வகையில் தமிழ்நாடு அரசின் முடிவு இருக்கும் என்று திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஓய்வுப்பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்மட்ட குழு ஆய்வு செய்து வருகிறது.
 
பொதுமக்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் அந்த குழுவிடம் மனு அளித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், ஏ.கே.ராஜனை சந்தித்தார்.
 
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குநரகத்தில் நடந்த சந்திப்பில், நீட் தேர்வு விவகாரம் தொடர்பான மாணவர்களின் மனுக்களை உதயநிதி ஸ்டாலின் ஏ.கே.ராஜனிடம் அளித்தார்.
 
 
*சென்னை*
 
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
 
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பாப்பநாயக்கன்பட்டி சோதனைச்சாவடியில் ஏத்தாப்பூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் நேற்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
 
அப்போது, அவ்வழியாக எடப்பட்டிபுதூரை சேர்ந்த விவசாயி முருகேசன் (45) என்பவர் தனது நண்பர்கள் 3 பேருடன் இரண்டு டூவீலரில் வந்துள்ளார்.
 
இவர்கள் 4 பேரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
 
 
 
*சென்னை*
 
எந்த மாவட்டத்தையும் அரசு புறக்கணிக்கவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
சட்டப்பேரவையில் கோவை மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
 
அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை புறக்கணிக்கப்படவில்லை என்றும் கோவை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர பிரதமரிடம் வலியுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.
 
மேலும் வாக்களித்தவர்கள் பெருமைப்பட வேண்டும்; வாக்களிக்காதவர்கள் வருத்தப்படும் அளவிற்கு செயல்பட வேண்டும் என்பது தான் திமுகவின் கொள்கை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 
எல்லா மாவட்டங்களையும் ஒரே மாதிரியாகவே பார்ப்பதாகவும், கோவை மாவட்டம் புறக்கணிக்கபடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 
 
*சென்னை*
 
மராட்டியம், கேரளவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
 
தமிழ்நாட்டில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை கூறியுள்ளது.
 
 
 
*சென்னை*
 
பழங்குடி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க அப்பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களை பயன்படுத்தலாமா? என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
 
பழங்குடி மக்களுக்காக கொரோனா சிகிச்சை மையம் அமைக்கவும் அரசு அலுவலக கட்டங்களை பயன்படுத்தலாமா? எனவும் ஐகோர்ட் கேள்வி கேட்டுள்ளது.
 
 
 
*சென்னை*
 
நீட் தேர்வின் தாக்கம் குறித்து பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்க இன்று கடைசி நாள் என்பதால் இன்று மாலைக்குள் கருத்து தெரிவிக்க வாய்ப்புள்ளது.
 
தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கத்தினை ஆய்வு செய்து அறிக்கை வழங்கிட தமிழக அரசு உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 8 பேர் அடங்கிய உயர்மட்ட குழுவை நியமித்தது.
 
பொதுமக்கள் 5 பக்கங்களுக்கு மிகாமல் அஞ்சல், மின்னஞ்சல் மூலமாகவோ, நேரடியாகவோ மருத்துவக் கல்வி இயக்ககத்தில் வைக்கப்பட்டுள்ள தனி பெட்டியில் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று அரசு தெரிவித்திருந்தது.
 
இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் வரை 25 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அதில் நீட் தேர்வு வேண்டாம் என்றும் நடப்பாண்டிற்கு விலக்கு அளிக்கவும் பலர் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
 
 
 
*சென்னை*
 
ஜூன் 25-க்குள் 14 வகை மளிகை பொருட்கள் தொகுப்பு, 2-ம் தவணை ரூ.2000 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 
15-ம் தேதி முதல் 14 வகை மளிகை பொருட்கள், 2-ம் தவணையாக ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது.
 
 
 
*ராமநாதபுரம்*
 
முதுகுளத்தூரில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதால் கைதான பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
 
ஆசிரியர் ஹபீப் முகமதுவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
 
 
 
*ஈரோடு*
 
கொரோனா ஊரடங்கால் கடந்த 43 நாட்களாக மூடப்பட்டிருந்த ஈரோடு மஞ்சள் மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
 
மஞ்சள் உற்பத்திக்கு புகழ்பெற்ற ஈரோட்டில் 4 மையங்களில் மஞ்சள் ஏலம் நடைபெறுவது வழக்கம்.
 
இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கர்நாடக விவசாயிகளும் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வருவர்.
 
கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக கடந்த மாதம் 10ம் தேதி முதல் ஈரோடு மஞ்சள் சந்தை மூடப்பட்டது.
 
இந்நிலையில் ஊரடங்கில் தளர்வு அளித்து மஞ்சள் சந்தையை திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியதால் அவர்களின் கோரிக்கையை ஏற்று 43 நாட்களுக்கு பிறகு மஞ்சள் சந்தை மீண்டும் திறக்கப்பட்டது.
 
பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு கோபி கூட்டுறவு சங்கம் என 4 இடங்களில் நடந்த மஞ்சள் ஏலத்தில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர்.
 
 
*கரூர்*
 
கரூரில் கட்ட தவறிய மாத தவணைக்கு வட்டிக்கு வட்டி மற்றும் அபராதம் கேட்டு தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டுவதால் மகளிர் சுய உதவி குழுவினர் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
 
ஆசீர்வாதம் மைக்ரோ பைனான்ஸ் என்ற நிறுவனம் கரூர் அருகே சின்ன ஆண்டங்கோவில் பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினருக்கு தலா 50,000 ரூபாய் வீதம் கடன் உதவி வழங்கியுள்ளது.
 
தற்போது கொரோனா ஊரடங்கால் வேலை வாழ்ப்பை இழந்துள்ள பெண்கள் கடந்த 2 மாதங்களாக மாத தவணையை சரியாக செலுத்த முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
 
இதனை ஏற்க மறுக்கும் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், ஒவ்வொரு மாதமும் கட்ட தவறும் 2,600 ரூபாய் தவணைக்கு 950 ரூபாய் அபராதம் கட்டுமாறு மிரட்டுவதால் பெண்கள் செய்வதறியது நிகழ்த்து வருகின்றனர்.
 
 
 
*சேலம்*
 
சேலம் அருகே வியாபாரி உயிரிழந்த வழக்கில் கைதான ஏத்தாப்பூர் எஸ்எஸ்ஐ பெரியசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
 
ஏத்தாப்பூர் காவல்நிலையத்தில் விசாரணை நடத்திய சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
 
 
 
*வேலூர்*
 
வேலூரின்  முதன்மை பண்பலை சூரியன் எப்எம் 93.9, நேயர்களுக்கு தினம்தோறும் பல புதுமையான நிகழ்ச்சிகளை வழங்குவதோடு, சமுதாய நலன் கருதி பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது.
 
அந்த வகையில் கொரோனா பெரும் தொற்றைக் கட்டுப்படுத்த எஸ்.எம்.எஸ் என்கின்ற சோப்பு, மாஸ்க், சமூக இடைவெளி என்பதை முன்னிறுத்தி, முகக்கவசம், சமூக இடைவெளி, மற்றும் கை கால்களை சோப்பு போட்டு சுத்தம் செய்வதன் அவசியத்தை நிகழ்ச்சிகளின் இடையே சொல்லி புதுமையான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
 
 
*புதுடெல்லி*
 
வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளவிஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரிடம் இருந்து முடக்கப்பட்ட சொத்துக்களில்ரூ.8,441கோடியை அவர்களால் பாதிக்கப்பட்டு கடுமையான நிதி சூழலில் இருக்கும் பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


*டெல்லி*
 
பிரதமரின் ஏழைகள் நலன் திட்டத்தின் கீழ் தேசிய உணவு பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு  கூடுதல் உணவு தானியத்தை  அடுத்த 5 மாதங்களுக்கு மேலும் ஒதுக்கீடு செய்ய பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 
இதன்படி  ஜூலை முதல் நவம்பர் 2021 வரை, தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உள்ள 81.35 கோடி பயனாளிகளுக்கு (அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் நேரடி பண பரிமாற்ற திட்டத்தின் கீழ் உள்ளவர்கள் உட்பட முன்னுரிமை பிரிவினர் )  மாதம் ஒன்றுக்கு குடும்பத்தில் உள்ள நபர் ஒருவருக்கு 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும்.
 
கச்சா எண்ணெய் 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்ததால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது என பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
 
சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தினமும் மாற்றி அமைக்கிறது.
 
நடப்பாண்டின் தொடக்கத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.
 
 
*திருவனந்தபுரம்*
 
*கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று நிருபர்களிடம் கூறியது:*
 
கேரளாவில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 3 நாளில் தொற்று சதவீதம் 10.2 ஆக குறைந்து உள்ளது.
 
எனவே பல்வேறு பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கு நிபந்தனைகளில் தளர்வுகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
 
அதன்படி நோய் பரவல் குறைவாக உள்ள பகுதிகளில் வழிபாட்டுத் தலங்களில் நிபந்தனைகளுடன் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
 
உள்ளரங்குகளில் நடக்கும் டிவி தொடர் படப்பிடிப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்படும்.
 
நோய் பரவல் குறைவாக உள்ள இடங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களை திறப்பது குறித்தும் ஆலோசித்து  வருகிறோம்.
 
2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே சுற்றுலா தலங்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.
 
 
 
✍🏼 இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54.24 லட்சம் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
 
✍🏼 மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் காணொலிக்  காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது.
 
✍🏼 ஏழை மக்களுக்கு இலவச உணவு தானியங்கள்  வழங்கும் திட்டத்தின் கீழ் அடுத்த 5 மாதங்களுக்கு கூடுதல் உணவு தானியங்களை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
 
✍🏼 இந்த திட்டத்தின் கீழ், மாதந்தோறும் நபர் ஒருவருக்கு 5 கிலோ உணவு தானியங்கள் என்ற அடிப்படையில் இலவசமாக 81 கோடியே 35 லட்சம் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
 
 
 
*சென்னை*
 
அதிமுக ஆட்சியில் ஆர்டிபிசி ஆர் சோதனை அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
 
அப்போது பேசிய அவர்; தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் நேரடியாக சென்று ஆலோசனை மேற்கொண்டேன்.
 
தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா தடுப்பு பணிகளை பிரதமர் பாராட்டினார்.
 
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை முறையாக பதப்படுத்தி ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
 
 
 
✍🏼 தருமபுரி: மொரப்பூர் ஒன்றியம், கொங்கரப்பட்டி மற்றும் இருமத்தூர் ஊராட்சிகளில் ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தில் நடைபெறும் பள்ளி கட்டுமானம், வீடு கட்டும் திட்டப் பணி, குடிநீர் குழாய் உள்ளிட்ட பணிகளை கூடுதல் ஆட்சியர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
 
✍🏼 தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நடப்பு கல்வியாண்டிற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பத்தாம்  வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இந்த பாடபுத்தகங்கள் வழங்கபடுகின்றன.
 
✍🏼 மதுரை கிழக்கு வட்டம் ஒத்தக்கடையில் உள்ள வேளாண்மை கல்லூரியில் மதுரை மாவட்ட ஆட்சியர் திரு அனீஷ்சேகர் இன்று  விதை பாவுதல் மற்றும் நடவு செய்தல் பணிகளை பார்வையிட்டார்.
 
✍🏼 பல்லடத்தில் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முககவசம்,தலைகவசம் அணியாமல் வருபவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் சார்பில் கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
 
 
 
*சென்னை*
 
கிராமப்புறங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் டிஜிட்டல் முறையில் கல்வி பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்தக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி, தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
 
 
*கர்நாடகா*
 
விஜயப்பூர் அருகே மதம் மாறி காதல் மணம் செய்ய முயன்ற இளம்ஜோடி கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
 
சாலதஹள்ளி கிராமத்தை சேர்ந்த தலித் இளைஞர் சிவராஜ்(19), தவல்பி தம்பாத் (18) கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டனர்.
 
 
 
*மும்பை*
 
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம், மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் பலியானார்கள்.
 
இதில் முக்கிய குற்றவாளியான ஹெட்லி, அமெரிக்காவில் பிடிபட்டார். அவர் அப்ரூவராக மாறி, சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
 
அவருடைய நண்பரும், கனடா குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் தொழிலதிபருமான தஹாவுர் ராணாவுக்கும் இவ்வழக்கில் தொடர்புள்ளது.
அவர் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
 
இந்தியாவின் வேண்டுகோளின் பேரில், அமெரிக்காவில் ராணா கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க அரசு ஒப்புக்கொண்டது.
 
ஆனால், அதை எதிர்த்து அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் ராணா வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
 
 
✍🏼 ஒலிம்பிக் தினத்தன்று அனைத்து இந்திய ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
 
✍🏼 தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் புதிய விதியின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் இடைக்கால நிவாரணம் கோரி நீதிமன்றத்தை அணுகலாம் என டிஜிட்டல் நியூஸ் பப்ளிஷர்ஸ் அசோசியேசனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
 
✍🏼 வெப்பசலம் காரணமாக தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
 
✍🏼 கிராமப்புறங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆன் லைன் டிஜிட்டல் முறையில் கல்வி பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
 
 
✍🏼 குடியரசு துணை தலைவர் திரு வெங்கையா நாயுடு நாட்டு மக்கள் அனைவரும் தாங்கள் விரைவாக முன்வந்து தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
 
✍🏼 கோவிட் தொற்று பரவாமல் தடுக்க முதன்மை பராமரிப்பின் ஒரு பகுதியாக ரயில் பெட்டிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
@GMSRailway
 
✍🏼 ஆப்கானிஸ்தானில் நிரந்தர போர் நிறுத்தம் அவசியம் என்று ஐ நா பாதுகாப்பு சபையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
 
✍🏼 ஜம்மு-கஷ்மீர் நலன் தொடர்பாக நாளை தில்லியில் பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையில் நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முக்கிய அரசியல் கட்சிகள் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.
 
 
 
✍🏼 கிராமப்புற மக்கள் அதிக அளவில் கோவிட் தடுப்பூசி எடுத்துக் கொள்ள முன் வருவது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக குடியரசு துணைத்தலைவர் திரு வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
 
✍🏼 நாட்டின் விளையாட்டு வீரர்கள் அளித்துள்ள பங்களிப்பு குறித்து தேசம் பெருமிதம் கொள்வதாக பிரதமர் திரு நரேந்திரமோடி கூறியிருக்கிறார்.
 
✍🏼 டோக்கியோவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை 74 இந்திய வீரர்கள் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
 
✍🏼 வங்கி நிதி மோசடி தொடர்பான வழக்குகளில் மத்திய அமலாக்கத்துறை இதுவரை ஒன்பதாயிரத்து 371 கோடி ரூபாய் நிதி மற்றும் சொத்துக்களை முடக்கியுள்ளது.
 
 
✍🏼 திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் காமராஜர் நீர்தேக்க அணையின் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் திரு ச.விசாகன் ஆய்வு மேற்கொண்டார்.
 
✍🏼 இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் நகராட்சியில் இன்று மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா, நேரடியாகச் சென்று, திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகள் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
 
✍🏼 பாரிஸில் நடைபெற்று வரும் உலக கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியா, ஆடவர் பிரிவில் 8 -வது இடத்தையும் கலப்பு இரட்டையர் பிரிவில் 5 - வது இடத்தையும் பிடித்துள்ளது.
 
 
 
✍🏼 புதிய வேளாண் சட்டங்கள் பற்றி போதிய விழிப்புணர்வு உடையவர்கள் அவற்றை எதிர்க்க மாட்டார்கள் என்று ஹரியானா முதலமைச்சர் திரு மனோகர்லால் கூறியுள்ளார்.
 
✍🏼 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் அமலுக்கு வந்த முதல் நாளான நேற்று முன்தினம், தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் ஐந்தில் மூன்று பேர் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
 
✍🏼 சர்வதேச அமைப்புகளில் பாகிஸ்தான் மீண்டும் இந்தியாவுக்கு எதிராக அடிப்படை முகாந்திரமற்ற குற்றச்சாட்டுக்களை எழுப்புவது, வருத்தத்திற்குரியது என்று இந்தியா கூறியுள்ளது.
 
✍🏼 இந்திய கடற்படை கப்பல்களுக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சியில், அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் பங்கேற்கவுள்ளது.
 
 
 
✍🏼 ஆப்கானிஸ்தானில்  மருத்துவமனை ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மருத்துவமனை ஒன்று தீப்பற்றி எரிந்து வருகிறது.
 
இதில் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
 
✍🏼 விழுப்புரத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகத்தை மாவட்ட ஆட்சியர் திரு மோகன் வழங்கி தொடங்கி வைத்தார்.
 
✍🏼 தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பிற்பகல் ஒரு மணி நிலவரப்படி வினாடிக்கு சுமார் 8,500 கனஅடி தண்ணீர் வந்துள்ளது.
 
✍🏼 இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் "ஒன்றிய அரசு" என்று அழைப்பதற்கான விளக்கத்தை அளித்தார்.
 
 
 
✍🏼 காஞ்சிபுரத்தில் கோவிட் நோய் தொற்று விதிகளை மீறி செயல்பட்டு வந்த 10க்கும் மேற்பட்ட பட்டு சேலை கடைகள் சீல் வைத்து நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை.
 
✍🏼 தருமபுரியில் இருளர் இன மக்களின் 40 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 52 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள், 12 நபர்களுக்கு ‌புதிய மின்னணு குடும்ப அட்டை ஆகியவற்றை அவர்களின் குடியிருப்பு பகுதிக்கு சென்று மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
 
✍🏼 கேரள மாநிலத்தில் மேலும் சில ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
COVID19
 
✍🏼 திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1430-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியர் திரு ச.விசாகன்  ஆய்வு மேற்கொண்டார்.
 
 
 
✍🏼 பள்ளிக்கல்வித்துறை இயக்குனரின் அதிகாரங்களை, ஆணையரிடம் ஒப்படைக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட  அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
 
✍🏼 செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சி சார்பில் சமுதாய கூடத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
 
✍🏼 குழந்தைகள் பாதுகாப்பு குழுவிற்கு  சட்ட அங்கீகாரம் வழங்கினால் குழந்தைகளுக்கு  எதிரான பாலியல் உள்ளிட்ட குற்றங்கள் குறையும் என மதுரையில் மாநில குழந்தை  உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்  டாக்டர் வீ.ராமராஜ் தெரிவித்தார்.
 
✍🏼 மதுராந்தகம் அருகே 80 வயது மூதாட்டியை  பெற்ற பிள்ளைகள் அனாதையாக விட்டதால்  அவரை போலீசார் மீட்டு ஆதரவற்றோர்  இல்லத்தில் ஒப்படைத்தனர்.
 
 
 
✍🏼 கோவிட்19 காரணமாக ஏழை மக்கள் தானியங்கள் இன்றி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா திட்டம் மேலும் 5 மாதங்களுக்கு  நீட்டிக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு கூறியுள்ளது.
 
✍🏼 ஏழை எளிய மக்களின் நலனுக்காக பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா திட்டதிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது  வரவேற்கத்தக்கது என்று மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்  தெரிவித்துள்ளார்.
 
✍🏼 கோவிட்19 பரவல் கட்டுக்குள் இருப்பதாக  மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் திரு.ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.
 
✍🏼 மாநில அரசுகளுக்கு கூடுதலாக 61,120 கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கான லிபோசோமல் ஆம்போடெரிசின் மருந்து ஒதுக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு.
  
 
 
✍🏼 கல்வி மற்றும் வேலை வாய்ப்பில்  வன்னியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை செயல்படுத்துவது தொடர்பாக உரிய ஆய்வு மேற்கொண்டு நல்ல முடிவு எடுக்கப்படும் - முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின்.
 
✍🏼 தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் வரும் 28 ஆம் தேதி முதல் வழக்கு விசாரணைகள் நேரடியாக மேற்கொள்ளப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தலைமைப் பதிவாளர் அறிவித்துள்ளார்.
 
✍🏼 மும்பையில் இருந்து தனியார் விமானத்தின் மூலம் 4,67,210 கோவிட் டோஸ்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன.
 
✍🏼 டோக்கியோ ஒலிம்பிக் கோல்ப் போட்டியில் பங்கேற்பதற்கு இந்தியாவின் அனிர்பான் லஹிரி தகுதி பெற்றுள்ளார்.
 
 
 
ஈரோடு மாவட்டத்தில் கோவிட் சிகிச்சை தொடர்பான  தகவல்கள், பரிசோதனை மையம்  மற்றும் தடுப்பூசி  முகாம்  உள்ளிட்ட  முக்கிய  தகவல்களை பொதுமக்கள்  நாள்தோறும் https://erode.nic.in/covid-care என்ற மாவட்ட  இணையதளம் மூலம்  பெற்று  பயன்பெறலாம் என மாவட்ட  ஆட்சியர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 
 
 
*🔵 நீட் தேர்வை ரத்து செய்ய சேர்ந்தே போராடுவோம்... அழைத்த முதல்வருக்கு ஓகே சொன்ன இபிஎஸ்.*
 
       _சென்னை: நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அதிமுகவும் துணை நிற்க வேண்டும் என்று சட்டபையில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். நீட் தேர்விலிருந்து விலக்கு பெற அதிமுக துணை நிற்கும் என்று எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்._

 


0 Response to "23.06.2021 இன்றைய ஒட்டுமொத்த முக்கிய செய்திகள்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel